என் மலர்
விளையாட்டு
- டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது.
- அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே 152 ரன்கள் எடுத்தது.
ஹராரே:
ஜிம்பாப்வே, இந்தியா அணிகள் மோதும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் துஷார் தேஷ்பாண்டே அறிமுகம் ஆகிறார்.
அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்த நிலையில் டாடிவான்சே மருமானி 32 ரன்னில் அவுட்டானார். வெஸ்லி மாதவரே 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ஆடிய கேப்டன் சிக்கந்தர் ராசா 28 பந்தில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இறுதியில், ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது.
இந்தியா சார்பில் கலீல் அகமது 2 விக்கெட்டும், அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.
- ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.
- இந்த தொடருக்கான இந்திய அணியின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு:
ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் வரும் 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடக்கிறது.
இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாளமும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், மலேசியா, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வரும் 19-ம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோதுகிறது. அடுத்த லீக் ஆட்டங்களில் இந்திய அணி 21-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 23-ம் தேதி நேபாளத்தையும் எதிர்கொள்கிறது.
- பெடரிகோ சீசாவின் ஒப்பந்தம் அடுத்த ஆண்டு வரை உள்ளது.
- குறைவான சம்பளத்திற்கு சம்மதம் தெரிவித்தால் ஒப்பந்தத்தை நீட்டிக்க வாய்ப்புள்ளது.
இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் முன்னணி கிளப் மான்செஸ்டர் யுனைடெட். அதேபோல் இத்தாலியின் செர்ரி ஏ லீக்கின் முன்னணி கிளப் யுவேன்டஸ்.
யுவேன்டஸ் அணியில் பெடரிகோ சீசா விளையாடி வருகிறார். தற்போது அவரை மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு கொடுத்துவிட்டு, அந்த அணியில் உள்ள ஜடோன் சான்சோவை வாங்க யுவேன்டஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெடரிகோ சீசாவை வெளியேற்றுவதன் மூலம் சான்சோவை எளிதாக வாங்கிக் கொள்ளலாம் என நினைக்கிறது யுவேன்டஸ். ஆனால் இந்த பரிமாற்றம் டிரான்ஸ்பர் பீஸ் இல்லாமல் நடைபெற வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
ஜிடோன் சான்சோ ஏற்கனவே டுரின் செல்ல இருப்பதாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மான்செஸ்டர் யுனைடெ் பயிற்சியாளர் எரிக் டென் ஹக் யோசனை செய்வார் எனத் தெரிகிறது.
ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் சீசா மீண்டும் யுவேன்டஸ் அணிக்கு திரும்பவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த டிரான்ஸ்பர் நிலை அவருடைய எதிர்காலத்தை நிச்சயமற்றதாக உருவாக்கிவிட்டது. அவருடைய ஒப்பந்தம் இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில், யுவேன்டஸ் அவரை வெளியேற்றும் நிலைக்கு வந்துள்ளது.
நான்கு வருடத்திற்கு முன் சீசாவை பியோரென்டினா கிளப்பில் இருந்து 60 மில்லியன் யூரோவிற்கு யுவேன்டஸ் ஒப்பந்தம் செய்தது. அந்த அணியின் 11 பேர் பட்டியலில் தொடர்ந்து இடம் பிடித்தார். 131 போட்டிகளில் விளையாடி 32 கோல்கள் அடித்துள்ளார்.
தற்போது குறைந்த சம்பளத்துடன் யுவேன்டஸ் அணியுடன் ஒப்பந்தத்தை நீடித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மாற்று வாய்ப்பை தேடிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அடுத்த ஆண்டு வரை தொடர்ந்து யுவேன்டஸ் அணியுடன் நீடிக்க வேண்டும்.
தற்போது வரை யுவேன்டஸ் அணியில் நீடிப்பது அல்லது வேறு அணிக்கு செல்வது குறித்து சீசா எந்த பதிலும் அளிக்கவில்லை.
ஜடோன் சன்சோ முதலில் மான்செஸ்டரின் திட்டத்தில் இல்லை. அந்த அணியின் பயிற்சியாளர் எரிக் டென் ஹக் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் முதல் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது எரிக் டென் ஹக் உடன் உள்ள கருத்து வேறுபாடு பேசி சரிசெய்துள்ளதால், பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அணியில் இருந்து நீக்கப்பட்டபோது, லோன் அடிப்படையில் ஜெர்மனியின் புருஸ்சியா டார்ட்மண்ட் அணிக்கு சென்றார். அங்கு சிறப்பாக விளையாடி, 11 வருடத்தில் முதன்முறையாக UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேற உதவியாக இருந்தார். ஆனால் அந்த அணியில் சான்சோவை ஒப்பந்தம் செய்ய முடியாமல் போனது.
- 3 போட்டிகள் முடிவில் 2-1 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
- டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது.
ஹராரே:
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 13 ரன் வித்தியாசத்திலும் 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன் வித்தியாசத்திலும், 3வது ஆட்டத்தில் இந்திய அணி 23 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்குகிறது.
இந்திய அணியில் துஷார் தேஷ்பாண்டே அறிமுகம் ஆகிறார்.
- இந்திய அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
- கெய்க்வாடுக்கு நிதியுதவி அளிக்கவேண்டும் என பிசிசிஐயிடம் கபில் தேவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி:
உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அணி வீரர் அன்ஷுமன் கெய்க்வாடுக்கு நிதியுதவி அளிக்கவேண்டும் என பிசிசிஐ-யிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்ஷுமன் கெய்க்வாட் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்தார்.
மொகிந்தர் அமர்நாத், சுனில் கவாஸ்கர், சந்தீப் பாட்டீல், திலீப் வெங்சர்க்கார், மதன்லால், ரவிசாஸ்திரி மற்றும் கீர்த்தி ஆசாத் போன்ற அவரது முன்னாள் அணியினர் கெய்க்வாட் சிகிச்சைக்காக நிதி திரட்டி வருகின்றனர் என தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தை பிசிசிஐ பரிசீலித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் கெய்க்வாட்டுக்கு நிதியுதவி அளிக்கும் என கபில்தேவ் குறிப்பிட்டார். இதுதொடர்பாக கபில் தேவ் கூறியதாவது:
இது ஒரு சோகமானது மற்றும் மிகவும் மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. நான் அன்ஷுவுடன் சேர்ந்து விளையாடியதால் நான் வலியில் இருக்கிறேன். இந்த நிலைமையில் அவரைப் பார்க்க சகிக்க முடியவில்லை. யாரும் கஷ்டப்பட வேண்டாம். அவரை வாரியம் கவனித்துக் கொள்ளும் என்று எனக்குத் தெரியும்.
அன்ஷுவுக்கு எந்த உதவியும் உங்கள் இதயத்தில் இருந்து வரவேண்டும். ரசிகர்கள் அவரைத் தவறவிட மாட்டார்கள், அவர் குணமடைய பிரார்த்தனை செய்ய வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக எங்களிடம் ஒரு அமைப்பு இல்லை. இந்த தலைமுறை வீரர்கள் நன்றாக பணம் சம்பாதிப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. துணை ஊழியர்களுக்கும் நல்ல ஊதியம் கிடைப்பது நல்லது.
எங்கள் காலத்தில் வாரியத்திடம் பணம் இல்லை. இன்று அது மூத்த வீரர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் ஒரு அறக்கட்டளையை உருவாக்கினால் அவர்கள் தங்கள் பணத்தை அங்கு வைக்கலாம். பிசிசிஐ அதைச் செய்யமுடியும் என்று நான் நினைக்கிறேன்.
அவர்கள் முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்களைக் கவனித்துக் கொள்கிறார்கள். நாங்கள் எங்கள் ஓய்வூதியத் தொகையை வழங்க தயார் என தெரிவித்தார்.
- விம்பிள்டன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று இன்று நடைபெறுகிறது.
- இதில் செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி உடன் மோதுகிறார்.
லண்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி உடன் மோதுகிறார்.
இந்நிலையில், விம்பிள்டன் தொடரில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் சாம்பியன்களுக்கு தலா ரூ.28 கோடியும், 2-வது இடத்தை பிடிப்போருக்கு தலா ரூ.13 கோடியும் பரிசுத்தொகையாக கிடைக்கும்.
போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.534 கோடியாகும். இது கடந்த ஆண்டை விட 11.9 சதவீதம் அதிகமாகும். முதல் சுற்றில் வெளியேறும் போட்டியாளர்கள் 63 லட்சம் பெறுவார்கள் என தெரிவித்துள்ளது.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் அரையிறுதியில் வென்றார்.
லண்டன்
டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடந்தன.
நேற்று நடைபெற்ற 2வது அரையிறுதியில் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான செர்பிய வீரர் ஜோகோவிச், இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டியுடன் மோதினார்.
இதில் ஜோகோவிச் 6-4, 7-6 (7-2), 6-4 என நேர் செட்களில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசை ஜோகோவிச் சந்திக்கிறார்.
- ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 188 போட்டிகள் விளையாடி 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மட்டும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி ஆண்டர்சன் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த போட்டியுடன் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். 22 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக விளையாடிய அவர் மொத்தமாக 991 விக்கெட்டும், டெஸ்ட் போட்டியில் மட்டும் 188 போட்டிகள் விளையாடி 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 32 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார். முதல் மற்றும் 2-வது இடங்கள் முறையே முரளிதரன் (800 விக்கெட்டுகள்), வார்னே (708) உள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆண்டர்சனுக்கு உலகம் முழுவதும் இருந்து முன்னாள் வீரர்கள் இந்நாள் வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவுடன் தனது சக அணி வீரர்களுடன் ஆண்டர்சன் நேரம் செலவிட்டார். அப்போது இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மகளுக்கு ஆண்டர்சன் மிதமான வேகத்தில் பந்துவீசி விளையாடியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய பென் ஸ்டோக்ஸ் எனது மகள் பேட்டிங் செய்ய எனது மகன் பீல்டிங் செய்ய ஆண்டர்சன் பந்துவீசினார் என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார்.
- டெஸ்ட் போட்டியில் மட்டும் 188 போட்டிகள் விளையாடி 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மட்டும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி ஆண்டர்சன் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த போட்டியுடன் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். 22 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக விளையாடிய அவர் மொத்தமாக 991 விக்கெட்டும், டெஸ்ட் போட்டியில் மட்டும் 188 போட்டிகள் விளையாடி 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 32 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார். முதல் மற்றும் 2-வது இடங்கள் முறையே முரளிதரன் (800 விக்கெட்டுகள்), வார்னே (708) உள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆண்டர்சனுக்கு உலகம் முழுவதும் இருந்து முன்னாள் வீரர்கள் இந்நாள் வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அவ்வகையில் பாகிஸ்தானின் அணியின் கேப்டனான பாபர் அசாமும் தனது எக்ஸ் பக்கத்தில் ஆண்டர்சனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த வாழ்த்து பதிவில், "உங்களது கட்டர்களை எதிர்கொள்வதே பெரும் பாக்கியம் தான். ஒரு அழகான விளையாட்டு ஒரு சிறந்த வீரரை இழக்கிறது. இவ்விளையாட்டிற்காக நீங்கள் செய்த தியாகம் அசாத்தியமானது.. உங்களின் மீது மிகுந்த மரியாதை உள்ளது. கோட்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவினை அடுத்து, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பாபர் அசாமுக்கு 2 முறை மட்டும் தான் ஆண்டர்சன் கட்டர்கள் வீசியுள்ளார் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பாபர் அசாமை நெட்டிசன்கள் கிண்டலடிக்க ஆரம்பித்தனர்.
நெட்டிசன்களின் விமர்சனத்தை தொடர்ந்து உடனடியாக அந்த பதிவை பாபர் அசாம் டெலிட் செய்துள்ளார். பின்னர் புதிய பதிவை பாபர் அசாம் இட்டுள்ளார். அதில், பழைய பதிவில் இருந்து கட்டர் என்ற வார்த்தையை நீக்கி விட்டு ஸ்விங் என்ற வார்த்தையை மட்டும் சேர்த்து பாபர் அசாம் பதிவிட்டுள்ளார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 முறை கோலியின் விக்கெட்டை ஆண்டர்சன் வீழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மட்டும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி ஆண்டர்சன் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த போட்டியுடன் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். 22 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக விளையாடிய அவர் மொத்தமாக 991 விக்கெட்டும், டெஸ்ட் போட்டியில் மட்டும் 188 போட்டிகள் விளையாடி 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 32 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார். முதல் மற்றும் 2-வது இடங்கள் முறையே முரளிதரன் (800 விக்கெட்டுகள்), வார்னே (708) உள்ளனர்.
தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய பின்பு பேசிய ஆண்டர்சன், விராட் கோலியை புகழ்ந்தார்.
"ஆரம்ப காலத்தில் விராட் கோலிக்கு எதிராக விளையாடுவது மிகவும் எளிதாக இருக்கும். ஒவ்வொரு பந்திலும் அவரை வீழ்த்திவிடலாம் என்றே தோன்றும். ஆனால், இப்போது அப்படியெல்லாம் அவரை வீழ்த்த முடியாது. அவருக்கு எதிராக விளையாடும்போது தாழ்வு மனப்பான்மை ஏற்படும்" என்று ஆண்டர்சன் தெரிவித்தார்.
ஆண்டர்சனுக்கு எதிராக கோலி 36 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். அதில் 7 முறை கோலியின் விக்கெட்டை ஆண்டர்சன் வீழ்த்தியுள்ளார்.
- 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
- திண்டுக்கல் அணியும் 2-வது வெற்றி வேட்கையில் இருக்கிறது.
கோவை:
8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந் தேதி சேலத்தில் தொடங்கியது. நேற்று முன்தினத்துடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தது. 9 ஆட்டங்கள் சேலத்தில் நடைபெற்றது.
டி.என்.பி.எல். போட்டியின் 2-வது கட்ட ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. வருகிற 18-ந் தேதி வரை 8 போட்டிகள் அங்கு நடத்தப்படுகிறது.
இந்த போட்டி தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும்.
4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 ஆட்டத்தில் 1 வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.
அந்த அணி முதல் ஆட்டத்தில் கோவை கிங்சிடம் 13 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் நெல்லை ராயல் கிங்சிடம் 3 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. 3-வது ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்சை 15 ரன்னில் வீழ்த்தியது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4-வது போட்டியில் திண்டுக்கல் டிராகன்சை நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.15 மணிக்கு எதிர் கொள்கிறது.
பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திண்டுக்கல் டிராகன்சை தோற்கடித்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்டிங்கில் ஜெகதீசன் (117 ரன்), பிரதோஷ் ரஞ்சன் பால் (107 ரன்) ஆகியோரும், பந்துவீச்சில் டேரில் பெராரியோ, அபிஷேக் தன்வர் (தலா 5 விக்கெட்), பெரியசாமி (4 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணியும் 2-வது வெற்றி வேட்கையில் இருக்கிறது. 4-வது இடத்தில் உள்ள அந்த அணி முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாவை 16 ரன்னில் வென்றது. 2-வது போட்டியில் சேலம் ஸ்பார்டன்சிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
முன்னதாக நாளை மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சேலம்-திருச்சி அணிகள் மோதுகின்றன.
இன்றைய ஆட்டங்களில் மதுரை பாந்தர்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் (மாலை 3.15) , கோவை-நெல்லை (இரவு 7.15) அணிகள் மோதுகின்றன.
- பந்து வீச்சில் ஆவேஷ் கான், கலீல் அகமது, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் மிரட்டுகிறார்கள்.
- உள்ளூர் அனுகூலத்தை பயன்படுத்தி தொடரை இழக்காமல் இருக்க எல்லா வகையிலும் ஜிம்பாப்வே அணி போராடும்.
ஹராரே:
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த 2 ஆட்டங்களில் இந்திய அணி முறையே 100 ரன், 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டு தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
இந்திய அணியில் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் என்று பெரிய பட்டாளமே வரிசை கட்டி நிற்கிறது. பந்து வீச்சில் ஆவேஷ் கான், கலீல் அகமது, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் மிரட்டு கிறார்கள்.
எதிர்பாராதவிதமாக முதலாவது ஆட்டத்தில் சிறிய இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவிய இந்திய அணி அடுத்த 2 ஆட்டங்களில் அதிக ரன் குவித்து வெற்றிக்கனியை பறித்தது. அதே போல் இன்றைய ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தி தொடரை வசப்படுத்தும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர். அதே சமயம் கடந்த 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த ஜிம்பாப்வே அணி இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும். எனவே அந்த அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.
ஜிம்பாப்வே அணியில் கேப்டன் சிகந்தர் ராசா, வெஸ்லி மாதவெரே, பிரையன் பென்னெட், டியான் மயர்ஸ், கிளைவ் மடான்டே, முஜரபானி உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். உள்ளூர் அனுகூலத்தை பயன்படுத்தி தொடரை இழக்காமல் இருக்க எல்லா வகையிலும் ஜிம்பாப்வே அணி போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது.
ஜிம்பாப்வே: வெஸ்லி மாதவெரே, டாடிவான்சே மருமானி, பிரையன் பென்னெட், டியான் மயர்ஸ், சிகந்தர் ராசா (கேப்டன் ), ஜோனதன் கேம்ப்பெல், கிளைவ் மடான்டே, வெலிங்டன் மசகட்சா, பிளஸ்சிங் முஜரபானி, ரிச்சர்ட் என்கராவா, சதரா.
மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 2, 3, 4 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.






