என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்பு டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பும் இந்தியா
    X

    கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்பு டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பும் இந்தியா

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தொடர்ந்து 2 முறை இந்தியா தோல்வியடைந்தது.
    • இம்முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு கூட இந்தியா தகுதிபெறவில்லை.

    லீட்சில் நடைபெற்ற ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை அடுத்தடுத்து வென்ற இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து சொதப்பி வருகிறது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தொடர்ந்து 2 முறை தோல்வியடைந்து கோப்பையை இழந்த இந்தியா இம்முறை இறுதிப்போட்டிக்கு கூட தகுதிபெறாதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    குறிப்பாக தலைமை பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்ற பின்பு விளையாடிய கடைசி 9 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றுள்ளது. டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவை விட கீழே உள்ள வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் ஆகிய அணிகள் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×