என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்டுக்கு அபராதம்
    X

    இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்டுக்கு அபராதம்

    • இந்திய அணி 2-வது இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
    • இதனால் இங்கிலாந்து அணிக்கு371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்டின் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 465 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    இதனால் 6 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. இதில் ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் சதத்தால் இந்திய அணி 364 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்டுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அதன்படி நடுவரின் முடிவுக்கு எதிராக செயல்பட்டதற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதமும், ஒன்று அல்லது இரண்டு புள்ளிகள் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×