என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    TNPL 2025: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருச்சி கிராண்ட் சோழாஸ் இன்று மோதல்
    X

    TNPL 2025: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருச்சி கிராண்ட் சோழாஸ் இன்று மோதல்

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 வெற்றிகளுடன் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.
    • திருச்சி அணி 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள்ளி மட்டுமே பெற்றிருக்கிறது.

    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்றிரவு (திங்கட்கிழமை) 7.15 மணிக்கு நடக்கும் 21-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருச்சி கிராண்ட் சோழாசுடன் மோதுகிறது. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 வெற்றிகளுடன் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று டாப்-2 இடத்தை உறுதி செய்யும் வேட்கையுடன் காத்திருக்கிறது.

    சுரேஷ்குமார் தலைமையிலான திருச்சி அணி 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள்ளி மட்டுமே பெற்றிருக்கிறது. பிளே-ஆப் வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். தோற்றால் வெளியேற வேண்டியது தான்.

    Next Story
    ×