என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி"

    • 8-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஜப்பானின் ககாமிகஹரா நகரில் நடந்து வருகிறது.
    • இந்த ஆட்டத்தில் 2-0 என தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணி கடைசி நிமிட கோல்களினால் 2 கோல்களை அடித்து ஆட்டத்தை சமன் செய்தது.

    ககாமிகஹரா:

    8-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஜப்பானின் ககாமிகஹரா நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    'ஏ' பிரிவில் இந்தியாவுடன், தென்கொரியா, மலேசியா, உஸ்பெகிஸ்தான், சீனத்தைபே ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் ஜப்பான், நடப்பு சாம்பியன் சீனா, இந்தோனேசியா, கஜகஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானை 22-0 என்ற கோல் கணக்கிலும், மலேசியாவை 2-1 என்ற கணக்கிலும் வீழ்த்தியது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி கொரியாவை எதிர்கொண்டது.

    இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடின. இந்த ஆட்டத்தில் 2-0 என தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணி கடைசி நிமிட கோல்களினால் 2 கோல்களை அடித்து ஆட்டத்தை சமன் செய்தது. இந்திய அணி புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. தனது அடுத்த ஆட்டத்தில் சீன தைபே அணியை இந்திய அணி வரும் 8-ம் தேதி சந்திக்கிறது.

    • இந்திய அணி கடைசி லீக்கில் இன்று தாய்லாந்துடன் மோதுகிறது.
    • அரைஇறுதி வாய்ப்பை பெற இதில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

    மஸ்கட்:

    9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் 'ஏ' பிரிவில் இடம்பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி நேற்று தனது 3-வது லீக்கில் 1-2 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோல்வியை தழுவியது.

    சீன அணியில் ஜின்சுவாங் டான் 32-வது நிமிடத்திலும், லிஹாங் வாங் 42-வது நிமிடத்திலும் கோல் போட்டனர். இந்திய அணியில் தீபிகா 56-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். நடப்பு தொடரில் இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். முதல் இரு ஆட்டங்களில் வங்காளதேசம் மற்றும் மலேசியாவை வென்று இருந்தது.

    இந்திய அணி கடைசி லீக்கில் இன்று தாய்லாந்துடன் மோதுகிறது. அரைஇறுதி வாய்ப்பை பெற இதில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

    • முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது.
    • மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் சீனா- தென் கொரியா அணிகள் மோதுகின்றன.

    மஸ்கட்:

    9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் சீனா (4 வெற்றியுடன் 12 புள்ளி) முதலிடமும், இந்தியா (3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 9 புள்ளி) 2-வது இடமும், 'பி' பிரிவில் ஜப்பான் (12 புள்ளி) முதலிடமும், தென் கொரியா (9 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.

    இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டு நடந்த அரைஇறுதியில் இந்திய அணி (1-0) ஜப்பானை வீழ்த்தி இருந்தது. இதனால் இந்திய அணி நம்பிக்கையுடன் கால் பதிக்கும்.

    அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைய ஜப்பான் அணி முயற்சிக்கும். வலுவான இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தை ஹாக்கி இந்தியா செயலியில் காணலாம்.

    மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சீனா- தென் கொரியா (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

    • இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி சீனாவை எதிர்கொண்டது.
    • இதில் ஷூட் அவுட் சுற்றில் இந்தியா வென்று சாம்பியன் பட்டம் வென்றது.

    மஸ்கட்:

    9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது.

    லீக் சுற்று முடிவில் சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    நேற்று நடந்த முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஜப்பானை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் தென் கொரியாவை சீனா வீழ்த்தியது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, சீனா அணிகள் மோதின. முதல் பாதியில் சீனா 1-0 என முன்னிலை பெற்றது. போட்டியின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை பெற்றது.

    இதையடுத்து, ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் சீனாவை வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    • இறுதிப்போட்டியில் இந்தியா சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
    • சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு தலா 2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது.

    லீக் சுற்று முடிவில் சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    நேற்று நடந்த முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஜப்பானை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் தென் கொரியாவை சீனா வீழ்த்தியது.

    இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, சீனா அணிகள் மோதின. முதல் பாதியில் சீனா 1-0 என முன்னிலை பெற்றது. போட்டியின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை பெற்றது.

    இதையடுத்து, ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் சீனாவை வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இந்நிலையில், ஜூனியர் ஆசிய கோப்பை வென்ற இந்திய மகளிர் அணியை ஊக்குவிக்கும் வகையில் ஹாக்கி இந்தியா பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

    அதன்படி, இந்திய மகளிர் அணியில் இடம்பிடித்த ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் தலா ரூ.2 லட்சம் எனவும், சப்போர்ட் ஸ்டாப் அனைவருக்கும் தலா ஒரு லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

    ×