என் மலர்
விளையாட்டு
சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரில் சிறந்த பேட்ஸ்மேனாக யாரை தேர்வு செய்வீர்கள் என்ற யுவராஜ்சிங் கேள்விக்கு பும்ரா பதில் அளித்தார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் 26 வயதான ஜஸ்பிரித் பும்ரா, முன்னாள் வீரர் யுவராஜ்சிங்குடன் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் நேரடியாக கலந்துரையாடினார். அப்போது, கேள்விகளுக்கு அதிவேகமாக பதில் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் யுவராஜ்சிங் தொடுத்த கேள்விகளும், அதற்கு பும்ரா திக்கித் திணறி அளித்த பதில்களும் வருமாறு:-
யுவராஜ்: விராட் கோலி (இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்), இப்ராகிமோவிச் (சுவீடன் கால்பந்து வீரர்) ஆகியோரில் உங்களது உடல்தகுதி முன்மாதிரி (ரோல் மாடல்) யார்?
பும்ரா: இப்ராகிமோவிச். அவர் எனது உடல்தகுதி முன்மாதிரி மட்டும் அல்ல. பொதுவாகவே அவரை எனது முன்மாதிரியாக வைத்திருக்கிறேன்.
யுவராஜ்: சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரில் சிறந்த பேட்ஸ்மேனாக யாரை நினைக்கிறீர்கள்?
பும்ரா: இங்க பாருங்க யுவி....நான் வெறும் 4 ஆண்டுகள் தான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். அவர்களில் யார் சிறந்தவர் என்பதை கணிக்கும் அளவுக்கு எனக்கு போதுமான அனுபவம் கிடையாது. விராட்-தெண்டுல்கர் அல்லது சச்சின்-கோலி. இந்த கேள்விக்கு பதில் அளிக்கக்கூடிய நிலையில் நான் இல்லை. ஏனெனில் அவர்கள் என்னை விட மிக அதிக சர்வதேச போட்டிகளை விளையாடி இருக்கிறார்கள்.
யுவராஜ்: நான் உனது (பும்ரா) சுயசரிதையை இங்கு கேட்கவில்லை. உனக்கு உரையாடலின் விதிமுறையை தெளிவாக சொல்லி இருக்கிறேன். ஒவ்வொரு கேள்விக்கும் 5 வினாடிகளுக்குள் பதில் சொல்ல வேண்டும். எனக்கு தெளிவான பதில் தேவை. அவர்களில் உனக்கு பிடித்தமானவர் யார்?
பும்ரா: எனக்கு எல்லோரும் சமம் தான். உங்கள் அனைவர் மீதும் ஒரே மாதிரியான மதிப்பு, மரியாதை வைத்திருக்கிறேன். நீங்கள் அடுத்த கேள்வியை கேளுங்கள்?
(ஆனாலும் யுவராசிங் தொடர்ந்து கிடுக்குபிடி போட்டதால் இந்த கேள்விக்கு பும்ரா மழுப்பலாக பதில் அளித்தார்.)
பும்ரா: தெண்டுல்கருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கோலியும் அவரது ரசிகர் தான். அதனால் தெண்டுல்கரை தேர்வு செய்கிறேன்.
யுவராஜ்: சுழற்பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன்சிங், அஸ்வின் ஆகியோரில் சிறந்த ஆப்-ஸ்பின்னர் யார்?
பும்ரா: ஏன் இப்படி சர்ச்சைக்குரிய கேள்விகளாக கேட்கிறீர்கள். நான் அஸ்வினுடன் இணைந்து விளையாடி இருக்கிறேன். ஹர்பஜன்சிங்கின் பந்து வீச்சை சிறுவயதில் இருந்தே பார்த்து உள்ளேன். எனது தேர்வு ஹர்பஜன்சிங்.
யுவராஜ்: டோனி அல்லது யுவராஜ்சிங் ஆகியோரில் பிடித்த மிடில் வரிசை பேட்ஸ்மேன் யார்?
பும்ரா: ஏன் இப்படி.....அப்பா, அம்மா ஆகிய இருவரில் யாரை பிடிக்கும் என கேட்பது போல் உள்ளது. இந்திய அணிக்காக நீங்களும், டோனியும் இணைந்து வெற்றியை தேடித்தந்த ஆட்டங்களை பார்த்து வளர்ந்தவன் நான். ஏன் இந்த மாதிரியான கேள்விகளை எல்லாம் கேட்கிறீர்கள். நீங்கள் இங்கே குறிப்பிட்ட அனைத்து வீரர்களும் எனக்கு பிடித்தமானவர்கள் தான். இருவரில் ஒருவரை என்னால் தேர்வு செய்ய முடியாது. இளம் வயதில் நான் உங்கள் இருவரின் ரசிகன்.
இவ்வாறு உரையாடல் நடந்தது.
உரையாடலின் போது பும்ராவை வெகுவாக பாராட்டிய யுவராஜ்சிங், ‘உலகின் நம்பர் ஒன் பந்து வீச்சாளர் நீ என்று நம்ப வேண்டிய அவசியம். உன்னை பற்றி வெளியில் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி கவலைப்படாதே. மூன்று வடிவிலான போட்டிகளிலும் நம்பர் ஒன் பந்து வீச்சாளர் அஸ்தஸ்தை எட்டுவதற்குரிய திறமை உன்னிடம் இருக்கிறது. அடுத்த 2 ஆண்டுகள் நம்பர் ஒன் பவுலராக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அணியில் இப்போது நீ பக்குவமடைந்த ஒரு பவுலர். பழகுவதில் இனிமையான வீரர்களில் ஒருவர்’ என்றார்.

ஊழல் தடுப்புக்குழுவின் விசாரணை அடிப்படையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு மூன்று ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் உமர் அக்மல். சிறப்பாக விளையாடிய போதிலும் கிரிக்கெட் போர்டு உடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக் விளையாட இருந்தார். இவர் இடம் பிடித்திருந்த குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி முதல் போட்டியில் வியைாடுவதற்கு முன் ஊழல் குற்றச்சாட்டில் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி பாசல்-இ-மிரான் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. அதனடிப்படையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அவருக்கு மூன்று ஆண்டுகள் தடைவிதித்துள்ளது. இதனால் அவரால் மூன்று ஆண்டுகள் எந்த வகையான கிரிக்கெட்டிலும் விளையாட முடியாது.
29 வயதாகும் உமர் அக்மல் பாகிஸ்தான் அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளிலும், 121 ஒருநாள் போட்டிகளிலும், 84 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
எம்எஸ் டோனியுடன் ஒப்பிட்டு பார்ப்பதுதான் ஒரே பிரச்சனை என்று விக்கெட் கீப்பராக பணியாற்றும் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்த எம்எஸ் டோனிக்கு பதில் மாற்று விக்கெட் கீப்பரை இந்திய அணி நிர்வாகம் தேடிவருகிறது. இளம் வீரரான ரிஷப் பண்ட்-ஐ தயார் படுத்தியது. ஆனால் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பணியில் சொதப்பியதால் இந்தியா விளையாடிய கடைசி இரண்டு மூன்று தொடர்களில் கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராக களம் இறக்கியது.
அவர் சிறப்பாக பேட்டிங் செய்வதுடன் விக்கெட் கீப்பர் பணியையும் நன்றாக செய்து வருகிறார். இதனால் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் அவரை விக்கெட் கீப்பராக செயல்பட வைக்க இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
எம்எஸ் டோனிக்கு அடுத்து யார் விக்கெட் கீப்பராக செயல்பட்டாலும், விக்கெட் கீப்பிங் பணியில் பந்தை தவற விட்டால், இவரால் எம்எஸ் டோனி ஆக இயலாது என்று ரசிகர்கள் ஒப்பிட ஆரம்பித்து விடுகிறார்கள். இதுதான் பிரச்சனை என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேஎல் ராகுல் கூறுகையில் ‘‘கிரிக்கெட் போட்டிகளை பார்க்கும் ரசிகர்களுக்கு நான் நீண்ட காலமாக விக்கெட் கீப்பர் பணியில் இருந்து விலகி இருக்கவில்லை என்பது தெரியும். ஐபிஎல் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக பணியாற்றியுள்ளேன். கர்நாடகா அணிக்காக விளையாடிய போதெல்லாம் விக்கெட் கீப்பிங் பணியை செய்துள்ளேன்.
நான் எப்போதும் விக்கெட் கீப்பர் பணியில் என்னை தொடர்பு படுத்திக் கொண்டுதான் இருக்கிறேன். என்னைப் போன்ற ஒருவர் அணிக்கு தேவை என்று நிர்வாகம் நினைத்தால் அதற்கு நான் தயாராக .இருக்கிறேன் என்பதை எப்போதுமே சொல்லி வருகிறேன்.

இந்திய அணிக்காக நான் விக்கெட் கீப்பராக பணியாற்றும்போது சற்று பதற்றம் அடைவேன். ஏனென்றால் ரசிகர்களிடம் இருந்து நெருக்கடி ஏற்படும். நான் ஒரு பந்தை தவறவிட்டால் கூட, ரசிர்கள் இவர் எம்எஸ் டோனிக்கு மாற்று வீரராக முடியாது என்று உணர்கிறார்கள். எம்எஸ் டோனி போன்ற ஜாம்பவான் வீரர்களுக்கு மாற்று நபராக வரும்போது அவர்களுக்கு நெருக்கடி இருக்கும் என்பதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
நான் விளையாடிய காலத்தில் இந்தியாவை அடிக்கடி தோற்கடித்திருக்கிறோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்னாள் கிரிக்கெட் வீரர். பாகிஸ்தான் அணியை திறமையாக வழிநடத்திச் சென்று உலக கோப்பையை வென்று கொடுத்தவர்.
அவர் விளையாடிய காலத்தில் இந்திய அணியை அடிக்கடி வீழ்த்தியிருக்கிறோம் என்று பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இம்ரான் கான் நினைவு கூர்ந்துள்ளார்.
இதுகுறித்து இம்ரான் கான் கூறுகையில் ‘‘எங்களுடைய காலத்தில், இந்திய அணிக்காக நான் வருந்தியிருக்கிறேன். அவர்களுக்கு எதிராக நாங்கள் அடிக்கடி வெற்றி பெற்றிருக்கிறோம். எங்களுக்கு எதிராக விளையாடும்போதெல்லாம் இந்திய அணி வீரர்கள் பதற்றத்துடன் காணப்படுவார்கள்.
இந்திய கேப்டன்களுக்கு எதிராக டாஸ் சுண்ட செல்லும்போது, அவர்கள் முகத்தை பார்ப்பேன். அப்போது அவர்களுடைய முகத்தில் பயம் தெரியும்.
எங்களுக்கு எதிராக விளையாடிய இந்திய அணி தற்போது இருக்கும் அணி போன்றதல்ல. தற்போதுள்ள இந்திய அணி மிகவும் சிறந்த அணியாக உள்ளது. எங்களுடைய காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் தலைசிறந்த அணியாக இருந்தது’’ என்றார்.
இம்ரான் கான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 1971-ல் இருந்து 1992 வரை பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் தற்போதைய காலக்கட்டத்தின் தலைசிறந்த மூன்று பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வீட்டிற்குள்ளேயே இருக்கும் வீரர்கள் லைவ் சாட் மூலம் ஒருவருக்கொருவர் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் நியூசிலாந்து அணி கேப்டனும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேனும் ஆன கேன் வில்லியம்சனுடன் இன்ஸ்டாகிராம் லைவ் செசன் மூலம் கருத்துக்கனை பகிர்ந்து கொண்டார்.
அப்போது டேவிட் வார்னர் ‘‘உங்களை (கேன் வில்லியம்சன்), ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி ஆகியோரை தலைசிறந்த பேட்ஸ்மேனாக தேர்வு செய்வேன்’’ என்றார்.
அதேபோல் கேன் வில்லியம்சன் உலக கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த போது உணர்ச்சிவசப்பட்டது குறித்து கூறுகையில் ‘‘அது மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடிய நேரம். அந்த நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டது சரியானதுதான்’’ என்றார்.
உலகமே கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்து முடங்கியுள்ள நிலையில், தெற்கு பசிபிக் கடலில் உள்ள குட்டித்தீவு கிரிக்கெட் போட்டியை நடத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளில் உள்ள விளையாட்டு போட்டிகள் அனைத்தும் முடங்கியுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து போட்டிகள், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் என அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ள, அமெரிக்காவில் பேஸ்பால் நடைபெறவில்லை.
ஆனால் ஒரு குட்டித்தீவு கிரிக்கெட் போட்டியை நடத்தி லைவ் ஸ்ட்ரீம் மூலம் ஒளிபரப்பி அசத்தியுள்ளது. தெற்கு பசிபிக் கடலில் உள்ள குட்டித்தீவு வனாட்டு. இந்த தீவில் நான்கு அணிகள் பங்கேற்ற பெண்களுக்கான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் ‘ப்ளூ புல்ஸ்’ அணி வெற்றி பெற்றது.
மேலும், ஆண்களுக்கான 10 ஓவர்கள் கொண்ட கண்காட்சி போட்டியையும் நடத்தி அசத்தியுள்ளன. இந்த போட்டிகளை 3 லட்சத்து 50 ஆயிரம் ரசிகர்கள் பார்த்துள்ளனர்.
கிரிக்கெட் போட்டிகள் வனாட்டு தீவின் தலைநகரான போர்ட் விலாவில் நடைபெற்றன. அந்த நாட்டின் ஒளிபரப்பு நிறுவனமான விபிடிசி (VBTC) நான்கு கேமராக்கள் மூலம் போட்டியை முதன்முறையாக நேரடியாக ஒளிபரப்பியது. அத்துடன் வர்ணனையுடன் பேஸ்புக் பக்கத்தில் லைவ் செய்தது.
3 லட்சம் மக்கள் தொகை கொண்ட வனாட்டு தீவில் முன்னெச்சரிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று யாருக்கும் உறுதி செய்யப்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய டெஸ்ட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனான புஜாராவுக்கு பந்து வீசுவது மிகக்கடினம் என்று நம்பர் ஒன் பந்து வீச்சாளர் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விளங்குகிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கேள்வி-பதில் பகுதியில் பங்கேற்ற கம்மின்சிடம், உங்களது அனுபவத்தில் பந்து வீசுவதற்கு கடினமான பேட்ஸ்மேன் யார் என்று கேட்கப்பட்டது.
அதற்கு கம்மின்ஸ் கூறியதாவது:-
எங்களுக்கு கடும் போராட்டம் அளித்த நிறைய பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஆனால் நான் வித்தியாசமான வீரரை தேர்வு செய்கிறேன். இந்தியாவின் புஜாரா கடினமானவர் என்று கருதுகிறேன். கடந்த டெஸ்ட் தொடரில் அவர் எங்களுக்கு உண்மையிலேயே மிகப்பெரிய வலியாக இருந்தார்.
அந்தத் தொடரில் பாறை போன்று நிலைத்து நின்று விளையாடி குடைச்சல் கொடுத்தார். அவரது விக்கெட்டை வீழ்த்துவது மிகவும் சவாலாக அமைந்தது. அவரது மனஉறுதியும், கவனமும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே இருந்தது. இதுவரையிலான எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் பந்து வீசுவதற்கு கடினமான ஒரு பேட்ஸ்மேன் அவர்தான்.
இவ்வாறு கம்மின்ஸ் கூறினார்.
இந்திய அணி கடந்த 2018-19-ம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. அந்த தொடரில் புஜாரா 3 சதம், ஒரு அரைசதம் உள்பட 521 ரன்கள் குவித்து தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட்டின் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசிய போது அவரது தந்தை, எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து விட்டாயே என்று தன்னிடம் புலம்பியதாக யுவராஜ்சிங் கூறியுள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் ஊரடங்கு அமலில் உள்ள இந்த காலக்கட்டத்தில் தனது முந்தைய ருசிகர அனுபவங்களை சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வருகிறார்.
2007-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டின் ஒரே ஓவரில் 6 சிக்சர் நொறுக்கி சரித்திர சாதனை நிகழ்த்தினார். அச்சாதனையை நினைவு கூர்ந்துள்ள யுவராஜ்சிங் கூறியதாவது:-
அந்த ஆட்டத்தில் முந்தைய ஓவரில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பிளின்டாப் என்னை சீண்டி வெறுப்பேற்றினார். அவர் ஏதோ சொல்ல, நானும் சில வார்த்தைகளை உதிர்த்தேன். இதனால் கூடுதல் உத்வேகத்தில் இருந்த நான் ஸ்டூவர்ட் பிராட் வீசிய அடுத்த ஓவரில் 6 பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டு அசத்தினேன். இங்கிலாந்துக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. ஏனெனில் முந்தைய வாரத்தில் தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர் மாஸ்கரனாஸ் எனது பந்து வீச்சில் ஒரே ஓவரில் 5 சிக்சர் அடித்திருந்தார். இந்த ஆட்டத்தில் நான் 6-வது சிக்சர் தூக்கியதும் முதலில் பிளின்டாப்பை தான் நோக்கினேன். அடுத்து மாஸ்கரனாஸ் பக்கம் திரும்பினேன். அவர் என்னை பார்த்து சிரித்தார்.
இந்த தொடரில் ஸ்டூவர்ட் பிராட்டின் தந்தை கிறிஸ் பிராட் போட்டி நடுவர்களில் ஒருவராக பணியாற்றினார். அவர் மறுநாள் என்னிடம் வந்து, ‘ஏறக்குறைய நீ எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து வைத்துவிட்டாய். இப்போது அவனுக்கு நீ கையெழுத்திட்டு ஒரு பனியனை தருவாயா?’ என்று கேட்டார்.
நான் இந்திய அணிக்குரிய சீருடையை அவரிடம் வழங்கினேன். அதில், ‘ஸ்டூவர்ட் பிராட்டுக்காக சில வாசகங்களை எழுதினேன். எனது பந்து வீச்சில் ஒரே ஓவரில் 5 சிக்சர் அடிக்கப்பட்டிருக்கிறது. எனவே அந்த வேதனை எனக்கு புரியும். இங்கிலாந்து கிரிக்கெட்டில் சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துகள்’ என்று அதில் எழுதியிருந்தேன்.
இப்போது உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக ஸ்டூவர்ட் பிராட் திகழ்கிறார். இந்திய வீரர்களின் பந்து வீச்சில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடிக்கப்படக்கூடும் என்று நான் நினைக்கவில்லை.
இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.

அணியின் தோல்விக்கு பொறுப்பேற்க டோனி ஒருபோதும் தயங்கியது கிடையாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா தெரிவித்தார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஐ.பி.எல். போட்டியில் கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவருமான 31 வயதான மொகித் ஷர்மா, இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் சார்பில் நடந்த இன்ஸ்டாகிராம் உரையாடலில் கலந்து கொண்ட மொகித் ஷர்மா கூறியதாவது:-
நான் விளையாடிய வீரர்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் டோனியின் பணிவு மற்றும் நன்றியுணர்வு அவரை மற்ற வீரர்களிடம் இருந்து தனித்து காட்டுகிறது. மனிதநேயம் மிக்க அவர் மிகவும் எளிமையானவர். விளையாட்டில் கேப்டனுக்கும், தலைவருக்கும் வித்தியாசம் உண்டு. டோனி ஒரு உண்மையான தலைவர் என்று நான் நம்புகிறேன். அணி எப்பொழுது வெற்றி பெற்றாலும், அதில் தனக்கு முக்கிய பங்கு இருப்பதாக அவர் ஒருபோதும் காட்டிக் கொள்ளமாட்டார். வெற்றி பெற்ற போட்டியில் சிறந்து விளங்கிய வீரரை தான் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அனுப்புவார். ஆனால் அணி தோல்வியை சந்தித்தால், தயங்காமல் எப்பொழுதும் அதற்கான பொறுப்பை முன்னின்று அவர் ஏற்றுக்கொள்வார். அதுவே ஒரு தலைவருக்குரிய நல்ல அறிகுறியாகும். அது அவரிடம் என்னை அதிகம் கவர்ந்த விஷயமாகும். டோனியின் தலைமையின் கீழ் நான் விளையாடி இருக்கிறேன். உலகில் உள்ள எல்லா கிரிக்கெட் வீரர்களும் டோனியின் கேப்டன்ஷியில் விளையாட விரும்புவார்கள்.
முதுகுவலி பிரச்சினையை சரிப்படுத்த ஆபரேஷன் செய்வது சரியானது என்று முடிவெடுத்து அதனை செய்த பிறகு நல்ல நிலைக்கு திரும்பி உள்ளேன். இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். இந்த முறை வெற்றி வாகை சூட எங்கள் அணிக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். வலுவான இந்திய வீரர்கள் உள்பட அருமையான வீரர்கள் எங்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். எல்லா துறைகளிலும் சரியான வீரர்கள் எங்கள் அணியில் இடம் பெற்று இருப்பதாக நான் நம்புகிறேன். அவர்கள் கோப்பையை வெல்லும் சவாலுக்கு எங்களுக்கு உதவுவார்கள். எனவே எங்கள் ரசிகர்கள் அணியிடம் இருந்து பெரிய விஷயங்களை எதிர்பார்க்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட உற்சாகமாக இருக்கிறேன். இது இளம் வீரர்களை அதிகம் கொண்ட அணியாகும். அணியில் இடம் பெற்றுள்ள ஷிகர் தவான், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, ஹர்ஷல் பட்டேல் உள்ளிட்ட பெரும்பாலான வீரர்களை எனக்கு நன்றாக தெரியும். பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குடன் (ஆஸ்திரேலியா) இணைந்து பணியாற்றுவதற்கும், அவரிடம் இருந்து கற்றுக்கொள்வதற்கும் இது பொன்னான வாய்ப்பாகும். எல்லா வீரர்களும் அவரை பாராட்டி வருகிறார்கள். ஐ.பி.எல். போட்டி எப்பொழுது நடந்தாலும், இந்த அணி மிகவும் சிறப்பாக செயல்படும் என்று நான் நம்புகிறேன். டெல்லி அணியின் ரசிகர்களுக்கு நாங்கள் சிறந்த மகிழ்ச்சியை கொடுப்போம்.
பவுலர்கள் பந்தை பளபளக்க செய்ய சிறிய பொருளை வைத்து தேய்த்து கொள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி அளிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படும் விஷயத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். இந்த விஷயத்தில் ஒவ்வொரு பவுலருக்கும் தனிப்பட்ட விருப்பம் இருக்கும். பந்தை பளபளக்க செய்ய நான் எச்சிலை அதிகம் பயன்படுத்தமாட்டேன். மேலும் இந்த நாட்களில் எச்சிலை அதிகம் பயன்படுத்த நடுவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். பந்தை பளபளக்க செய்ய வியர்வையை பயன்படுத்துவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

ரஞ்சி போட்டிகளில் ரசிகர்கள் யாரும் இல்லாத சூழ்நிலையில் விளையாடிய அனுபவம் உள்ளது என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் உள்ளது. ரசிகர்கள் இல்லாமல் மூடிய மைதானத்திற்குள் போட்டியை நடத்தலாம் என்ற ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யாவும் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்தலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்திக் பாண்ட்யா கூறுகையில் ‘‘ரசிகர்கள் கூட்டம் இல்லாத நிலையில் ரஞ்சி கோப்பை போட்டியில் நான் விளையாடியுள்ளேன். அதன் உணர்வு வித்தியாசமானது. ஒருவேளை ஐபிஎல் போட்டிகளும் அப்படி நடந்தால் சிறந்த ஆப்சனாக இருக்கும். குறைந்த பட்சம் மக்கள் வீட்டில் இருந்தே போட்டியை பார்க்க முடியும்’’ என்றார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் விரித்திமான் சகாவின் பரம்பரை வீட்டில் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்துள்ளது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுபவர் விரித்திமான் சகா. இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் போன்றார் இருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட் என்று வந்தால் அது சகா மட்டுமே முதல் சாய்ஸ்.
தோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுப்பெற்ற பின்பு சகாவே டெஸ்ட் அணிக்கு கீப்பராக செயல்பட்டு வருகிறார். இவர் காயமடைந்தால் மட்டுமே டெஸ்ட் அணியில் மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்திய அணியின் கேப்டன் கோலி கூட, உலகளவில் இப்போதைக்கு சகாதான் சிறந்த விக்கெட் கீப்பர் என்று புகழ்ந்துள்ளார்.
இத்தனை புகழ்கள் கொண்ட சகாவுக்கு திருட்டுச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரியில் சகாவின் குடும்பத்துக்கு சொந்தமான பரம்பரை வீடு இருக்கிறது. அந்த வீட்டில் நேற்று இரவு திருட்டு கும்பலொன்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து சகாவின் மாமா கூறும்போது ‘‘6 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடிக்க வீட்டுக்குள் புகுந்தது. உடனடியாக சுதாரித்த நான் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தேன், இதனையறிந்த கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டனர்’’ எனத் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து அறிந்த சாஹா கூறுகையில் ‘‘இந்த கொள்ளைச் சம்பவம் என்னை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது, துரதிருஷ்டவசமானது. சிறுவயதில்தான் இதுபோன்ற கொள்ளைச் சம்பவம் குறித்து கேள்விப்பட்டுள்ளேன். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கிறேன்’’ என தெரிவித்துள்ளார். சகா இப்போது குடும்பத்துடன் கொல்கத்தா நகரின் தென் பகுதியில் வசித்து வருகிறார்.
கொரோனாவை தடுக்க நிதி வேண்டுமென்றால் எல்லையில் அத்துமீறும் செயலை நிறுத்திவிட்டு மருத்துவமனை கட்டுங்கள் என கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஒழிப்பு பணிக்காக நிதி திரட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று சோயிப் அக்தர் உள்ளிட்ட சில முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கு ஏற்கெனவே கிரிக்கெட் போட்டி நடத்திதான் நிதி திரட்ட வேண்டிய நிலையில் இந்தியா இல்லை என காட்டமாக தெரிவித்திருந்தார் கபில்தேவ்.
இந்நிலையில் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கபில் தேவ் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அப்போது கபில்தேவ் கூறியதாவது:-
உணர்ச்சிவசப்பட்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் நடத்தப்பட வேண்டும் என கூறலாம். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் கிரிக்கெட் முக்கியமில்லை. உங்களுக்கு நிதி வேண்டுமென்றால் எல்லையில் நடத்தும் அத்துமீறல்களை நிறுத்தங்கள். அந்தப் பணத்தை வைத்து மருத்துவமனை, பள்ளிகளை கட்டுங்கள். எங்களுக்கு நிதி தேவை என்றால் இங்கு ஏராளமான ஆன்மிக அமைப்புகள் இருக்கின்றன, அவர்கள் அரசுக்கு உதவுவார்கள்
கொரோனா பாதிப்பை நான் வேறு மாதிரியாக பார்க்கிறேன். இப்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாததுதான் பிரச்சனையா என தெரியவில்லை. நான் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை பற்றி கவலைப்படுகிறேன். பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் இவர்கள் கல்வி என்னவாகும் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.
முதலில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். பின்பு, கிரிக்கெட்டோ கால்பந்தோ ஆகியவை தன்னாலே நடைபெறும்.
இவ்வாறு கபில்தேவ் தெரிவித்தார்.