search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன் பட்டம் வென்ற பார்படாஸ் அணி
    X
    சாம்பியன் பட்டம் வென்ற பார்படாஸ் அணி

    கரீபியன் பிரீமியர் லீக்: ஜேசன் ஹோல்டர் தலைமையிலான பார்படாஸ் அணி சாம்பியன்

    கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான பார்படாஸ் அணி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
    வெஸ்ட் இண்டீஸில் கடந்த ஒரு மாத காலமாக கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. அதில் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான பார்படாஸ் டிரைடண்ட்ஸ் அணியும், சோயப் மாலிக் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் மோதின.

    டாஸ் வென்ற பார்படாஸ் அணி கேப்டன் ஹோல்டர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி பார்படாஸ் அணியின் ஜேசன் சார்லஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    சார்லஸ் 39 ரன்னிலும், ஹேல்ஸ் 28 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில், அதிரடியாக ஆடிய ஜோனாதன் கார்டர் அரை சதமடித்தார். அவர் 52 ரன்னுடனும், ஆஷ்லே நர்ஸ் 19 ரன்னுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர்.

    இறுதியில், பார்படாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கயானா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் மட்டுமே அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    பார்படாஸ் பந்து வீச்சாளர்களின் துல்லிய பந்து வீச்சில் அமேசான் அணியினர் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
     
    இறுதியில், அமேசான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் பார்படாஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக கைப்பற்றி அசத்தியது.

    பார்படாஸ் அணியில் அரை சதமடித்த ஜோனாதன் கார்டர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். அந்த அணியின் ஹெய்ட்ன் வால்ஷ் தொடர் நாயகன் விருது பெற்றார்.
    Next Story
    ×