என் மலர்
விளையாட்டு
- நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 46 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- 2020- 2021 ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 36 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு நேற்று தொடங்க வேண்டியது. மழையால் முதல் நாள் ரத்து செய்யப்பட்ட அந்தப் போட்டி இரண்டாவது நாளான இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய வீரர்கள் நியூசிலாந்தின் வேகத்தை சமாளிக்க முடியாமல் பெவிலியன் திரும்பினர். இதனால் வெறும் 46 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்டானது. விராட் கோலி, சர்பராஸ் கான், ராகுல், ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் டக் அவுட்டானார்கள்.
நியூசிலாந்துக்கு தரப்பில் மாட் ஹென்றி 5, வில்லியம் ஓரோர்கே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இப்போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோரை (46) பதிவு செய்து இந்தியா வரலாறு காணாத மோசமான சாதனை படைத்தது. அது போக 36, 42க்குப்பின் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தங்களுடைய 3-வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் 2020 - 2021 பார்டர்- கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 36க்கு ஆல் அவுட்டான இந்தியா தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது.
இந்நிலையில் இந்திய அணி ஆல் அவுட்டாவதில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கலாய்த்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய ரசிகர்களின் ஒளிமயமான பக்கத்தை பாருங்கள். குறைந்தபட்சம் நீங்கள் 36 ரன்களை தாண்டி விட்டீர்கள்" என்று கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கிபாண்டிங் சமீபத்தில் நீக்கப்பட்டார்.
- ஐபிஎல் 2025-ம் ஆண்டுக்கான மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான மெகா ஏலம் நவம்பர் இறுதியில் நடைபெறுகிறது. இந்த மெகா ஏலத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
மெகா ஏலம் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து அணிகளும் பயிற்சியாளர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கிபாண்டிங் நீக்கப்பட்டதை தொடர்ந்து புதிய பயிற்சியாளர் தேடும் பணியில் அந்த அணி நிர்வாகம் தீவிரமாக இறங்கியது.
இந்த நிலையில் டெல்லி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான ஹேமங் பதானி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேலை பந்து வீச்சு பயிற்சியாளர் பணிக்கு கொண்டு வரவும் அந்த அணி திட்டமிட்டுள்ளது.

இன்னொரு பக்கம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் யார்-யாரை தக்க வைக்கலாம் என்பதிலும் டெல்லி நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது. கேப்டன் ரிஷப் பண்ட் (ரூ.18 கோடி), ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் (ரூ.14 கோடி), இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் (ரூ.11 கோடி) ஆகியோர் உறுதியாக தக்கவைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. ஜாக் பிராசெர் மெக்குர்க், டிரிஸ்டான் ஸ்டப்சையும் குறி வைத்துள்ளது.
- நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
- இந்திய அணி முதல் இன்னிங்சில் 46 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களுரூவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நேற்று தொடங்க இருந்தது.
தொடர் மழை காரணமாக நேற்றைய ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் டாஸ் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி, நியூசிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
உணவு இடைவேளை வரை 34 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுளை இழந்த இந்திய அணி, இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அஷ்வின் ரன் எடுக்காமலும், அடுத்தடுத்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து சார்பில் ரூர்கி 4 விக்கெட்டுகளையும், மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும் டிம் சௌதி ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்திய அணி 46 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனதன் மூலம் பல மோசமான சாதனைகளை படைத்துள்ளது. அதன்படி இந்திய மண்ணில் மிக குறைந்த ரன்களை எடுத்த அணி என்ற மோசமான சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் மிகக் குறைந்த ஸ்கோர் எடுத்த அணிகள் விவரம்:-
46 - இந்தியா vs நியூசிலாந்து, பெங்களூரு, 2024*
62 - நியூசிலாந்து vs இந்தியா, மும்பை, 2021
75 - இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ், டெல்லி, 1987
76 - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, அகமதாபாத், 2008
79 - தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, நாக்பூர், 2015
ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் குறைந்த பட்ச ஸ்கோர் 36 ஆகும். 2020-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த மோசமான சாதனை நிகழ்த்தப்பட்டது. அந்த பட்டியல் பின்வருமாறு:-
36 vs ஆஸ்திரேலியா, அடிலெய்டு, 2020
42 vs இங்கிலாந்து, லார்ட்ஸ், 1974
46 vs நியூசிலாந்து, பெங்களூரு, 2024*
58 vs ஆஸ்திரேலியா, பிரிஸ்பேன், 1947
58 vs இங்கிலாந்து, மான்செஸ்டர், 1952
ஒரு இன்னிங்சில் இந்தியா அணி வீரர்கள் 5 பேர் டக் அவுட் ஆவது இது 4-வது முறை. மேலும் நியூசிலாந்துக்கு எதிராக 2-வது முறை 5 பேர் டக் அவுட் ஆகி உள்ளனர். இதற்கு முன்பு இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக 6 பேர் டக் அவுட் ஆகி இந்த பட்டியலில் முதல் 2 இடத்தில் உள்ளது. அந்த பட்டியல் பின்வருமாறு:-
6 vs இங்கிலாந்து, மான்செஸ்டர், 2014 (முதல் இன்னிங்ஸ்)
6 vs தென் ஆப்பிரிக்கா, கேப் டவுன், 2024 (2வது இன்ன்ஸ்)
5 vs ஆஸ்திரேலியா, அடிலெய்டு, 1948 (3வது இன்ன்ஸ்)
5 vs இங்கிலாந்து, லீட்ஸ், 1952 (3வது இன்ன்ஸ்)
5 vs நியூசிலாந்து, மொஹாலி, 1999 (முதல் இன்னிங்ஸ்)
5 vs நியூசிலாந்து, பெங்களூரு, 2024 (முதல் இன்னிங்ஸ்)*
- வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களுரூவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நேற்று தொடங்க இருந்தது.
எனினும், தொடர் மழை காரணமாக நேற்றைய ஆட்டம் தொடர்ந்து தாமதமாகி வந்தது. மழை நீடித்ததால் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
நேற்று டாஸ் போடப்படவில்லை என்பதால், இன்றைய ஆட்டம் டாஸ்-உடன் தொடங்கியது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துது. சுப்மன்கில் முழு உடல் தகுதியுடன் இல்லாததால் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறவில்லை. அவரது இடத்தில் சர்பிராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப் பட்டது. 3 சுழற்பந்து வீரர் களுடன் இந்திய அணி களம் இறங்கியது. அஸ்வின், ஜடேஜா வுடன் குல்தீப் யாதவ் இடம் பெற்றார்.
மிகுந்த நம்பிக்கையுடன் பேட்டிங் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டத்தின் 7-வது ஓவரில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அவர் 2 ரன்னில் டிம் சவுத்தி பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 9 ஆக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார்.ஒன்பது பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ரூர்கி பந்தில் அவுட் ஆகி ஏமாற்றினார்.
அடுத்து வந்த சர்ஃபராஸ் கானும் ரன் ஏதும் எடுக்கமல் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இதனால், இந்திய அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இன்றைய ஆட்டத்தின் முதல் செஷனில் இந்திய அணி 12.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 13 ரன்களை எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.
பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் போட்டி தொடங்கிய நிலையில், இந்திய அணி இரண்டாம் நாளின் உணவு இடைவேலை வரை முதல் இன்னிங்ஸில் 34 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுளை இழந்துள்ளது. இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 13 ரன்களிலும், கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அஷ்வின் ரன் எடுக்காமலும், அடுத்தடுத்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து சார்பில் ரூர்கி 4 விக்கெட்டுகளையும், மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும் டிம் சௌதி ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று பிசிசிஐ வலியுறுத்தி உள்ளது.
- நான்கு வீரர்களை தக்கவைக்க முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் ஆறு வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. மேலும், ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைக்க விரும்புகின்ற என்ற விவரங்களை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று பிசிசிஐ வலியுறுத்தி உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா அடுத்த சீசனில் வேறொரு அணியில் விளையாடுவார் என்று தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தனது அணியில் நான்கு வீரர்களை தக்கவைக்க முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
இதில் ரோகித் சர்மா நிச்சயம் இடம்பெறுவார் என்றும் ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவர் என்று கூறப்படுகிறது.
முன்னதாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா மும்பை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். மும்பை அணியின் இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், ஐபிஎல் 2024 சீசனில் மும்பை அணி விளையாடிய 14 போட்டிகளில் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடம் பிடித்தது.
- வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களுரூவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நேற்று தொடங்க இருந்தது.
எனினும், தொடர் மழை காரணமாக நேற்றைய ஆட்டம் தொடர்ந்து தாமதமாகி வந்தது. மழை நீடித்ததால் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
நேற்று டாஸ் போடப்படவில்லை என்பதால், இன்றைய ஆட்டம் டாஸ்-உடன் தொடங்கியது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துது. சுப்மன்கில் முழு உடல் தகுதியுடன் இல்லாததால் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறவில்லை. அவரது இடத்தில் சர்பிராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப் பட்டது. 3 சுழற்பந்து வீரர் களுடன் இந்திய அணி களம் இறங்கியது. அஸ்வின், ஜடேஜா வுடன் குல்தீப் யாதவ் இடம் பெற்றார்.
மிகுந்த நம்பிக்கையுடன் பேட்டிங் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டத்தின் 7-வது ஓவரில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அவர் 2 ரன்னில் டிம் சவுத்தி பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 9 ஆக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார்.ஒன்பது பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ரூர்கி பந்தில் அவுட் ஆகி ஏமாற்றினார்.
அடுத்து வந்த சர்ஃபராஸ் கானும் ரன் ஏதும் எடுக்கமல் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இதனால், இந்திய அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இன்றைய ஆட்டத்தின் முதல் செஷனில் இந்திய அணி 12.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 13 ரன்களை எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.
பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் போட்டி தொடங்கிய நிலையில், இந்திய அணி இரண்டாம் நாளின் உணவு இடைவேளை வரை முதல் இன்னிங்ஸில் 34 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுளை இழந்துள்ளது.
இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 13 ரன்களிலும், கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து சார்பில் ரூர்கி 3 விக்கெட்டுகளையும், மேட் ஹென்றி 2 விக்கெட்டுகளையும் டிம் சௌதி ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- பிளே ஆப் சுற்று இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
- தமிழ் தலைவாஸ் அணிக்கு சாகர் சாரதி 3-வது முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐதராபாத்:
புரோ கபடி லீக் போட்டி 2014-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. முதல் சீசனில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் கோப்பையை வென்றது. இதுவரை 10 தொடர் நடைபெற்றுள்ளது.
இதில் பாட்னா பைரேட்ஸ் அதிகபட்சமாக 3 முறையும். ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 2 தடவையும், யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி, புனேரி பல்தான் ஆகியவை தலா 1 ஒரு முறையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.
11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நாளை (18 ந் தேதி) தொடங்குகிறது. டிசம்பர் 29-ந் தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.
2-வது கட்ட ஆட்டங்கள் நொய்டாவிலும், 3-வது கட்ட போட்டிகள் புனேயிலும் நடக்கிறது. டிசம்பர் 24-ந் தேதியுடன் லீக் போட்டிகள் முடிவடைகிறது. பிளே ஆப் சுற்று இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
புரோ கபடி லீக் போட்டியில் புனேரி பல்தான், முன்னாள் சாம்பியன்கள் பாட்னா பைரேட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி மற்றும் தமிழ் தலைவாஸ், அரியானா ஸ்டீலர்ஸ், உ.பி. யோத்தாஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
நாளை நடைபெறும் தொடக்க ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்-பெங்களுரூ புல்ஸ் (இரவு 8), டெல்லி-மும்பை ( இரவு 9) அணிகள் மோதுகின்றன.
சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி தொடக்க ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்சை நாளை மறுநாள் எதிர்கொள்கிறது. இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.
தமிழ் தலைவாஸ் அணிக்கு சாகர் சாரதி 3-வது முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் 9-வது சீசனில் முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. சச்சின் தன்வர் தமிழ் தலைவாஸ் அணிக்கு புது வரவாகும்.
இந்த போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களுரூவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நேற்று தொடங்க இருந்தது.
எனினும், தொடர் மழை காரணமாக நேற்றைய ஆட்டம் தொடர்ந்து தாமதமாகி வந்தது. மழை நீடித்ததால் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. நேற்று டாஸ் போடப்படவில்லை என்பதால், இன்றைய ஆட்டம் டாஸ்-உடன் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துது. சுப்மன்கில் முழு உடல் தகுதியுடன் இல்லாததால் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறவில்லை. அவரது இடத்தில் சர்பிராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப் பட்டது. 3 சுழற்பந்து வீரர் களுடன் இந்திய அணி களம் இறங்கியது. அஸ்வின், ஜடேஜா வுடன் குல்தீப் யாதவ் இடம் பெற்றார்.
மிகுந்த நம்பிக்கையுடன் பேட்டிங் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டத்தின் 7-வது ஓவரில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அவர் 2 ரன்னில் டிம் சவுத்தி பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 9 ஆக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார்.
ஒன்பது பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ரூர்கி பந்தில் அவுட் ஆகி ஏமாற்றினார். அடுத்து வந்த சர்ஃபராஸ் கானும் ரன் ஏதும் எடுக்கமல் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இதனால், இந்திய அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இன்றைய ஆட்டத்தின் முதல் செஷனில் இந்திய அணி 12.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 13 ரன்களை எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.
- அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
- ஏராளமான பரிசோதனைகளை எடுத்துக் கொண்டார்.
மகளிர் டென்னிஸ்ஸில் உலகின் முதல்நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் வென்றுள்ள செரீனா கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், கடந்த மே மாதம் எனக்கு கட்டி இருப்பத கண்டுபிடித்தேன். எம்.ஆர்.ஐ. எடுத்ததில், அது நீர்க்கட்டி என்று தெரியவந்தது என தெரிவித்துள்ளார். இது குறித்த எக்ஸ் தள பதிவில், "நானும் இன்னமும் உடல்நலம் தேறி வருகிறேன், சிறப்பாக உணர்கிறேன். எப்போதும் உடல்நலம் தான் முன்னுரிமை," என்று செரீனா வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
உடலில் நீர்க்கட்டி கண்டறியப்பட்டதும் அதனை அகற்றாமல் செரீனா வில்லியம்ஸ் ஏராளமான பரிசோதனைகளை எடுத்துக் கொண்டார். எனினும், கட்டி ஓரளவுக்கு வளர்ந்ததை அடுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டு, அதனை அகற்றியுள்ளார்.
- வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி இழந்தது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களுரூவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நேற்று தொடங்க இருந்தது.
எனினும், தொடர் மழை காரணமாக நேற்றைய ஆட்டம் தொடர்ந்து தாமதமாகி வந்தது. மழை நீடித்ததால் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. நேற்று டாஸ் போடப்படவில்லை என்பதால், இன்றைய ஆட்டம் டாஸ்-உடன் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
- டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
- இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.
கோபன்ஹெகன்:
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ட்ரீசா மற்றும் காயத்ரி ஜோடி, மலேசியாவின் பேர்லி டான் மற்றும் முரளிதரன் தினா ஜோடியுடம் மோதியது.
இதில் இந்திய ஜோடி 21-19, 17-21, 15-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
இதேபோல், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமீத் ரெட்டி-சிக்கி ரெட்டி ஜோடி, கனடாவின் கெவின் லீ மற்றும் எலியானா ஜாங் ஜோடியுடன் மோதியது.
இதில் இந்திய ஜோடி 22-20, 19-21, 22-24 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
- முதலில் பேட் செய்த சதர்ன் சூப்பர் ஸ்டார் அணி 20 ஓவரில் 164 ரன்கள் எடுத்தது.
- கோனார்க் அணியும் 20 ஓவரில் 164 ரன்கள் எடுக்க, ஆட்டம் சமனில் முடிந்தது.
ஸ்ரீநகர்:
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டிக்கு கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணியும், சதர்ன் சூப்பர் ஸ்டார் அணியும் தகுதி பெற்றன.
நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய சதர்ன் சூப்பர் ஸ்டார் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது.
முன்னாள் ஜிம்பாப்வே வீரர் மசாகசா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 58 பந்தில் 83 ரன்கள் குவித்தார்.
கோனார்க் அணி சார்பில் முன்னாள் இலங்கை வீரர் தில்ஷன் முனாவீரா 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணி களமிறங்கியது. முன்னாள் இந்திய வீரரான யூசுப் பதான் சூறாவளியாக சுழன்றடித்தார். அவர் 38 பந்தில் 85 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், கோனார்க் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுக்க, ஆட்டம் சமனில் முடிந்தது.
இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. முதலில் ஆடிய கோனார்க் அணி ஒரு விக்கெட்டுக்கு 13 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய சதர்ன் சூப்பர் ஸ்டார் அணி 5 பந்தில் 14 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
மசாகசா ஆட்டநாயகன் விருதையும், மார்டின் குப்தில் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.






