என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பரபரப்பான கடைசி நாள் ஆட்டம்.. இங்கிலாந்தின் அதிரடியை சமாளிக்குமா இந்தியா?
- இங்கிலாந்து வெற்றிக்கு மேலும் 350 ரன் தேவை.
- லீட்ஸ் ஆடுகளத்தில் இங்கிலாந்து அணி இதற்கு முன்பு 362 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்று இருந்தது.
லீட்ஸ்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடைபெற்று வருகிறது.
இந்தியா முதல் இன்னிங்சில் 471 ரன் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 465 ரன் எடுத்து பதிலடி கொடுத்தது. 6 ரன்கள் முன்னிலையில் 2- வது இன்னிங்சை ஆடிய இந்தியா 364 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு 371 ரன் இலக்காக இருந்தது.
தொடக்க வீரர் கே.எல். ராகுல் (137 ரன்), ரிஷப் பண்ட் (118 ரன்) சதம் அடித் தனர். கார்ஸ் , ஜோஷ் டங் தலா 3 விக்கெட்டும், ஷோ யிப் பஷீர் 2 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட் டும் கைப்பற்றினார்கள்.
361 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடிய இங்கிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்து இருந்தது. சிராவ்லி 12 ரன்னுடனும், பென்டக்கெட் 9 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.
இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இங்கிலாந்து வெற்றிக்கு மேலும் 350 ரன் தேவை. கைவசம் 10 விக்கெட் உள்ளது.
இந்திய அணி இங்கிலாந்தின் 10 விக்கெட் கைப்பற்றி வெற்றி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த டெஸ்டில் வெற்றி பெற முயற்சிக்கும்.
லீட்ஸ் ஆடுகளத்தில் இங்கிலாந்து அணி இதற்கு முன்பு 362 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்று இருந்தது. 2019-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது. இந்த ஆடுகளத்தில் அதிகபட்சமாக 404 ரன் இலக்கை ஆஸ்திரேலிய அணி இங்கிநாந்துக்கு எதிராக (1948-ம் ஆண்டு) எடுத்தது.
இந்த டெஸ்டில் வெற்றி பெறுவது இந்தியாவா? இங்கிலாந்தா? அல்லது டிராவில் முடியுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.






