என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் சூர்யகுமார் யாதவ் கேப்டன்.
    • 2021-ல் இருந்து இந்திய டி20 அணியின் 9-வது கேப்டன் இவராவார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை வீரர்கள், ரசிகர்கள் மட்டுமல்ல, ஏறக்குறைய கிரிக்கெட் தெரிந்த அனைத்து தரப்பு மக்களாலும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

    இதற்கிடையே இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று நடைபெற இருக்கிறது. இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2021-ம் ஆண்டில் இருந்து இந்தியா டி20 அணியின் 9-வது கேப்டன் இவராவார்.

    முதன்முறையாக கேப்டனாக பொறுப்பேற்றுள்ள சூர்யகுமார் யாதவ், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். முதன்முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான செய்தியாளர்கள் கேள்வி கேட்க அமர்ந்திருப்பார்கள் என உற்சாகமாக வந்தார்.

    ஆனால், அங்கே இரண்டு செய்தியாளர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர். இது அவருக்கும், பிசிசிஐ-க்கும் நிச்சயமாக தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும்.

    ஏறக்குறைய இந்தியாவின் "பி" அணி என்று நினைத்து செய்தியாளர்கள் கலந்து கொள்ளவில்லையா? அல்லது தோல்வியின் விரக்தியில் கலந்து கொள்ளவில்லையா? என்பது தெரியவில்லை.

    எதுவாக இருந்தாலும், முதன்முறையாக இந்திய அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவுக்கு இது ஏமாற்றதை அளித்திருக்கும்.

    • கேரளா மகளிர் கிரிக்கெட் அணியின் நல்லெண்ணத் தூதராக கீர்த்தி சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • திருவனந்தபுரத்தில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா டி20 போட்டிக்கான இணையதள டிக்கெட் விற்பனையையும் கீர்த்தி சுரேஷ் தொடங்கி வைத்தார்.

    திருவனந்தபுரம்:

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் கேரளா மகளிர் கிரிக்கெட் அணியின் நல்லெண்ணத் தூதராக கீர்த்தி சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கேரளா கிரிக்கெட் சங்கம்(கேசிஏ) நிகழ்வில், நல்லெண்ண தூதராக கீர்த்தி சுரேஷ் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா டி20 போட்டிக்கான இணையதள டிக்கெட் விற்பனையையும் கீர்த்தி சுரேஷ் தொடங்கி வைத்தார்.


    மேலும், கேரளா மகளிர் கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அணிந்து வீராங்கனைகளுடன் கீர்த்தி சுரேஷ் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    • இணையத்தின் உண்மை மற்றும் நம்பகத்தன்மையிலிருந்து தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது.
    • எக்ஸ் தளம் அத்தகைய கணக்குகளைப் பார்த்து அவற்றை இடைநிறுத்தும் என்று நம்புகிறேன்.

    இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் ஆவார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பவர். இவரது புகைப்படத்துக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் வருவதுண்டு. இவரை இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுடன் இணைத்து பல செய்திகள் வெளியாகி உள்ளது.

    மேலும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது எக்ஸ் தளத்தில் சாரா பெயரில் இருந்து கில்லுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர் பெயரில் போலிக்கணக்குகள் தொடங்கி பணம் செலுத்தி ப்ளு டிக் பெற்று சர்ச்சை பதிவுகள் வந்தது.

    இந்நிலையில் எக்ஸ் தளத்தில் தனக்கு எந்தவித கணக்கு இல்லை என சாரா, இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-



    சமூக ஊடகங்கள் நம் அனைவருக்கும் மகிழ்ச்சி, துக்கம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளை பகிர்ந்து கொள்ள ஒரு அற்புதமான இடம். இருப்பினும், இணையத்தின் உண்மை மற்றும் நம்பகத்தன்மையிலிருந்து தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது.

    எக்ஸ் தளத்தில் என்னைப் போல் ஆள்மாறாட்டம் செய்து மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் இது மாதிரியான போலி கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. எக்ஸ் தளத்தில் என்னிடம் கணக்கு இல்லை. மேலும் எக்ஸ் அத்தகைய கணக்குகளைப் பார்த்து அவற்றை இடைநிறுத்தும் என்று நம்புகிறேன்.

    என்று அவர் வலியுறுத்தினார்.

    • ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலகக் கோப்பை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
    • மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பையை காலுக்கு கீழ் வைத்து புகைப்படம் எடுத்தார்.

    13-வது உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் 10 நகரங்களில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலகக் கோப்பை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தாயகம் திரும்பினார். அவர் விமான நிலையத்தில் இருந்து எந்தவித வரவேற்பும் இன்றி நடந்து சென்றார். உலகக் கோப்பையை வென்ற கேப்டன் வரும் போது எந்தவித வரவேற்பும் இன்றி சென்றது இந்திய ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    ஒரு பக்கம் மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பையை காலுக்கு கீழ் வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். மறுபக்கம் பேட் கம்மின்ஸ் எந்தவித ஆரவாரமின்றி செல்கிறார். கோப்பையை வென்றதை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் மற்றும் ரசிகர்கள் எப்படி எடுத்து கொள்கிறார்கள் என இந்திய ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். 

    இந்த கோப்பை இந்திய அணி வென்றிருந்தால் ரசிகர்கள் அதை கொண்டாடிருப்பார்கள். கேப்டனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து அசத்திருப்பார்கள். ஒவ்வொரு வீரருக்கும் அந்த மாநிலத்தில் கவுரவம் வழங்கப்பட்டிருக்கும் என்பது மிகையாகாது. 

    • ஷாகிப் அல் ஹசன் அரசியல் கட்சியில் இணைந்துள்ளார்.
    • வங்காளதேசத்தின் ஆளும் கடசியான வங்களாதேசம் அவாமி லீக்கில் இணைந்துள்ளார்.

    வங்காளதேச அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசன். வங்காளதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை இவர் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். இவர் தலைமையில் வங்காளதேசம் அணி நடப்பு உலகக் கோப்பை தொடரை சந்தித்தது. ஆனால் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 7 போட்டிகளில் தோல்வி அடைந்தது.

    இதனையடுத்து தாயகம் திரும்பிய ஷாகிப் அல் ஹசன் அரசியல் கட்சியில் இணைந்துள்ளார். வங்காளதேசத்தின் ஆளும் கடசியான வங்களாதேசம் அவாமி லீக்கில் இணைந்துள்ளார். ஷாகிப் அல் ஹசனை வேட்பாளராக நிறுத்த அக்கட்சி தயாராக உள்ளது.

    இந்நிலையில் ஷாகிப் அல் ஹசன் ரசிகர்களால் தாக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. உலகக் கோப்பையில் வங்காளதேசம் அணி மோசமான தோல்வியை சந்தித்ததால் அவரை ரசிகர்கள் தாக்கியதாக செய்தி பரவியது. அந்த வீடியோவில் ரசிகர் கூட்டத்திற்குள் அவர் தடுமாறி வருகிறார். அதில் ஒரு ரசிகர் அவரை சட்டையை பிடித்து இழக்கிறார். அந்த கூட்டத்திற்குள் இருந்து வெளியே வந்த ஷாகிப் பதட்டத்துடன் காணப்பட்டார்.

    இதன் உண்மை தன்மை என்னவென்றால், துபாயில் உள்ள ஒரு நகைக்கடையின் தொடக்க விழாவிற்கு ஷாகிப் அல் ஹசன் வருகை தந்துள்ளார். ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் வந்ததால் அவ்வாறு செய்திகள் பரவியிருந்தது.

    • பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 4 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
    • அணிகள் பட்டியலில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணி முதல் உள்ளது.

    துபாய்:

    ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது.

    அந்த வகையில் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் 4 இடத்தில் 3 இந்திய வீரர்கள் இடம் பிடித்தனர். முதல் இடத்தில் சுப்மன் கில் தொடர்கிறார். 2-வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமும் 3-வது மற்றும் 4-வது இடங்கள் முறையே விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளனர்.

    பந்து வீச்சாளர்கள் பட்டியலில் டாப் 10-ல் 4 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். சிராஜ் 3-வது இடத்திலும் 4-வது இடத்தில் பும்ராவும் குல்தீப் யாதவ் 6-வது இடத்திலும் 10-வது இடத்தில் முகமது சமியும் உள்ளனர். 741 புள்ளிகளுடன் கேசவ் மகாராஜ் முதல் இடத்தில் உள்ளார்.

    அணிகள் பட்டியலில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணி முதல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்த போட்டியின் முதல் ஆட்டம் ஜனவரி 11-ந் நடக்கிறது.
    • ஆப்கானிஸ்தான் அணியுடன் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது.

    அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இருதரப்பு டி20 தொடரில் விளையாடுகிறது.

    இதற்கான முதல் டி20 போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இந்த தொடர் டிசம்பர் 3-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா செல்ல உள்ளது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் டிசம்பர் 10 முதல் அடுத்த வருடம் ஜனவரி 7-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய அணி சொந்த நாட்டுக்கு திரும்புகிறது.

    அதன்பின் ஆப்கானிஸ்தான் அணியுடன் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இதுவரை இரு அணிகளும் ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில் தற்போது முதன் முறையாக இரு தரப்பு டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டியின் முதல் ஆட்டம் ஜனவரி 11-ந் நடக்கிறது. 

    • தமிழ்நாட்டை சேர்ந்த ஏழு இளம் வீரர்கள் ஜப்பானில் பிளாக் பெல்ட் வென்றனர்.
    • முறையாக கராத்தே கற்று பிளாக் பெல்ட் அடைய 10 ஆண்டுகள் வரை ஆகும்.

    டோக்கியோவில் நடைபெற்ற 2023 ஜே.கே.எஃப். (JKF) டான் கிரேடிங் தேர்வுகளில் இந்தியா சார்பில் பங்கேற்று, கராத்தேவில் மிக உயர்ந்த அங்கீகாரமான பிளாக் பெல்ட்களைவென்று இளம் இந்திய வீரர்கள் அசத்தியுள்ளனர்.

    அரகாவா ஸ்டான்லி வாடோ-காய் இந்தியா பயிற்சி மையத்தை சேர்ந்த சென்செய் டொனால்ட் டைசனிடம் கராத்தே பயிற்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த ஏழு இளம் வீரர்கள் ஜப்பானில் பிளாக் பெல்ட்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இவர்களில் 12 வயது ஜெய்ஸ்ரீ அக்ஷயா மற்றும் 14 வயது ஆர்யன் சதீஷ் புதிய சாதனையை படைத்துள்ளனர்.

    ஜே.கே.எஃப். என அழைக்கப்படும் ஜப்பான் கராத்தே கூட்டமைப்பின் சர்வதேச நிபுணர்களால் இத்தேர்வுகள் நடத்தப்பட்டன. உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் மரியாதைக்குரிய கராத்தே அமைப்பாக இது போற்றப்படுகிறது.

    தனது மாணவர்கள் பிளாக் பெல்ட் வென்றது பற்றி பேசிய சென்செய் டைசன், "ஒரு மாணவர் முறையாக கராத்தே கற்று பிளாக் பெல்ட்டை அடைய ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும். மேலும், பிளாக் பெல்ட் எங்கிருந்து ஒருவர் பெறுகிறார் என்பது மிகவும் முக்கியம். எனது அனைத்து மாணவர்களும் ஜேகேஎஃப் அமைப்பிடமிருந்து பிளாக் பெல்ட்களைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்," என்றார்.

    • இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கிறது.
    • ஸ்ரேயாஸ் அய்யர் கடைசி 2 ஆட்டத்தில் அணியோடு இனைந்து கொள்வார்.

    விசாகப்பட்டினம்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி உலகக் கோப்பைக்கு முன்பு இந்தியாவில் 3 ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடியது. இந்த தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. பின்னர் நடந்த உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் பெற்றது. இறுதிப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

    தற்போது அந்த அணி இந்திய மண்ணில் 5 இருபது ஒவர் போட்டி தொடரில் ஆடுகிறது. ஒருநாள் போட்டி தொடரின் தொடர்ச்சியாக 20 ஓவர் ஆட்டங்கள் நடைபெறுகிறது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை (23-ந்தேதி) நடக்கிறது.

    உலகக் கோப்பையில் விளையாடிய சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் மட்டுமே இந்த தொடரில் இடம் பெற்றுள்ளனர். ஸ்ரேயாஸ் அய்யர் கடைசி 2 ஆட்டத்தில் அணியோடு இனைந்து கொள்வார். சூர்யகுமார் யாதவ் கேப்டனாக பணியாற்றுகிறார்.

    இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்க்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இருக்கிறது.

    இரு அணிகள் மோதிய கடைசி 5 இருபது ஓவர் போட்டியில் இந்தியா 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சொந்த மண்ணில் நடந்த 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ வேட் கேப்டனாக உள்ளார். உலகக் கோப்பை யில் ஆடிய டிரெவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், ஸ்டீவ் சுமித்,ஜோஸ் இங்லிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா , அபோட் ஆகியோர் 20 ஓவர் தொடரில் இடம் பெற்றுள்ளனர்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 27-வது ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 26 ஆட்டத்தில் இந்தியா 15-ல், ஆஸ்திரேலியா 10-ல் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.

    நாளைய ஆட்டம் இரவு 7 மணிக்கு நடக்கிறது. ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியா:-

    சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான்கிஷன், ஜெய்ஷ்வால், ஜிதேஷ் சர்மா, ரிங்குசிங், ஷிவம் துபே, திலக் வர்மா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், அர்தீப்சிங், அவேஷ்கான், முகேஷ்குமார், பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய்.

    ஆஸ்திரேலியா:-

    மேத்யூ வேட் (கேப்டன்), டிரெவிஸ் ஹெட், ஆரோன் ஹார்டி, மேக்ஸ்வெல், ஸ்டீவ் சுமித், ஸ்டோ னிஸ், டிம் டேவிட், பெகரன் டார்ப், ஜோஸ் இங்லிஸ், தன்வீர் சங்கா, அபோட், நாதன் எல்லிஸ், கானே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, மேத்யூ ஷார்ட்.

    • இறுதிப் போட்டியை அகமதாபாத்தில் நடத்தியது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
    • இறுதிப்போட்டி லக்னோவில் நடைபெற்று இருந்தால் இந்திய அணிக்கு பலரது ஆசிர்வாதம் கிடைத்திருக்கும்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. இறுதிப் போட்டியை அகமதாபாத்தில் நடத்தியது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து அரசியல் ரீதியாக பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-

    குஜராத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டி லக்னோவில் நடைபெற்று இருந்தால் இந்திய அணிக்கு பலரது ஆசிர்வாதம் கிடைத்திருக்கும். பகவான் விஷ்ணு மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் ஆசிர்வாதமும் இருந்திருக்கும். இந்தியா உலக கோப்பையையும் வென்று இருக்கும். தற்போது ஆடுகளத்தில் சில சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த 2022-ம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி அறிமுகமானது.
    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய கவுதம் கம்பீர் 2 முறை சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுத்தார்.

    கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. பிசிசிஐ மூலமாக நடத்தப்படும் இந்த தொடரானது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதில், கடந்த 2022-ம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி அறிமுகமானது. இந்த அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட்டு வந்தார். அணியில் ஆலோசகராக கவுதம் கம்பீர் இருந்தார்.

    இந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியிலிருந்து கம்பீர் விலகினார். அவர் கேப்டனாக இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கே ஆலோசராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய கவுதம் கம்பீர் 2 முறை சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல், பீல்டிங் பயிற்சியாளர் ஜாண்டி ரோட்ஸ் மற்றும் ஸ்ட்ரேடெஜி ஆலோசகராக பிசிசிஐயின் முன்னாள் தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தான் கம்பீர் அந்த அணியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

    • சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டின் மாண்பையும், நேர்மையையும், வீராங்கனைகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    • 2028-ம் ஆண்டு அமெரிக்காவில் நடக்கும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.

    அகமதாபாத்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) நிர்வாகிகள் கூட்டம் அகமதாபாத்தில் நேற்று நடந்தது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்களாக பணியாற்றுபவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. பாலின பாகுபாடின்றி அவர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியமே வழங்கப்படும். ஜனவரியில் இருந்து புதிய முறை நடைமுறைக்கு வருகிறது.

    மற்றொரு முக்கிய முடிவாக புதிய பாலின தகுதி விதிமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆணுக்குரிய தன்மையை கொண்ட ஒருவர் ஆபரேஷன் மற்றும் பாலின மறுசீரமைப்பு சிகிச்சை முறைகள் மூலம் பெண்ணாக மாறினாலும் அவர் ஒரு போதும் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டின் மாண்பையும், நேர்மையையும், வீராங்கனைகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2028-ம் ஆண்டு அமெரிக்காவில் நடக்கும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, உங்களது விளையாட்டுக்கு எது சரியாக இருக்கிறதோ அதற்கு ஏற்ப பாலின தகுதி கொள்கையை நிர்ணயித்து கொள்ளலாம் என்று அறிவுரை வழங்கியது. இதன்படியே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், இதற்காக கடந்த 9 மாதங்கள் விளையாட்டு சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும் ஐ.சி.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே சமயம் உள்ளூர் போட்டிகளில் பாலின தகுதி வரைமுறையை பின்பற்றும் விஷயத்தில் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் ஐ.சி.சி. கூறியுள்ளது.

    ×