என் மலர்
டென்னிஸ்

உலக டென்னிஸ் லீக்: ஒரே அணியில் மெத்வதேவ், போபண்ணா
- உலக டென்னிஸ் லீக்கின் முதல் 3 சீசன் யுஏஇ-யில் நடைபெற்றது.
- தற்போது பெங்களூருவில் டிசம்பர் 17 முதல் 20-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
உலக டென்னிஸ் லீக்கின் முதல் மூன்று சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது. 4ஆவது சீசன் வருகிற டிசம்பர் 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பெங்களூரு எஸ்.எம். கிருஷ்ணா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் நான்கு அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியிலும் நான்கு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். வெளிநாட்டு மற்றும் இந்திய வீரர்கள் என மொத்தம் 16 பேர் இந்த லீக்கில் விளையாடுகின்றனர்.
கேம் சேஞ்சர்ஸ் பால்கான்ஸ் அணியில் டேனில் மெத்வதேவ், ரோகன் போபண்ணா, மக்டா லினேட் மக்றும் சஹஜா யமலபள்ளி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
வி.பி. ரியாலிட்டி ஹாக்ஸ் அணியில் யுகி பாம்ரி, மாயா ரேவதி, எலினா ஸ்விடோலினா, டெனிஸ் ஷபோவலோவ் ஆகியோர் இடம பிடித்துள்ளனர்.
ஆசிஸ் மாவெரிக்ஸ் கைட்ஸ் அணியில் நிக் கர்கியோஸ், தக்ஷினேஷ்வர் சுரேஷ், மார்தா கோஸ்ட்யுக், அங்கிதா ரெய்னா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ஏஓஎஸ் ஈகிள்ஸ் அணியில் கெயில் மோன்பில்ஸ், சுமித் நகல், பவுலா படோசா, ஸ்ரீவள்ளி பாமிதிபாட்டி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.






