என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்தது.
- இது சேப்பாக் அணியின் 6வது வெற்றியாகும்.
நெல்லையில் இன்று நடைபெற்ற டி.என்.பி.எல். தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச முடிவு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களான ஆஷிக் 5 ரன்களிலும், மொகித் ஹரிகரன் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் பாபா அபராஜித் மற்றும் விஜய் சங்கர், அரைசதம் அடித்து அசத்தினர். பாபா அபராஜித் 63 ரன்களிலும், விஜய் சங்கர் 59 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 179 ரன்கள் இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான வசீம் அகமது 10 ரன்களிலும், ஜெயராமன் சுரேஷ்குமார் 63 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஜெகதீசன் கவுசிக் 43 ரன்களிலும், ஜாபர் ஜமால் 6 ரன்களிலும், ராஜ்குமார் 6 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர்.
இறுதியில், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.
சேப்பாக் அணி சார்பில் பிரேம் குமார் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், விஜய் சங்கர், ரோகித் சுதர், சிலம்பரசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இது சேப்பாக் அணியின் 6வது வெற்றியாகும்.
- 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
- 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடந்துவரும் நிலையில் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன.
தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது.
ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும், சாய் சுதர்சன் 32 ரன்களில் ஆட்டம் இழந்தார். கேப்டன் கில் 8 ரன்களில் ஆட்டம் இழக்க தொடர்ந்து இறங்கிய ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர்.
கருண் நாயர் 20 ரன்களில் வெளியேற ஜடேஜா 25 ரன்கள் சேர்த்தார். சிராஜ், பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் டக் அவுட் ஆனார்கள். இங்கிலாந்து வீரர் ஜோஸ் டாங்க, ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இறுதியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
எனவே முந்திய இன்னிங்சின் 6 ரங்களுடன் சேர்த்து, 371 ரன்கள் என்ற இலக்கை இங்கிலானாது துரத்த முற்பட்டுள்ளது.
- பாபா அபராஜித் 40 பந்தில் 63 ரன்கள் விளாசினார்.
- விஜய் சங்கர் 46 பந்தில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 21ஆவது போட்டி திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இந்த பேட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற திருச்சி கிராண்ட் சோழாஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங் செய்தது. கே. ஆஷிக், மோஹிக் ஹரிகரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆஷிக் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து பாபா அபராஜித் களம் இறங்கினார். மற்றொரு தொடக்க வீரர் ஹரிகரன் 16 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 3ஆவது விக்கெட்டுக்கு பாபா அபராஜித் உடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாபா அபராஜித் அரைசதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 40 பந்தில் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
4ஆவது விக்கெட்டுக்கு விஜய் சங்கர் உடன் ஜெகதீசன் ஜோடி சேர்ந்தார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 17 ஓவரில் 152 ரன்கள் சேர்த்திருந்தது.
18ஆவது ஓவரின் 4ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி 41 பந்தில் அரைசதம் அடித்தார் விஜய் சங்கர். தொடர்ந்து விளையாடிய அவர் 19ஆவது ஓவரில் 46 பந்தில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 19 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 171 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே அடிக்க 20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 178 ரன்கள் எடுத்துள்ளது.
- விக்கெட் கீப்பர் ஆண்டி பிளவர் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்துள்ளார்.
- இங்கிலாந்து மண்ணில் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசிய ஒரே இந்தியர் ரிஷப் பண்ட் மட்டுமே.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லீட்சில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் சதம் விளாசினர். 2ஆவது இன்னிங்சில் கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் சதம் விளாசினர்.
இதன்மூலம் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசிய 2ஆவது விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். முன்னதாக ஜிம்பாப்வே விக்கெட் கீப்பர் ஆண்டி பிளவர் 2001-ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் 142 ரன்களும், 2ஆவது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 199 ரன்களும் விளாசியிருந்தார்.
தற்போது ரிஷப் பண்ட் முதல் இன்னிங்சில் 134 ரன்களும், 2ஆவது இன்னிங்சில் 118 ரன்களும் விளாசியுள்ளார்.
மேலும், இங்கிலாந்து மண்ணில் இரண்டு இன்னிங்சில் சதம் விளாசிய ஒரே இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர் (3), ராகுல் டிராவிட் (2), விராட் கோலி, ரகானே, ரோகித் சர்மா ஆகியோர் இதற்கு முன்னதாக இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசிய இந்திய பேட்ஸ்மேன்கள் ஆவார்கள்.
- 83 பந்தில் அரைசதம் அடித்திருந்தார்.
- 130 பந்தில் சதம் விளாசினார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்டின் இன்றைய 4ஆவது நாள் ஆட்டத்தில் இந்தியா 2ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. சுப்மன் கில் 8 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில் ரிஷப் பண்ட் களம் இறங்கினார். இவர் கே.எல். ராகுல் உடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
83 பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதம் கடந்ததும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் சதத்தை நோக்கி வீறுநடை போட்டார். கடைசியில் 130 பந்தில் சதம் விளாசினார்.
முதல் இன்னிங்சிலும் ரிஷப் பண்ட் சதம் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்சில் 134 ரன்கள் விளாசியிருந்தார்.
- முதல் இன்னிங்சில் 42 ரன்கள் எடுத்திருந்தார்.
- இது அவரின் 9ஆவது சர்வதேச டெஸ்ட் சதமாகும்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஹெட்டிங்லி, லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் சேர்த்தன.
6 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 47 ரன்களுடனும், சுப்மன் கில் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 7ஆவது பந்தில் சுப்மன் கில் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரிஷப் பண்ட் களம் இறங்கினார்.
மறுமுனையில் கே.எல். ராகுல் அரைசதம் விளாசினார். கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் ஜோடி மிகவும் நிதானமாக விளையாடியது. இதனால் 4ஆவது நாள் மதிய உணவு இடைவேளை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல். ராகுல் 72 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
தேனீர் இடைவேளை முடிவடைந்த பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். கே.எல். ராகுல் நிதானமாக விளையாடினார். ரிஷப் பண்ட் 83 பந்தில் அரைசதம் அடித்தார். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் கே.எல். ராகுலுக்கு முன்னதாக சதத்தை எட்டிவிடும் அளவிற்கு அற்புதமாக விளையாடினார்.
என்றாலும் 62ஆவது ஓவரின் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்து 202 பந்தில் சதம் விளாசினார். இவரது சதத்தில் 18 பவுண்டரிகள் அடங்கும். இந்தியா தற்போது 3 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பண்ட் 99 பந்தில் 82 ரன்கள் எடுத்துள்ளார்.
கே.எல். ராகுலின் 9ஆவது சர்வதேச டெஸ்ட் சதம் இதுவாகும். முதல் இன்னிங்சில் 42 ரன்களில் ஆட்டமிழந்திருந்தார்.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தான் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
- திருச்சி 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 21ஆவது போட்டி திருநெல்வேலியில் நடக்கிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் திருச்சி அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. சேப்பாக் சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும வெற்றி பெற்று பிளேஆப் சுற்றை உறுதி செய்துள்ளது. திருச்சி கிராண்ட் சோழாஸ் 4 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று 7ஆவது இடத்தில் உள்ளது.
- சுப்மன் கில் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
- கே.எல். ராகுல் அரைசதம் தாண்டி விளையாடி வருகிறார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஹெட்டிங்லி, லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் சேர்த்தன.
6 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 47 ரன்களுடனும், சுப்மன் கில் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 7ஆவது பந்தில் சுப்மன் கில் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரிஷப் பண்ட் களம் இறங்கினார்.
மறுமுனையில் கே.எல். ராகுல் அரைசதம் விளாசினார். கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் ஜோடி மிகவும் நிதானமாக விளையாடியது. இதனால் 4ஆவது நாள் மதிய உணவு இடைவேளை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல். ராகுல் 72 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை இந்தியா 159 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் கூடுதலாக 200 ரன்கள் சேர்த்தால், இங்கிலாந்து சேஸிங் செய்ய கடும் சவாலானதாக இருக்கும்.
- இந்தியாவுக்காக 5 டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
- உடற்தகுதி பிரச்சனைகள் மற்றும் ஒழுக்கமின்மை குற்றச்சாட்டுகளால் சர்வதேச அணியில் நிலையான இடத்தை பெற முடியவில்லை.
இந்திய அணி வீரர் பிரித்வி ஷா. இந்தியாவுக்காக 5 டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 25 வயதான ஷா, மோசமான உடற்தகுதி மற்றும் ஒழுக்கமின்மை காரணமாக கடந்த ஆண்டு மும்பை ரஞ்சி அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இவர் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்பட்டு "அடுத்த சச்சின்" என புகழப்பட்டவர். ஆனால் காயங்கள், உடற்தகுதி பிரச்சனைகள் மற்றும் ஒழுக்கமின்மை குற்றச்சாட்டுகளால் சர்வதேச அணியில் நிலையான இடத்தை பெற முடியவில்லை.
இதன் காரணமாக ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடவில்லை. உள்ளூர் போட்டியிலும் மும்பை அணியில் அவர் இடம் பெறவில்லை.
கடைசியாக மத்தியப் பிரதேசத்திற்கு எதிரான உள்நாட்டுப் போட்டியான சையத் முஷ்டாக் அலி டி20 டிராபியின் இறுதிப் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடினார். அந்த ஆட்டத்தில் அவரது அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில் மும்பை அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு மும்பை கிரிக்கெட் வாரியத்துக்கு பிரித்வி ஷா கடிதம் எழுதியுள்ளார்.
- பிரசித் கிருஷ்ணா 20 ஓவர்களில் 128 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- 6 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 465 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 6 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மோசமான சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளர். அதன்படி இப்போட்டியில் 20 ஓவர்கள் வீசிய அவர், 6.40 என்ற எகானமியில் 128 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 6-க்கும் மேற்பட்ட எகானமி விகிதத்தில் பந்துவீசிய இந்திய வீரர் எனும் சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக 2004-ம் ஆண்டு சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்சில், சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக் 6 க்கும் மேற்பட்ட எகானமியில் 122 ரன்கள் விட்டுக்கொடுத்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் பிரஷித் கிருஷ்ணா 128 ரன்களைக் கொடுத்து மோசமான சாதனையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு டெஸ்ட் இன்னிங்சில் அதிக ரன்களை கொடுத்த இந்திய வீரர்கள் (6+ எகானமி)
128 - பிரசித் கிருஷ்ணா vs இங்கிலாந்து- லீட்ஸில் (2025)*
122 - முரளி கார்த்திக் vs ஆஸ்திரேலியா- சிட்னியில் (2004)
108 - அதுல் வாசன் vs நியூசிலாந்து- ஆக்லாந்தில் (1990)
98 - முகமது சிராஜ் vs இங்கிலாந்து- பர்மிங்காமில் (2022)
96 - ஸ்ரீசாந்த் vs வெஸ்ட் இண்டீஸ்- செயிண்ட் ஜான்ஸ் (2006)
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 வெற்றிகளுடன் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.
- திருச்சி அணி 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள்ளி மட்டுமே பெற்றிருக்கிறது.
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்றிரவு (திங்கட்கிழமை) 7.15 மணிக்கு நடக்கும் 21-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருச்சி கிராண்ட் சோழாசுடன் மோதுகிறது. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 வெற்றிகளுடன் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று டாப்-2 இடத்தை உறுதி செய்யும் வேட்கையுடன் காத்திருக்கிறது.
சுரேஷ்குமார் தலைமையிலான திருச்சி அணி 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள்ளி மட்டுமே பெற்றிருக்கிறது. பிளே-ஆப் வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். தோற்றால் வெளியேற வேண்டியது தான்.
- விஜய் நேற்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
- அவருக்கு ரசிகர்களும் , அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் நேற்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்களும் , அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அரசியல் தலைவர்கள், திரைப்படம் மற்றும் ஊடகத் துறை நண்பர்கள் அனைவருக்கும் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பிறந்தநாள் வாழ்த்து கூறிய அரசியல் தலைவர்கள், திரைப்படம் மற்றும் ஊடகத் துறை நண்பர்கள், நலம் விரும்பிகள், என் நெஞ்சில் குடி இருக்கும் உலகம் முழுவதிலும் உள்ள தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
உங்கள் ஆதரவு மக்களுக்கு சேவை செய்வதற்கான எனது பயணத்தை ஊக்குவிக்கிறது. பிரகாசமான எதிர்காலத்திற்காக ஒன்றாக அணிவகுப்போம்.
என விஜய் கூறினார்.






