என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார்.
    • குகேஷ்க்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்தது. இந்தப் போட்டி 14 சுற்று கொண்டது.

    இதில், நேற்று முன்தினம் 14-வது மற்றும் கடைசி சுற்று நடைபெற்றது. இதில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். போட்டி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.

    58-வது நகர்த்தலில் டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்று உலக சாம்பியன் ஆனார். இதன்மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார். இதனால் குகேஷ்க்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    இந்நிலையில், குகேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எனக்கு தெரியும், நான் அழகாக இருக்கிறேன். ஆனால் என்னை தொடாதீர்கள்" எழுதப்பட்டுள்ள பெயர்பலகை பக்கத்தில் குகேஷ் நிற்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 347 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    3வது டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 143 ரன்களுக்கு ஆல் அவுட்.. நியூசிலாந்து 340 ரன்கள் முன்னிலை

    இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 347 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சாண்ட்னெர் 76 ரன்களும் டாம் லாதம் 63 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர்.

    இங்கிலாந்து சார்பில் மேத்யூ பாட்ஸ் 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 3 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து தனது முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திலாந்து அணி 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டும் வில்லியம் ஓ'ரூர்க் மற்றும் சாண்ட்னெர் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 204 ரன்கள் முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்சில் களமிறங்கிய நியூசிலாந்து அணி2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக வில் யங் 60 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன் 50 ரன்கள் அடித்து ஆடி வருகிறார்.

    இதன்மூலம் 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 340 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • பிரிஸ்பேன் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
    • முதல் நாள் ஆட்டம் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. பாதியில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விதிப்படி டெஸ்ட் போட்டியின் தினத்தில் குறைந்தபட்சம் 15 ஓவர்கள் வீசப்படா விட்டால் டிக்கெட் கட்டணத்தை 100 சதவீதம் திருப்பி வழங்க வேண்டும். இதன்படி 30,145 ரசிகர் களுக்கும் டிக்கெட்டின் முழுத் தொகை திரும்ப வழங்கப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    இந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரூ.5.4 கோடியை திரும்ப வழங்க உள்ளது. 10 பந்துகள் குறைவாக வீசப்பட்டதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.5.4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    • பொறுப்புடன் விளையாடிய ஸ்மித் 101 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
    • அதிரடியாக விளையாடிய ஹெட் 152 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது.

    பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது.

    தொடரானது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். மழை காரணமாக நேற்றைய ஆட்டம் தடைபட்டது. இதனால் முதல்நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்தது.

    தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டம் இன்று துவங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக உஸ்மான் கவாஜா 21 ரன்களும், மெக்ஸ்வீனி 9 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுசனே 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    பின்னர் நிதானமாக விளையாடிய ஸ்மித் - டிராவிஸ் ஹெட் ஜோடி 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்து விளையாடினர். பொறுப்புடன் விளையாடிய ஸ்மித் 101 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ஹெட் 152 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து களமிறங்கிய மார்ஸ் 5 ரன்களிளும் பேட் கம்மின்ஸ் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய அலெக்ஸ் கேரி 45 ரன்களுடனும் மிட்சல் ஸ்டார்க் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    2-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளும் சிராஜ், நிதிஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • உஸ்மான் கவாஜா 21 ரன்களும், மெக்ஸ்வீனி 9 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்
    • உடனேயே லபுசனே, பெய்ல்ஸை மீண்டும் எடுத்து முன்பு இருந்தது போலவே மாற்றி வைத்தார்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது.

    பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது.

    தொடரானது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்தது.

    தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டம் இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆஸ்திரேலியா சார்பில் களமிறங்கிய உஸ்மான் கவாஜா 21 ரன்களும், மெக்ஸ்வீனி 9 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுசனே 55 பந்துகள் ஆடி 12 ரன்களில் எடுத்திருந்த நிலையில் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஸ்லெட்ஜிங் செய்து அவரது விக்கெட்டை எடுக்க முயன்றார்.

    இதற்க்கு ஆஸ்திரேலிய ரசிகர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். 33வது ஓவரில் ஸ்டம்ப்பில் இருந்த பெய்ல்ஸ் முகமது சிராஜ் மாற்றி வைத்தார். ஆனால் உடனேயே லபுசனே, பெய்ல்ஸை மீண்டும் எடுத்து முன்பு இருந்தது போலவே மாற்றி வைத்தார்.

     

    தொடர்ந்து பந்துவீசியும் சிராஜால் விக்கெட்டை வீழ்த்த முடியாத நிலையில் அடுத்த ஓவரில் நித்திஸ் ரெட்டி வீசிய பந்தில் விராட் கோலிக்கு கேட்ச் கொடுத்து லபுசனே அவுட் ஆனார். அப்போதும் ரசிகர்கள் கூச்சல் எழுப்பிய நிலையில்  விராட் கோலி ஆடியன்ஸை நோக்கி அமைதியாக இருக்கும்படி சைகை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

    • நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்தது.
    • ஸ்மித் 101 ரன்களுடன் பும்ரா வீசிய பந்தில் ரோகித்துக்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆகியுள்ளார்

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது.

    பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது.

    தொடரானது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 5.3 ஓவர்களின் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்தபோது மழை திடீரென மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. அரை மணி நேரம் கழித்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

     

    மீண்டும் மழை குறுக்கிட்டதால் நடுவர் ஆட்டத்தை நிறுத்தினார்.  நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி மொத்தமாக  13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

    ஆஸ்திரேலியா சார்பில் களமிறங்கிய உஸ்மான் கவாஜா 21 ரன்களும், மெக்ஸ்வீனி 9 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய லபுசனே 12 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    அடுத்ததாக ஸ்டீவன் சுமித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஜோடி சேர்ந்து விளையாடினர். இதில் இருவருமே சதம் விளாசி உள்ளனர்.

     

    தற்போது ஸ்மித் 101 ரன்களுடன் பும்ரா வீசிய பந்தில் ரோகித்துக்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆகியுள்ளார், டிராவிஸ் ஹெட் 152 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா வீசிய பந்தில் ரிசஷப் பந்துக்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆகியுள்ளார்.

    இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டுகளும், நிதிஷ் குமார் ரெட்டி 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர். ஆஸ்திரேலிய அணி மொத்தமாக 87 ஓவரில் 335 ரன்கள் எடுத்துள்ளது  

    • சொந்த மண்ணில் நடைபெறும் இந்த போட்டி தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    • ஹெய்லி மேத்யூஸ் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி இந்தியாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்ட கடுமையாக முயற்சிக்கும்.

    வெஸ்ட்இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    இதில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று நடக்கிறது.

    சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் 3 ஒருநாள் போட்டியிலும் தோல்வியை சந்தித்த ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அந்த தோல்வியை மறந்து உள்ளூரில் நடைபெறும் இந்த போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்க ஆயத்தமாகி வருகிறது.

    சொந்த மண்ணில் நடைபெறும் இந்த போட்டி தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக இதுவரை 21 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கும் இந்திய அணி 13-ல் வெற்றியும், 8-ல் தோல்வியும் கண்டு இருக்கிறது. அந்த அணிக்கு எதிரான கடைசி 8 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்று இருக்கிறது. இதனால் இந்திய அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை.

    ஹெய்லி மேத்யூஸ் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி இந்தியாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்ட கடுமையாக முயற்சிக்கும். எனவே இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 347 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இங்கிலாந்தின் மேத்யூ பாட்ஸ் 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஹாமில்டன்:

    இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம் மற்றும் வில் யங் ஆகியோர் களம் இறங்கினர்.

    முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த நிலையில் வில் யங் 42 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடி அரை சதமடித்த டாம் லாதம் 63 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன் 44 ரன்னிலும் அவுட் ஆனார்.

    ரச்சின் ரவீந்திரா 18 ரன், டேரில் மிட்செல் 14 ரன், டாம் பிளெண்டல் 21 ரன், கிளென் பிலிப்ஸ் 5 ரன் எடுத்து அவுட்டாகினர்.

    கடைசி கட்டத்தில் சாண்ட்னெர் நிலைத்து நின்று ஆடி அரை சதம் கடந்து 76 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 347 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் மேத்யூ பாட்ஸ் 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 3 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதல் இரு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வென்று தொடரை 2-0 என கைப்பற்றியது.
    • மழை காரணமாக 3வது டி20 போட்டி ரத்துசெய்யப்படுகிறது என நடுவர்கள் அறிவித்தனர்.

    ஜோகன்னஸ்பர்க்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி ஜோகன்னஸ்பர்கில் நேற்று நடைபெற இருந்தது. அப்பகுதியில்

    மழை தொடர்ந்து பெய்தது. இதனால் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    ஆனாலும் மழை நிற்காமல் பெய்தது. இதையடுத்து, மழை காரணமாக போட்டி ரத்துசெய்யப்படுகிறது என நடுவர்கள் அறிவித்தனர் .

    போட்டி கைவிடப்பட்டாலும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் தபாங் டெல்லி அணி 10-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், முதலில் நடந்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் 36-32 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி, அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 44-37 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    • பிரிஸ்பேன் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
    • ரசிகர்களுக்கு முதல் நாளுக்கான டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்பட்டது.

    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியாவும், அடிலெய்டில் நடந்த 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்றன. இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது.

    இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 5.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது.

    அரை மணி நேரத்திற்கு பின் மீண்டும் போட்டி தொடங்கியது. ஆட்டத்தின் 13-வது ஓவரை ஆகாஷ்தீப் வீசியபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் முதல் நாள் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.

    முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 19 ரன்னும், மெக்ஸ்வீனி 4 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் , முதல் நாள் ஆட்டம் பாதியில் ரத்துசெய்யப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு முதல் நாளுக்கான டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்பட்டது. 15 ஓவர்களுக்கு கீழ் வீசப்பட்டதால் டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்பட்டது.

    • முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 127 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    ஹராரே:

    ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே 19.5 ஓவரில் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிரையன் பென்னட் 31 ரன்னும், வெஸ்லே மாதவரே 21 ரன்னும் எடுத்தனர்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்டும், நவீன் உல்-ஹக், அஸ்மதுல்லா, முஜிபுர் ரகுமான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. அஸ்மதுல்லா ஒமர்சாய் 34 ரன்னிலும், குல்பதின் நயீப் 22 ரன்னிலும் அவுட்டாகினர்.

    கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய முகமது நபி 24 ரன்னுட ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் 19.3 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது.

    ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா, முசாராபானி, ட்ரெவர் குவாண்டு ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ஆட்ட நாயகன் விருது அஸ்மதுல்லா ஓமர்சாய்க்கும், தொடர் நாயகன் விருது நவீன் உல் ஹக்குக்கும் வழங்கப்பட்டது.

    ×