என் மலர்
விளையாட்டு
- 3-ம் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் கோலி 70 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
- இந்தியா இன்னும் 125 ரன்கள் பின்னிலையில் உள்ளது.
பெங்களூரு:
இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழை காரணமான முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்ட நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.
அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து நேற்றைய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இன்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.
இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர். இதையடுத்து 366 ரன்கள் பின்னிலையுடன் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் ஜெய்ஸ்வால் 35 ரன்னிலும், ரோகித் சர்மா அரைசதம் அடித்த நிலையில் 52 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து விராட் கோலி மற்றும் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் 3-ம் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் கோலி 70 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இறுதியில் 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 49 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 231 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் உள்ளார். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 2 விக்கெட் வீழ்த்தினார். இந்தியா இன்னும் 125 ரன்கள் பின்னிலையில் உள்ளது.
- இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- நியூசிலாந்து அணி 402 ரன்களை அடித்து ஆல் அவுட் ஆனது.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில், நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது.யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்னும், ரிஷப் பந்த் 20 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.
நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டும், வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. இன்று காலை தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 402 ரன்களை அடித்து ஆல் அவுட் ஆனது.
நியூசிலாந்து சார்பில் டெவான் கான்வே 91 ரன்களும், வில் யங் 33 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 134 ரன்களும்ம்,டிம் சௌதி 65 ரன்களை அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்தியா சார்பில் ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும், அஷ்வின் மற்றும் பும்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 356 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்து வருகிறது.
- பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 366 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
- இங்கிலாந்து அணிக்கு 297 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்தது. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்று அசத்தியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 366 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 118 ரன் எடுத்தார்.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் சதம் அடித்த நிலையில் 114 ரன்னில் ஆட்டம் இழந்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் 7 விக்கெட்டுகளை அள்ளினார். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 297 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். சல்மான் அகா மட்டும் நிதானமாக ஆடி 63 ரன்களை அடித்தார். எனினும், இங்கிலாந்து அணி 221 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, பாகிஸ்தான் அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
- இதில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா வெற்றி பெற்றார்.
பீஜிங்:
நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் செக் நாட்டின் கரோலினா முச்சோவா, ரோமானியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியன் உடன் மோதினார்.
இதில் முச்சோவா 6-2, 6-1 என எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, சீன வீராங்கனை வாங் ஜி யு உடன் மோதினார். இதில் படோசா முதல் செட்டை 6-7 (4-7)இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட படோசா அடுத்த இரு செட்களை 6-1, 6-2 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- மகளிர் டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து 15 முறை ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.
- கடந்த ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்ததற்கு தென் ஆப்பிரிக்கா பழிதீர்த்துக் கொண்டது.
துபாய்:
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் மகளிர் டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து 15 வெற்றிகள் பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு தென் ஆப்பிரிக்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்ததற்கு பழியும் தீர்த்துக் கொண்டது.
- முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 5 விக்கெட் கைப்பற்றினார்.
பெங்களூரு:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
இந்நிலையில், நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்னும், ரிஷப் பந்த் 20 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.
நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டும், வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து இரண்டாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. ரச்சின் ரவீந்திரா 22 ரன்னும், டேரில் மிட்செல் 14 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், நியூசிலாந்து அணி விளையாடியபோது பீல்டிங் செய்த சக வீரர் சர்பராஸ் கான் பொசிஷனில் இல்லாததைப் பார்த்த கேப்டன் ரோகித் சர்மா சத்தம் போட்டுக் கத்தினார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 132 ரன்கள் எடுத்தது.
துபாய்:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.
லீக் சுற்றுகள் முடிந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், துபாயில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பெத் மூனி அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார். எல்லீஸ் பெரி 31 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க வீராங்கனை டஸ்மின் பிரிட்ஸ் 15 ரன்னில் அவுட்டானார். லாரா வோல்வார்ட் 42 ரன்னில் வெளியேறினார். அனேகே போஸ்ச் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 74 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
- ரிஷப் பண்டிற்கு ஏற்கெனவே அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ள காலில் மீண்டும் பந்து நேரடியாக தாக்கியது.
- அந்தக் காலில் பந்து தாக்கியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக அவர் வெளியேற்றப்பட்டார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல்நாள் ஆட்டமானது மழையால் முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. அதன்படி இன்று தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்களையும், ரிஷப் பந்த் 20 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சைத் தொடங்கிய நியூசிலாந்து இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ரச்சின் ரவீந்திரா 22 ரன்களையும், டேரில் மிட்செல் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காயமடைந்து, களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதன் காரணமாக துருவ் ஜூரெல் மாற்று விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.
இது குறித்து கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்தது பின்வருமாறு:- ரிஷப் பந்திற்கு ஏற்கெனவே அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ள காலில் மீண்டும் பந்து நேரடியாக தாக்கியது. அந்தக் காலில் பந்து தாக்கியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக அவர் வெளியேற்றப்பட்டார்.
மேலும் அவரது காயமானது பெரிதளவில் இல்லை என்பதால், நாளைய போட்டியில் அவர் மீண்டும் களத்திற்கு திரும்புவார் என்று தெரிவித்துள்ளார். மேலும் அணியின் கேப்டனாக நாங்கள் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானதை பார்க்கும்போது நான் மிகவும் வேதனைப்படுகிறேன். ஏனெனில் இங்கு முதலில் பேட்டிங் செய்யலாம் என்பது என்னுடைய முடிவு தான். ஆனால் ஒரு வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு முடிவுகள் இது போல் சாதகமாக இல்லை என்றாலும் பரவாயில்லை.
என்று கூறினார்.
- முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 162 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இலங்கை 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
தம்புல்லா:
இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் பவல் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய மோதி 15 பந்தில் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இலங்கை அணி சார்பில் தீக்ஷனா, ஹசரங்கா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஜோடி அதிரடியாக ஆடியது.
முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த நிலையில் பதும் நிசங்கா 39 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ், குசால் பெராரா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தனர்.
இறுதியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்கு 166 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது. குசால் மெண்டிஸ் 68 ரன்னும், குசால் பெராரா 55 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.
கோபன்ஹெகன்:
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து, சீன வீராங்கனையான ஹான் யூ உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 18-21 என இழந்த பி.வி.சிந்து, அடுத்த இரு செட்களை 21-12, 21-16 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதியில் பிவி சிந்து, இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்காவை சந்திக்கிறார்.
- 3-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
- இலங்கை அணி தரப்பில் தீக்ஷனா, ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இலங்கை வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கிங்- லீவிஸ் களமிறங்கினர்.
லீவிஸ் கோல்டன் டக் அவுட் முறையில் வெளியேறினார். அவரை தொடர்ந்து கிங் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹோப் 18, சேஸ் 8, ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 6 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 62 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி திணறியது.
இதனையடுத்து கேப்டன் பவல்- குடாகேஷ் மோதி ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய மோதி 15 பந்தில் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பொறுப்புடன் ஆடிய கேப்டன் பவல் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனால் 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் தீக்ஷனா, ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலி டக் அவுட் ஆனார்.
- இந்திய அணி 46 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இந்தியா -நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 46 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். அதன்படி சர்வதேச அளவில் இந்திய அணிக்காக டோனி 535 போட்டிகளில் விளையாடி உள்ளார். விராட் கோலி இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் 536 போட்டிகளில் விளையாடி இந்த பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
சர்வதேச அளவில் இந்திய அணிக்காக விளையாடிவர்கள் பட்டியலில் யாரும் நெருங்க முடியாத முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அவர் 664 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






