என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஐசிசி பேட்டர்கள் தரவரிசையில் முன்னேற்றம் கண்ட இந்திய வீரர்கள்
- பேட்டர்கள் தரவரிசையில் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் டாப் 10-ல் உள்ளனர்.
- சுப்மன் கில் 5 இடங்கள் முன்னேறி 20-வது இடத்தை பிடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்கள் பட்டியலில் இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் 4-வது இடத்திலும் ரிஷப் பண்ட் 7-வது இடத்திலும் உள்ளனர்.
மேலும் இந்திய கேப்டன் சுப்மன் கில் 5 இடங்கள் முன்னேறி 20-வது இடத்தையும் கேஎல் ராகுல் 10 இடங்கள் முன்னேறி 38-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
டெஸ்ட் பேட்டர்கள் பட்டியலில் இங்கிலாந்து வீரர்கள் ரூட் முதல் இடத்திலும் ஹாரி ப்ரூக் 2-வது இடத்திலும் தொடர்கிறார்கள்.
Next Story






