என் மலர்
விளையாட்டு
- ஹர்பஜன் சிங், டேல் ஸ்டெயின், ஷேன் வாட்சன், ஷிகர் தவான் ஆகியோர் தலைமை தாங்க உள்ளனர்.
- 6 அணிகள் பங்கேற்கும் இந்த லீக் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்குகிறது.
கோவாவில் லெஜெண்ட்ஸ் ப்ரோ டி20 லீக் அடுத்த வருடம் ஜனவரி 26-ந்தேதி முதல் பிப்ரவரி 4-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் 6 அணிகள் பங்கேற்கின்றன. ஹர்பஜன் சிங், டேல் ஸ்டெயின், ஷேன் வாட்சன், ஷிகர் தவான் ஆகியோர் தலைமை தாங்க உள்ளனர்.
மொத்தம் 90 வீரர்கள் விளையாட இருக்கின்றனர். இந்த லீக்கின் கமிஷனராக மைக்கேல் கிளார்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிரிக்கெட்டின் மிகப்பெரிய நாடாக விளங்கும் இந்தியா, எனக்குள் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது. ரசிகர்களின் பேரார்வம், பெருமை, இந்த லீக்கில் ஒரு பகுதியாக இருக்கும் பாக்கியம், பழைய நன்பர்களுடன் மீண்டும் இணையும் வாய்ப்பு உண்மையிலான சிறப்பை உருவாக்கும்.
இந்தப் புதிய பதவியில் லெஜண்ட்ஸ் புரோ டி20 லீக்கின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் என மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
இந்த லீக் எஸ்.ஜி. குரூப்பால் ஊக்குவிக்கப்படுகிறது.
- முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டது.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சென் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. செனுரன் முத்துசாமி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் தனது முதல் டெஸ்ட் செஞ்சூரியை பதிவு செய்தார். முத்துசாமி 109 ரன்னும், மார்கோ யான்சென் 93 ரன்னும் எடுத்தனர். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சென் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் இந்திய மண்ணில் 15 ஆண்டுகளுக்கு பிறகு 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது வெளிநாட்டு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை மார்கோ யான்சென் படைத்துள்ளார். இதற்கு முன்னர் 2010-ம் ஆண்டு மொகாலியில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஜான்சென் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
மேலும் மொத்தமாக 3-வது இடதுகை வேகப்பந்து வீச்சாளராக யான்சென் உள்ளார். இதற்கு முன்பு 2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் இந்திய வீரர் ஜாகீர் கான் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இறுதிப்போட்டியில் இந்தியா - சீன தைபே அணிகள் மோதின.
- பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா சீன தைபே அணியை வீழ்த்தியது.
டாக்கா:
11 அணிகள் இடையிலான 2-வது மகளிர் உலகக் கோப்பை கபடி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வந்தது. இதில் 'ஏ' பிரிவில் இடம்பெற்றிருந்த நடப்பு சாம்பியன் இந்திய அணி (4 ஆட்டங்களிலும் வெற்றி) முதலிடமும், வங்காளதேசம் (3 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும், 'பி' பிரிவில் சீன தைபே (5 ஆட்டங்களிலும் வெற்றி) முதலிடமும், ஈரான் (4 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-ஈரான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய அணி 33 -21 என்ற புள்ளி கணக்கில் ஈரானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் சீன தைபே அணி 25-18 என்ற புள்ளி கணக்கில் வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - சீன தைபே அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 35-28 என்ற புள்ளி கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
- இந்திய அணி முதல் இன்னிங்சில் 201 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- தென்ஆப்பிரிக்கா பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. செனுரன் முத்துசாமி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் தனது முதல் டெஸ்ட் செஞ்சூரியை பதிவு செய்தார். முத்துசாமி 109 ரன்னும், மார்கோ யான்சென் 93 ரன்னும் எடுத்தனர். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 7 ரன்னுடனும், கே.எல். ராகுல் 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியது. 480 ரன்கள் பின்தங்கி, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடியது. தென்ஆப்பிரிக்க வீரர்களின் அபார பந்து வீச்சால் இந்திய அணி விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 122 ரன் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.
கே.எல். ராகுல் 22 ரன்களும், ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், சாய்சுதர்சன் 15 ரன்னிலும், துருவ் ஜூரல் ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் ரிஷப் பண்ட் 7 ரன்னிலும், நிதிஷ்குமார் ரெட்டி 10 ரன்னிலும், ஜடேஜா 6 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். மார்கோ யான்சென் 4 விக்கெட்டையும், ஹார்மர் 2 விக்கெட்டையும், கேசவ் மகராஜ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
இந்திய அணி 7 விக்கெட்டுக்களை இழந்ததால் பாலோஆன் நோக்கி சென்றது. 8-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர் உடன் குல்தீப் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. இந்த ஜோடி 50 ரன்களை தாண்டி விளையாடியது.
வாஷிங்டன் சுந்தர் 48 ரன்கள் எடுத்த நிலையில் ஹார்மர் பந்தில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர்- குல்தீப் யாதவ் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தது.
வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்ததும் குல்தீப் யாதவ் 19 ரன்னில் வெளியேறினார். குல்தீப் யாதவ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் யான்சென் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.
கடைச விக்கடெ்டுக்கு பும்ரா உடன் சிராஜ் ஜோடி சேர்ந்தார். பும்ரா 5 ரன்னில் யான்சென் பந்தில் ஆட்டமிழக்க இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா பாலோ-ஆன் ஆனது.
ஆனால் தென்ஆப்பிரிக்கா பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ரம்- ரிக்கல்டன் களமிறங்கினர். இருவரும் 8 ஓவர்கள் விளையாடி 26 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 3-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
- வாஷிங்டன் சுந்தர் அதிகபட்சமாக 48 ரன்கள் சேர்த்தார்.
- யான்சென் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. செனுரன் முத்துசாமி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் தனது முதல் டெஸ்ட் செஞ்சூரியை பதிவு செய்தார். முத்துசாமி 109 ரன்னும், மார்கோ யான்சென் 93 ரன்னும் எடுத்தனர். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 7 ரன்னுடனும், கே.எல். ராகுல் 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியது. 480 ரன்கள் பின்தங்கி, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடியது. தென்ஆப்பிரிக்க வீரர்களின் அபார பந்து வீச்சால் இந்திய அணி விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 122 ரன் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.
கே.எல். ராகுல் 22 ரன்களும், ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், சாய்சுதர்சன் 15 ரன்னிலும், துருவ் ஜூரல் ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் ரிஷப் பண்ட் 7 ரன்னிலும், நிதிஷ்குமார் ரெட்டி 10 ரன்னிலும், ஜடேஜா 6 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். மார்கோ யான்சென் 4 விக்கெட்டையும், ஹார்மர் 2 விக்கெட்டையும், கேசவ் மகராஜ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
இந்திய அணி 7 விக்கெட்டுக்களை இழந்ததால் பாலோஆன் நோக்கி சென்றது. 8-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர் உடன் குல்தீப் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. இந்த ஜோடி 50 ரன்களை தாண்டி விளையாடியது.
வாஷிங்டன் சுந்தர் 48 ரன்கள் எடுத்த நிலையில் ஹார்மர் பந்தில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர்- குல்தீப் யாதவ் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தது.
வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்ததும் குல்தீப் யாதவ் 19 ரன்னில் வெளியேறினார். குல்தீப் யாதவ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் யான்சென் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.
கடைச விக்கடெ்டுக்கு பும்ரா உடன் சிராஜ் ஜோடி சேர்ந்தார். பும்ரா 5 ரன்னில் யான்சென் பந்தில் ஆட்டமிழக்க இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா பாலோ-ஆன் ஆனது.
ஆனால் தென்ஆப்பிரிக்கா பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. தற்போது 288 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
- உலக டென்னிஸ் லீக்கின் முதல் 3 சீசன் யுஏஇ-யில் நடைபெற்றது.
- தற்போது பெங்களூருவில் டிசம்பர் 17 முதல் 20-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
உலக டென்னிஸ் லீக்கின் முதல் மூன்று சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது. 4ஆவது சீசன் வருகிற டிசம்பர் 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பெங்களூரு எஸ்.எம். கிருஷ்ணா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் நான்கு அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியிலும் நான்கு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். வெளிநாட்டு மற்றும் இந்திய வீரர்கள் என மொத்தம் 16 பேர் இந்த லீக்கில் விளையாடுகின்றனர்.
கேம் சேஞ்சர்ஸ் பால்கான்ஸ் அணியில் டேனில் மெத்வதேவ், ரோகன் போபண்ணா, மக்டா லினேட் மக்றும் சஹஜா யமலபள்ளி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
வி.பி. ரியாலிட்டி ஹாக்ஸ் அணியில் யுகி பாம்ரி, மாயா ரேவதி, எலினா ஸ்விடோலினா, டெனிஸ் ஷபோவலோவ் ஆகியோர் இடம பிடித்துள்ளனர்.
ஆசிஸ் மாவெரிக்ஸ் கைட்ஸ் அணியில் நிக் கர்கியோஸ், தக்ஷினேஷ்வர் சுரேஷ், மார்தா கோஸ்ட்யுக், அங்கிதா ரெய்னா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ஏஓஎஸ் ஈகிள்ஸ் அணியில் கெயில் மோன்பில்ஸ், சுமித் நகல், பவுலா படோசா, ஸ்ரீவள்ளி பாமிதிபாட்டி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
- 8-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர்-குல்தீப் யாதவ் ஜோடி 50 பாட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர்.
- மார்க்கோ யான்சென் 4 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.
கவுகாத்தி:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.
தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. செனுரன் முத்துசாமி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் தனது முதல் டெஸ்ட் செஞ்சூரியை பதிவு செய்தார். முத்துசாமி 109 ரன்னும், மார்கோ யான்சென் 93 ரன்னும் எடுத்தனர். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 7 ரன்னுடனும், கே.எல்ராகுல் 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியது . 480 ரன்கள் பின்தங்கி, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடியது.
தென்ஆப்பிரிக்க வீரர்களின் அபார பந்து வீச்சால் இந்திய அணி விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 122 ரன் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.
கே.எல்.ராகுல் 22 ரன்களும், ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், சாய்சுதர்சன் 15 ரன்னிலும், துருவ் ஜூரல் ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் ரிஷப் பண்ட் 7 ரன்னிலும், நிதிஷ்குமார் ரெட்டி 10 ரன்னிலும், ஜடேஜா 6 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். மார்க்கோ யான்சென் 4 விக்கெட்டையும், ஹார்மர் 2 விக்கெட்டையும், கேசவ் மகராஜ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
இந்திய அணி 7 விக்கெட்டுக்களை இழந்ததால் பாலோஆன் நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. 8-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர்-குல்தீப் யாதவ் ஜோடி 50 பாட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர். இதனால் 3-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 315 ரன்கள் இந்தியா பின் தங்கியுள்ளது. குல்தீப் 14 ரன்களுடனும் வாஷிங்டன் சுந்தர் 33 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
- இந்த தொடரில் 9 தங்கப்பதக்கம் உள்பட 20 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்தது.
- உஸ்பெகிஸ்தான் 4 தங்கங்களுடன் இரண்டாவது இடம் பிடித்தது.
உலக கோப்பை குத்துச்சண்டை (World Boxing Cup) உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதி சுற்று உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்தது. இதில் மொத்தம் 38 நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் 10 எடை பிரிவுகளில் (weight categories) நடைபெற்றது.
இந்த தொடரில் 9 தங்கப்பதக்கம் உள்பட 20 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்தது. உஸ்பெகிஸ்தான் 4 தங்கங்களுடன் இரண்டாவது இடமும் இங்கிலாந்து 2 தங்கங்களுடன் மூன்றாவது இடமும் பிடித்தது. மற்ற நாடுகள் (ஆஸ்திரேலியா, ஜப்பான், சீன தைபே, கஜகஸ்தான், போலந்து) தலா 1 தங்கம் வென்றன.
இந்நிலையில் உலகக் கோப்பை குத்துச்சண்டை தொடரில் 20 பதக்கங்களை வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் எதிர்காலத்திலும் பல சாதனைகள் புரிந்து நாட்டிற்கு பெருமை சேர்க்க உங்களை வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- சிறுவன் 12 நிமிடங்களில் சுமார் 64 அம்புகளை எய்து அசத்தினார்.
- இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இயக்குனர் H வினோத் கலந்துகொண்டார்.
கண்களை கட்டிக்கொண்டு 64 அம்புகளை எய்து 7 வயது சிறுவன் சித்தார்த் இரட்டை சாதனை படைத்துள்ளார். இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகங்களில் அங்கீகாரம் பெறுள்ளார்.
சென்னை நந்தனம் YMCA உடற்கல்வி கல்லூரி வளாகத்தில் உள்ள வில்வித்தை மைதானத்தில், 7 வயது சிறுவன் கண்களை கட்டிக் கொண்டு, காம்பவுண்ட் வில் மூலமாக 7 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை நோக்கி, அம்புகளை எரியும் சாதனை முயற்சி நடைபெற்றது.
இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய புத்தகங்களில் அங்கீகாரம் பெறும் வகையிலான இந்த சாதனை நிகழ்ச்சியில் 7 வயதே நிரம்பிய சித்தார்த் பன்னீர் எனும் சிறுவன் 12 நிமிடங்களில் சுமார் 64 அம்புகளை எய்து அசத்தினார்.
குறிப்பாக இந்தியாவில் முதன்முதலாக தயாரிக்கபட்டுள்ள காம்பவுண்ட் வில் மூலமாக சிறுவன் சித்தார்த் அம்புகளை எறிந்ததும், இதற்கு முன்னதாக கண்களை கட்டிக்கொண்டு இந்த சாதனையை யாரும் முயற்சி செய்ததில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. சித்தார்த்தின் முயற்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவருக்கு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனங்கள், சாதனைக்கான சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் H வினோத், இரா சரவணன் ஆகியோர் வருகை புரிந்தனர்.
இதுகுறித்து பேசிய சித்தார்த்தின் தந்தை கரிகாலன், "எனது மகனை ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வைப்பதே இலக்கு என்றும், இந்த இரட்டை சாதனைகள் புரிந்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.
- இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தார்.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹார்மர், யான்சென் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
கவுகாத்தி:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.
தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. செனுரன் முத்துசாமி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் தனது முதல் டெஸ்ட் செஞ்சூரியை பதிவு செய்தார். முத்துசாமி 109 ரன்னும், மார்கோ யான்சென் 93 ரன்னும் எடுத்தனர். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 7 ரன்னுடனும், கே.எல்ராகுல் 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியது. 480 ரன்கள் பின்தங்கி, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடியது.
இருவரும் நிதானமாக ஆடினார்கள். 18.5 ஓவரில் 50 ரன்னை தொட்டது. அப்போது ஜெய்ஸ்வால் 36 ரன்னும், ராகுல் 13 ரன்னும் எடுத்து இருந்தனர்.
அதற்கு அடுத்த சில நிமிடங்களில் ராகுல் ஆட்டம் இழந்தார். அவர் 22 ரன்னில் கேசவ் மகராஜ் பந்தில் பெவிலியன் திரும்பினார்.
அப்போது ஸ்கோர் 65 ஆக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன், சாய்சுதர்சன் ஜோடி சேர்ந்தார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 58 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் சாய் சுதர்சன் அதிரடியாக ஆட முயற்சித்து 15 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜூரல் 11 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார்.
இதனால் 3-வது நாள் தேநீர் இடைவேளை வரை இந்தியா 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. இடைவேளை முடிந்து முதல் ஓவரில் அதிரடியாக விளையாட முயற்சித்து ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹார்மர், யான்சென் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- நேற்று அல் நசார் மற்றும் அல் கலீஜ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.
- தனது 40 வயதில் 954வது கோலை BICYCLE KICK-ல் ரொனால்டோ அடித்துள்ளார்.
போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40) தற்போது அல் நசார் க்ளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
நேற்று அல் நசார் மற்றும் அல் கலீஜ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ரொனால்டோ BICYCLE KICK-ல் மிகத் துல்லியமாக அடித்ததைக் கண்டு அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
தனது 40 வயதில் 954வது கோலை BICYCLE KICK-ல் ரொனால்டோ அடித்துள்ளார். கடைசியாக 7 ஆண்டுகளுக்கு முன்பு, ரொனால்டோ ரியல் மேட்ரிட் அணிக்காக BICYCLE கிக்கில் கோல் அடித்தது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவில் எனக்கு கிடைத்த வாய்ப்புக்காக நன்றி தெரிவிக்கிறேன்.
- முதல் இன்னிங்சில் இப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது சிறந்ததாக இருந்தது.
கவுகாத்தி:
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்கள் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்த தவறி விட்டனர்.
முதல்நாள் ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்து இருந்தது. நேற்றைய 2-வது நாளில் எஞ்சிய 3 விக்கெட்டுகளை எளிதில் கைப்பற்ற தவறி விட்டனர். இதனால் 489 ரன்களை அந்த அணி குவித்து விட்டது.
இந்திய பந்து வீச்சாளர்களுக்கு செனுரான் முத்துசாமி சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். அவருக்கு யான்சென் மிகவும் உதவியாக இருந்தார். தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட முத்துசாமி 109 ரன்கள் எடுத்தார். தனது 8-வது டெஸ்டில் விளையாடும் அவர் முதல் சதத்தை பதிவு செய்தார். கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக 89 ரன் எடுத்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
முதல் சதம் அடித்தது குறித்து முத்துசாமி நேற்றைய போட்டிக்கு பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல் சதத்தை பதிவு செய்தது அற்புதமான அனுபவமாகும். 2019-ல் நாங்கள் இந்தியாவில் டெஸ்ட் தொடரை மோசமாக இழந்த பிறகு நான் உள்நாட்டு போட்டியில் விளையாடி தேசிய அணியில் மீண்டும் இடம் பிடித்தேன்.
இந்தியாவில் எனக்கு கிடைத்த வாய்ப்புக்காக நன்றி தெரிவிக்கிறேன். முதல் இன்னிங்சில் இப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது சிறந்ததாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் முத்துசாமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை 2-வது டெஸ்டில் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான 2 டெஸ்ட் தொட ரில் அவர் தொடர் நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.