என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஐபிஎல்: RR Vs KKR - 207 இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ்
    X

    ஐபிஎல்: RR Vs KKR - 207 இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ்

    • ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 8 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.

    கொல்கத்தாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இன்று மதியம் தொடங்கியது.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    கொல்கத்தாவின் தொடக்க வீரராக சுனில் நரேன் 11 ரன்னிலும், அடுத்து வந்த ரஹானே 30 ரன்னிலும் அவுட் ஆகினர். ,மற்றொரு தொடக்க வீரர் குர்பாஸ் 35 ரன்னில் அவுட் ஆனார்.

    தொடர்ந்து இறங்கிய ரகுவன்ஷி மற்றும் ரசல் ஜோடி அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது. ரகுவன்ஷி 44 ரன்னில் அவுட் ஆனார். பின் ரிங்கு சிங் களம் இறங்கினார். மறுபுறம் அதிரடியாக ஆடி சிக்சர்கள் விளாசிய ரசல் 22 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை குவித்துள்ளது. எனவே 207 என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கில் களமிறங்குகிறது.

    இதுவரை 10 ஆட்டங்களில் ஆடியுள்ள கொல்கத்தா அணி 4 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 9 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 8 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.

    Next Story
    ×