என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதலில் ஆடிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 321 ரன்களை எடுத்தது.
    • 83 பந்துகளில் 103 ரன்கள் குவித்த அமீர் ஜாங்கே ஆட்ட நாயகனாக தேர்நதெடுக்கப்பட்டார்.

    வங்கதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

    இதனையடுத்து நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் வென்று தொடரைக் கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி செயிண்ட் கிட்சில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 321 ரன்களை எடுத்தது.

    இதையடுத்து, 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 45.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதன்மூலம் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

    இப்போட்டியில் அறிமுகமான வெஸ்ட் இண்டீஸ் வீரர் அமீர் ஜாங்கே தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். 83 பந்துகளில் 103 ரன்கள் குவித்த அமீர் ஜாங்கே ஆட்ட நாயகனாக தேர்நதெடுக்கப்பட்டார்.

    மேலும் இப்போட்டியில் 80 பந்துகளில் சதமடித்த அமீர் ஜாங்கே அறிமுக போட்டியில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ரீசா ஹென்ரிக்ஸ் 88 பந்துகளில் சதமடித்ததே அதிவேக சதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • போட்டி தொடங்கிய 5 ஓவரில் மழை குறுக்கிட்டது.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தொடங்கியது. 5 ஓவரில் மழை குறுக்கிட்டது. இதனால் சிறிது நேரம் ஆட்டம் தடைப்பட்டு மீண்டும் தொடங்கியது. அதனை தொடர்ந்து 13-வது ஓவரில் மீண்டும் மழை குறுக்கிட்டது.

    தொடர்ந்து மழை பெய்ததால் உணவு இடைவேளைக்கான நேரம் வந்தது. இடைவேளை நேரம் முடிந்த பிறகும் கூட மழை விட்டபாடு இல்லை. தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் முதல் ஆட்டம் கைவிடப்பட்டதாக நடுவர்கள் தெரிவித்தனர்.

    கவாஜா 19 ரன்களுடனும் நாதன் மெக்ஸ்வீனி 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    • ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
    • டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 100 சர்வதேச போட்டிகளில் விராட் விளையாடியுள்ளார்.

    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி பேர்ஸ்பேன் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா பேட்டிங்கை தொடங்கியது. 13.2 ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்தப் போட்டியில் களமிறங்கியதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது 100-வது சர்வதேச போட்டியில் விராட் கோலி விளையாடி சாதனை படைத்துள்ளார். அதாவது டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் 100* சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன் வாயிலாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 போட்டிகளில் விளையாடிய 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

    முதல் வீரராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 110 போட்டிகளில் விளையாடி அந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 

    • முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது.
    • மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் சீனா- தென் கொரியா அணிகள் மோதுகின்றன.

    மஸ்கட்:

    9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் சீனா (4 வெற்றியுடன் 12 புள்ளி) முதலிடமும், இந்தியா (3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 9 புள்ளி) 2-வது இடமும், 'பி' பிரிவில் ஜப்பான் (12 புள்ளி) முதலிடமும், தென் கொரியா (9 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.

    இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டு நடந்த அரைஇறுதியில் இந்திய அணி (1-0) ஜப்பானை வீழ்த்தி இருந்தது. இதனால் இந்திய அணி நம்பிக்கையுடன் கால் பதிக்கும்.

    அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைய ஜப்பான் அணி முயற்சிக்கும். வலுவான இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தை ஹாக்கி இந்தியா செயலியில் காணலாம்.

    மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சீனா- தென் கொரியா (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

    • இந்திய அணியில் ஜடேஜா, ஆகாஷ் தீப் சேர்ப்பு.
    • ஆகாஷ் தீப் பந்தை சிறப்பான வகையில் ஸ்விங் செய்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆடுகளத்தில் புற்கள் இருந்ததாலும், மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததாலும் பந்து வீச்சை தேர்வு செய்ததாக ரோகித் சர்மா தெரிவித்திருந்தார்.

    இந்திய அணியில் அஸ்வின் மற்றும் ஹர்சித் ராணா ஆகியோர் நீக்கப்பட்டு ஆகாஷ் தீப், ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டனர்.

    ஆஸ்திரேலியாவின் கவாஜா மற்றும் மெக்ஸ்வீட்னி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் பந்து வீச்சை தொடங்கினர். 5.3 ஓவர்கள் முடிந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டது.

    சிறிது நேரம் கழித்து மழை நின்றதும் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. முகமது சிராஜ் 3 ஓவர்கள் வீசிய நிலையில் நிறுத்தப்பட்டார். அதன்பின் ஆகாஷ் தீப் அழைக்கப்பட்டார். இவர் இரண்டு பக்கமும் பந்தை ஸ்விங் செய்து அசத்தினார். என்றாலும் விக்கெட் எடுக்க முடியவில்லை.

    ஆஸ்திரேலியா 13.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்திருக்கும்போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் அத்துடன் முதல்நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. கவாஜா 19 ரன்களுடனும், மெக்ஸ்வீட்னி 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்த பிறகும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    • இந்திய அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
    • முதல் டெஸ்டில் இந்தியாவும், 2வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.

    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், அடிலெய்டில் ஆஸ்திரேலியாவும் வென்று 1-1 என சமனிலை வகிக்கிறது.

    இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் இன்று தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

    இந்திய அணியில் 2 மாற்றங்களாக அஸ்வின், ஹர்ஷித் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஜடேஜா, ஆகாஷ் தீப் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு:-

    இந்தியா:- ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், ரோகித் சர்மா (கேப்டன்), ஜடேஜா, நிதிஷ் ரெட்டி, பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப்.

    ஆஸ்திரேலியா:- உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் சுமித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹேசில்வுட்.

    • நேற்று முன்தினம் 14-வது மற்றும் கடைசி சுற்று நடைபெற்றது.
    • இதில் குகேஷ் டிங் லிரெனை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனார்.

    புதுடெல்லி:

    இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்தது. இந்தப் போட்டி 14 சுற்று கொண்டது.

    நேற்று முன்தினம் 14-வது மற்றும் கடைசி சுற்று நடைபெற்றது. இதில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். போட்டி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. 58-வது நகர்த்தலில் டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்று உலக சாம்பியன் ஆனார். இதன்மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார்.

    வெற்றிக்குப் பிறகு குகேஷ் பேசுகையில், உலகின் சிறந்த வீரருக்கு எதிராக என்னை சோதிக்க விரும்புகிறேன் என்றார்.

    இந்நிலையில், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு, முன்னாள் உலக செஸ் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான மேக்னஸ் கார்ல்சன் பாராட்டு தெரிவித்துள்ளார் .

    இதுதொடர்பாக மேகன்ஸ் கார்ல்சன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    நான் இனி இந்த சர்க்கசின் ஒரு பகுதியாக இல்லை. குகேஷுடன் மோதுவதில் எனக்கு விருப்பம் இல்லை.

    குகேஷ் செய்தது நம்பமுடியாத சாதனையாகும் குகேஷ் வெற்றி பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிறைய சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

    குகேஷ் வெற்றிக்காக தெளிவாக போராடினார். விளையாட்டை உயிர்ப்புடன் வைத்திருக்க அவர் ஒரு சிறந்த வேலையைச் செய்தார் என நான் நினைக்கிறேன்.

    லிரென் கடைசி வரை நம்பிக்கையோடு காணப்பட்டாலும் குகேஷ் அதிரடியாக வெற்றியை வசப்படுத்தினார். இந்த வெற்றி குகேசுக்கு நல்ல உத்வேகம் அளித்திருக்கும்.

    தற்போது அவர் தரவரிசையில் 2-வது இடத்தை பிடிப்பார் என்று நினைக்கிறேன். அவர் வருங்காலத்தில் நம்பர் ஒன் இடத்தையும் கைப்பற்றுவார் என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 206 ரன்களை எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 210 ரன்களை எடுத்து வென்றது.

    செஞ்சுரியன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி செஞ்சுரியனில் இன்று நடைபெறறது.

    டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்தது. சயீம் அயூப் 98 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பாபர் அசாம் 31 ரன்னிலும், இர்பான் கான் 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டன் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரீசா ஹென்ரிக்ஸ் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசி சதம் கடந்து அசத்தினார். அவருக்கு வான் டெர் டுசன் நன்கு ஒத்துழைப்பு வழங்கினார்.

    3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 157 ரன்கள் சேர்த்த நிலையில் ஹென்ரிக்ஸ் 117 ரன்னில் வெளியேறினார். 63 பந்தில் 10 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 117 ரன்களை எடுத்தார். வான் டெர் டுசன் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி கடைசி ஓவரில் 3 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது.

    • ஆஸ்திரேலியா சென்ற ஷோபித் வீர்மணி, தனது ஆதர்ச நாயகனான விராட் கோலியைச் சந்தித்தார்.
    • அவருக்கு கோலி பற்றி எழுதிய புத்தகத்தை பரிசாக அளித்தார். இதனால் அந்த ரசிகரின் கனவு நனவானது.

    பிரிஸ்பேன்:

    இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படுபவர் விராட் கோலி. இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் ரசிகர்கள் நிறைந்துள்ளனர்.

    உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் பகுதியை சேர்ந்தவர் ஷோபித் வீர்மணி. விராட் கோலியின் தீவிர ரசிகரான இவர், தி பிக்கஸ்ட் பேன் ஆப் விராட் கோலி என்ற ஆங்கில புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை விராட் கோலியிடம் நேரில் அளிக்க வேண்டும் என்பதே இவரது ஆசை.

    இதற்கிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய அணி பிரிஸ்பேன் வந்துள்ளது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியா சென்ற ஷோபித் வீர்மணி, தனது ஆதர்ச நாயகனான விராட் கோலியைச் சந்தித்தார்.

    இதுதொடர்பாக, ஷோபித் வீர்மணி இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், விராட் கோலியின் தீவிர ரசிகரின் கனவு நனவாகும் தருணம். அவர் 10,279 கிலோமீட்டர் பயணம் செய்து, விராட் கோலியைச் சந்தித்து அவருக்கு தனது புத்தகத்தைப் பரிசாக அளித்தார்.


    விராட் கோலி பற்றிய புத்தகத்தை ரிக்கி பாண்டிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோருக்கும் அந்த ரசிகர் பரிசளித்தார் என பதிவிட்டுள்ளார்.

    • டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 206 ரன்களைக் குவித்தது.

    செஞ்சுரியன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி செஞ்சுரியனில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமாக முகமது ரிஸ்வான் 11 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய பாபர் அசாம் சயீம் அயூபுடன் ஜோடி சேர்ந்தார். 2வது விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்த நிலையில் பாபர் அசாம் 31 ரன்னில் அவுட்டானார். இர்பான் கான் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து சிறப்பாக ஆடிய சயீம் அயூப் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 206 குவித்தது. சயீம் அயூப் 98 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்குகிறது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் பாட்னா அணி 11-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நடந்த முதல் போட்டியில் பாட்னா பைரேட்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின.

    இதில், பாட்னா அணி 42-38 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி 11-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    மற்றொரு போட்டியில் புனேரி பால்டன் அணி 56-18 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.

    • முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 153 ரன்கள் எடுத்தது.
    • ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் உல் ஹக், ரஷித் கான் ஆகியோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஹராரே:

    ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி ஆப்கானிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் செடிகுல்லா அடல் ஆகியோர் களம் இறங்கினர்.

    இதில் குர்பாஸ் 11 ரன்னிலும், செடிகுல்லா அடல் 18 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய ஜுபைத் அக்பரி 1 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து தர்வீஷ் ரசூலி மற்றும் அஸ்மத்துல்லா ஓமர்சாய் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் ஓமர்சாய் 28 ரன்னிலும், அடுத்து வந்த முகமது நபி 4 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய தர்வீஷ் ரசூலி அரைசதம் அடித்த நிலையில் 58 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து குல்பைடின் நைப் மற்றும் ரஷித் கான் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டை இழந்து 153 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக ட்ரெவர் குவாண்டு, ரியான் பர்ல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் 3 பேரை தவிற மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக சிக்கந்தர் ராசா 35, பிரையன் பென்னட் 27 எடுத்தனர். இறுதியில் ஜிம்பாப்வே அணி 17.4 ஓவரில் 103 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் உல் ஹக், ரஷித் கான் ஆகியோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வருகிற 14-ந் தேதி நடக்கிறது.

    ×