search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    வெறும் இரண்டு செய்தியாளர்கள் மட்டுமே... இந்திய அணி கேப்டனுக்கு வந்த சோதனை
    X

    வெறும் இரண்டு செய்தியாளர்கள் மட்டுமே... இந்திய அணி கேப்டனுக்கு வந்த சோதனை

    • முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் சூர்யகுமார் யாதவ் கேப்டன்.
    • 2021-ல் இருந்து இந்திய டி20 அணியின் 9-வது கேப்டன் இவராவார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை வீரர்கள், ரசிகர்கள் மட்டுமல்ல, ஏறக்குறைய கிரிக்கெட் தெரிந்த அனைத்து தரப்பு மக்களாலும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

    இதற்கிடையே இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று நடைபெற இருக்கிறது. இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2021-ம் ஆண்டில் இருந்து இந்தியா டி20 அணியின் 9-வது கேப்டன் இவராவார்.

    முதன்முறையாக கேப்டனாக பொறுப்பேற்றுள்ள சூர்யகுமார் யாதவ், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். முதன்முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான செய்தியாளர்கள் கேள்வி கேட்க அமர்ந்திருப்பார்கள் என உற்சாகமாக வந்தார்.

    ஆனால், அங்கே இரண்டு செய்தியாளர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர். இது அவருக்கும், பிசிசிஐ-க்கும் நிச்சயமாக தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும்.

    ஏறக்குறைய இந்தியாவின் "பி" அணி என்று நினைத்து செய்தியாளர்கள் கலந்து கொள்ளவில்லையா? அல்லது தோல்வியின் விரக்தியில் கலந்து கொள்ளவில்லையா? என்பது தெரியவில்லை.

    எதுவாக இருந்தாலும், முதன்முறையாக இந்திய அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவுக்கு இது ஏமாற்றதை அளித்திருக்கும்.

    Next Story
    ×