என் மலர்
விளையாட்டு
- மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்துவருகிறது.
- இதில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மான்டி கார்லோ:
களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.
இதில் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய ஆட்டம் ஒன்றில் கிரீஸ் வீரட் சிட்சிபாஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவுடன் மோதினார்.
இதில் சிட்சிபாஸ் 7-5, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்த தோல்வி மூலம் ஸ்வரேவ் தொடரில் இருந்து வெளியேறினார்.
- மும்பை அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
- ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 25-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
முன்னதாக மும்பை அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. நான்காவது போட்டியில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.
இரு அணிகளும் அதிக தோல்விகளை சந்தித்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.
- கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ வீரர் நவீன் உல் ஹக் மற்றும் பெங்களூரு வீரர் கோலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது
- கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் மற்றும் கோலி இடையில் மோதல் வெடித்தது
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதிய ஆட்டத்தில் லக்னோ வீரர் நவீன் உல்-ஹக் மற்றும் பெங்களூரு வீரர் கோலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போட்டியில் பெங்களூரு வெற்றிபெற்ற பின் இரு அணி வீரர்களும் சந்தித்தபோது லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் மற்றும் கோலி இடையில் மோதல் வெடித்தது.
அதன் பிறகு விராட் கோலி ஆட்டத்தில் தடுமாறும் போதும், பெங்களூரு அணி தோல்வியை தழுவும் போதும் மாம்பழங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து 'இன்பமாய் இருக்குதய்யா' என சொல்வது போல பதிவிட்டு வந்தார் நவீன் உல்-ஹக். அதே நேரத்தில் அந்த சீசன் முழுவதும் அவர் களத்தில் ஃபீல்ட் செய்யும் போது 'கோலி.. கோலி..' என ரசிகர்கள் முழக்கமிட்டு வந்தனர்.
இதனையடுத்து கடந்தாண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான போட்டியில் நவீன் உல் ஹக் பேட் செய்ய வந்த போது 'கோலி.. கோலி..' என ரசிகர்கள் முழக்கமிட்டனர். பின்னர் கோலி பேட் செய்தபோது அவருக்கு நவீன் உல் ஹக் பந்து வீசி இருந்தார். அப்போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்துக் கொண்டனர். அதோடு இருவரும் அணைத்துக்கொண்டனர்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையிலான போட்டியின் போது விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் கட்டியணைத்து கொண்ட சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறியது.
இந்த சம்பவங்கள் குறித்து பேசிய விராட் கோலி, "கம்பீர் பாய் மற்றும் நவீன் உல்ஹக் உடன் நான் சமரசத்தில் ஈடுபட்டது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துவிட்டது. அவர்களுக்கு மசாலா தீர்ந்துவிட்டது என நினைக்கிறேன்" என்று கிண்டலாக தெரிவித்தார்.
- பிரனாய் 18-21, 11-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
- பிவி சிந்து 18-21, 21-13, 17-21 எனத் தோல்வியடைந்தார்.
ஆசிய சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 15 பேர் ஒன்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் கலந்து கொண்டார். அனைவரும் காலிறுதிக்குக் கூட முன்னேற முடியாமல் வெளியேறி ஏமாற்றம் அடைந்தனர்.
இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஹெச்.எஸ். பிரனாய் உலகத் தரவரிசையில் 19-வது இடத்தில் இருக்கும் லின் சுன்-யியை எதிர்கொண்டார். இதில் பிரனாய் 18-21, 11-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஹாய் யுயி-ஐ 2-வது சுற்றில் எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து முதல் செட்டை 18-21 என இழந்தார். ஆனால் 2-வது செட்டை 21-13 என எளிதாக கைப்பற்றினார்.
வெற்றியை தீர்மானிக்கும் 3-வது சுற்றில் கடுமையாக போராடினார். இருந்தபோதிலும் 17-21 என 3-வது செட்டை தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார். பிவி சிந்து ஹாய் யுயி-ஐ ஆறு முறை எதிர்கொண்டுள்ளார். இதில் தற்போது முதன்முறையாக தோல்வியடைந்தார்.
- மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்துவருகிறது.
- இதில் ரஷிய வீரர் மெத்வதேவ் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.
மான்டி கார்லோ:
களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.
இதில் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், மற்றொரு ரஷிய வீரரான காரென் கச்சனோவுடன் மோதினார்.
இதில் மெத்வதேவ் 3-6, 5-7 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதன்மூலம் தொடரில் இருந்து வெளியேறினார்.
கச்சனோவ் காலிறுதிக்கு முன்னேறினார்.
- ராஜஸ்தான் அணிக்கெதிராக 4 ஓவரில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீ்ழ்த்தினார்.
- 11 பந்தில் 24 ரன்கள் அடித்து அணியை கடைசி பந்தில் வெற்றி பெற வைத்தார்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஷித் கான் உலகின் தலைசிறந்த டி20 பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். உலகளவில் நடைபெறும் பெரும்பாலான தொழில்முறையான டி20 லீக்கில் விளையாடி வருகிறார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஒருவேளை அவரது பந்து வீச்சு எடுபடவில்லை என்றால் பீல்டிங் மற்றும் பேட்டிங்கிலும் அணியை வெற்றிபெற வைக்க துடிப்பார். அணியின் வெற்றிக்காக தனது 100 சதவீத பங்களிப்பை கொடுக்க எப்போதும் தவறியதில்லை.
நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராகவும் அப்படித்தான் பேட்டிங்கில் களம் இறங்கி 11 பந்தில் 24 ரன் எடுத்து குஜராத் அணியின் வெற்றிக்கு பங்காற்றினார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்த நிலையில் ரஷித் கான் குறித்து கவாஸ்கர் கூறுகையில் "அவர் வழக்கம்போல் விக்கெட் வீழ்த்துவது போல் விக்கெட் வீழ்த்தவிலலை. ஆனால், பேட்டிங்கில் அவரது பங்களிப்பு தேவை என்று வந்தபோது, களத்தில் இறங்கி அதை கச்சிதமாக செய்து முடித்தார்.
இந்த காரணத்தினால்தான் உலகளவில் உள்ள தொழில்முறை கிரிக்கெட் அணிகள் இவர் போன்ற வீரர்களை விரும்புகிறது. ரஷித் கானை அவர்கள் விரும்புகின்றனர். ஏனென்றால் அவர்கள் பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் அவருடைய உள்ளார்ந்த ஈடுபாட்டை காண முடியும்.
அவர் பீல்டிங் செய்யும்போது, தன்னால் முடிந்த அனைத்தையும் வெளிப்படுத்துவார். பந்து வீச்சாளர்கள் அவர்கள் பந்து வீசும் கைகளின் தோள்பட்டை கீழே படும்படி டைவிங் அடிக்க யோசிப்பார்கள். ஏனென்றால், ஒருவேளை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டால் அவர்களது பந்து வீச்சுக்கு மிகப்பெரிய வகையில் அச்சுறுத்தலாகிவிடும்.
ஆனால் அந்த பயம் ரஷித் கானிடம் இருக்காது. அவர் தனது 100 சதவீத முயற்சியை வெளிப்படுத்த விரும்புவார்.
இதேபோல் இன்னொரு வீரர் உள்ளார். அவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. அவர் பென் ஸ்டோக்ஸ். பென் ஸ்டோக்ஸ் பீல்டிங், பந்து வீச்சு, பேட்டிங் ஆகிவற்றில் 100 சதவீதம் தனது பங்களிப்பை வெளிப்படுத்துவார். இதேபோன்ற வீரர்களைத்தான் பயிற்சியாளர்கள், கேப்டன்கள் விரும்புவார்கள்.
- ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்தியாவின் புதிய வீரர்கள் சிறப்பாக விளையாடுவதை பார்க்க முடிகிறது.
- விராட் கோலி டி20-யில் இருந்து விலகியிருந்த நிலையில், அவரது ஆட்டம் அணியில் இடம் பெறுவதை காட்டுகிறது.
டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
அதேவேளையில் புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த தாவித் மலான், இந்தியா சரியான வகையில் வீரர்களை தேர்வு செய்தால் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தாவித் மலான் கூறுகையில் "நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் சிறப்பான வகையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் இந்தியாவின் புதிய வீரர்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இந்திய கிரிக்கெட் போர்டு அதிக திறமையுள்ள வீரர்களை சரியான முறையில் தேர்வு செய்தால் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடும்.
விராட் கோலி டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்தபோதிலும் கூட, ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரது ஆட்டம் இந்தியாவின் இறுதி அணிக்கான வலிமையான போட்டியாளர் என்பதை காட்டுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் மயங்க் யாதவ் மற்றும் ரியான் பராக் ரசிகர்களை ஈர்க்கும் வகையில மிகச்சிறந்த வகையில விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
36 வயதான தாவித் மலான் இங்கிலாந்து அணிக்காக கடைசியாக 2023 உலகக் கோப்பையில் விளையாடினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒயிட்பால் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெறவில்லை. இதனால் அவரது சர்வதேச கிரிக்கெட் கேரியர் முடிவுக்கு வருவதாக அஞ்சப்படுகிறது. தாவித் மலான் தற்போது யார்க்ஷைர் அணியின் சப்போர்ட் கோச்சாக பணியாற்ற உள்ளார்.
இருந்தபோதிலும் டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்கும் என நம்பிக்கையில் உள்ளார்.
- ஹர்திக், குர்ணால் பாண்ட்யாவின் வளர்ப்பு சகோதரர் வைபவ் பாண்ட்யாவை பண மோசடி வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.
- கடந்த் சில நாட்களாக ஹர்திக் பாண்ட்யா குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை நடந்த முடிந்த லீக் போட்டிகள் முடிவில் ராஜஸ்தான் அணி முதல் இடத்தில் உள்ளது. 2 முதல் 4 இடங்கள் முறையே கொல்கத்தா, லக்னோ, சென்னை ஆகிய அணிகள் உள்ளன.
இந்த புள்ளி பட்டியலில் மும்பை அணி 8-வது இடத்தில் உள்ளது. முதல் 3 போட்டிகளில் தோல்வியை தழுவிய அந்த அணி 4-வது போட்டியில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனையடுத்து மும்பை அணியின் 5-வது போட்டியில் ஆர்சிபி அணியுடன் இன்று மோதுகிறது.
இந்த தொடர் தொடங்கியதில் இருந்து மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஹர்திக் பாண்ட்யா குடும்பம் தொடர்பான ஒரு செய்தி வைரலாகி வருகிறது.
ஹர்திக் பாண்ட்யா மற்றும் குர்ணால் பாண்ட்யாவின் வளர்ப்பு சகோதரர் வைபவ் பாண்ட்யாவை பண மோசடி வழக்கில் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
குர்ணால், ஹர்திக், வைபவ் மூவரும் இணைந்து உருவாக்கிய நிறுவனத்தில் இருவருக்கும் தெரியாமல் ரூ.1 கோடி வரை தன்னுடைய வங்கி கணக்கிற்கு மாற்றியதுடன், தன்னுடைய லாப விகிதத்தையும் அதிகரித்து வைபவ் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
- 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 6-வது ரவுண்டு நேற்று நடந்தது.
- 6 சுற்றுகள் முடிவில் இயன் நெபோம்னியாச்சி , குகேஷ் ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.
டொராண்டோ:
உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.
14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 6-வது ரவுண்டு நேற்று நடந்தது.
சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த ஹிகாரு நகமுராவை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் டிரா செய்தார். சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா, அஜர் பைஜானை சேர்ந்த நிஜாத் அபாசோவ்வை எதிர் கொணடார். அதில் 45-வது காய் நகர்த்தலுக்கு பிறகு பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
அதே போல் மற்றொரு இந்திய வீரரான விதித் குஜராத்தி, 6-வது சுற்றில் பிரான்சின் அலிரேசா பிரோஸ்ஜாவை தோற்கடித்தார்.
6 சுற்றுகள் முடிவில் இயன் நெபோம்னியாச்சி , குகேஷ் ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். பிரக்ஞானந்தா 3.5 புள்ளியுடன் 3 முதல் 4-வது இடத்திலும், விதித் குஜராத்தி 3 புள்ளிகளுடன் 5 முதல் 6-வது இடத்திலும் உள்ளனர்.
பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் வைஷாலி, ஹம்பி ஆகியோர் எதிர் அணி வீராங்கனைகளுடன் மோதிய 6-வது சுற்றில் தோல்வியை தழுவினார்கள்.
பெண்கள் பிரிவில் 6-வது ரவுண்டு முடிவில் வைஷாலி 2.5 புள்ளிகளுடன் 5 முதல் 6-வது இடத்திலும், ஹம்பி 2 புள்ளிகளுடன் 7 முதல் 8-வது இடத்திலும் உள்ளனர்.
- ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத்- ராஜஸ்தான் அணிகள் மோதின.
- இந்த போட்டியில் கடைசி பந்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத்- ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி, பராக் மற்றும் சாம்சனின் அதிரடியால் 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 196 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி, தொடக்கம் சிறப்பாக அமையவில்லை என்றாலும் ஃபினிஷிங் அற்புதமாக அமைந்தது. கடைசி ஓவரில் குஜராத் அணிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் இருந்த ரஷித்கான் அதிரடியாக விளையாடி வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி தனது முதல் தோல்வியை பதிவு செய்தது.
இந்த போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- கோலி களத்தில் இருக்கும்போது முடிவுகள் எப்படி இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும்.
- கோலி போன்ற ஒரு வீரர் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தால் போட்டிகளின் முடிவுகள் நமக்கு சாதகமாக வரும்.
மும்பை:
20 ஒவர் உலகக்கோப்பை போட்டி வருகிற ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் தேர்வானது ஏப்ரல் மாதம் இறுதியிலோ அல்லது மே மாதம் முதல் வாரத்திலோ நடைபெறும் என்று கூறப்படுகிறது. உலகக்கோப்பை போட்டிக்கு விராட் கோலி தேர்வு செய்யப்படமாட்டார் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில் இது குறித்துதேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியதாவது:-
விராட் கோலி கிரிக்கெட்டில் ஒரு அளவுகோலை அமைத்தவர். 15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த உடற்தகுதியை தொடர்ச்சியாக அவர் பராமரித்து வருகிறார். அவர் களத்தில் இருக்கும்போது முடிவுகள் எப்படி இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும்.
கோலி போன்ற ஒரு வீரர் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தால் போட்டிகளின் முடிவுகள் நமக்கு சாதகமாக வரும். அணிக்குள் உடற்தகுதி என்பது அதிகப்படியான முக்கியத்துவம் பெற்றதில் கோலியின் பங்கு முக்கியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோலியை அகர்கர் பாராட்டி இருப்பதால் அவர் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது உறுதியாகி உள்ளதாக தெரிகிறது.
- மும்பை அணி முதல் 3 ஆட்டங்களில் (குஜராத், ஐதராபாத், ராஜஸ்தானுக்கு எதிராக) வரிசையாக தோற்றது.
- டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் பாண்ட்யா சாமி தரிசனம் செய்திருந்தார்.
மும்பை:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் போட்டிக்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அவருடன் இஷான் கிஷன், பியூஸ் சாவ்லா மற்றும் குர்ணால் பாண்ட்யா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். இதனால் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏனென்றால் இந்த சீசனை மோசமாக தொடங்கிய மும்பை அணி முதல் 3 ஆட்டங்களில் (குஜராத், ஐதராபாத், ராஜஸ்தானுக்கு எதிராக) வரிசையாக தோற்றது. இந்த தோல்விக்கு பிறகு 4-வது போட்டியில் டெல்லி அணியை மும்பை சந்தித்தது. அந்த போட்டிக்கு முன்னர் ஹர்திக் பாண்டியா குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து நடந்து போட்டியில் டெல்லி கேப்பிட்டல்சை தோற்கடித்து மும்பை வெற்றிக்கணக்கை தொடங்கியது.

இந்த நிலையில் இப்போதும் அவர் கோவிலுக்கு சென்றுள்ளதை வைத்து ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.






