என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சென்னை திரும்பும் உலக செஸ் சாம்பியன் குகேஷை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசு சார்பாக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • உலகம் முழுவதிலும் இருந்து குகேஷூக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

    சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழக வீரர் குகேஷ், சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார். இதன்மூலம் 18 வயதில் உலக சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

    ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் சாம்பியன் கார்ல்சன் தொடங்கி உலக பணக்காரரான எலான் மஸ்க் வரை உலகம் முழுவதிலும் இருந்து குகேஷூக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

     


    இதையடுத்து, சென்னை திரும்பும் உலக செஸ் சாம்பியன் குகேஷை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசு சார்பாக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், குகேஷ் ஆகியோர் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும் குகேஷூக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதனிடையே, உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷூக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நாளை பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்படுகிறது. நாளை மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், தமிழக கிராண்ட் மாஸ்டர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர். 

    • வங்கதேசம் தரப்பில் மகேதி ஹசன் 4 விக்கெட் கைப்பற்றினார்.
    • 3 போட்டிக் கொண்ட டி20 தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை உள்ளது.

    கிங்ஸ்டன்:

    வெஸ்ட் இண்டீஸ்-வங்காளதேசம் அணிகள் மோதிய முதல் 20 ஓவர் போட்டி கிங்ஸ்டனில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய வங்காளதேசம் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது. சவுமியா சர்க்கார் அதிகபட்சமாக 32 பந்தில் 43 ரன் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார்.

    பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.5 ஓவர்களில் 140 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் வங்காளதேசம் 7 ரன்னில் வெற்றி பெற்றது. கேப்டன் போவல் 35 பந்தில் 60 ரன் (5 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். மகேதி ஹசன் 4 விக்கெட் கைப்பற்றினார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிக் கொண்ட டி20 தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை உள்ளது. 2-வது ஆட்டம் 18-ந்தேதி நடக்கிறது.

    • கேஎல் ராகுல் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்களை எடுத்துள்ளார்.
    • ரிஷப் பண்ட் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    பிரிஸ்பேன்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 28 ரன் எடுத்து இருந்த போது மழையால் போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 405 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது.

    டிராவிஸ் ஹெட் (152 ரன்), ஸ்டீவ் சுமித் (101) ஆகியோர் சதம் அடித்தனர். அலெக்ஸ் கேரி 45 ரன்னும், ஸ்டார்க் 7 ரன்னும் எடுத்து எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா 117.1 ஓவரில் 445 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது.

    இந்திய தரப்பில் பும்ரா 76 ரன் விட்டுக் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். முகமது சிராஜூவுக்கு 2 விக்கெட்டும், ஆகாஷ் தீப், நிதிஷ்குமார் ரெட்டிக்கு தலா1 விக்கெட்டும் கிடைத்தது.

    பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்சை ஆடியது. ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் இந்தியா விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    22 ரன்னில் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. ஜெய்ஸ்வால் (4 ரன்), சுப்மன் கில் (1) ஆகியோர் ஸ்டார்க் பந்திலும், விராட் கோலி 3 ரன்னில் ஹசில்வுட் பந்திலும் அவுட் ஆனார்கள். அதோடு மழையால் ஆட்டம் சிறிது நேரம் 2-வது முறையாக பாதிக்கப்பட்டது.

    மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 4-வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுலுடன் ரிஷப்பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 27 ரன் எடுத்து இருந்த போது 3-வது முறையாக மழையால் பாதிப்பு ஏற்பட்டது. மழை விட்டதும் போட்டி தொடங்கியது.

    மழைக்கு பின் தொடங்கிய முதல் ஓவரில் ரிஷப் பண்ட் 9 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ரோகித் சர்மா களமிறங்கினார். மீண்டும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தற்போது வரை இந்திய அணி 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. கேஎல் ராகுல் மட்டும் பொறுப்புடன் ஆடி வருகிறார். அவர் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்துள்ளார்.

    • சில மாதங்களுக்கு முன்பு டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
    • இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் நடந்தும் உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வந்தார்.

    வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    இதனையடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் நடந்தும் உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வந்தார்.

    இந்த போட்டிகளில் பந்து வீசும் முறை விதிகளுக்கு மீறியதாக இருப்பதாக ஷகிப் மீது குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்து அதற்கான சோதனையில் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் ஈடுபட்ட நிலையில், உண்மையில் பந்து வீசியதில் ஷகிப் அல் ஹசன் விதிகளை மீறியது தெரியவந்தது.

    இதனையடுத்து, அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் பவுலிங் செய்வதிலிருந்து இடைநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இனிமேல், ஐசிசி- ஆல் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் அவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    • பும்ரா ஒரு எம்.வி.பி. அதாவது மிகவும் மதிப்புமிக்க 'பிரைமேட்' என்று வர்ணித்தார்.
    • பாலூட்டி வகை பெரிய விலங்கினங்களை 'பிரைமேட்' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

    பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீயுடன் இணைந்து வர்ணனை பணியில் ஈடுபட்ட இங்கிலாந்து முன்னாள் வீராங்கனை இஷா குஹா, இந்திய பவுலர் பும்ராவை இனவெறியுடன் விமர்சித்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

    பும்ரா ஒரு எம்.வி.பி. அதாவது மிகவும் மதிப்புமிக்க 'பிரைமேட்' என்று வர்ணித்தார். பாலூட்டி வகை பெரிய விலங்கினங்களை 'பிரைமேட்' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். குறிப்பாக குரங்குக்கு இந்த வார்த்தையை பயன்படுத்துவது உண்டு. அதனால் பும்ராவை விலங்குடன் ஒப்பிட்டு பாராட்டுவதா என்று குஹாவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில வறுத்தெடுத்து வருகிறார்கள்.

    2008-ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் இந்திய வீரர் ஹர்பஜன்சிங், ஆஸ்திரேலியாவின் சைமண்ட்சை குரங்கு என்று திட்டியதாக பிரச்சினை வெடித்தது. அதை இந்த விமர்சனம் நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    இந்நிலையில் இன்று 3-ம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே நேரலையில் இஷா குஹா மன்னிப்பு கேட்டார்.

    இன்று காலை வர்ணனையின் போது அவர் கூறியதாவது:-

    நேற்று நான் வர்ணனையின் போது பல்வேறு வழிகளில் விளக்க கூடி ஒரு வார்த்தையை பயன்படுத்தினேன். இதில் ஏதேனும் குற்றம் இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மற்றவர்களின் மரியாதை விஷயத்தை நான் மதிக்கிறேன்.

    நான் பும்ராவின் சாதனையின் மகத்துவத்தை வடிவமைக்க முயற்சித்தேன். அதற்காக நான் தவறான வார்த்தையை தேர்ந்து எடுத்துள்ளேன். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். எந்த உள்நோக்கத்துடனும் நான் அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை.

    இவ்வாறு இஷா குகா கூறியுள்ளார்.

    உடனே அருகில் இருந்து இந்திய அணியின் முன்னாள் வீரர் இஷா குஹாவை துணிச்சலான பெண் என பாராட்டினார். நேரலையில் மன்னிப்பு கேட்ட துணிச்சல் வேண்டும் என ரவி சாஸ்திரி கூறினார்.

    • மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஐந்து அணிகள் விளையாடி வருகின்றன.
    • மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலம் பெங்களூருவில் நடைபெற்றது.

    இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆடவருக்கான ஐ.பி.எல். தொடர் 17 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதேபோன்று, மகளிருக்கான டி20 போட்டிகளை கடந்த ஆண்டு பி.சி.சி.ஐ. அறிமுகப்படுத்தியது. இதில் மும்பை, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத், லக்னோ ஆகிய 5 அணிகள் விளையாடி வருகிறது.

    முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும், இரண்டாவது சீசனில் ஆர்சிபி அணியும் WPL கோப்பைகளை கைப்பற்றின. இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.

    இதில் மும்பை பேட்டர் சிம்ரன் ஷேக் மகளிர் பிரீமியர் லீக் 2025 ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2023 ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தின் போது உ.பி. வாரியர்ஸ் அணி இவரை ரூ. 10 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு ஏலத்தில் எடுத்தது.

    இந்த நிலையில், 22 வயதான சிம்ரன் ஷேக்-ஐ குஜராத் ஜெயண்ட்ஸ் அணி ரூ. 1.9 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. முன்னதாக 2024 மகளிர் பிரீமியர் லீக் தொடரின் ஏலத்தில் இவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து தான் 2025 மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தில் இவர் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை ஜாஹித் அலி வயர்மேன்-ஆக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

    • மூன்றாவது டெஸ்ட் போட்டி காபாவில் நடைபெற்று வருகிறது.
    • ஆஸ்திரேலியா அணி 445 ரன்களை குவித்து ஆல் அவுட்.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றன. இதனிடையே இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி காபாவில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 405 ரன்களை குவித்து ஏழு விக்கெட்டுகளை இழந்து இருந்தது. இந்த நிலையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கியதில் இருந்தே இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

    இதன் காரணமாக அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெறும் 40 ரன்களை சேர்த்து மூன்று விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 445 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆகியுள்ளது.

    இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா ஆறு விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் இரண்டு விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 405 ரன்கள் எடுத்தது.
    • டிராவிஸ் ஹெட் 152 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்னும் எடுத்தனர்.

    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. இதில் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 13.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்திருந்தது.

    நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆஸ்திரேலியா தொடர்ந்து பேட்டிங் செய்தது. இறுதியில் 2-ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டை இழந்து 405 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் 152 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய பும்ரா இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சாதனையை முறியடித்தார்.

    பும்ரா டெஸ்ட் இன்னிங்சில் அவர் 5 விக்கெட் எடுப்பது இது 12-வது முறையாகும். அதேசமயம், ஆசிய கண்டத்துக்கு வெளியே அவர் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்துவது இது 10-வது நிகழ்வாகும். இதற்கு முன் இந்திய பவுலர்களில் கபில்தேவ் ஆசியாவுக்கு வெளியே 9 முறை 5 விக்கெட் எடுத்ததே சாதனையாக இருந்தது. அச்சாதனையை பும்ரா முறியடித்தார்.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் ஜெய்ப்பூர் அணி 10-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், முதலில் நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் 34-27 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் உ.பி. யோதாஸ் அணி யு மும்பா அணியை 30-27 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.

    • இறுதிப்போட்டியில் இந்தியா சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
    • சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு தலா 2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது.

    லீக் சுற்று முடிவில் சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    நேற்று நடந்த முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஜப்பானை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் தென் கொரியாவை சீனா வீழ்த்தியது.

    இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, சீனா அணிகள் மோதின. முதல் பாதியில் சீனா 1-0 என முன்னிலை பெற்றது. போட்டியின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை பெற்றது.

    இதையடுத்து, ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் சீனாவை வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இந்நிலையில், ஜூனியர் ஆசிய கோப்பை வென்ற இந்திய மகளிர் அணியை ஊக்குவிக்கும் வகையில் ஹாக்கி இந்தியா பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

    அதன்படி, இந்திய மகளிர் அணியில் இடம்பிடித்த ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் தலா ரூ.2 லட்சம் எனவும், சப்போர்ட் ஸ்டாப் அனைவருக்கும் தலா ஒரு லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

    • முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 195 ரன்கள் எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    நவிமும்பை:

    வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நவி மும்பையில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 73 ரன்கள் எடுத்தார்.

    தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்து 54 ரன்னில் அவுட்டானார். உமா சேத்ரி 24 ரன்னும், ரிச்சா கோஷ் 20 ரன்னும், ஹர்மன்ப்ரீத் கவுர் 13 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கரிஷ்மா ராம்ஹராக் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. இந்திய அணியின் துல்லிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறியது.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 49 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது . இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றது.

    • இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி சீனாவை எதிர்கொண்டது.
    • இதில் ஷூட் அவுட் சுற்றில் இந்தியா வென்று சாம்பியன் பட்டம் வென்றது.

    மஸ்கட்:

    9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது.

    லீக் சுற்று முடிவில் சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    நேற்று நடந்த முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஜப்பானை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் தென் கொரியாவை சீனா வீழ்த்தியது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, சீனா அணிகள் மோதின. முதல் பாதியில் சீனா 1-0 என முன்னிலை பெற்றது. போட்டியின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை பெற்றது.

    இதையடுத்து, ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் சீனாவை வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    ×