என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.
    • இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது பஞ்சாப் அணி.

    தரம்சாலா:

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நேற்று நடந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 236 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய லக்னோ அணி 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 37 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் எழுச்சி பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி அசத்தியது.

    முதல் இடத்தில் ஆர்.சி.பி.யும், 3வது இடத்தில் மும்பை இந்தியன்சும், 4வது இடத்தை குஜராத்தும், 5வது இடத்தை டெல்லியும் பிடித்துள்ளது.

    லக்னோ அணி 11 போட்டியில் 5 வெற்றி, 6 தோல்வி என 7வது இடத்தில் உள்ளது.

    • ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்றது.
    • முதலில் ஆடிய பஞ்சாப் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 236 ரன்களை குவித்தது.

    தரம்சாலா:

    ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 236 ரன்களை குவித்தது. பிரப்சிம்ரன் சிங் 91 ரன்களை விளாசினர். அடுத்து இறங்கிய லக்னோ 20 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. பொறுப்புடன் ஆடிய பதோனி அரை சதம் கடந்து 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், தோல்விக்கு பிறகு லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது:

    பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது. அடுத்த 3 போட்டியில் வெற்றி பெற்றால், நிச்சயமாக அற்புதமான விஷயங்களைச் செய்ய முடியும்.

    236 ரன்கள் என்பது துரத்துவதற்கு மிக அதிகம். பீல்டிங்கும் சரியாக இல்லை. நிச்சயமாக அதிக ரன்கள். தவறான நேரத்தில் முக்கியமான கேட்சுகளை தவறவிட்டால், அது உங்களை மோசமாக பாதிக்கும். அது இன்னும் அதிகமாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம்.

    நாங்கள் தொடக்கத்தில் சரியான நீளத்தை தேர்வு செய்யவில்லை. ஆனால் அது விளையாட்டின் ஒரு பகுதி. டாப் ஆர்டர் நன்றாக பேட்டிங் செய்யும்போது அது அர்த்தமுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு போட்டியிலும், அவர்கள் வெளியே வருவார்கள் என நம்ப முடியாது. இது விளையாட்டின் ஒரு பகுதி என தெரிவித்தார்.

    • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்றது.
    • நார்வே வீரர் காஸ்பர் ரூட் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றார்.

    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், பிரிட்டன் வீரர் ஜாக் டிராபர் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 7-5 என காஸ்பர் ரூட் கைப்பற்றினார். பதிலுக்கு டிராபர் 2வது செட்டை 6-3 என வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-4 என காஸ்பர் ரூட் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 236 ரன்களை குவித்தது.

    தரம்சாலா:

    ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 236 ரன்களை குவித்தது. பிரப்சிம்ரன் சிங் 91, ஷ்ரேயாஸ் அய்யர் 45, ஷஷாங் சிங் 33, ஜோஷ் இங்லிஸ் 30 ரன்களை விளாசினர்.

    இதையடுத்து, 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. பஞ்சாப் அணியின் துல்லிய பந்து வீச்சால் பவர் பிளேவில் முக்கிய மூன்று விக்கெட்டுகளை இழந்தது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    லக்னோ அணி 78 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தத்தளித்தது

    6வது விக்கெட்டுக்கு ஆயுஷ் பதோனியுடன், அப்துல் சமத் ஜோடி சேர்ந்தார். 81 ரன்கள் சேர்த்த நிலையில் சமத் 45 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய பதோனி அரை சதம் கடந்து 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். அத்துடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.

    • சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
    • காயம் காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து மேக்ஸ்வெல் விலகினார்.

    புதுடெல்லி:

    18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 53 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

    இந்த லீக் ஆட்டங்களின் முடிவில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

    மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. கடந்த சீசன்களில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பஞ்சாப் கிங்ஸ் தற்போது ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையில் சிறப்பாக ஆடி வருகிறது.

    நடப்பு சீசனில் பஞ்சாப் அணியில் இடம்பிடித்திருந்த ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து வெளியேறினார்.

    இந்நிலையில், மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்ரவுண்டர் மிட்செல் ஓவனை ரூ.3 கோடிக்கு பஞ்சாப் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

    • பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் (6 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை) 4-வது இடம் வகிக்கிறது.
    • 'பவர்-பிளே' வரை தாக்குப்பிடித்து விட்டாலே பஞ்சாப் மெகா ஸ்கோரை குவித்து விடும்.

    ஐ.பி.எல். தொடரின் 54-வது ஆட்டத்தில் தரம்சாலாவில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டு வருகிறது.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

    இதனால், களத்தில் முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. இந்த ஆட்டத்தின் முடிவில், பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களை குவித்தது.

    இதன்மூலம், இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு 237 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

    பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 91, ஸ்ரேயாஸ் ஐயர் 45, ஷஷாங் சிங் 33, ஜோஷ் இங்லிஸ் 30 ரன்களை விளாசினர்.

    • வெற்றி பெற கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது
    • 207 என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கில் களமிறங்கியது.

    கொல்கத்தாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இன்று மதியம் தொடங்கியது.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. கொல்கத்தாவின் தொடக்க வீரராக சுனில் நரேன் 11 ரன்னிலும், அடுத்து வந்த ரஹானே 30 ரன்னிலும் அவுட் ஆகினர். மற்றொரு தொடக்க வீரர் குர்பாஸ் 35 ரன்னில் அவுட் ஆனார்.

    தொடர்ந்து இறங்கிய ரகுவன்ஷி மற்றும் ரசல் ஜோடி அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது. ரகுவன்ஷி 44 ரன்னில் அவுட் ஆனார். பின் ரிங்கு சிங் களம் இறங்கினார். மறுபுறம் அதிரடியாக ஆடி சிக்சர்கள் விளாசிய ரசல் 22 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.

     இறுதியில்  கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை குவித்தது. 207 என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கில் களமிறங்கியது.

    கடைசி வரை மூச்சைப் பிடித்து ஆடிய ராஜஸ்தான் அணி வெற்றி பெற கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்த ராஜஸ்தான் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோல்வியைத் தழுவியது.

    • பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் (6 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை) 4-வது இடம் வகிக்கிறது.
    • 'பவர்-பிளே' வரை தாக்குப்பிடித்து விட்டாலே பஞ்சாப் மெகா ஸ்கோரை குவித்து விடும்.

    ஐ.பி.எல். தொடரின் 54-வது ஆட்டத்தில் தரம்சாலாவில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் (6 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை) 4-வது இடம் வகிக்கிறது.

    தொடக்க ஆட்டக்காரர்கள் பிரியான்ஷ் ஆர்யா (22 சிக்சருடன் 346 ரன்), பிரப்சிம்ரன் சிங் (3 அரைசதத்துடன் 346 ரன்) தான் பஞ்சாப் அணியின் பேட்டிங் முதுகெலும்பாக விளங்குகிறார்கள். இவர்கள் 'பவர்-பிளே' வரை தாக்குப்பிடித்து விட்டாலே பஞ்சாப் மெகா ஸ்கோரை குவித்து விடும்.

    முதல் 6 ஆட்டங்களில் 4-ல் வெற்றி கண்ட லக்னோ அணி அடுத்த 4 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றிப் பெற்றது. டெல்லி, மும்பைக்கு எதிரான கடைசி இரு ஆட்டங்களில் சொதப்பலான பேட்டிங்கால் தோல்வியை தழுவியது. மார்க்ரம் (335 ரன்), மிட்செல் மார்ஷ் (378 ரன்), நிகோலஸ் பூரன் (404 ரன்) ஆகியோரைத் தான் அந்த அணி மலை போல் நம்பி இருக்கிறது. இவர்கள் சோடை போனால் அதன் பிறகு பெரும்பாலும் திண்டாடி விடுகிறது.

    இந்த நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

    இதனால், களத்தில் முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்கிறது.

    மலைவாசஸ்தலமான இமாசலபிரதேசம் மாநிலம் தரம்சாலாவில் இந்த சீசனில் நடக்கும் முதல் ஆட்டம் இது என்பதால் இங்குள்ள ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

    • ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 8 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.

    கொல்கத்தாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இன்று மதியம் தொடங்கியது.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    கொல்கத்தாவின் தொடக்க வீரராக சுனில் நரேன் 11 ரன்னிலும், அடுத்து வந்த ரஹானே 30 ரன்னிலும் அவுட் ஆகினர். ,மற்றொரு தொடக்க வீரர் குர்பாஸ் 35 ரன்னில் அவுட் ஆனார்.

    தொடர்ந்து இறங்கிய ரகுவன்ஷி மற்றும் ரசல் ஜோடி அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது. ரகுவன்ஷி 44 ரன்னில் அவுட் ஆனார். பின் ரிங்கு சிங் களம் இறங்கினார். மறுபுறம் அதிரடியாக ஆடி சிக்சர்கள் விளாசிய ரசல் 22 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில்  கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை குவித்துள்ளது. எனவே 207 என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கில் களமிறங்குகிறது.

    இதுவரை 10 ஆட்டங்களில் ஆடியுள்ள கொல்கத்தா அணி 4 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 9 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 8 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.  

    • 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
    • ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 8 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.

    கொல்கத்தாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இன்று மதியம் தொடங்கியது.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதனால் ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச உள்ளது.

    இதுவரை 10 ஆட்டங்களில் ஆடியுள்ள கொல்கத்தா அணி 4 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 9 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 8 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.  

    • இந்த சீசனில் 505 ரன்கள் குவித்து ஆரஞ்ச் தொப்பையை விராட் கோலி கைப்பற்றினார்.
    • ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி இதுவரை 8,509 ரன்கள் எடுத்துள்ளார்

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 213 ரன்கள் குவித்தது. விராட் கோலி, ஜேக்கப் பெத்தேல், ரொமாரியோ ஷெப்பர்ட் அரை சதமடித்தனர். தொடர்ந்து ஆடிய சென்னை அணி 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆர்.சி.பி. அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் இந்த சீசனில் 505 ரன்கள் குவித்து ஆரஞ்ச் தொப்பையை கைப்பற்றினார்.

    இதன்மூலம் ஐபிஎல் தொடர்களில் அதிக முறை ஒரு சீசனில், 500 ரன்களுக்கு மேல் குவித்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்தார். இதுவரை 8 சீசன்களில் 500 ரன்களுக்கும் மேல் கோலி அடித்துள்ளார். கோலிக்கு அடுத்தபடியாக வார்னர் 7 முறையும் கே.எல்.ராகுல் 6 முறையும் தவான் 5 முறையும் 500 ரன்களுக்கும் மேல் அடித்துள்ளனர்.

    ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி இதுவரை 263 போட்டிகளில் விளையாடி 8 சதம், 62 அரைசதம் உள்பட 8,509 ரன்கள் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்த இரு இடங்களில் ரோகித் சர்மா 267 போட்டிகளில் விளையாடி 6,921 ரன்னும், ஷிகர் தவான் 222 போட்டிகளில் விளையாடி 6,769 ரன்னும் எடுத்துள்ளனர்.

    • அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 94 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • பிரேவிஸ் LBW முறையில் டக் அவுட்டானார்.

    ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 211 ரன்கள் 2 வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

    ஒருகட்டத்தில் வெற்றிபெறும் நிலையில் இருந்த சி.எஸ்.கே. அணி இருந்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 94 ரன்னில் ஆட்டமிழந்தார். இதுதான் ஆட்டத்தை ஆர்.சி.பி. பக்கம் கொண்டு வந்தது.

    இதற்கடுத்து இறங்கிய பிரேவிஸ் LBW முறையில் டக் அவுட்டானார். இதையடுத்து மற்றொரு முனையில் இருந்த ஜடேஜாவுடன் பிரேவிஸ் ரெவியூ செய்வது தொடர்பாக பேசினார். பின்னர் அவர் ரெவியூ கேட்டபோது, ரெவியூ எடுப்பதற்கான நேரம் முடிந்துவிட்டது என்று நடுவர் கூறினார். இதனால் பிரேவிஸ் மனம் உடைந்தார். இதனால் ஜடேஜா நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    பின்னர் பிரேவிஸ் விக்கெட்டை மறு ஒளிபரப்பு செய்தபோது பந்து லெக் சைடில் சென்று ஸ்டம்புகளைத் தவறவிட்டது தெரியவந்தது. இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும் இதனை விமர்சித்து இணையத்தில் பதிவிட்டனர். 

    ×