என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் நவ.23-ந் தேதி திருமணம் நடைபெறவிருந்தது.
    • ஸ்மிருதியின் தந்தைக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், அவரது காதலர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான பலாஷ் முச்சலுக்கும் நேற்று முன்தினம் (நவ.23) திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால் ஸ்மிருதியின் தந்தைக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது.

    தொடர்ந்து ஸ்ருமிதியின் வருங்கால கணவர் பலாஷ் முச்சலுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இச்செய்தி ஸ்ருமிதி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் ஸ்மிருதி தனது திருமணம் தொடர்பான அனைத்து இன்ஸ்டாகிராம் பதிவுகளையும் நீக்கினார். இதனால் இணையவாசிகள் பலரும் பல கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.

    இந்நிலையில் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் நின்ற நிலையில், அவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட பலாஷ் முச்சல், மேரி டி'கோஸ்டா என்ற பெண்ணிடம், ஸ்விம்மிங் செய்ய அழைத்து Flirt செய்ததாக Reddit பக்கத்தில் வெளியான ஸ்கிரீன்ஷாட்கள்

    அந்த ஸ்கிரீன்ஷாட்டில், ``ஸ்மிருதியை நீங்கள் லவ் பண்றீங்க தானே.. அப்புறம் ஏன் என்னை அழைக்கிறீர்கள்'' என கேட்க, முச்சல் அதற்கு பதில் சொல்லாமல் Avoid செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

    • ஸ்டப்ஸ் அரை சதம் அடித்து அசத்தினார்
    • தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 220 ரன்கள் எடுத்துள்ளது.

    கவுகாத்தி:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.

    தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டு பாலோ ஆன் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் தென் ஆப்பிரிக்கா பாலோ ஆன் கொடுக்கவில்லை.

    ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 58 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினார்கள். மார்கோ யான்சென் 6 விக்கெட்டும், ஹார்மர் 3 விக்கெட்டும், கேசவ் மகராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    288 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை விளையாடியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன் எடுத்து இருந்தது. ரிக்கெல்டன் 13 ரன்னுடனும், மர்க்கிராம் 12 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியது. 314 ரன்கள் முன்னிலை, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா தொடர்ந்து ஆடியது.

    ரிக்கெல்டன் 35 ரன்னிலும், மர்க்கிராம் 29 ரன்னிலும் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த கேப்டன் பவுமா 3 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் வெளியேறினார். 77 ரன்னில் தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டை இழந்தது.

    4-வது விக்கெட்டான ஸ்டப்ஸ்-சோர்சி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் சோர்சி 49 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ஸ்டப்ஸ் உடன் முல்டர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய ஸ்டப்ஸ் அரை சதம் அடித்து அசத்தினார்.

    இதனால் 4-ம் நாள் உணவு இடைவேளை வரை தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 220 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 515 ரன்கள் முன்னிலை பெற்று இந்த டெஸ்டில் மிகவும் வலுவான நிலையில் இருக்கிறது.

    முதல் டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இந்த டெஸ்டிலும் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. போட்டி டிராவில் முடிந்தாலும் தென்ஆப்பிரிக்கா தொடரை கைப்பற்றிவிடும். 

    • தேநீர் இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது.
    • 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும்போது இந்திய அணி மீண்டு வரும் என்று நம்புகிறேன்.

    சென்னை:

    இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சனின் வேகத்தில் விக்கெட்டுகளை இழந்தது. 83.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 201 ரன்களில் ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது.

    இருப்பினும் இந்திய அணிக்கு பாலோ - ஆன் வழங்காத தென் ஆப்பிரிக்க அணி 288 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் அடித்திருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் 3-வது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்து கொள்ளப்பட்டது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்கா அணி தேநீர் இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் மீது முன்னாள் வீரர் அஸ்வின் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும்போது இந்திய அணி மீண்டு வரும் என்று நம்புகிறேன். ஆனால், களத்தில் நமது வீரர்களின் உடல் மொழியை பார்க்கையில் எதுவும் சரியாக இல்லை. என தெரிவித்துள்ளார்.

    • இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணியே வெற்றி பெறும் சூழல் உள்ளது.
    • ஜஸ்ப்ரித் பும்ராவை கேப்டனாக நியமிக்காதது ஏன் என பிசிசிஐக்கும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் செல்வராகன் கேள்வி.

    இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அடுத்ததாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

    முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 489 ரன்கள் எடுத்தது. இந்தியா வெறும் 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 1-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா முன்னிலை வகித்து வருகிறது. மேலும் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணியே வெற்றி பெறும் சூழல் உள்ளது.


    இதனால் பலரும் இந்திய அணியின் வீரர்கள் தேர்வு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் ஜஸ்ப்ரித் பும்ராவை கேப்டனாக நியமிக்காதது ஏன் என பிசிசிஐக்கும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "நான் எப்போதும் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகன். ஜஸ்ப்ரித் பும்ராவை ஏன் கேப்டனாக்கவில்லை? என குறிப்பிட்டுள்ளார். 

     

    • காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
    • உக்ரைன் வீராங்கனை மொசினா ஹலினா (32 புள்ளி) வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    டோக்கியோ:

    காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் துப்பாக்கி சுடுதலில் நேற்று நடந்த பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பிராஞ்சலி பிராஷந்த் துமால் 34 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

    உக்ரைன் வீராங்கனை மொசினா ஹலினா (32 புள்ளி) வெள்ளிப்பதக்கமும், ஜியோன் ஜிவோன் (30 புள்ளி) வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர். முன்னதாக தகுதி சுற்றில் பிராஞ்சலி 600-க்கு 573 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனை படைத்தார். நடப்பு தொடரில் பிராஞ்சலி வென்ற 3-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் தங்கமும், ஏர் பிஸ்டலில் வெள்ளியும் வென்று இருந்தார். மற்றொரு இந்திய வீராங்கனை அனுயா பிரசாத் 4-வது இடம் பெற்றார். இந்த போட்டி தொடரில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா இதுவரை 7 தங்கம் உள்பட 16 பதக்கங்களை வென்றுள்ளது.

    • இலங்கை, பாகிஸ்தான் அணிகளின் தகுதியை பொறுத்து இடங்கள் முடிவாகும்.
    • ஒரு வேளை பாகிஸ்தான் தகுதி பெற்றால் கொழும்பில் இறுதிப்போட்டி நடைபெறும்.

    மும்பை:

    10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.

    இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும். அணிகள் 'சூப்பர்-8' சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில் ஆடும் 8 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

    40 லீக் ஆட்டம், 'சூப்பர் 8' சுற்றில் 12 போட்டி உள்பட மொத்தம் 55 ஆட்டங்கள் நடக்கிறது. இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களிலும் இலங்கையில் கொழும்பு கண்டியிலும் போட்டி நடைபெறுகிறது.

    20 ஓவர் உலக கோப்பைக்கான போட்டி அட்டவணை மும்பையில் இன்று அறிவிக்கப்படுகிறது.

    தரவரிசை அடிப்படையில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற உள்ளது. இந்த பிரிவில் நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெறுகிறது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 15-ந்தேதி கொழும்பில் மோதலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இரு அணிகளும் சமீபத்தில் ஆசிய கோப்பை போட்டியில் மோதின. துபாயில் 3 முறை மோதிய ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றது. இந்த தொடரின் போது பகல்காம் சம்பவம் எதிரொலித்தது. இந்திய அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்தது. பாகிஸ்தான் மந்திரியிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்க மறுத்தது போன்றவற்றால் சர்ச்சை வெடித்தது.

    அமெரிக்காவில் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையிலும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்று இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. பிப்ரவரி 7-ந்தேதி மும்பையில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து நமீபியாவுடன் 12-ந்தேதி டெல்லியிலும், கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 18-ந்தேதி அகமதாபாத்திலும் மோதுகிறது.

    இலங்கை, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன் அணிகள் மற்றொரு பிரிவிலும், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்க தேசம், நேபாளம், இத்தாலி இன்னொரு பிரிவிலும் இடம் பெறுகின்றன. தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ் தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா ஆகிய அணிகள் இன்னொரு பிரிவிலும் இடம்பெறுகின்றன.

    இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றால் அகமதாபாத், சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் போட்டி நடைபெறும். அரை இறுதிக்கு முன்னேறினால் மும்பையில் நடைபெறும். மற்றொரு அரை இறுதி கொழும்பு அல்லது கொல்கத்தாவில் நடைபெறும்.

    இலங்கை, பாகிஸ்தான் அணிகளின் தகுதியை பொறுத்து இடங்கள் முடிவாகும். இறுதி போட்டி அகமதாபாத்தில் நடத்தப்படுகிறது. ஒரு வேளை பாகிஸ்தான் தகுதி பெற்றால் கொழும்பில் போட்டி நடைபெறும்.

    • நான் எந்த சூழ்நிலையில் இருக்கிறேன் என்பது விசயம் அல்ல.
    • அந்த வழி எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது.

    முதல் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் வாஷிங்டன் சுந்தர் 3-வது வரிசையில் பேட்டிங் செய்ய களம் இறக்கப்பட்டார். தற்போது நடைபெற்று வரும் 2-வது போட்டியில் 8-வது இடத்தில் களம் இறக்கப்பட்டார். நேற்று 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடிக்கடி பேட்டிங் வரிசை மாற்றப்படுவது குறித்த கேள்விக்கு வாஷிங்டன் சுந்தர் அளித்த பதில் பின்வருமாறு:-

    அணி என்னை எங்கு பேட்டிங் செய்ய விரும்புகிறதோ அங்கு பேட்டிங் செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறுவேன். அந்த வகையில், இது மிகவும் உற்சாகமானது. இது ஒரு டீம் கேம்.

    உண்மையைச் சொன்னால், அணி தேவைப்படும் போதெல்லாம், அணி என்னை எங்கு பேட்டிங் செய்து பந்து வீசச் சொல்ல விரும்புகிறதோ அதற்கு தயாராக இருக்கும் கிரிக்கெட் வீரராக நான் இருக்க விரும்புகிறேன். நான் தயாராக இருக்க வேண்டும். அணிக்காக சிறப்பான ஆட்டத்தை கொடுக்க வேண்டும். இதுதான் என்னுடைய மனநிலை.

    நான் எந்த சூழ்நிலையில் இருக்கிறேன் என்பது விசயம் அல்ல. அந்த வழி எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது. எனக்கும் வித்தியாசமான ரோல்களில் விளையாட முடிகிறது. பலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என்று நினைக்கிறேன். எனவே, இது உற்சாகமாக மட்டுமே.

    இவ்வாறு வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.

    • முதல் இன்னிங்ஸ் ரன்னை விரைவாக எட்டிப்பிடிக்க வேண்டும் என்பது இலக்காக இருந்தது.
    • டெஸ்ட் போட்டியில் 489 ரன்களை விரைவாக எட்ட வேண்டும் என்பது யதார்த்தமற்றது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்த நிலையில், இந்தியா 201 ரன்னில் சுருண்டது. முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 288 ரன்கள் முன்னிலை பெற்று நல்ல நிலையில் உள்ளது.

    இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அடித்து விளையாட வேண்டும் என்ற நோக்கதில் களம் இறங்கிய அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மேலும், யான்செனை பவுன்சரை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.

    இந்த நிலையில் டெஸ்ட் போட்டிக்கான அனைத்தும் இந்திய பேட்ஸ்மேன்களிடம் மிஸ்சிங் என அனில் கும்ப்ளே சாடியுள்ளார்.

    இது தொடர்பாக அனில் கும்ப்ளே கூறியதாவது:-

    இந்தியாவின் பேட்டிங் முயற்சி மிகவும் மோசம் என நான் உணர்ந்தேன். டெஸ்ட் போட்டிக்கு தேவையான பொறுமை மற்றும் திறமையை பயன்படுத்துதல் (application) மிஸ்சிங். சில பந்துகள் சிறப்பாக வீசப்பட்ட போதிலும், பேட்ஸ்மேன்கள் மிகவும் கடினமான ஸ்பெல்களை எதிர்கொள்ள தயாராக இல்லை அல்லது செசன் செசனாக விளையாட தயாராக இல்லை.

    முதல் இன்னிங்ஸ் ரன்னை விரைவாக எட்டிப்பிடிக்க வேண்டும் என்பது இலக்காக இருந்தது. டெஸ்ட் போட்டியில் 489 ரன்களை படிப்படியாகத்தான் எட்ட வேண்டுமே தவிர, விரைவாக எட்ட வேண்டும் என்பது யதார்த்தமற்றது. எதிரணி பந்து வீச்சாளர்கள் மற்றும் அவர்களது ஸ்பெல்களுக்கு மரியாதை கொடுப்பது முக்கியமானது. ஆனால் இந்தியா அதை போதுமான அளவு காட்டவில்லை.

    யான்சென் விதிவிலக்காக அபாரமாக பந்து வீசி, இந்திய பேட்ஸ்மேன்களை தொடர்ந்து நெருக்கடிக்குள் வைத்திருந்தார். அவர் பவுன்சர்களை வீசத் தொடங்கியபோது இந்திய பேட்ஸ்மேன்கள் பந்தை பின்னால் விட்டு விளையாடவோ அல்லது பந்துகள் தாக்குவதை எதிர்கொள்ளவோ தயாராக இல்லை என்று தோன்றியது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் சவாலான சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்க அந்த அணுகுமுறை அவசியம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்றைய இந்தியாவின் அணுகுமுறையில் அது இல்லை.

    இவ்வாறு அனில் கும்ப்ளே தெரிவித்தார்.

    • ஸ்மிருதி மந்தனாவின் தந்தை திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • மன அழுத்தத்தால் பலாஷ் முச்சலுக்கு உடல்நிலை மோசமானதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவிற்கும், அவரது காதலர், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் நேற்று திருமணம் நடைபெறவிருந்தது.

    இச்சூழலில் ஸ்மிருதி மந்தனாவின் தந்தை திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் இவர்களின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.

    தொடர்ந்து, ஸ்மிருதியின் காதலர் பலாஷ் முச்சலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    மன அழுத்தத்தால் பலாஷ் முச்சலுக்கு உடல்நிலை மோசமானதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் முச்சலுக்கு ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டதாகவும், இசிஜி உட்பட பிற சோதனைகள் செய்யப்பட்டதாகவும், தற்போது குணமடைந்து வீடு திரும்பியதாகவும், ஆனால் மன அழுத்தத்தில் உள்ளதாகவும் அவரது தாயார் தெரிவித்தார். திருமணம் தடைப்பட்டது இருவரையும் உணர்ச்சி ரீதியாக பாதித்தாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், ஸ்மிருதி மந்தனா சமூக வலைதளங்களில் இருந்து திருமண புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்களை நீக்கியுள்ளார்.

    தந்தை மற்றும் மணமகனின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் திருமணம் நின்ற நிலையில், சமூக வலைதள பதிவுகள் நீக்கம் செய்துள்ளார்.

    • முதல் இன்னிங்சில் யான்சென் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • ரிஷப் பண்ட் 7 ரன்கள் எடுத்த நிலையில் யான்சென் பந்தில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 201 ரன்களில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் மார்கோ யான்சென் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    முக்கியமாக ஷார்ட் பந்து யுக்தி மூலம் இந்திய பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கினார். இந்திய அணி கேப்டன் ரிஷப் பண்ட் 7 ரன்கள் எடுத்த நிலையில் யான்சென் பந்தை இறங்கி வந்து அடிக்க முயற்சித்த போது எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார்.

    இந்த நிலையில், ரிஷப் பண்ட் ஷாட் செலக்ஷன் குறித்து ஆச்சரியப்படுகிறீர்களா? என்ற கேள்வி யான்செனிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு யான்சென் "எல்லாம் விசயங்களும் நாம் நினைத்த வழியில் செல்லாது. ரிஷப் பண்ட் பந்தை கேலரிக்கு பறக்க விட்டிருந்தால் அல்லது எனது தலைக்கு மேல் தூக்கி அடித்திருந்தால், இந்த உரையாடல் வேறுமாதிரி இருந்திருக்கும்.

    நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், கொல்கத்தா போன்று ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில பிட்ச் ஆகி பேட்ஸ்மேனை நோக்கி வரவில்லை. இதனால் நாங்கள் வேறு திட்டத்தை தேட வேண்டியிருந்தது. துருவ் ஜுரலை பவுன்சர் மூலம் வெளியேற்றிய பிறகு, ஓ.கே. கூல், இது எவ்வளவு தூரம் செல்கிறது பார்ப்போம் என்று நாங்கள் சொன்னோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

    பேட்டிங் செய்வதற்கு சிறந்த ஆடுகளமாக உள்ளது. நல்ல வேகம், நல்ல பவுன்ஸ் உள்ளது. நீங்கள் ஷார்ட் பந்துகளை சிறப்பாக விளையாடினால், உங்களால் ரன்கள் குவிக்க இயலும். நீங்கள் சிறப்பாக பந்து வீசினால், உங்களால் விக்கெட் வீழ்த்த இயலும்" என்றார்.

    • ஹர்பஜன் சிங், டேல் ஸ்டெயின், ஷேன் வாட்சன், ஷிகர் தவான் ஆகியோர் தலைமை தாங்க உள்ளனர்.
    • 6 அணிகள் பங்கேற்கும் இந்த லீக் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்குகிறது.

    கோவாவில் லெஜெண்ட்ஸ் ப்ரோ டி20 லீக் அடுத்த வருடம் ஜனவரி 26-ந்தேதி முதல் பிப்ரவரி 4-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் 6 அணிகள் பங்கேற்கின்றன. ஹர்பஜன் சிங், டேல் ஸ்டெயின், ஷேன் வாட்சன், ஷிகர் தவான் ஆகியோர் தலைமை தாங்க உள்ளனர்.

    மொத்தம் 90 வீரர்கள் விளையாட இருக்கின்றனர். இந்த லீக்கின் கமிஷனராக மைக்கேல் கிளார்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கிரிக்கெட்டின் மிகப்பெரிய நாடாக விளங்கும் இந்தியா, எனக்குள் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது. ரசிகர்களின் பேரார்வம், பெருமை, இந்த லீக்கில் ஒரு பகுதியாக இருக்கும் பாக்கியம், பழைய நன்பர்களுடன் மீண்டும் இணையும் வாய்ப்பு உண்மையிலான சிறப்பை உருவாக்கும்.

    இந்தப் புதிய பதவியில் லெஜண்ட்ஸ் புரோ டி20 லீக்கின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் என மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

    இந்த லீக் எஸ்.ஜி. குரூப்பால் ஊக்குவிக்கப்படுகிறது.

    • முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டது.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சென் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. செனுரன் முத்துசாமி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் தனது முதல் டெஸ்ட் செஞ்சூரியை பதிவு செய்தார். முத்துசாமி 109 ரன்னும், மார்கோ யான்சென் 93 ரன்னும் எடுத்தனர். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சென் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதன்மூலம் இந்திய மண்ணில் 15 ஆண்டுகளுக்கு பிறகு 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது வெளிநாட்டு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை மார்கோ யான்சென் படைத்துள்ளார். இதற்கு முன்னர் 2010-ம் ஆண்டு மொகாலியில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஜான்சென் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

    மேலும் மொத்தமாக 3-வது இடதுகை வேகப்பந்து வீச்சாளராக யான்சென் உள்ளார். இதற்கு முன்பு 2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் இந்திய வீரர் ஜாகீர் கான் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×