என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டெஸ்ட் போட்டிக்கான அனைத்தும் மிஸ்சிங்: இந்திய பேட்ஸ்மேன்களை சாடிய கும்ப்ளே
    X

    டெஸ்ட் போட்டிக்கான அனைத்தும் மிஸ்சிங்: இந்திய பேட்ஸ்மேன்களை சாடிய கும்ப்ளே

    • முதல் இன்னிங்ஸ் ரன்னை விரைவாக எட்டிப்பிடிக்க வேண்டும் என்பது இலக்காக இருந்தது.
    • டெஸ்ட் போட்டியில் 489 ரன்களை விரைவாக எட்ட வேண்டும் என்பது யதார்த்தமற்றது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்த நிலையில், இந்தியா 201 ரன்னில் சுருண்டது. முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 288 ரன்கள் முன்னிலை பெற்று நல்ல நிலையில் உள்ளது.

    இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அடித்து விளையாட வேண்டும் என்ற நோக்கதில் களம் இறங்கிய அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மேலும், யான்செனை பவுன்சரை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.

    இந்த நிலையில் டெஸ்ட் போட்டிக்கான அனைத்தும் இந்திய பேட்ஸ்மேன்களிடம் மிஸ்சிங் என அனில் கும்ப்ளே சாடியுள்ளார்.

    இது தொடர்பாக அனில் கும்ப்ளே கூறியதாவது:-

    இந்தியாவின் பேட்டிங் முயற்சி மிகவும் மோசம் என நான் உணர்ந்தேன். டெஸ்ட் போட்டிக்கு தேவையான பொறுமை மற்றும் திறமையை பயன்படுத்துதல் (application) மிஸ்சிங். சில பந்துகள் சிறப்பாக வீசப்பட்ட போதிலும், பேட்ஸ்மேன்கள் மிகவும் கடினமான ஸ்பெல்களை எதிர்கொள்ள தயாராக இல்லை அல்லது செசன் செசனாக விளையாட தயாராக இல்லை.

    முதல் இன்னிங்ஸ் ரன்னை விரைவாக எட்டிப்பிடிக்க வேண்டும் என்பது இலக்காக இருந்தது. டெஸ்ட் போட்டியில் 489 ரன்களை படிப்படியாகத்தான் எட்ட வேண்டுமே தவிர, விரைவாக எட்ட வேண்டும் என்பது யதார்த்தமற்றது. எதிரணி பந்து வீச்சாளர்கள் மற்றும் அவர்களது ஸ்பெல்களுக்கு மரியாதை கொடுப்பது முக்கியமானது. ஆனால் இந்தியா அதை போதுமான அளவு காட்டவில்லை.

    யான்சென் விதிவிலக்காக அபாரமாக பந்து வீசி, இந்திய பேட்ஸ்மேன்களை தொடர்ந்து நெருக்கடிக்குள் வைத்திருந்தார். அவர் பவுன்சர்களை வீசத் தொடங்கியபோது இந்திய பேட்ஸ்மேன்கள் பந்தை பின்னால் விட்டு விளையாடவோ அல்லது பந்துகள் தாக்குவதை எதிர்கொள்ளவோ தயாராக இல்லை என்று தோன்றியது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் சவாலான சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்க அந்த அணுகுமுறை அவசியம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்றைய இந்தியாவின் அணுகுமுறையில் அது இல்லை.

    இவ்வாறு அனில் கும்ப்ளே தெரிவித்தார்.

    Next Story
    ×