என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ரன்களை வாரி வழங்கும் வள்ளல்.. மோசமான சாதனை படைத்த பிரசித் கிருஷ்ணா
    X

    ரன்களை வாரி வழங்கும் வள்ளல்.. மோசமான சாதனை படைத்த பிரசித் கிருஷ்ணா

    • பிரசித் கிருஷ்ணா 20 ஓவர்களில் 128 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • 6 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.

    பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 465 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 6 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

    இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மோசமான சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளர். அதன்படி இப்போட்டியில் 20 ஓவர்கள் வீசிய அவர், 6.40 என்ற எகானமியில் 128 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 6-க்கும் மேற்பட்ட எகானமி விகிதத்தில் பந்துவீசிய இந்திய வீரர் எனும் சாதனையை அவர் படைத்துள்ளார்.

    இதற்கு முன்னதாக 2004-ம் ஆண்டு சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்சில், சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக் 6 க்கும் மேற்பட்ட எகானமியில் 122 ரன்கள் விட்டுக்கொடுத்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் பிரஷித் கிருஷ்ணா 128 ரன்களைக் கொடுத்து மோசமான சாதனையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரு டெஸ்ட் இன்னிங்சில் அதிக ரன்களை கொடுத்த இந்திய வீரர்கள் (6+ எகானமி)

    128 - பிரசித் கிருஷ்ணா vs இங்கிலாந்து- லீட்ஸில் (2025)*

    122 - முரளி கார்த்திக் vs ஆஸ்திரேலியா- சிட்னியில் (2004)

    108 - அதுல் வாசன் vs நியூசிலாந்து- ஆக்லாந்தில் (1990)

    98 - முகமது சிராஜ் vs இங்கிலாந்து- பர்மிங்காமில் (2022)

    96 - ஸ்ரீசாந்த் vs வெஸ்ட் இண்டீஸ்- செயிண்ட் ஜான்ஸ் (2006)

    Next Story
    ×