என் மலர்
விளையாட்டு
- சாம்பியன்ஸ் டிராபியில் தொடர் தோல்வியை இங்கிலாந்து அணி சந்தித்தது.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போதே பட்லர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
லண்டன்:
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக (ஒருநாள் + டி20) பட்லர் செயல்பட்டு வந்தார். அவரது தலைமையில் இங்கிலாந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.
இதனையடுத்து கேப்டன் பொறுப்பிலிருந்து பட்லர் விலகுவதாக அறிவித்தார். அதன தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு கேப்டன் யார் என்பது குறித்து அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து பட்லர் விலகியதை அடுத்து இங்கிலாந்தின் புதிய கேப்டனாக (ஒருநாள் + டி20) ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஒரு வீரருக்காக ஒரு அணியை விடுவது என்பது இந்த விளையாட்டுக்கு செய்யும் அநீதியாகும்.
- 2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் தோனியால் அணிக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை.
சென்னை:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தோனி கடந்த சில போட்டிகளில் அதிரடியாக விளையாட முடியாமல் தவித்து வருகிறார். அவர் ஓய்வு பெற வேண்டும் என பரவலாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் தோனி 35 வயதிலேயே ஓய்வு பெற்றுருக்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னார்ள் வீரர் ரஷீத் லத்தீப் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-

தோனி எப்போதோ ஓய்வு பெற்றிருக்க வேண்டும். விக்கெட் கீப்பருடைய வயது 35 தான். அதற்கு நானே ஒரு உதாரணம். நான் ஒரு வீரராக விளையாடும்போது உச்சகட்டத்தில் விளையாடவில்லை என்றால் எனது மதிப்பு மிகப்பெரிய சரிவை சந்திக்கும். நீங்கள் 15 ஆண்டுகாலம் சிறப்பாக விளையாடியிருந்தாலும் இளம் தலைமுறையினர் உங்களைப் பார்த்து ஈர்க்கப்பட மாட்டார்கள்.
2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் தோனியால் அணிக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை. அவர்கள் அப்போதே அதை புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
ஒரு வீரருக்காக ஒரு அணியை விடுவது என்பது இந்த விளையாட்டுக்கு செய்யும் அநீதியாகும். அப்படி செய்தால் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாக வேண்டி இருக்கும். நான் இரண்டு, மூன்று சிஎஸ்கே போட்டிகளை பார்த்தேன். தோனி வரும்போது மிகப் பெரிய சத்தம் எழுந்தது.
ஆனால் சிஎஸ்கே அணிக்கு இப்போது புள்ளிகள் தான் முக்கியம். அவர்கள் (சிஎஸ்கே) புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறார்கள். ஒன்று அல்லது இரண்டு வீரர்களால் தான் இது நடக்கிறது என்றால் நீங்கள் இந்த நேரத்தில் என்ன அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
என ரஷீத் லத்தீப் கூறினார்.
- தொடர்ந்து 3 தோல்வியை சி.எஸ்.கே. அணி சந்தித்துள்ளது.
- பேட்ஸ்மேன்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றிப்பாதைக்கு திரும்ப இயலும்.
சென்னை:
10 அணிகள் பங்கேற் றுள்ள ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22- ந் தேதி தொடங்கியது.நேற்றுடன் 19 லீக் ஆட்டங் கள் முடிந்தன. ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் ஆட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணி சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 23-ந் தேதி நடந்த முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது.
2-வது ஆட்டத்தில் பெங்களூருவிடம் 50 ரன்னில் மோசமாக தோற்றது. கவுகாத்தியில் விளையாடிய 3-வது போட்டியில் 6 ரன்னில் ராஜஸ்தானிடம் தோற்றது. அதைத் தொடர்ந்து சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்த 4-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சிடம் 25 ரன்னில் வீழ்ந்தது. சி.எஸ். கே. 1 வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்சை நாளை (செவ்வாய்க்கிழமை) நியூ சண்டிகரில் (முலான்பூர்) இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறது.
தொடர்ந்து 3 தோல்வியை சந்தித்துள்ள சி.எஸ்.கே. அதில் இருந்து மீளூமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
சென்னை சூப்பர் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தொடர்ந்து மோசமான நிலையில் இருக்கிறது. 4 போட்டியிலும். 2-வது தான் பேட்டிங் செய்தது. இதனால் நாளை போட்டியிலாவது அணுகுமுறையை மாற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பவர் பிளேயில் ரன் குவிப்பது மிகவும் அவசியமாகும். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக ஆடுவாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பேட்ஸ்மேன்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றிப்பாதைக்கு திரும்ப இயலும்.
பஞ்சாப் அணி சி.எஸ்.கேவை வீழ்த்தி 3- வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி முதல் 2 ஆட்டத்தில் முறையே குஜராத் ( 11 ரன்), லக்னோவை (8 விக்கெட்) வீழ்த்தியது. 3- வது போட்டியில் ராஜஸ்தானிடம் 50 ரன்னில் மோசமாக தோற்றது.
அந்த அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது.
முன்னதாக நாளை மாலை 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ரகானே தலைமை யிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- ரிஷப்பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் 2 வெற்றி, 2 தோல்வியுடன் உள்ளன. இதனால் 3-வது வெற்றியை பெறப்போவது யார்? என்று எதிர்பார்க்கப் படுகிறது.
- பிரபல கிரிக்கெட் வீரர் தன்னை சந்திக்க நீண்ட நேரம் காத்திருந்ததாக ஏற்கனவே ஊர்வசி கூறி சர்ச்சையை கிளப்பினார்.
- பொய்யான செய்திகளை பரப்புவதை சிலர் தொழிலாக வைத்துள்ளனர் என ரிஷப் பண்ட் கூறினார்.
ஊர்வசி ரவுடேலா (Urvashi Rautela) ஒரு பிரபல இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார். அவர் கிரிக்கெட்டுடன் தொடர்புடைய சில சுவாரஸ்யமான தருணங்களால் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளார். குறிப்பாக, இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்உடனான சர்ச்சைகள் மற்றும் வதந்திகள் அவரை கிரிக்கெட் ரசிகர்களிடையே கவனம் பெற வைத்தன.
2022-ம் ஆண்டு, ஊர்வசி ஒரு நேர்காணலில், ஒரு பிரபல கிரிக்கெட் வீரர் தன்னை சந்திக்க ஹோட்டலில் நீண்ட நேரம் காத்திருந்ததாகவும், ஆனால் தான் அவரை சந்திக்கவில்லை என்றும் கூறினார். இதை அவர் "RP" என்று மறைமுகமாக குறிப்பிட்டதால், பலரும் அதை ரிஷப் பண்ட் உடன் தொடர்புபடுத்தினர்.
இதற்கு பதிலடியாக, ரிஷப் பண்ட் தனது சமூக வலைதளத்தில் "பொய்யான செய்திகளை பரப்புவதை சிலர் தொழிலாக வைத்துள்ளனர்" என்று பதிவிட்டு, ஊர்வசியை மறைமுகமாக விமர்சித்தார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்குதான் தன்னுடைய ஆதரவு என ஊர்வர்சி ரவுடேலா தெரிவித்துள்ளார். இது மீண்டும் கிரிக்கெட் ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் உள்ளார். அவரை வழபிலுக்கும் விதமாக இதை கூறியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- இஷாந்த் சர்மாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஒரு தகுதி இழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐதராபாத்:
ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 152 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 153 ரன் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் 16.4 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 153 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் ஐ.பி.எல். விதிமுறைகளை மீறியதாக கூறி குஜராத் வீரர் இஷாந்த் சர்மாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவர் என்ன தவறு செய்தார் என்ற விவரம் வெளியாகாத நிலையில், விதி 2.2ன் கீழ் கிரிக்கெட் உபகரணங்கள், ஆடைகள், மைதான உபகரணங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- இப்போட்டி சேப்பாக்கத்தில் வரும் 11-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
- ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது.
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 11-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்கியது.
இன்று காலை 9.30 மணியில் இருந்து www.chennaisuperkings.com என்ற இணைய தளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது.
ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற 4 போட்டிகளில் ஒரு வெற்றி, 3 தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
- பெங்களூரு அணி மும்பையை அதன் சொந்த ஊரில் வீழ்த்தி 10 ஆண்டுகள் ஆகி விட்டது.
- இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
5 முறை சாம்பியனான மும்பை அணி இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் வெற்றியும் (கொல்கத்தாவுக்கு எதிராக), 3-ல் தோல்வியும் (சென்னை, குஜராத், லக்னோவுக்கு எதிராக) சந்தித்துள்ளது. முந்தைய லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் 204 ரன் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி நெருங்கி வந்து 12 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட் வீழ்த்தியும் பலன் இல்லை.
பந்து வீச்சில் பலவீனமாக இருக்கும் மும்பை அணிக்கு புத்துயிர் ஊட்டும் விதமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நேற்று முன்தினம் இரவு அணியுடன் இணைந்தார். கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டின் போது முதுகில் காயமடைந்த பும்ரா, ஆபரேசன் செய்த பிறகு எந்த போட்டியிலும் விளையாடவில்லை. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொண்ட அவர் உடல்தகுதி எட்டியதை தொடர்ந்து மும்பையுடன் கைகோர்த்துள்ளார். உடனடியாக பயிற்சியை தொடங்கிய பும்ரா, பெங்களூருவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தின் அணித் தேர்வுக்கு தயாராக இருப்பதாக மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே நிருபர்களிடம் தெரிவித்தார்.
துல்லியமாக பந்து வீசி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் திறன் படைத்த பும்ராவின் வருகை நிச்சயம் மும்பை அணிக்கு புது தெம்பை அளிக்கும். பும்ரா ஐ.பி.எல்.-ல் 133 ஆட்டங்களில் ஆடி 165 விக்கெட் வீழ்த்தி இருப்பது கவனிக்கத்தக்கது.
வலை பயிற்சியில் பந்து தாக்கி கால்முட்டியில் காயமடைந்ததால் லக்னோவுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் ஆடாத ரோகித் சர்மா பார்க்க நன்றாக தெரிகிறார். பயிற்சிக்கு பிறகு அவரது உடல்தகுதியை ஆராய்ந்து ஆடும் லெவனில் சேர்ப்பது குறித்து முடிவு செய்வோம் என்றும் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே குறிப்பிட்டார்.
அதிரடியாக ஆட முடியாமல் தடுமாறியதால் கடந்த ஆட்டத்தில் 'ரிட்டயர்ட்அவுட்' முறையில் வெளியேற்றப்பட்ட திலக் வர்மா (23 பந்தில் 25 ரன்) குறித்து பேசிய ஜெயவர்த்தனே, நாளைய (இன்று) ஆட்டத்தில் திலக் வர்மா களம்இறங்கி வெற்றி தேடி தருவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் தனது முதல் இரு ஆட்டங்களில் கொல்கத்தா, சென்னை அணிகளை போட்டுத்தாக்கியது. கடந்த ஆட்டத்தில் குஜராத்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் 'சரண்' அடைந்தது. பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகிய 3 பேரும் முதல் 5 ஓவருக்குள் அடங்கியதால் பெரிய ஸ்கோர் எடுக்க முடியாமல் போய் விட்டது.
பெங்களூரு அணி மும்பையை அதன் சொந்த ஊரில் வீழ்த்தி 10 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த மைதானத்தில் மும்பைக்கு எதிராக 11 ஆட்டங்களில் ஆடியிருக்கும் பெங்களூரு அணி அதில் 3-ல் வெற்றியும், 8-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. அதனால் அந்த நீண்ட கால சோகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வரிந்து கட்டி நிற்பார்கள்.
மொத்தத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 19-ல் மும்பையும், 14-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
மும்பை: வில் ஜாக்ஸ் அல்லது ரோகித் சர்மா, ரையான் ரிக்கெல்டன், நமன் திர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), மிட்செல் சான்ட்னெர் அல்லது விக்னேஷ் புத்தூர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா அல்லது அஷ்வனி குமார்.
பெங்களூரு: விராட் கோலி, பில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, குருணல் பாண்ட்யா, டிம் டேவிட், புவனேஷ்வர்குமார், ஹேசில்வுட், யாஷ் தயாள், ராசிக் சலாம்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- சிஎஸ்கே-கேகேஆர் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது.
- ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சி.எஸ்.கே. நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை:
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 11-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
இன்று காலை 10.15 மணியில் இருந்து www.chennaisuperkings.com என்ற இணைய தளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது.
ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற 4 போட்டிகளில் ஒரு வெற்றி, 3 தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
- சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது.
- இதன் இறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா வெற்றி பெற்றார்.
வாஷிங்டன்:
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனை சோபியா கெனின் உடன் மோதினார்.
ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய ஜெசிகா 6-3, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
கடந்த வாரம் நடந்த மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சபலென்காவிடம் தோற்ற ஜெசிகா பெகுலா 2வது இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது.
- குஜராத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சிராஜ் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ஐதராபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 19-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய குஜராத் அணி 16.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 3வது வெற்றியைப் பதிவு செய்தது.
இந்நிலையில், ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் முகமது சிராஜ் 4 ஓவர் வீசி 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். மேலும், இந்தப் போட்டியின் மூலம் ஐ.பி.எல். தொடரில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையையும் படைத்திருக்கிறார்.
மேலும், 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் தனது சிறந்த பந்துவீச்சையும் சிராஜ் பதிவுசெய்திருக்கிறார்.
- ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.
- தோனி இதுவரை ஆடிய 4 போட்டிகளிலும் அதிரடியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
சென்னை:
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் ஒரு வெற்றி, 3 தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
இதில் எம்.எஸ்.தோனி இதுவரை ஆடிய 4 போட்டிகளிலும் அணியின் வெற்றிக்காக அதிரடியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் உள்ளது. இதையடுத்து தோனி ஓய்வுபெற வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் தோனி ஓய்வுபெற வேண்டும் என நேரடியாக தெரிவித்துள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக சேஸிங் செய்ய வேண்டிய சூழ்நிலையில் தோனி மிகவும் நிதானமாக ஆடி வந்தார். அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த மேத்யூ ஹைடன், "
இதுதொடர்பாக மேத்யூ ஹைடன் கூறுகையில், இந்தப் போட்டிக்குப் பிறகு தோனி வர்ணனையாளர்கள் குழுவுடன் இணைய வேண்டும். அவர் கிரிக்கெட்டை தொலைத்து விட்டார். இனி அவ்வளவுதான். இந்த உண்மையை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலக வேண்டிய காலம் எப்போதோ வந்துவிட்டது என தெரிவித்தார்.
ஹைடனின் இந்த விமர்சனம் தோனி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 152 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய குஜராத் 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐதராபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 19-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. நிதிஷ்குமார் ரெட்டி 31 ரன்னும், கிளாசன் 27 ரன்னும், கம்மின்ஸ் 22 ரன்னும் எடுத்தனர்.
குஜராத் சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது. சுப்மன் கில் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 61 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 49 ரன்னில் அவுட்டானார்.
ரதர்போர்டு 16 பந்தில் 35 ரன்கள் குவித்தார்.
இறுதியில், குஜராத் அணி 16.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 3வது வெற்றியைப் பதிவு செய்தது. நடப்பு தொடரில் ஐதராபாத் அணி பெறும் 4வது தோல்வி இதுவாகும்.






