என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரியில் அனைத்து பஞ்சாலைகளையும், கூட்டுறவு மில்களையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், அர்ஜுன் ராம் மெக்வால், கிரிராஜ் சிங் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:
* புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்
* சர்வதேச தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி, முதலீடுகள் ஈர்க்கப்படும்
* தொழில், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றின் செயல்பாட்டை உறுதி செய்ய உயர்மட்டக் குழு அமைக்கப்படும்
* அனைத்து பஞ்சாலைகளையும் கூட்டுறவு மில்களையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உங்கள் தேவையே எங்கள் வாக்குறுதி" என்ற தலைப்பில் 50,000 பேரிடம் கருத்துக்கள் கேட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் 12 தலைப்புகளில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
தவளக்குப்பம் அருகே கடன் கொடுத்தவர்களும் பணத்தை திருப்பிக் கேட்டு தொல்லை கொடுத்ததால் பழக்கடைக்காரர் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர்:
தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம் சாலையை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 65). பழக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி தேவகி (60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மகன்களின் திருமண செலவிற்காக சிலரிடம் கலியமூர்த்தி கடன் வாங்கினார். பழக்கடையில் சரியான வியாபாரம் இல்லாததால், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அவர் சிரமப்பட்டு வந்தார். கடன் கொடுத்தவர்களும் பணத்தை திருப்பிக் கேட்டு தொல்லை கொடுத்தனர். இதனால் தேவகி மனவேதனையில் இருந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கணவர் தூங்கிய பிறகு தேவகி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை கலியமூர்த்தி எழுந்து பார்த்தபோது மனைவி பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அறிந்ததும் தவளக்குப்பம் போலீசார் அங்கு சென்று தேவகியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் சட்டங்கள் இயற்றி உள்ளது என்று முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி:
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் தட்டாஞ்சாவடி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சேது செல்வம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை மத்தியில் ஆளும் மோடி அரசு நிலைகுலையச் செய்தது. காங்கிரஸ், தி.மு.க. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் மக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்பதும் உறுதியாகி உள்ளது. அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்.
முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவருக்கு நம்பிக்கை இருந்தால் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும். தட்டாஞ்சாவடியில் வெற்றி பெறமுடியாது என்று கருதி ஏனாம் தொகுதியிலும் போட்டியிடுகிறார். சந்தர்ப்பவாத கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால் 2 தொகுதிகளில் ரங்கசாமி போட்டியிடுகிறார்.
மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் சட்டங்கள் இயற்றி உள்ளது. இப்படிப்பட்ட கூட்டணி கட்சிகளை மக்கள் ஆதரிக்காமல் புறக்கணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரியை தமிழகத்தோடு இணைத்து விடுவார்கள் என நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளில் வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி புதுச்சேரி உழவர்கரை, வில்லியனூர், மங்கலம் ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று மாலை திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் செய்யப்பட்டுள்ளன. புதிய பாலம், புதிய கட்டிடங்கள் என கட்டுமானம், சாலை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் 20 கிலோ அரிசி வழங்கப்படும் என அறிவித்தோம்.
அதன்படி பொதுமக்களுக்கு அரிசி வினியோகம் செய்யப்பட்டது. இதனை அப்போது கவர்னராக இருந்த கிரண்பெடி தடுத்தார். அவர், மில்களையும், தொழிற்சாலைகளையும், அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் முடக்கினார்.
கொரோனா பரவல் காரணமாக அனைவரும் வேலைவாய்ப்பின்றி அவதிப்பட்டனர். புதுவை அரசு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம், கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணமாக வழங்கியது. முதியோர், விதவைகள் உதவித்தொகை காலத்தோடு வழங்கப்பட்டது. கொரோனா பரவலின்போது எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் யாராவது பொதுமக்களை சந்தித்தார்களா?
சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரியை தமிழகத்தோடு இணைத்து விடுவார்கள். புதுவை தனித்தன்மையை இழந்து விடும். மாநில அந்தஸ்து, நிதி கிடைக்காது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மக்கள் பெரும் அவதிப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
காரைக்காலில் தொற்று பரவலை தடுக்க மீண்டும் நடமாடும் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட நலவழித்துறை அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காரைக்கால்:
காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 4,207 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,999 பேர் குணமடைந்துள்ள நிலையில் 128 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். 75 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் காரைக்கால் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன், கொரோனா தொற்று வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் என எச்சரித்திருந்தோம். அதன்படி கடந்த சில நாட்களாக இரட்டை இலக்கில் தொற்று அதிகரித்து வருகிறது.
எனவே பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், நடமாடும் கொரோனா பரிசோதனை முகாம் மீண்டும் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி உங்கள் பகுதிக்கு வரும் நடமாடும் பரிசோதனை மைய ஊழியர்களிடம், பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பரிசோதனை செய்வதில் பொதுமக்கள் எந்தவித தயக்கமும் கொள்ளத்தேவையில்லை. கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், அவரது உடல் நிலையை ஆராய்ந்து, வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்படுகிறது.
தேர்தல் முடிந்த பிறகு மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதுச்சேரியில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. தடுப்பூசியை போட்டு கொரோனா பரவலை தடுப்போம் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பாகூர்:
புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குனரகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பிள்ளையார்குப்பம் மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.
மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடைபெற்ற முகாமுக்கு சுகாதாரத்துறை செயலர் அருண் தலைமை தாங்கினார். இயக்குனர் மோகன்குமார், ஶ்ரீபாலாஜி வித்யாபீத் துணை வேந்தர் சுபாஷ் சந்திர பரிஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் நிர்மல்குமார் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கொரோனா தடுப்பூசி அதிகப்படியான மக்களுக்கு போட வேண்டும். இதற்காக, புதுச்சேரியில் ஏற்கனவே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நான் மருத்துவ கல்லூரியில் படித்தபோது, பல்வேறு நோய்களுக்கான தடுப்பூசிக்கு பிறநாடுகளை எதிர்பார்த்து இருந்தோம். தற்போது நமது விஞ்ஞானிகளின் முயற்சியாலும், பிரதமர் மோடியின் ஊக்கத்தாலும் நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி நமக்கே கொடுக்கப்படுகிறது. இதைவிட பெருமை ஒரு இந்தியனுக்கு இருக்க முடியாது.
வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட நமது நாட்டின் தடுப்பூசிக்காக காத்திருக்கின்றனர். இந்தியாவில் இருந்து 71 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியாகி வருகிறது. வருகிற 1-ந் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
புதுச்சேரியில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. இதற்காக தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுகொள்கிறோம். தடுப்பூசியை போட்டு கொரோனா பரவலை தடுப்போம். சில நாடுகளில் 4, 5-வது அலை வீசி வருகிறது. இந்த நிலைக்கு நாம் சென்று விடக்கூடாது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள், மகாத்மா காந்தி மருத்துவமனை டாக்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கல்லூரி துணை முதல்வர் பத்மாவதி நன்றி கூறினார். முன்னதாக பாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழக துணை தலைவர் டாக்டர் பிரசாந்த் ராஜகோபாலன், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

புதுவையில் நேற்று 2 ஆயிரத்து 124 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. புதிதாக 126 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி:
சீனாவிலிருந்து உலகம் முழுவதும் கடந்த 2019 டிசம்பர் மாதம் கொரோனா பரவ தொடங்கியது.
2020 மார்ச்சில் கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு படிப்படியாக நீட்டிக்கப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
கடந்த சில மாதமாக சகஜநிலை திரும்பியது. இந்நிலையில் கொரோனா 2-வது அலை வீச தொடங்கி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடங்கிய கொரானாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் கடந்த சில மாதமாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து விரல் விட்டு எண்ணும் அளவுக்கே பாதிப்பு இருந்தது.
இத்தகைய சூழலில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களில் 20, 40, 60 என படிப்படியாக உயர்ந்து நேற்று ஒரே நாளில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 120-ஐ தாண்டியுள்ளது.
புதுவையில் நேற்று 2 ஆயிரத்து 124 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
புதிதாக 126 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 87, காரைக்காலில் 32, ஏனாமில் 6, மாகியில் ஒருவர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் தற்போது 184, காரைக்காலில் 40, மாகியில் 2 பேர் நோய் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 11, காரைக்காலில் 3, மாகியில் 3 பேர் என 17 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை 40 ஆயிரத்து 645 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 226 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 39 ஆயிரத்து 380 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுவையில் 228, காரைக்காலில் 94, ஏனாமில் 8, மாகியில் 30 பேர் என 360 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் தற்போது 586 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு 677 பேர் பலியாகியிருந்தனர்.
இந்நிலையில் காரைக்காலை சேர்ந்த 80 வயது முதியவர், 73 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 679 ஆக உயர்ந்துள்ளது.
இத்தகவல் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுவையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் முக கவசம், கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் அறிவுறுத்தி உள்ளார்.

புதுவையில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 324 பேர் போட்டியிடுகிறார்கள். வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபைக்கு வருகிற 6-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

புதுவையில் போட்டியிடும் பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வருகிற 30-ந்தேதி புதுவையில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
அன்று மாலை 4 மணிக்கு புதுவை-கடலூர் சாலையில் உள்ள ஏ.எப்.டி. மில் திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார். இக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை பாரதிய ஜனதா நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) புதுவை வருகிறார். அவர் பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.
மேலும் மத்திய மந்திரிகள், பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதல்- மந்திரிகளும் புதுவை வந்து பிரசாரம் செய்ய உள்ளனர்.
அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழக தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் தற்போது பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தி.மு.க.- காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்த நிலையில் வருகிற 3-ந்தேதி மு.க.ஸ்டாலின் புதுவையில் பிரசாரம் செய்கிறார். அன்று மாலை 3.30 மணிக்கு காரைக்காலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.
அப்போது அவர் தி.மு.க.-காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
பொதுக்கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து மாலை 5.30 மணிக்கு புதுவை வருகிறார். புதுவையில் அவர் பிரசாரம் செய்கிறார். தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசுகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. மாநில அமைப்பாளர்கள் செய்து வருகிறார்கள்.
தலைவர்கள் பிரசாரத்தை தொடர்ந்து புதுவையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை தேர்தல் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 324 பேர் போட்டியிடுகிறார்கள்.
புதுவை பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படுவதாக இருந்தது. தற்போது 26-ந்தேதிக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். இந்த அறிக்கை புதுவைக்கு வளர்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கும் என பாரதிய ஜனதா தேர்தல் பொறுப்பாளர் ராஜிசந்திரசேகர் எம்.பி. தெரிவித்து உள்ளார்.
பிரதமர் மோடி வருகிற 30-ந் தேதி புதுவையில் பிரசாரம் செய்கிறார். அன்று மாலை 4 மணிக்கு ஏ.எப்.டி மில் திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
இதில் கூட்டணி கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.
என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்னும் பிரசாரத்தை தொடங்கவில்லை. ஆனால், அவர் நிர்வாகிகளுடன் சென்று முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

புதுவையில் சுமார் 30 ஆயிரம் லிட்டர் மது பானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் மதுபான குடோன்களில் துணை கலெக்டர் சுதாகர் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி:
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மதுபானங்கள் கடத்தப்படுவதை தடுக்க புதுவையில் 10 இடங்களில் சோதனை சாவடி அமைத்து கலால் துறையினர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படும் மதுபானங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதேபோல் திருட்டுத்தனமாக தயாரிக்கப்படும் மது பானங்களை கண்டறிந்து அவை அழிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 30 ஆயிரம் லிட்டர் மது பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.54 லட்சமாகும்.
விதிமுறைகளை மீறி மதுபானங்களை விற்றதாக இதுவரை 7 மது கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கலால் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் கலால்துறை துணை ஆணையரும், துணை கலெக்டருமான சுதாகர் நேற்று அதிகாரிகளுடன் மதுபான கடை மற்றும் குடோன்களில் அதிரடி ஆய்வு நடத்தினார். அப்போது அனுமதி அளிக்கப்பட்டபடி மட்டுமே இருப்புகளை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மதுபான கொள்முதல், விற்பனை குறித்து பதிவேடுகளை முறையாக பராமரிக்கவும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தற்போது கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ளதால் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரி:
பங்குனி மாதம் பிறந்தால் கோவில்களில் திருவிழா, தேரோட்டம் என களை கட்டும்.
பங்குனி உத்திரத்தன்று முருகன் கோவில்கள், சிவாலயங்கள், பெருமாள், அம்மன் கோவில்களில் குலதெய்வ வழிபாடுகள் விமரிசையாக நடக்கும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். கோவில் வளாகத்தில் கைகளை சுத்திகரிக்கும் கிருமிநாசினி வழங்க வேண்டும்.
10 வயதுக்கு உட்பட்ட, 60 வயதை தாண்டியவர்கள், கர்ப்பிணிகள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். பக்தர்கள் கோவிலுக்கு தேங்காய், பழம், பூ கொண்டுவந்து அர்ச்சனை செய்வதை தவிர்க்க வேண்டும். பிரசாதம், புனித தீர்த்தம் வினியோகம் செய்வதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்தன. மணக்குள விநாயகர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் முக கவசம் அணிய பாதுகாவலர்கள் அறிவுறுத்தினர்.
உடல் வெப்பம் பரிசோதனை செய்து கிருமிநாசினி வழங் கப்பட்டது. இதுகுறித்த அறிவிப்புகள் பெரும்பாலான கோவில்களில் வைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் நோய் தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக 24-ந்தேதி (புதன்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரி:
கொரோனாவை தற்போது தடுத்து நிறுத்தாவிட்டால் நாடு முழுவதும் 2-வது அலை உருவாகி விடும், எனவே மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இதையடுத்து புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முன்னெச்சரிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மட்டும் 61 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வாகனம் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இதன் தொடக்க விழா நேற்று காலை முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே நடந்தது. நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அங்கு இருந்த பொதுமக்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். சிலருக்கு அவரே முகக்கவசம் அணிவித்து கிருமிநாசினியை எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என்று விளக்கி கூறினார்.
இந்த வாகனத்தில் கொரோனா பரவும் விதம், அதனை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், நோய் அறிகுறிகள், யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா பரவாமல் தடுக்க அனைவரும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். இதற்காக தான் தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. பக்கத்து மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால் தற்போது கொரோனா பரிசோதனையை அதிகரித்துள்ளோம்.
கிருமாம்பாக்கம் மகாத்மாகாந்தி மருத்துவக்கல்லூரியில் நாளை மறுநாள் (புதன் கிழமை) பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. அன்று காலை 10 மணியில் இருந்து இரவு 8 மணி வரை இந்த முகாம் நடைபெறும். முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட தொடர் நோய் உள்ளவர்கள் ஆதார் அட்டை கொண்டுவந்தால் போதும் அங்கேயே பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இந்த முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. இது குறித்து புதுவை மக்கள் அச்சப்படத் தேவையில்லை. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா வராமல் தடுக்கும். ஒருவேளை தொற்று வந்தால் கூட வீரியமாக இருக்காது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி மற்றும் வெண்டிலேட்டர் வசதியுடன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
புதுவையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை. எத்தனை பேர் வந்தாலும் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். அரசியல் கட்சி கூட்டங்களில் பங்கேற்போர் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கவர்னரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஆனந்த பிரகாஷ் மகேஸ்வரி, கவர்னரின் சிறப்பு செயலாளர் சுந்தரேசன், சுகாதாரத்துறை செயலாளர் அருண் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.