என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • 1993-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் வென்றதில்லை.
    • இண்டீஸ் அணி தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளும் ஷமர் ஜோசப் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 5 இருபது ஓவர் போட்டிகளில் ஆடுகிறது.

    இதன்படி ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று தொடங்கியது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்சில் 180 ரங்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டிராவில் ஹெட் 59 ரன்களும் கவாஜா 47 ரன்களும் அடித்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளும் ஷமர் ஜோசப் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் நாள் முடியவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் அடித்துள்ளது. 

    • சூர்யகுமார் யாதவ் லண்டனில் உள்ள மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளார்.
    • அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்பு தான் நலமுடன் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இந்திய டி20 அணியின் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான சூர்யகுமார் யாதவ் ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

    34 வயதான சூர்யகுமார் யாதவ் லண்டனில் உள்ள மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளார்.

    அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்பு தான் நலமுடன் உள்ளதாக சூர்ய குமார் யாதவ் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவிட்டு தெரிவித்துள்ளார்.

    அடுத்த 3 மாத காலத்திற்கு டி20 கிரிக்கெட் இல்லாததால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் 3 மாத காலம் ஓய்வெடுக்க உள்ளார். 

    • 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது.
    • ராஜ்குமார் (37) ரன்களிலும், ஜாபர் ஜமால் (17) ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

    டி.என்.பி.எல். தொடரின் 23-வது லீக் போட்டி திருநெல்வேலியில் நடந்து வருகிறது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, மதுரை அணி முதலில் களமிறங்கியது. திருச்சி அணியின் துல்லிய பந்துவீச்சினால் மதுரை அணி முன்னணி வீரர்களை இழந்து தத்தளித்தது. அந்த அணி 29 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    6-வது விக்கெட்டுக்கு இணைந்த அதிக் உர் ரகுமான்-சரத்குமார் ஜோடி 56 ரன்கள் சேர்த்த நிலையில் அதிக் உர் ரகுமான் 30 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 131 ரன்கள் எடுத்தது. 37 ரன்னுடன் சரத்குமார் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    திருச்சி அணி சார்பில் சரவணகுமார், ஈஸ்வரன், டேவிட்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது.

    தொடக்க ஆட்டகாரர் வசீம் அகமது 2 ரன்களிலும், ஜெயராமன் சுரேஷ் குமார் 44 ரன்களிலும் விக்கெட் விட்டனர். அடுத்து வந்தவர்களும் மதுரையின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களிலேயே அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

    இருப்பினும் ராஜ்குமார் - ஜாபர் ஜமால் ஜோடி நிதானமாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. ராஜ்குமார் (37) ரன்களிலும், ஜாபர் ஜமால் (17) ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

    இறுதியில் 18.1 ஓவரில் திருச்சி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    மதுரை அணி சார்பில் தாமரை கண்ணன், மெய்யப்பன் தலா 2 விக்கெட்டுகளையும், சரவணன், குர்ஜப்னீத் சிங் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • மதுரை அணி 29 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

    திருநெல்வேலி:

    டி.என்.பி.எல். தொடரின் 23-வது லீக் போட்டி திருநெல்வேலியில் நடந்து வருகிறது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, மதுரை அணி முதலில் களமிறங்கியது. திருச்சி அணியின் துல்லிய பந்துவீச்சினால் மதுரை அணி முன்னணி வீரர்களை இழந்து தத்தளித்தது. அந்த அணி 29 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    6-வது விக்கெட்டுக்கு இணைந்த அதிக் உர் ரகுமான்-சரத்குமார் ஜோடி 56 ரன்கள் சேர்த்த நிலையில் அதிக் உர் ரகுமான் 30 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 131 ரன்கள் எடுத்தது. 37 ரன்னுடன் சரத்குமார் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    திருச்சி அணி சார்பில் சரவணகுமார், ஈஸ்வரன், டேவிட்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்குகிறது.

    • முதல் டெஸ்டில் 0 மற்றும் 30 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • 5ஆவது நாள் பீல்டிங் செய்தபோது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டதாக தகவல்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இது கை வீரரான சாய் சுதர்சன் இந்திய அணியில் அறிமுகம் ஆனார்.

    முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன அவர், 2ஆவது இன்னிங்சில் 30 ரன்கள் சேர்த்தார். முதல் போட்டியின் 5ஆவது நாள் ஆட்டத்தின்போது பீல்டிங் செய்யும்போது, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விளையாடுவது சந்தேகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் வருகிற 2ஆம் தேதி தொடங்குகிறது. அதற்குள் காயம் சரியாகிவிட்டால், ஆடும் லெவனில் இடம் பெற வாய்ப்புள்ளது.

    வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா, 2ஆவது போட்டிக்கான இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதல் நாள் முடிவில் வங்கதேசம் 220 ரன்கள் எடுத்துள்ளது.

    கொழும்பு:

    வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சமனில் முடிந்தது.

    இந்நிலையில் இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கொழும்புவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, வங்கதேசம் முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷட்மன் இஸ்லாம் 41 ரன்னில் அவுட்டானார். முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்னும், லிட்டன் தாஸ் 34 ரன்னும், மெஹிதி ஹசன் 31 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

    வெளிச்சம் போதாமையால் முதல் நாள் ஆட்டம் முன்னதாக முடிக்கப்பட்டது.

    இறுதியில், முதல் நாள் முடிவில் வங்கதேசம் 8 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்துள்ளது.

    இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ, சோனல் தினுஷா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • திருச்சி 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
    • மதுரை 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றுள்ளது.

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 23ஆவது போட்டி திருநெல்வேலியில் நடக்கிறது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் திருச்சி அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    திருச்சி 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மதுரை பாந்தர்ஸ் 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றுள்ளது.

    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தோல்விக்கு யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை.
    • தவறுகளில் இருந்து பாடம் கற்று அடுத்த போட்டிக்கு நல்ல முறையில் தயாராவோம்.

    சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்ஸில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது.

    இந்நிலையில் டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பணிச்சுமையை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தோல்விக்கு யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. தவறுகளில் இருந்து பாடம் கற்று அடுத்த போட்டிக்கு நல்ல முறையில் தயாராவோம்.

    பும்ராவின் பணிச்சுமை திட்டத்தை நாங்கள் மாற்ற மாட்டோம். அவரது பணிச்சுமையை நிர்வகிப்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் கிரிக்கெட் நிறைய முன்னேறி வருகிறது. மேலும் அவரால் என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்குத் தெரியும்.

    எனவே அவர் இந்த சுற்றுப்பயணத்திற்கு வருவதற்கு முன்பே, மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட வைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கு அவரது உடல் எப்படி உதவும் என்பதை நாங்கள் பார்க்க வேண்டும். இருப்பினும் அவர் எஞ்சியுள்ள போட்டிகளில் எந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பதை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.

    என்று கம்பீர் கூறினார்.

    • பிரசித் கிருஷ்ணா போன்ற இளம் பவுலர் மீது குறைகள் இருந்தாலும் அதை விமர்சனம் செய்வது நியாயமற்றது.
    • ஆனால் ஜடேஜாவை நான் விமர்சிப்பேன்.

    இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. 6 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட் சதத்தால் 364 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

    இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 82 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 373 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா தன்னுடைய அனுபவத்தை வீணடித்து விட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பிட்ச் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எந்த ஆதரவையும் கொடுக்கவில்லை. அந்த பிட்ச்சில் பும்ராவால் கூட எதையும் செய்ய முடியவில்லை. காற்றிலும் உதவியும் கிடைக்கவில்லை. இதுபோக பும்ரா, ஜடேஜாவுக்கு எதிராக பென் டக்கெட் சிறந்த ரெக்கார்டை வைத்துள்ளார்.

    அவரை சொந்த மண்ணில் நடைபெற்ற 2024 தொடரில் கூட ஜடேஜா அவுட்டாக்கியதாக எனக்குத் தெரியவில்லை அப்படி உங்களுடைய 2 முன்னணி பவுலர்களுக்கு எதிராக செட்டிலான இங்கிலாந்து பேட்ஸ்மேன் விளையாடினால் அவர்களுக்கு வெற்றி உறுதியாகி விடும்.

    பிரசித் கிருஷ்ணா போன்ற இளம் பவுலர் மீது குறைகள் இருந்தாலும் அதை விமர்சனம் செய்வது நியாயமற்றது. ஆனால் ஜடேஜாவை நான் விமர்சிப்பேன். ஏனெனில் கடைசி நாளில் பிட்ச்சில் அவருக்கு உதவி செய்ய ரஃப் இருந்தது. அது வழக்கமான இங்கிலாந்து சூழ்நிலைகள் கிடையாது. அந்த காலடிகளை பென் ஸ்டோக்ஸ்க்கு எதிராக ஜடேஜா பயன்படுத்தவில்லை. மிகவும் தாமதமாக பென் டக்கெட்டுக்கு எதிராக பயன்படுத்தினார்.

    ஆனால் அவரைப் போன்ற அனுபவமிக்க பவுலர் அதை அதிகம் பயன்படுத்துவார் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். அங்கே தான் ஜடேஜா ஏமாற்றத்தைக் கொடுத்தார் என்று நினைக்கிறேன்.

    ஒரு காலத்தில் இந்தியா மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட வைக்கும். அது நியூசிலாந்தாக இருந்தாலும் சரி, இங்கிலாந்தாக இருந்தாலும் சரி. குல்தீப் உங்கள் அணியில் இருந்தால், அவரை விளையாட விடுங்கள். இங்கிலாந்தில் விளையாடுவதால் மட்டும் வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்யாதீர்கள்.

    நான் ஒரு வேகப்பந்து வீச்சாளரை விட்டுவிட்டு குல்தீப் யாதவை அணியில் சேர்ப்பேன். இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக குல்தீப் யாதவ் இடம் பெற வேண்டும்.

    என்று சஞ்சய் மஞ்ரேக்கர் கூறினார்.

    • பேட்டர்கள் தரவரிசையில் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் டாப் 10-ல் உள்ளனர்.
    • சுப்மன் கில் 5 இடங்கள் முன்னேறி 20-வது இடத்தை பிடித்துள்ளார்.

    டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்கள் பட்டியலில் இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் 4-வது இடத்திலும் ரிஷப் பண்ட் 7-வது இடத்திலும் உள்ளனர்.

    மேலும் இந்திய கேப்டன் சுப்மன் கில் 5 இடங்கள் முன்னேறி 20-வது இடத்தையும் கேஎல் ராகுல் 10 இடங்கள் முன்னேறி 38-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    டெஸ்ட் பேட்டர்கள் பட்டியலில் இங்கிலாந்து வீரர்கள் ரூட் முதல் இடத்திலும் ஹாரி ப்ரூக் 2-வது இடத்திலும் தொடர்கிறார்கள்.

    • இந்த மைதானத்தில் ஏற்கனவே சில நல்ல நினைவுகள் எங்களுக்கு இருக்கின்றன.
    • டெஸ்ட் போட்டியில் 5-வது நாள் கடைசி மணி நேரம் வரை போட்டி சென்றது மிகச் சிறப்பாக இருந்தது.

    இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இந்தியாவின் கடைநிலை வீரர்களை விரைவாக வீழ்த்தியது எங்களது வெற்றிக்கு முக்கிய காரணம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த மைதானத்தில் ஏற்கனவே சில நல்ல நினைவுகள் எங்களுக்கு இருக்கின்றன. அதில் இந்த வெற்றியும் சேர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்த டெஸ்ட் போட்டியில் 5-வது நாள் கடைசி மணி நேரம் வரை போட்டி சென்றது மிகச் சிறப்பாக இருந்தது. இந்த போட்டியில் எங்களது வெற்றிக்கு நல்ல வாய்ப்பு இருந்ததாக கருதினோம்.

    இந்த மைதானத்தில் பேட்டிங்குக்கும் சரி, பந்து வீச்சுக்கும் சரி நல்ல சாதகம் இருந்ததனால் சிறப்பாக செயல்பட முடிந்தது. 4-வது இன்னிங்சில் இலக்கை நோக்கி செல்வது நிச்சயம் அழுத்தமான ஒரு வியசம்தான். ஆனாலும் எங்களது அணியின் துவக்க வீரர்களான ஜேக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்து சேசிங்கிற்கு நல்ல அடித்தளத்தை அமைத்தனர்.

    அவர்களது பார்ட்னர்ஷிப் இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது. பந்துவீச்சிலும் எங்கள் அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

    ஆனால் இந்த வெற்றிக்கு மேலும் ஒரு முக்கிய காரணம் என்னவென்றால், இரண்டு இன்னிங்சிலும் இந்திய அணியின் கடைநிலை வீரர்களை மிக விரைவாக வீழ்த்தியதான் நாங்கள் அவர்களை சேசிங் செய்வதற்கு வசதியாக இருந்தது.

    இந்த தொடரினை வெற்றியுடன் துவங்கியதில் மகிழ்ச்சி. இன்னும் அடுத்த நான்கு போட்டிகளிலும் இதேபோன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம்.

    என பென் ஸ்டோக்ஸ் கூறினார்.

    • மதுரை அணி இதுவரை 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டியில் தோற்றது.
    • திருச்சி அணி இதுவரை ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 4 போட்டிகளில் தோற்றது.

    நெல்லை:

    9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 3-வது கட்ட ஆட்டங்கள் நெல்லையில் நடைபெற்று வருகிறது. நேற்று டன் 22 ஆட்டங்கள் முடிந்து உள்ளன.

    4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. திருப்பூர் தமி ழன்ஸ் 8 புள்ளிகளுடனும், திண்டுக்கல் டிராகன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் தலா 6 புள்ளிகளுடனும், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் தலா 4 புள்ளி களுடனும், திருச்சி கிராண்ட் சோழாஸ், கோவை கிங்ஸ் ஆகியவை தலா 2 புள்ளி களுடனும் உள்ளன.

    முன்னாள் சாம்பியன் கோவை அணி 5 போட்டிகளில் தோற்றதால் வாய்ப்பை இழந்து வெளியேறியது. பிளே ஆப் சுற்றின் 3-வது இடத்துக்கு 6 அணிகள் போட்டியில் உள்ளது. இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 23- வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்- திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.

    சதுர்வேத் தலைமையிலான மதுரை அணி 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டியில் தோற்றது. திருச்சியை வீழ்த்தி 3-வது வெற்றியுடன் பிளே ஆப் சுற்றில் நீடிக்கும் ஆர்வத்தில் அந்த அணி இருக்கிறது.

    சுரேஷ்குமார் தலைமையிலான திருச்சி அணி ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 4 போட்டிகளில் தோற்றது. 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அந்த அணி வெளியேற்றப்படும். 

    ×