என் மலர்
விளையாட்டு
- 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆஸ்திரேலியா அணியின் சிறந்த பேட்டர் ஸ்டீவ் ஸ்மித். அவர் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் ஒலிம்பிக் வாய்ப்புக்காக டி20 (T20) வடிவத்தில் தொடர்ந்து விளையாட அவர் திட்டமிட்டுள்ளார்.
அந்த வகையில் டி20 லீக் போட்டிகளில் (BBL, MLC) விளையாடுவதன் மூலம் தனது பார்மைத் தக்கவைத்துக் கொள்ள அவர் முயற்சித்து வருகிறார்.
தற்போது பிக்பாஷ் லீக் போன்ற தொடர்களில் அபாரமாக விளையாடி வருவதன் மூலம் தனது ஒலிம்பிக் கனவை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.
அந்த வகையில் 128 ஆண்டுகளுக்குப் பிறகு 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணிக்காகப் பங்கேற்பதை ஸ்மித் ஒரு கௌரவமாகக் கருதுகிறார்.
இந்நிலையில் 2028-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுவதே தனது முக்கிய இலக்கு என்று தெரிவித்துள்ளார்.
- சில வீரர்கள் தங்களைப் பற்றிய எதிர்பார்ப்புகளுக்காக விளையாடுவார்கள்.
- கோலி ரன்களைக் குவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.
இந்தியா - நியூசிலாந்துக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் ஒரு முறை வென்று தொடரில் சமநிலையில் இருந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இளம் வீரர்கள் கோலியின் மனநிலையைப் பின்பற்ற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டின் கோட். 52 ஒருநாள் சதங்களை எட்டிய அவரது சாதனை, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்ததுடன் அவரை ஒரு தனி உயரத்தில் வைத்துள்ளது.
கோலி எந்த ஒரு குறிப்பிட்ட "இமேஜுக்கும்" (Image) கட்டுப்படாமல், ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதே அவரது வெற்றிக்கான ரகசியம். சில வீரர்கள் தங்களைப் பற்றிய எதிர்பார்ப்புகளுக்காக விளையாடுவார்கள், ஆனால் கோலி ரன்களைக் குவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.
இளம் வீரர்கள் கோலியின் மன உறுதி மற்றும் ஆட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் விதத்தைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தோல்வியின் விளிம்பில் இருந்தபோதும் விட்டுக்கொடுக்காமல் போராடும் அவரது குணம் பாராட்டுக்குரியது.
என கவாஸ்கர் கூறினார்.
- இந்த போட்டியில் எங்களது ஆட்டம் சற்று ஏமாற்றம் தருகிறது.
- இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள்.
இந்தியா - நியூசிலாந்துக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் ஒரு முறை வென்று தொடரில் சமநிலையில் இருந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 337 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய இந்தியா 296 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இந்த போட்டியில் எங்களது ஆட்டம் சற்று ஏமாற்றம் தருகிறது என இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்த போட்டியில் எங்களது ஆட்டம் சற்று ஏமாற்றம் தருகிறது. தோல்வியில் இருந்து பாடங்கள் கற்று, பல இடங்களில் அணியை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது. பாசிட்டிவ் என பார்த்தால், கோலியின் பேட்டிங் எப்போதுமே அணிக்கு பலம்தான். 8வதாக களமிறங்கி ஹர்ஷித் ராணா சிறப்பாக பேட் செய்தார். இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள்.
என சுப்மன் கில் கூறினார்.
- அடுத்த மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
- அதற்கு முன்னதாக பாகிஸ்தானுடன் டி20 தொடரில் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது.
ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அடுத்த மாதம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் அதற்கு பயிற்சி போட்டியாக இந்த தொடரில் இரு அணிகளும் மோதுகின்றனர்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான ஆஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இடம் பெறவில்லை.
இந்நிலையில் முழுமையாக காயம் குணமடையாததால் அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இருந்து பேட் கம்மின்ஸ் விலகி உள்ளார். அடுத்த 2-3 போட்டிகளில் அவர் அணிக்கு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காயத்தில் இருந்த அதிரடி பேட்டர் டிம் டேவிட் டி20 தொடரில் விளையாடுவதற்கு முழு உடல் தகுதியுடன் உள்ளார் எனவும் ஆஸ்திரேலிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போடும் பெங்களூரு அணி 8 புள்ளிகளுடன் (4 வெற்றி) முதலிடத்தில் உள்ளது.
- தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போடும் பெங்களூரு அணி 8 புள்ளிகளுடன் (4 வெற்றி) முதலிடத்தில் உள்ளது.
வதோதரா:
5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டின் முதற்கட்ட ஆட்டங்கள் நவிமும்பையில் நடந்தன.
இந்த நிலையில் ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று முதல் பிப்.5-ந்தேதி வரை நடக்கிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 12-வது லீக்கில் ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்சுடன் மல்லுகட்டுகிறது.
தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போடும் பெங்களூரு அணி 8 புள்ளிகளுடன் (4 வெற்றி) முதலிடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி கண்டால் ஏறக்குறைய 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்து விடும். அதே சமயம் முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று கம்பீரமாக தொடங்கிய குஜராத் அணி அடுத்த இரு ஆட்டங்களில் தோற்று இப்போது 4 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. ஏற்கனவே 32 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் உத்வேகத்துடன் வரிந்து கட்டுவதால் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
- வங்கதேச அணி இந்தியாவில் விளையாடுகிறதா? இல்லையா என்பது குறித்து அறிவிக்க வேண்டும்.
- பாதுகாப்பு காரணத்தை முன்வைத்து வங்கதேச அணி இந்தியா வந்து விளையாட ஆட்சேபனை தெரிவித்து வருகிறது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கிறது. "சி" பிரிவில் வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், இத்தாலி, இங்கிலாந்து, நேபாளம் அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்த பிரிவில் உள்ள அணிகள் கொல்கத்தா மற்றும் மும்பையில் விளையாடுகின்றன.
குரூப் "பி"-யில் இலங்கை, ஆஸ்திரேலியா, ஓமன், ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்த அணிகள் மோதும் போட்டிகள் கொழும்பு மற்றும் பல்லேகலேயில் நடைபெற இருக்கின்றன.
வங்கதேசத்தில் மைனாரிட்டி இந்துக்கள் தாக்கப்படுவதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த காரணத்தை முன்னிட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த முஸ்தபிஜுர் ரகுமான் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனால் பாதுகாப்பு காரணத்தை முன்வைத்து வங்கதேச அணி இந்தியா வந்து விளையாட ஆட்சேபனை தெரிவித்து வருகிறது. ஆனால், இந்தியாவில் வந்துதான் விளையாட வேண்டும் என்று ஐசிசி வலியுறுத்தி வருகிறது.
மேலும் ஐசிசி குழுவிடம் எங்களை சி பிரிவில் இருந்து பி பிரிவுக்கு மாற்றி விடுங்கள். "பி" பிரிவில் விளையாடும் போட்டிகள் அனைத்தும் கொழும்பு மற்றம் பல்லேகலேயில் நடைபெற இருக்கிறது. இதனால் நாங்கள் இந்தியாவில் விளையாட வேண்டியிருக்காது என வங்கேச கிரிக்கெட் போர்டு கேட்டுக்கொண்டுள்ளது.
அதனை நிராகரித்த ஐசிசி வங்கதேச அணிக்கு காலகெடு விடுவித்துள்ளது. அதன்படி வருகிற 21-ந் தேதிக்குள் வங்கதேச அணி இந்தியாவில் விளையாடுகிறதா? இல்லையா என்பது குறித்து அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி இந்தியா செல்ல மறுத்தால், வங்கதேசத்திற்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி (தற்போதைய ரேங்கிங் அடிப்படையில்) அந்த குரூப்பில் விளையாடும் எனஐசிசி திட்டமிட்டுள்ளது.
- 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது.
- அடுத்த மாதம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ளூர் போட்டியில் சிறப்பு வாய்ந்ததாக பிக்பாஸ் தொடர் கருதபபடுகிறது. இந்த தொடர் தற்போது இறூதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இந்த தொடர் முடிந்த பிறகு ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
அடுத்த மாதம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் அதற்கு பயிற்சி போட்டியாக இந்த போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக மிட்செல் மார்ஷ் தொடர்கிறார்.
ஆஸ்திரேலிய டி20 அணி:
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், மஹ்லி பியர்ட்மேன், கூப்பர் கோனொலி, பென் டுவார்ஷுயிஸ், ஜாக் எட்வர்ட்ஸ், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ குஹ்னேமன், மிட்ச் ஓவன், ஜோஷ் பிலிப், மேத்யூ ரென்ஷா, மேட் ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா
- இந்தியாவுக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகளிலும் டேரில் மிட்செல் சதம் அடித்து அசத்தினார்.
- இந்த ஒருநாள் தொடரில் டேரில் மிட்செல் 352 ரன்கள் குவித்தார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 337 ரன்கள் குவித்தது. டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
அடுத்து ஆடிய இந்தியா 46 ஓவரில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை 2 - 1என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து வீரர் டேரெல் மிட்சல் 9 ரன்களில் முதலிடத்தை தவற விட்டுள்ளார். இந்த தொடரில் அவர் 352 ரன்கள் குவித்து 3 ஆம் இடம் பிடித்துள்ளார். முதல் இடத்தில பாபர் - 360 ரன்கள் (WI) மற்றும் கில் 360 ரன்கள் (NZ) ஆகியோர் உள்ளனர்.
- நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்து அசத்தினார்.
- நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் கோலி முதல் இடம் பிடித்துள்ளார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 337 ரன்கள் குவித்தது. டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
அடுத்து ஆடிய இந்தியா 46 ஓவரில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தனி ஆளாகப் போராடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார்.
இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் 3வது பேட்டராக களம் இறங்கி அதிக ரன்கள் அடித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். கோலிக்கு அடுத்த இடங்களில் பாண்டிங் - 12662 (330 இன்னிங்ஸ்) | சங்ககாரா 9747 (238 இன்னிங்ஸ்) | காலிஸ் 7774 (200 இன்னிங்ஸ்) ஆகியோர் உள்ளனர்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
- இதில் இங்கிலாந்து வீரர் கேமரூன் நூரி முதல் சுற்றில் வென்றார்.
மெல்போர்ன்:
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இங்கிலாந்து வீரர் கேமரூன் நூரி, பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் பொன்சி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய நூரி 6-0, 6-7 (2-7), 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் ஜேன்சனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- முதலில் பேட் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவரில் 171 ரன்கள் எடுத்தது.
- அந்த அணியின் நாதன் மெக்ஸ்வினி அதிரடியாக ஆடி 69 ரன் எடுத்தார்.
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக்பாஷ் டி20 தொடரின் கடைசி லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பிரிஸ்பேன் ஹீட், சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.
நாதன் மெக்ஸ்வினி அதிரடியாக ஆடி 69 ரன் எடுத்தார். நேசர் அதிரடியாக விளையாடி 35 ரன் எடுத்தார்.
சிட்னி அணி தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டும், சாம் கர்ரன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஸ்டீவ் ஸ்மித்
54 ரன் எடுத்தார். ஹென்ட்ரிக்ஸ் 24 ரன்னில் வெளியேறினானர்.
சாம் கர்ரன் அதிரடியாக ஆடி 53 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.
இறுதியில், சிட்னி சிக்சர்ஸ் அணி 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் சிட்னி சிக்சர்ஸ் அணி குவாலிபயருக்கு தகுதிபெற்றது.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 337 ரன்கள் குவித்தது.
- டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
இந்தூர்:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 337 ரன்கள் குவித்தது. டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
அடுத்து ஆடிய இந்தியா 46 ஓவரில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தனி ஆளாகப் போராடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார்.
இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடம் பிடித்துள்ளார். அவர் நியூசிலாந்துக்கு எதிராக 7 சதங்கள் அடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், வீரேந்திர சேவாக் ஆகியோர் 6 சதங்கள் அடித்து 2வது இடத்தில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்து சச்சின், சனத் ஜெயசூர்யா ஆகியோர் 5 சதங்கள் அடித்துள்ளனர்.






