என் மலர்
கிரிக்கெட் (Cricket)

எனக்கு சரியா படல... இந்திய அணியின் ஆட்டம் குறித்து ஆதங்கப்பட்ட அஷ்வின்
- தேநீர் இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது.
- 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும்போது இந்திய அணி மீண்டு வரும் என்று நம்புகிறேன்.
சென்னை:
இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சனின் வேகத்தில் விக்கெட்டுகளை இழந்தது. 83.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 201 ரன்களில் ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது.
இருப்பினும் இந்திய அணிக்கு பாலோ - ஆன் வழங்காத தென் ஆப்பிரிக்க அணி 288 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் அடித்திருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் 3-வது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்து கொள்ளப்பட்டது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்கா அணி தேநீர் இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் மீது முன்னாள் வீரர் அஸ்வின் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும்போது இந்திய அணி மீண்டு வரும் என்று நம்புகிறேன். ஆனால், களத்தில் நமது வீரர்களின் உடல் மொழியை பார்க்கையில் எதுவும் சரியாக இல்லை. என தெரிவித்துள்ளார்.






