என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்.. ஆனால்.. ட்விஸ்ட் வைத்த கவுதம் கம்பீர்
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தோல்விக்கு யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை.
- தவறுகளில் இருந்து பாடம் கற்று அடுத்த போட்டிக்கு நல்ல முறையில் தயாராவோம்.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்ஸில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது.
இந்நிலையில் டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பணிச்சுமையை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தோல்விக்கு யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. தவறுகளில் இருந்து பாடம் கற்று அடுத்த போட்டிக்கு நல்ல முறையில் தயாராவோம்.
பும்ராவின் பணிச்சுமை திட்டத்தை நாங்கள் மாற்ற மாட்டோம். அவரது பணிச்சுமையை நிர்வகிப்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் கிரிக்கெட் நிறைய முன்னேறி வருகிறது. மேலும் அவரால் என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்குத் தெரியும்.
எனவே அவர் இந்த சுற்றுப்பயணத்திற்கு வருவதற்கு முன்பே, மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட வைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கு அவரது உடல் எப்படி உதவும் என்பதை நாங்கள் பார்க்க வேண்டும். இருப்பினும் அவர் எஞ்சியுள்ள போட்டிகளில் எந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பதை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.
என்று கம்பீர் கூறினார்.






