என் மலர்
கிரிக்கெட் (Cricket)

முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை 180 ரன்னில் சுருட்டிய வெஸ்ட் இண்டீஸ்
- 1993-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் வென்றதில்லை.
- இண்டீஸ் அணி தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளும் ஷமர் ஜோசப் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 5 இருபது ஓவர் போட்டிகளில் ஆடுகிறது.
இதன்படி ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்சில் 180 ரங்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டிராவில் ஹெட் 59 ரன்களும் கவாஜா 47 ரன்களும் அடித்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளும் ஷமர் ஜோசப் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் நாள் முடியவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் அடித்துள்ளது.






