என் மலர்
விளையாட்டு
- முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய கொல்கத்தா 10.1 ஓவரில் 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சென்னை:
நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 31 ரன்னும், விஜய் சங்கர் 29 ரன்னும் எடுத்தனர்.
கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டும், ஹர்ஷித் ரானா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 5 தோல்விகளை முதல் முறையாக சி எஸ் கே அணி பெற்று மோசமான சாதனை படைத்துள்ளது.
இதேபோல், சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து 3 முறை தோற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்தது.
சென்னை:
ஐபிஎல் 2025 சீசனின் 25-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது.
முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். கொல்கத்தா அணியின் துல்லிய பந்துவீச்சில் சென்னை வீரர்கள் விரைவில் பெவிலியன் திரும்பினர்.
பவர்பிளேயில் சிஎஸ்கே 2 விக்கெட் இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஷிவம் துபே 31 ரன்னும், விஜய் சங்கர் 29 ரன்னும் எடுத்தனர்.
கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டும், ஹர்ஷித் ரானா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. டி காக், சுனில் நரைன் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். டிகாக் 23 ரன்னில் அவுட்டானார்.
சுனில் நரைன் அதிரடியாக ஆடி 18 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 44 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், கொல்கத்தா 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியது.
- மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
- இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா ஜோடி காலிறுதியில் தோல்வி அடைந்தது.
மாண்டே கார்லோ:
மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற உள்ளது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, பிரான்சின் மேனுவல் கினார்டு-மொனாக்கோவின் ரோமைன் அர்னியோடோ ஜோடியுடன் மோதியது.
இதில் முதல் செட்டை 2-6 என இழந்த போபண்ணா ஜோடி, அடுத்த செட்டை 6-4 என கைப்பற்றியது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் போபண்ணா ஜோடி 7-10 என்ற கணக்கில் செட்டை இழந்து தோல்வி அடைந்து
தொடரில் இருந்து வெளியேறியது.
- சிஎஸ்கே பவர்பிளேயில் 2 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் மட்டுமே அடித்தது.
- 6ஆவது பேட்ஸ்மேனில் இருந்து அனைவரும் ஒற்றையிலக்க ரன்னில் வெளியேறினர்.
ஐபிஎல் 2025 சீசனின் 25ஆவது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ரகானே பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிஎஸ்கே-வுக்க முதல் ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் கிடைத்தது. 2ஆவது ஓவரில் 4 ரன்களே கிடைத்தது. அடுத்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. இதனால் 4 ஓவரில் 2 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்தது.
4ஆவது ஓவரை மொயீன் அலி வீசினார். இந்த ஓவரில் சிஎஸ்கே-வுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்தில் கான்வே ஆட்டமிழந்தார். அவர் 12 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். அதன்பின் திரிபாதி களம் இறங்கினார். இந்த ஓவரில் ரன்ஏதும் கிடைக்கவில்லை.
5ஆவது ஓவரை ஹர்ஷித் ராணா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழந்தார். இவர் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து விஜய் ஷங்கர் களம் இறங்கினார். 3ஆவது பந்தில் விஜய் ஷங்கர் கொடுத்த எளிதான கேட்சை சுனில் நரைன் பிடிக்க தவறினார். இதனால் விஜய் ஷங்கர் டக்அவுட்டில் இருந்து தப்பினார். இந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது.
பவர்பிளேயில் கடைசி ஓவரான 6ஆவது ஓவரை வருண் சக்ரவர்த்தி வீசினார். இந்த ஓவரில் விஜய் சங்கர் 2 பவுண்டரி அடித்தார். இதனால் 13 ரன்கள் கிடைத்தது. அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் பவர்பிளேயில் 2 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த சீசனில் பவர்பிளேயில் 2ஆவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.
சிஎஸ்கே பளர்பிளேயில் ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை. இதனால் சிக்சர் இல்லாத பவர்பிளேயாக அமைந்தது.
விஜய் ஷங்கர் மற்றும் திரிபாதியால் ரன்கள் அடிக்க முடியாமல் திணறினர். இதனால் சி.எஸ்.கே.யின் ஸ்கோர் மந்தமான உயர்ந்தது.
10ஆவது ஓவரை வருண் சக்ரவர்த்தி வீசினார். இந்த ஓவரின் 4ஆவது பந்தில் விஜய் ஷங்கர் ஆட்டமிழந்தார். அவர் 21 பந்தில் 29 ரன்கள் எடுத்தார். முதல் 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் மட்டுமே எடுத்தது.
11ஆவது ஓவரை சுனிலை நரைன் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் திரிபாதி க்ளீன் போல்டானார். இவர் 22 பந்தில் 16 ரன்கள் எடுத்தார்.
5ஆவது விக்கெட்டுக்கு துபே உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். அதன்பின் சிஎஸ்கே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 13ஆவது ஓவரில் அஸ்வின் (1), 14ஆவது ஓவரில் ஜடேஜா (0), 15ஆவது ஓவரில் தீப் ஹூடா (0), 16ஆவது ஓவரில் எம்.எஸ். தோனி (1) ஆட்டமிழந்தனர். எம்.எஸ். தோனி ஆட்டமிழக்கும்போது சிஎஸ்கே 15.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்களே அடித்திருந்தது.
9ஆவது விக்கெட்டுக்கு துபே உடன் நூர் அகமது ஜோடி சேர்ந்தார். 17ஆவது ஓவரில் சிஎஸ்கே-வுக்கு ஒரு ரன்தான் கிடைத்தது. இதனால் 8 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்தது.
18ஆவது ஓவரை வைபவ் வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தில் நூர் அகமது ஆட்டமிழந்தார். இதனால் சிஎஸ்கே 80 ரன்னுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது.
கடைசி விக்கெட்டுக்கு துபே உடன் அன்ஷுல் கம்போஜ் ஜோடி சேர்ந்தார். 18 ஓவர் முடிவில் சிஎஸ்கே 84 ரன்கள் அடித்திருந்தது.
19ஆவது ஓவரை ஹர்ஷித் ராணா வீசினார். இந்த ஓவரின் 3ஆவது பந்தில் துபே பவுண்டரி அடித்தார். இதனால் சுமார் 10 ஓவருக்குப் பிறகு சிஎஸ்கே-வுக்கு பவுண்டரிக்கு கிடைத்தது. இந்த ஓவர் முடிவில் 90 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி ஓவரை வைபவ் ஆராரோ வீசினார். இந்த ஓவரின் 3ஆவது பந்தை துபே பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தையும் பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் சிஎஸ்கே 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தது. துபே 29 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- இந்த சீசனில் சிஎஸ்கே பவர்பிளேயில் 2ஆவது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.
- கான்வே, ரச்சின் ரவிந்திரா அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தனர்.
ஐபிஎல் 2025 சீசனின் 25ஆவது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ரகானே பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் கிடைத்தது. 2ஆவது ஓவரில் 4 ரன்களே கிடைத்தது. அடுத்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. இதனால் 4 ஓவரில் 2 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்தது.
4ஆவது ஓவரை மொயீன் அலி வீசினார். இந்த ஓவரில் சிஎஸ்கே-வுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்தில் கான்வே ஆட்டமிழந்தார். அவர் 12 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். இந்த ஓவரில் ரன்ஏதும் கிடைக்கவில்லை.
5ஆவது ஓவரை ஹர்ஷித் ராணா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழந்தார். இவர் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து விஜய் ஷங்கர் களம் இறங்கினார். 3ஆவது பந்தில் விஜய் ஷங்கர் கொடுத்த எளிதான கேட்சை சுனில் நரைன் பிடிக்க தவறினார். இதனால் விஜய் ஷங்கர் டக்அவுட்டில் இருந்து தப்பினார். இந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது.
பவர்பிளேயில் கடைசி ஓவரான 6ஆவது ஓவரை வருண் சக்ரவர்த்தி வீசினார். இந்த ஓவரில் விஜய் சங்கர் 2 பவுண்டரி அடித்தார். இதனால் 13 ரன்கள் கிடைத்தது. அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் பவர்பிளேயில் 2 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த சீசனில் பவர்பிளேயில் 2ஆவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.
மேலும், சிஎஸ்கே பளர்பிளேயில் ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை. இதனால் சிக்சர் இல்லாத பவர்பிளேயாக அமைந்தது.
- 13 போட்டிகளில் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துள்ளது.
- இந்த சீசனில் கோகுலம் கேரளா அணியிடம் மட்டுமே தோல்வியடைந்துள்ளது.
இந்திய பெண்கள் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மேற்கு வங்கம் மாநிலத்தில் நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் ஒடிசா எஃப்.சி.- ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஈஸ்ட் பெங்கால் அணி 1-0 என வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடித்து சாம்பியன் படத்தை உறுதி செய்துள்ளது.
67ஆவது நிமிடத்தில் சவுமியா குகுலோத் கோல் அடித்தார். இந்த கோல் வெற்றி கோலாகவும், சாம்பியன் பட்டத்தை உறுதி செய்வதற்குமான கோலாகவும் அமைந்தது.
ஆண்களுக்கான கால்பந்து தொடர் இந்தியன் லீக்காக (I-League) நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக தேசிய கால்பந்து லீக்காக நடைபெற்றது. அப்போது 2003-04-ல் ஈஸ்ட் பெங்கால் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2003-ல் ஏசியன் கிளப் சாம்பியன்ஷிப்பை வென்றது.
அதற்குப் பிறகு தற்போதுதான் 21 வருடத்திற்குப் பிறகு ஈஸ்ட் பெங்கால் அணி (ஆண்கள் மற்றும் பெண்கள்) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இந்த சீசனில் ஈஸ்ட் பெங்கால் அணி கோகுலம் கேரளா அணியைத் தவிர மற்ற அனைத்தும் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் ஒரு போட்டியில் மட்டும் விளையாட வேண்டியுள்ளது. இதில் தோற்றாலும், டிரா செய்தாலும் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றும்.
- புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே 9ஆவது இடத்தில் உள்ளது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6ஆவது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் 2025 சீசனின் 25ஆவது ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் டாஸ் ரகானே வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
போட்டிக்கான இரு அணிகளின் ஆடும் லெவன் வருமாறு:-
சென்னை:
ரச்சின் ரவீந்திரா, டிவான் கான்வே, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), ஆர்.அஸ்வின், நூர் அகமது, கலீல் அகமது, பதிரானா, அன்ஷுல் காம்போஜ்.
கொல்கத்தா:
குயின்டான் டி காக், சுனில் நரைன், ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், மொயீன் அலி, ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.
- மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன.
- நார்வேக்கு எதிரான போட்டியில் 64 வயதான போர்ச்சுகல் வீராங்கனை ஜோனா சைல்ட் களமிறங்கினார்.
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த 7-ம் தேதி நடைபெற்ற நார்வேக்கு எதிரான போட்டியில் 64 வயதான போர்ச்சுகல் வீராங்கனை ஜோனா சைல்ட் களமிறங்கினார்.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வயதில் அறிமுகப் போட்டியில் களமிறங்கிய 2-வது கிரிக்கெட் வீராங்கனை ஜோனா சைல்ட் ஆனார். இதற்கு முன்பாக சாலி பார்டன் என்பவர் 66 வயதில் களமிறங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐபிஎல் ஒப்பந்தம் காரணமாக கார்பின் போஷ் பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகினார்.
- கார்பின் போஷ்கை ரூ.75 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசனானது இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிருப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போதுவரை 24 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தோல்வியைத் தழுவாமல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் தொடர்கிறது.
இந்த ஐபிஎல் தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த தென் அப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் லிசாத் வில்லியம்ஸ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
அவர் தொடரில் இருந்து விலகியதன் காரணமாக அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கார்பின் போஷ்க்கை அவரது அடிப்படை ஏலத்தொகையான ரூ.75 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பெஷாவர் ஸால்மி அணிக்காக விளையாட இருந்த நிலையில் ஐபிஎல் ஒப்பந்தம் காரணமாக அவர் பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகினார்.
இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கார்பின் போஷ்கிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் தனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில் கார்பின் போஷ்கின் இந்த முடிவின் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் அவர் பங்கேற்பதற்கு ஒராண்டு தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த பிஎஸ்எல் தொடரில் அவர் தேர்வு செய்யப்படமாட்டார் என்பதையும் பிசிபி தெளிவுபடுத்தியுள்ளது. இதனையடுத்து தன்னுடைய முடிவின் காரணமாக கார்பின் போஷ் மன்னிப்பு கோரினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- 2017ஆம் ஆண்டு லிவர்பூல் அணியுடன் இணைந்தார்.
- 8 வருட ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் 2 வருடம் ஒப்பந்தம் நீடிப்பு.
எகிப்தின் நட்சத்திர கால்பந்து வீரர் முகமது சாலா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு லிவர்பூல் அணியில் இணைந்தார். கடந்த 8 வருடங்களாக அந்த அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார்.
இவருடைய ஒப்பந்தம் இந்த சீசனுடன் முடிவடைகிறது. இதனால் அணியில் இருந்து வெளியேறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முகமது சாலா லிவர்பூல் அணியுடன் மேலும் இரண்டு வருடத்திற்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதனால் 2027 வரை லிவர்பூல் அணிக்காக விளையாடுவார்.
முகமது சாலா உடன் டிரென்ட் அலெக்சாண்டர்-அர்னால்டு, விர்ஜில் வான் டிக் ஆகியோருடைய ஒப்பந்தமும் நிறைவடைகிறது. ஆனால் இவர்கள் இருவரும் இன்னும் ஒப்பந்தம் குறித்து முடிவு செய்யவில்லை.
முகமது சாலா இது தொடர்பாக கூறுகையில் "நிச்சயமாக நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். எங்களிடம் இப்போது ஒரு சிறந்த அணி உள்ளது. முன்பும் எங்களுக்கு ஒரு சிறந்த அணி இருந்தது.
சாம்பியன் பட்டம் வென்று எனது கால்பந்து வாழ்க்கையை அனுபவிக்க எங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக நான் கருதுவதால் நான் கையெழுத்திட்டேன்.
இது மிகவும் நல்லது. எனக்கு இங்கு எனது சிறந்த ஆண்டுகள் இருந்தன. நான் எட்டு ஆண்டுகள் விளையாடினேன். இது 10 ஆண்டுகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறத. இங்கே என் வாழ்க்கை மற்றும் கால்பந்தை போட்டியை அனுபவிக்கிறேன். என் கால்பந்து வாழ்க்கையில் சிறந்த ஆண்டுகள் இருந்தன" என்றார்.
முகமது சாலா லிவர்பூல் அணிக்காக 281 போட்டிகளில் விளையாடி 182 கோல்கள் அடித்துள்ளார். இவர் விளையாடியபோது லிவர்பூல் இங்கிலீஷ் பிரீமியர் லீக், சாம்பியன்ஸ் லீக்கை வென்றுள்ளது.
- காலிறுதி போட்டியில் அலெஜான்ட்ரோ டேவிடோவிச் (ஸ்பானிஷ்), அலெக்ஸி பாபிரின் (ஆஸ்திரேலியா) ஆகியோர் மோதினர்.
- இதில் 6-3, 6-2 என்ற கணக்கில் என்ற செட் கணக்கில் டேவிடோவிச் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் காலிறுதி போட்டியில் அலெஜான்ட்ரோ டேவிடோவிச் (ஸ்பானிஷ்), அலெக்ஸி பாபிரின் (ஆஸ்திரேலியா) ஆகியோர் மோதினர்.
இதில் 6-3, 6-2 என்ற கணக்கில் என்ற செட் கணக்கில் டேவிடோவிச் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
- நான் செய்த Celebration எனக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்றான காந்தாராவில் இடம் பெற்ற காட்சி.
- இந்த மைதானம்தான் என் வீடு என்பதை மீண்டும் ஞாபகப்படுத்தவே அப்படி செய்தேன்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 164 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 169 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கே.எல். ராகுல் 93 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல். ராகுல் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார். இந்த வெற்றியை கே.எல்.ராகுல், தனது பேட்டை தரையில் வட்டமிட்டு அடித்து ஆக்ரோஷமாக கொண்டாடினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்நிலையில் ஆக்ரோஷமாக கொண்டாடியதற்காக காரணத்தை கேஎல் ராகுல் கூறியுள்ளார். அதில், சின்னசாமி மைதானம் மிகவும் ஸ்பெஷலான இடம். ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் வென்ற பின்பு நான் செய்த Celebration எனக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்றான காந்தாராவில் இடம் பெற்ற காட்சி. இந்த மைதானம்தான் என் வீடு என்பதை மீண்டும் ஞாபகப்படுத்தவே அப்படி செய்தேன் என ராகுல் கூறினார்.






