என் மலர்
விளையாட்டு
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்தூர்:
இந்தியா-வங்காளதேச அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. இந்த போட்டிக்னாடாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. வங்காளதேச அணியில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள மொமினுல் ஹக், டாஸ் வென்றதுடன், முதலில் பேட்டிங் செய்யும் முடிவை தைரியமாக எடுத்துள்ளார்.
துவக்க வீரர்களாக ஷத்மான் இஸ்லாம், இம்ருல் கயீஸ் ஆகியோர் களமிறங்கினர். மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கி உள்ளது.

இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா, அகர்வால், புஜாரா, கோலி, ரகானே, ஜடேஜா, சகா, அஷ்வின், ஷமி, யாதவ், இஷாந்த்.

வங்காளதேச அணி: இம்ருல் கயீஸ், ஷத்மான், மிதுன், மொமினுல் ஹக், முஷ்பிகுர், மஹ்முதுல்லா, லித்தன், மெகிடி, தாய்ஜூல், அபு ஜாயேத், எபடாட்.
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய் சீன வீரரை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய், சீன வீரர் ஹுவாங் யு சியாங்- ஐ எதிர்கொண்டார்.
இதில் பிரனோய் முதல் செட்டை 21-17 எனவும், 2-வது செட்டை 21-17 எனவும் கைப்பற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இவர் 44 நிமிடங்களில் இரு செட்களை கைப்பற்றினார்.
ஷாகிப் அல் ஹசன் இல்லாதது இரண்டு வீரர்களை இழந்ததற்கு சமம் என வங்காளதேச அணி கேப்டன் மொமினுல் ஹக்யூ தெரிவித்துள்ளார்.
இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நாளை தொடங்குகிறது. வங்காளதேச அணியில் ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பால் ஆகியோர் கிடையாது. இருவரும் அணியில் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்.
ஷாகிப் ஹசன் இல்லாததால் மொமினுல் ஹக்யூ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைய முதல் டெஸ்ட் குறித்து மொமினுல் ஹக்யூ கூறுகையில் ‘‘மூன்று வீரர்களை இழப்பதாக நான் நினைக்கிறேன். ஏனென்றால் ஷாகிப் அல் ஹசன் இரண்டு வீரர்களுக்கு சமமானவர். அவர் இல்லாதது சவாலானதாக இருக்கும். இருந்தாலும், அதைப்பற்றி மிகப்பெரிய அளவில் சிந்திக்க வேண்டியதில்லை’’ என்றார்.

நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டிரென்ட் போல்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ்-க்கு மாறியுள்ளார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் எப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்று வருகிறது. 2020 தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் கொல்கத்தாவில் நடக்கிறது.
இந்த ஏலத்திற்கு முன் 8 அணிகளும் தங்களுடைய வீரர்களை மற்ற அணிகளுக்கு விற்றுக் கொள்ளலாம். மற்ற அணிகளிடம் இருந்து வீரர்களை வாங்கிக் கொள்ளலாம். இரண்டும் இல்லை என்றால், வீரர்களை விடுவிக்கலாம். இதற்கான காலக்கெடும் நாளையுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய டிரென்ட் போல்ட்-ஐ மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. போல்ட் 2014 ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆனார். டெல்லி அணிக்காக 2018 மற்ம் 2019 சீசனில் விளையாடினார்.
டெல்லி அணியில் ரபாடா விளையாடியதால், டிரென்ட் போல்டால் ஆடும் லெவன் அணியில் நிலையாக இடம் பிடிக்க முடியவில்லை. 2019 சீசனில் ஐந்து போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரில் 33 போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார்.
அதேபோல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த ராஜ்பூட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாறியுள்ளது. இவர் 2018 சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 14 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக அளவில் வாய்ப்புகள் கிடைக்காத போதிலும், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக ஷுப்மான் கில் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேன் ஷுப்மான் கில். நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். இரண்டிலும் 9 மற்றும் 7 ரன்கள் என விரைவில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் அணியில் இடம் கிடைக்கவில்லை. உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால், ஆடும் லெவனில் விளையாடவில்லை.
அணியில் இடம் கிடைக்காவிடிலும், எனது கிரிக்கெட் வாழ்க்கை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று ஷுப்மான் கில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஷுப்மான் கில் கூறுகையில் ‘‘என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக நினைக்கிறேன். அனைத்து தொடர்களிலும் என்னுடைய ஆட்டத்தில் வேகம் காட்டி, கடின உழைப்பின் மூலம் ரன்கள் அடிக்க முயற்சி செய்கிறேன்.
டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ரிசர்வ் வீரராக இருப்பதால் நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. உலகின் சிறந்த அணியிடம் இருந்து கற்றுக் கொண்டு வருகிறேன். இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. இதனால் எனக்கு சிறந்த பாடமாக அமைந்தது.
தொடக்க வீரராக களம் இறங்கும் ரோகித் சர்மாவின் பேட்டிங் டெக்னிக் உண்மையிலேயே மாறவில்லை. அவர் எப்படி ரன்கள் குவிக்கிறார் என்பது எல்லாம் மனநிலையில் கவனம் செலுத்துவதை பொறுத்துதான் அமைகிறது ’’ என்றார்.

இங்கிலாந்து தொடரின்போது 2014-ல் எனக்கும் மன அழுத்தம் ஏற்பட்டது. அப்போது உலகம் அழிந்து விட்டதாக உணர்ந்தேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல். பாகிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடினார். அப்போது மனஅழுத்தம் (mental health issues) காரணமாக கிரிக்கெட் இருந்து சிறிது காலம் தள்ளி இருக்கப் போவதாக அறிவித்தார்.
ஆஸ்திரேலிய அணியின் நிர்வாகத்திற்கு இந்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும், மேக்ஸ்வெல்லின் நிலையை புரிந்து கொண்டு சம்மதம் தெரிவித்தது.
மேக்ஸ்வெல் மனஅழுத்தத்தை அடுத்தவரிடம் எடுத்துக் கூறியது குறிப்பிடத்தகுந்த நிகழ்வு. எனக்கும் 2014-ல் இதுபோன்று நடந்தது. அப்போது என்னுடைய கிரிக்கெட் உலகம் அழிந்து விட்டதாக உணர்ந்தேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கு, அணியில் உள்ள வீரர்களுக்கு இடையிலான கம்யூனிகேசன் (பேசும் திறன்) அவசியம் என்பது எல்லோருக்கும் தெரியும். மேக்ஸ்வெல் தற்போது மனஅழுத்தம் குறித்து பேசியது குறிப்பிடத்தகுந்த நிகழ்வாகும்.
2014 இங்கிலாந்து தொடரின்போது எனக்கும் இதுபோன்ற நிலை ஏற்பட்டது. அப்போது என்னுடைய கிரிக்கெட் உலகம் அழிந்து விட்டதாக உணர்ந்தேன். ஆனால், என்ன செய்ய வேண்டும், இதுகுறித்து யாரிடம் சொல்ல வேண்டும் என்பது குறித்து ஏதும் தெரியவில்லை.
கிரிக்கெட் உலகில் மேக்ஸ்வெல் சிறந்த உதாரணத்தை ஏற்படுத்திவிட்டார். உங்கள் மனதை தெளிவாக வைத்திருக்கவில்லை என்றால், நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்வீர்கள். ஆனால், மனிதர்களாகிய உங்களுக்கு நில நேரங்களில் ஆலோசனைகள் அல்லது போதுமான நேரங்கள் தேவை’’ என்றார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான 3-வது ஒருநாள் போட்டியில் பந்தை சேதப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர் பூரனுக்கு ஐசிசி தடை விதித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் பீல்டிங் செய்த போது, நிக்கோலஸ் பூரன் பந்தை பளபளப்பாக்க தொடைப்பகுதியில் தேய்த்தார். அப்போது கை பெருவிரலால் பந்தின் மேற்பகுதியை சேதப்படுத்தினார்.
இது கேமராவில் தெள்ளத்தெளிவாக தெரிந்தது. இதனால் பந்தை சேதப்படுத்தியதாக அவர் மீது நடுவர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து விசாரணை நடத்திய நடுவர்கள் அவருக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடைவிதித்துள்ளது. இதனால் அடுத்த நான்கு டி20 போட்டிகளில் அவர்களால் விளையாட இயலாது.

இந்திய மண்ணில் 250 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனைக்கு அஸ்வினுக்கு இன்னும் ஒரு விக்கெட்டுதான் தேவை.
இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். இந்திய மண்ணில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நாளை தொடங்குகிறது. இதில் ஒரு விக்கெட் வீழ்த்தினால் இந்திய மண்ணில் 250 விக்கெட்டுக்கள் வீழ்த்திய 3-வது வீரர் என்ற பெருமையை பெறுவார்.
இதற்கு முன் அனில் கும்ப்ளே (350), ஹர்பஜன் சிங் (265) ஆகியோர் இந்திய மண்ணில் 250 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளனர். வங்காளதேசம் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் அஸ்வின் இவர்களுடன் இணைய இருக்கிறார்.

இந்தியாவில் 2001-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங் மாயாஜால பந்து வீச்சால் எங்களை துவம்சம் செய்துவிட்டார் என கில்கிறிஸ்ட் நினைவு கூர்ந்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் கடந்த 2001-ம் ஆண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. மும்பையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியுடன் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக 16 வெற்றிகள் பெற்று சாதனைப் படைத்திருந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்து தத்தளித்து கொண்டிருந்தது.
அதன்பின் வந்த ஆடம் கில்கிறிஸ்ட் அதிரடியாக விளையாடி 80 பந்தில் சதம் அடித்தார். இவரது சதத்தால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதே சிந்தனையோடு சென்ற ஆஸ்திரேலியா, அடுத்த இரண்டு போட்டிகளிலும் ஹர்பஜன் சிங் சுழலில் சிக்கி படுதோல்வியடைந்தது. ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது.
இந்த டெஸ்ட் தொடருக்குப்பின் நாங்கள் எங்களது அணுகு முறையையே மாற்றிவிட்டோம் என ஆடம் கில்கிறிஸ்ட் நினைவு கூர்ந்துள்ளார்.
2001 தொடர் குறித்து கில்கிறிஸ்ட் கூறுகையில் ‘‘மும்பை டெஸ்டிற்குப் பிறகு நாங்கள் அட்டக்... அட்டக்... அட்டக்.. என்ற அணுமுறையில் சென்றோம். ஆனால், அது சரியாக ஒர்க்-அவுட் ஆகவில்லை. ஹர்பஜன் சிங் மாயாஜால பந்து வீச்சால் எங்களை அவர் ஏமாற்றி விட்டார்.
அதில் இருந்து எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் அவர் பழிக்குப்பழி வகையிலேயே திகழ்ந்தார். நான் சந்தித்ததி்லேயே ஹர்பஜன் சிங் மற்றும் முரளீதரன் ஆகியோர்தான் கடினமான பந்து வீச்சாளர்கள்.
இந்தத் தொடருக்குப்பின் நாங்கள் எங்களுடைய யுக்தியை மாற்றிக் கொண்டோம். 2001 தொடரில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அட்டாக் ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது என்பதை தெரிந்து கொண்டோம். எங்களுடைய ஈகோவை ஒழித்துவிட கற்றுக் கொண்டோம்.’’ என்றார்.

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தென் கொரியா வீராங்கனையை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தென் கொரியாவைச் சேர்ந்த கிம் கா யூன்-ஐ எதிர்கொண்டார்.
முதல் செட்டை 21-15 எனவும், 2-வது செட்டை 21-16 எனவும் கைப்பற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். முதல் செட்டை 18 நிமிடங்களில் கைப்பற்றினார்.
மற்றொரு வீராங்கனையான சாய்னா நேவால் சீனாவைச் சேர்ந்த காய் யான் யானிடம் 13-21, 20-22 என வீழ்ந்தார்.

இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டி கண்ணோட்டம் பற்றி சில தகவல்களை காண்போம்.
இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையே 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டாக்காவில் முதல் முறையாக டெஸ்ட் நடைபெற்றது. இதில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகள் இடையே 6 டெஸ்ட் தொடர் நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா 5 முறை தொடரை கைப்பற்றியது. ஒரு தடவை ‘டிரா’ ஆனது. இதுவரை இரு அணிகளும் 9 டெஸ்டில் விளையாடி உள்ளன. இதில் இந்தியா 7-ல் வெற்றி பெற்றது. 2 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.
இந்திய அணி 2017-ம் ஆண்டு ஐதராபாத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 687 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோர் ஆகும். வங்காளதேசம் அதிகபட்சமாக 400 ரன் (டாக்கா, 2000) குவித்து இருந்தது.
இந்திய அணி 2010-ம் ஆண்டில் 243 ரன்னில் ஆல் அவுட் ஆனது குறைந்த பட்ச ஸ்கோர் ஆகும். வங்காளதேசம் 91 ரன்னில் (2000 ஆண்டு) சுருண்டு இருந்தது.
தெண்டுல்கர் 9 இன்னிங்சில் 5 சதத்துடன் 820 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அதிகபட்சமாக 248 ரன் குவித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ராகுல் டிராவிட் 3 சதத்துடன் 560 ரன் எடுத்துள்ளளர்.
வேகப்பந்து வீரர் ஜாகீர்கான் 14 இன்னிங்சில் 31 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். 87 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சு ஆகும். இர்பான் பதான் 18 விக்கெட்டும், கும்பளே 15 விக்கெட்டும் எடுத்துள்ளனர். இர்பான் பதான் ஒரு டெஸ்டில் அதிகபட்சமாக 96 ரன் கொடுத்து 11 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வரும் இந்திய வீரர் ரகானே ஒரு நாள் போட்டிக்கும் திரும்புவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தூர்:
20 ஓவர் கிரிக்கெட் நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்து இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நாளை (காலை 9.30 மணி) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். 2-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவாக நடத்தப்படுவதால் அதை கருத்தில் கொண்டு பயிற்சியின் போது இளஞ்சிவப்பு நிற பந்தும் (பிங்க்) பயன்படுத்தப்பட்டது. மேலும் வலை பயிற்சி பவுலர்களான ராகவேந்திரா, இலங்கையின் நுவான் செனவிரத்னே ஆகியோர் பந்தை வேகமாக எறிய அதை கேப்டன் கோலி உள்ளிட்டோர் எதிர்கொண்டு பயிற்சி எடுத்தனர். மாற்று தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் மீது எகிறி வந்த ஒரு பந்து தாக்கியது. ஆனால் காயம் பயப்படும்படி இல்லை.
பகல்-இரவு டெஸ்டுக்கு போதிய காலஅவகாசம் இல்லாததால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டின் பேரில் அஜிங்யா ரகானே, மயங்க் அகர்வால், புஜாரா, முகமது ஷமி ஆகிய இந்திய வீரர்கள் சமீபத்தில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ராகுல் டிராவிட்டின் மேற்பார்வையில் மின்னொளியில், பிங்க் பந்தில் தீவிர பயிற்சி பெற்றனர்.
இது குறித்து இந்திய துணை கேப்டன் 31 வயதான அஜிங்யா ரகானே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய ஒரு நாள் போட்டி அணிக்கு மீண்டும் திரும்ப முடியுமா? என்று கேட்கிறீர்கள். நான் டெஸ்ட் போட்டிகளில் நன்றாக விளையாட வேண்டியது அவசியம். டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து ரன்கள் குவித்து சிறந்த பங்களிப்பை அளித்தால், அதன் மூலம் ஒரு நாள் போட்டிக்கு (கடைசியாக 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் ஒரு நாள் போட்டியில் ஆடியிருந்தார்) திரும்ப முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். எல்லாமே தன்னம்பிக்கையில் தான் இருக்கிறது.
வங்காளதேசம், மிகச்சிறந்த அணி. ஒரு குழுவாக ஒருங்கிணைந்து விளையாடுகிறார்கள். எதிரணி பற்றி அதிகம் சிந்திப்பதை விட எங்களது பலம் என்னவோ அதில் கவனம் செலுத்துகிறோம். இந்த தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும்.
முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருப்பது பரவசமூட்டுகிறது. இது புதிய சவாலாகும். பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பிங்க் பந்தில் பகலிலும், இரவிலும் பயிற்சி பெற்றபோது, பந்து எப்படி ஸ்விங் ஆகிறது, ஆடுகளத்தில் பட்டு எப்படி திரும்புகிறது அதை எப்படி திறம்பட சமாளிப்பது என்பதில் கவனம் செலுத்தினோம். சிவப்பு நிற பந்தை விட புதிய பிங்க் பந்து அதிகமாக ஸ்விங் ஆகும் என்பதை பயிற்சிக்கு பிறகு கண்டுபிடித்தோம். நிச்சயம் இது சிவப்பு நிற பந்து ஆட்டத்தில் இருந்து வேறு பட்டது தான். அதற்கு ஏற்ப எங்களது வீரர்கள் தங்களை சீக்கிரமாகவே மாற்றிக்கொள்வார்கள். மூன்று வடிவிலான கிரிக்கெட்டையும் நாங்கள் விளையாடி பழக்கப்பட்டவர்கள்.
மனநிலையும், தொழில்நுட்பமும் தான் இதில் முக்கிய பங்கு வகிக்கும். மனரீதியாக நம்மை தயார்படுத்திக் கொண்டால், பிங்க் பந்தை எதிர்கொள்வதில் கஷ்டம் இருக்காது. அது மட்டுமின்றி இத்தகைய சூழலில் பந்தை சற்று தாமதமாக அதாவது உடல் அருகே பந்தை வரவிட்டு ஆடுவதும், பேட்டை உடலோடு நெருக்கமாக கொண்டு வந்து பந்தை அடிப்பதும் முக்கிய அம்சமாக இருக்கும். கொல்கத்தாவில் இரவில் பயிற்சியில் ஈடுபடும் போது, பனிப்பொழிவின் தாக்கத்தில் பந்தின் தன்மை எப்படி மாறும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு ரகானே கூறினார்.
மற்றொரு இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் புஜாரா அளித்த பேட்டியில், ‘துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது எனக்கு பிங்க் பந்தில் விளையாடிய அனுபவம் உண்டு. பிங்க் பந்தை பகலில் பார்ப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் சூரியன் மறையும் சமயத்தில் ஒரு முனையில் பந்தை எதிர்கொள்வதில் கொஞ்சம் சிரமம் ஏற்படலாம். இந்த பகுதி தான் முக்கியமானதாக இருக்கும். பெரும்பாலான வீரர்கள், மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி பவுலிங் செய்யும் சுழற்பந்து வீச்சாளர்களின் கூக்ளி வகை பந்தை சந்திப்பது சற்று சவாலாக இருக்கும் என்று கூறியுள்ளனர்’ என்றார்.