என் மலர்
விளையாட்டு
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக தொடர்களை வென்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றுடன் முடிவடைந்த புனே டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 எனத் தொடரை கைப்பற்றியது.
இந்தத் தொடரை வென்றதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக தொடர்களை வென்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. 2013 பிப்ரவரி முதல் 2019 அக்டோபர் வரை இந்தியா தொடர்ச்சியாக 11 தொடர்களை வென்று சாதனைப் படைத்துள்ளது.
இதற்கு முன் ஆஸ்திரேலியா 1994 நவம்பர் முதல் 2000 நவம்பர் வரை தொடர்ச்சியாக 10 தொடர்களையும், 2004 ஜூலை முதல் 2008 நவம்பர் வரை 10 தொடர்களையும் வென்றிருந்தது. தற்போது ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது.

புனே டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவை இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புனேயில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில் 275 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
இந்தியாவை விட 326 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால் பாலோ-ஆன் ஆனது. தென்ஆப்பிரிக்கா ஆல்அவுட் ஆனதோடு நேற்றைய 3-வதுநாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததால், இந்தியா பாலோ-ஆன் எடுக்குமா? அல்லது தொடர்ந்து பேட்டிங் செய்யுமா? என்பது குறித்து தெளிவாக தெரியாமல் இருந்தது.

முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய மகாராஜ் - பிலாண்டர் ஜோடி 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடியது. இந்த ஜோடியை உமேஷ் யாதவ் பிரிக்க தென்ஆப்பிரிக்கா 189 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ், ஜடேஜா தலா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.

இன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் இந்தியா பாலோ-ஆன் எடுத்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி மளமளவென விக்கெட்டுக்களை இழந்தது.

முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய மகாராஜ் - பிலாண்டர் ஜோடி 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடியது. இந்த ஜோடியை உமேஷ் யாதவ் பிரிக்க தென்ஆப்பிரிக்கா 189 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ், ஜடேஜா தலா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
புனேயில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டின்போது ரோகித் சர்மா ரசிகர் ஒருவர் அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்ததற்கு கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது ரசிகர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார்.
8-வது வரிசை வீரர் முத்துசாமி ஆட்டம் இழந்து மைதானத்தை விட்டு வெளியேறும்போது பிலாண்டர் களத்துக்கு வந்தார். அப்போதுதான் ரசிகர் ஒருவர் ஆடுகளத்துக்குள் புகுந்தார். அவர் ரோகித் சர்மாவின் காலில் விழுந்து ஆசி வாங்கினார். அப்போது ரோகித் சர்மா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதற்கு அந்த ரசிகர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ரசிகரை பாதுகாவலர்கள் அழைத்து சென்றனர்.
மைதானத்திற்குள் ரசிகர் நுழைந்தது தொடர்பாக பாதுகாவலர்கள் மீது முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கடுமையாக பாய்ந்துள்ளார். டெலிவிஷனில் வர்ணனை செய்துக் கொண்டு இருந்த அவர் இது தொடர்பாக கூறியதாவது:-
இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறுவதற்கு காரணம் ரசிகர்கள் பக்கம் கவனம் செலுத்தாமல் பாதுகாவலர்கள் ஆட்டத்தை பார்ப்பதுதான். இந்தியாவில் எப்போதும் இந்த பிரச்சினை உள்ளது.
கிரிக்கெட் ஆட்டத்தை பாதுகாவலர்கள் இலவசமாக பார்க்கக்கூடாது. ஆட்டத்தை பார்ப்பதற்காக அவர்கள் அங்கு வரவழைக்கப்பட வில்லை. இது போன்று அத்துமீறி நுழைபவர்களை தடுப்பதற்காகத்தான் அவர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.பாதுகாவலர்களின் பக்கம் கேமிராவை திருப்பி அவர்கள் ஆட்டத்தை பார்க்கிறார்களா? அல்லது ரசிகர்களை கவனிக்கிறார்களா? என கண்காணிக்க வேண்டும்.
இதுபோன்று அத்துமீறி நுழையும் ரசிகர்களால் வீரர்களுக்கு ஆபத்து நேரிடலாம். இதுபோல முன்பு நடைபெற்றுள்ளது. அப்படி இருக்கும்போது அலட்சியமாக இருப்பது ஏன்?
மைதானத்துக்குள் நுழைவது எளிதானது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏராளமான தடுப்புகள் இருக்கின்றன. அப்படி இருந்தும் இது போன்ற சம்பவங்கள் இன்னும் தொடர்ந்து நடக்கிறது.
இவவாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்தியா- தென் ஆப்பி ரிக்கா தொடரில் ரசிகர்கள் அத்து மீறி மைதானத்துக்குள் நுழைவது 3-வது சம்பவமாகும். விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலும், மொகாலியில நடந்த 20 ஓவர் போட்டியிலும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிவேகமாக 50 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஐந்தாவது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.
புனே டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் முதல் இன்னிங்சில் 69 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 50 விக்கெட்டுகளை எடுத்தார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 50 விக்கெட் வீழ்த்திய 4-வது இந்திய வீரர் அஸ்வின் ஆவார். கும்ப்ளே (84 விக்கெட்), ஸ்ரீநாத் (64), ஹர்பஜன்சிங் (60) ஆகியோர் முதல் இடங்களில் உள்ளனர்.
அஸ்வின் 9 டெஸ்டில் இந்த விக்கெட்டை எடுத்தார். இதன்மூலம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிவேகத்தில் 50 விக்கெட் வீழ்த்திய 5-வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். பர்னஸ் (ஆஸ்திரேலியா) 5 டெஸ்டிலும், முரளீதரன் (இலங்கை) 7 டெஸ்டிலும், ஒயிட்டி மற்றும் கிரீம்மெட் (ஆஸ்திரேலியா) தலா 8 டெஸ்டிலும் அந்நாட்டுக்கு எதிராக அதிவேகத்தில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

பெண்கள் உலக குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த இந்திய வீராங்கனை மஞ்சு ராணி வெள்ளி பதக்கம் வென்றார்.
உலன் உடே:
11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இன்று நடந்த 48 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி, ரஷியா வீராங்கனை எகாட்டரினாவுடன் மோதினார்.
இதில் மஞ்சு ராணி 4-1 என்ற கணக்கில் ரஷியா வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். இதன்மூலம் மஞ்சு ராணி வெள்ளி பதக்கம் வென்றார்.
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் பாலோ ஆன் பெற்ற தென் ஆப்பிரிக்கா 4ம் நாளின் உணவு இடைவேளையில் 4 விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.
புனே:
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். மயங்க் அகர்வால் சதமடித்து 108 ரன்னிலும், புஜாரா 58 ரன்னிலும், ரகானே 59 ரன்னிலும், ஜடேஜா 91 ரன்னிலும் அவுட்டாகினர். விராட் கோலி இரட்டை சதமடித்து 254 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.
இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்துள்ள நிலையில் தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், மகராஜ், முத்துசாமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது. 3-வது நாள் ஆட்டத்தில் 162 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.
9-வது விக்கெட்டுக்கு பிலாண்டர் உடன் மகாராஜ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவின் பந்து வீச்சாளர்களை மிகப்பெரிய அளவில் சோதித்தது. மகாராஜ் அரைசதம் அடித்தார். பிலாண்டர் பந்துகளை தடுத்தாடுவதில் முனைப்பு காட்டினார். இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 42.1 ஓவர்கள் விளையாடி 109 ரன்கள் குவித்தது. இறுதியில்தென் ஆப்பிரிக்கா 275 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
இந்திய அணி சார்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டுக்களும், முகமது ஷமி 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.
இந்நிலையில், 4ம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. 326 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இந்தியா தென் ஆப்பிரிக்காவுக்கு முதல் முறையாக பாலோ ஆன் வழங்கியது.
இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்கிராமும், டீன் எல்கரும் களமிறங்கினர். ஆட்டத்தின் 2வது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் மார்கிராமை அவுட்டாக்கினார் இஷாந்த் சர்மா. அடுத்து வந்த டு புருயின் 8 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து டு பிளசிஸ் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் நிதானமாக ஆடிய எல்கர் 48 ரன்னில் அவுட்டானார்.
இதையடுத்து, 4-ம் நாள் உணவு இடைவேளை வரை தென் ஆப்பிரிக்காவு 4 விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.
இந்தியா சார்பில் அஷ்வின் 2 விக்கெட்டும், இஷாந்த், உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான பார்படாஸ் அணி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
வெஸ்ட் இண்டீஸில் கடந்த ஒரு மாத காலமாக கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. அதில் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான பார்படாஸ் டிரைடண்ட்ஸ் அணியும், சோயப் மாலிக் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற பார்படாஸ் அணி கேப்டன் ஹோல்டர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி பார்படாஸ் அணியின் ஜேசன் சார்லஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
சார்லஸ் 39 ரன்னிலும், ஹேல்ஸ் 28 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
இறுதியில், அதிரடியாக ஆடிய ஜோனாதன் கார்டர் அரை சதமடித்தார். அவர் 52 ரன்னுடனும், ஆஷ்லே நர்ஸ் 19 ரன்னுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர்.
இறுதியில், பார்படாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கயானா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் மட்டுமே அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
பார்படாஸ் பந்து வீச்சாளர்களின் துல்லிய பந்து வீச்சில் அமேசான் அணியினர் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இறுதியில், அமேசான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் பார்படாஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக கைப்பற்றி அசத்தியது.
பார்படாஸ் அணியில் அரை சதமடித்த ஜோனாதன் கார்டர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். அந்த அணியின் ஹெய்ட்ன் வால்ஷ் தொடர் நாயகன் விருது பெற்றார்.
7வது புரோ கபடி லீக் தொடரில் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
7-வது புரோ கபடி லீக் போட்டியில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து நாளை அரையிறுதிக்கான பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன.
இந்நிலையில், இந்த போட்டியில் வாகை சூடும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை பற்றிய விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.3 கோடி பரிசாக கிடைக்கும். இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூ.1.8 கோடியும், 3-வது, 4-வது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.90 லட்சமும், 5-வது, 6-வது இடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ.45 லட்சமும் பரிசாக வழங்கப்படும். மேலும், தனிநபர் சிறப்பு பரிசுகளும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான் விரக்தியடையமாட்டேன், மகிழ்ச்சியாகவே மீண்டும் மீண்டும் பந்து வீச விரும்புவேன் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புனேயில் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் மளமளவென விக்கெட்டுக்களை இழந்தாலும் 9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிலாண்டர், மகாராஜ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுமார் 40 ஓவர்களுக்கு மேல் சந்தித்த இந்த ஜோடி 100 ரன்கள் குவித்தது.
இறுதியில் அஸ்வின் இந்த ஜோடியை பிரித்தார். முதல் இன்னிங்சில் 28.4 ஓவர்கள் வீசி 69 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
இந்திய பந்து வீச்சாளர்களின் பொறுமையை இந்த ஜோடி சோதித்தாலும், நான் விரக்தியடையவில்லை. மீண்டும் பந்து வீசுவது எனக்கு மகிழ்ச்சி என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘நான் பந்து வீசும்போது விரக்தியடைந்ததே கிடையாது. விரக்தி என்பதை நான் விரும்பியதே இல்லை. அதைக் காட்டிலும் மீண்டும் பந்து வீசவே விரும்புவேன். மீண்டும் மீண்டும் யார் பேட்டிங் செய்ய வந்தாலும், நான் மீண்டும் பந்து வீச மகிழ்ச்சியாக இருப்பேன்.
கடைநிலை பேட்ஸ்மேன்கள் என்று மிகைப்படுத்தி பேசுகிறார்கள். யாராவது ஒருவர் சிறப்பாக பேட்டிங் செய்தால், அவர் சிறப்பாக பேட்டிங் செய்பவர். தற்போதைய நாளில், யாருமே மோசமாக பேட்டிங் செய்பவர் அல்ல. நம்முடைய அணியில் 11-வது வீரர் வரை சிறப்பாக பேட்டிங் செய்கிறார்கள்.
சிறந்த ஆடுகளத்தில் பிலாண்டர் சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடியவர். சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவருடைய தடுப்பாட்ட நுட்பம் சிறப்பாக உள்ளது. இந்திய அணி பாலோ-ஆன் கொடுக்கும் என்று நான் நினைக்கவில்லை. எங்கள் அணி கேப்டன் இதுகுறித்து முடிவு செய்வார்’’ என்றார்.

பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் ஜமுனா போரா,லாவ்லினா ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
உலன் உடே:
11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இன்று நடந்த 48 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி, தாய்லாந்து வீராங்கனை சுதாமத் ரக்சத்துடன் மோதினார்.
54 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜமுனா போரோ, ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சீன தைபேயின் ஹூயாங் ஹியோ வென்னை சந்தித்தார்.
இதில் 5-0 என்ற கணக்கில் சீன தைபே வீராங்கனை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதையடுத்து, ஜமுனா போரா வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதேபோல், மற்றொரு அரையிறுதியில் 69 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன், சீனாவின் யாங் லியை எதிர்கொண்டார்.
இதில் 3-2 என்ற கணக்கில் சீன வீராங்கனை வென்று இறுதிக்கு முன்னேறினார். இதனால் லாவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலம் வென்றார்.
பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் 4 பேர் அரையிறுதியில் போட்டியிட்டனர். இதில் மஞ்சு ராணி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மேரி கோம், ஜமுனா போரா, லாவ்லினா போர்கோஹெய்ன் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனான ஆர். பிரக்ஞானந்தா இளையோருக்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
மும்பையில் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரக்ஞானந்தா 18 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்டான்.
பிரக்ஞானந்தா ஜெர்மனியைச் சேர்ந்த வாலன்டின் பக்கெல்ஸை எதிர்கொண்டார். 11-வது மற்றும் கடைசி சுற்றை டிரா செய்த நேரத்தில், அர்மேனியாவைச் சேர்ந்த ஷன்ட் சர்க்சியானை எதிர்த்து அர்ஜுன் கல்யாண் டிரா செய்ததால் பிரக்ஞானந்தா 9 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றார்.
18 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் ரஷ்ய வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றார். இந்தியாவைச் சேர்ந்த வங்கிதா அகர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

உடற்தகுதியில் அக்கறை காட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மல்யுத்தத்திற்கு தயாராகி வருகிறார்கள் என முன்னாள் வீரர் அமிர் சோஹைல் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி பாகிஸ்தான் சென்று மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது. ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2-0 எனக் கைப்பற்றியது.
ஆனால் டி20 கிரிக்கெட் போட்டியில் நம்பர் ஒன் அணியான பாகிஸ்தானை 3-0 என துவம்சம் செய்தது இலங்கை அணி. சமீப காலமாக உடற்தகுதிக்கு முக்கியத்தும் கொடுக்கும் பாகிஸ்தான் அணியை முன்னாள் தொடக்க வீரர் அமிர் சோஹைல் கடுமையான சாடியுள்ளார்.
இதுகுறித்து அமிர் சோஹைல் கூறுகையில் ‘‘பாகிஸ்தான் கிரிக்கெட் தற்போதைய நாட்களில் உடற்தகுதி மீதுதான் கவனம் செலுத்துகிறது. நாம் கிரிக்கெட்டிற்கு வீரர்களை தயார் படுத்துவகை காட்டிலும், ஒலிம்பிக் அல்லது WWE Wrestling போட்டிக்கு அதிக அளவில் தயாராக்குகிறோம் என்பதை இது காட்டுகிறது’’ என்றார்.