search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி20 உலகக் கோப்பையில் கோலி - அகர்கரின் பாராட்டால் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி
    X

    டி20 உலகக் கோப்பையில் 'கோலி' - அகர்கரின் பாராட்டால் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி

    • கோலி களத்தில் இருக்கும்போது முடிவுகள் எப்படி இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும்.
    • கோலி போன்ற ஒரு வீரர் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தால் போட்டிகளின் முடிவுகள் நமக்கு சாதகமாக வரும்.

    மும்பை:

    20 ஒவர் உலகக்கோப்பை போட்டி வருகிற ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் தேர்வானது ஏப்ரல் மாதம் இறுதியிலோ அல்லது மே மாதம் முதல் வாரத்திலோ நடைபெறும் என்று கூறப்படுகிறது. உலகக்கோப்பை போட்டிக்கு விராட் கோலி தேர்வு செய்யப்படமாட்டார் என்று தகவல் வெளியானது.

    இந்த நிலையில் இது குறித்துதேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியதாவது:-

    விராட் கோலி கிரிக்கெட்டில் ஒரு அளவுகோலை அமைத்தவர். 15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த உடற்தகுதியை தொடர்ச்சியாக அவர் பராமரித்து வருகிறார். அவர் களத்தில் இருக்கும்போது முடிவுகள் எப்படி இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும்.

    கோலி போன்ற ஒரு வீரர் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தால் போட்டிகளின் முடிவுகள் நமக்கு சாதகமாக வரும். அணிக்குள் உடற்தகுதி என்பது அதிகப்படியான முக்கியத்துவம் பெற்றதில் கோலியின் பங்கு முக்கியமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோலியை அகர்கர் பாராட்டி இருப்பதால் அவர் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது உறுதியாகி உள்ளதாக தெரிகிறது.

    Next Story
    ×