என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

பாஜக
புதுவையில் பா.ஜனதா தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு
அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை தேர்தல் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 324 பேர் போட்டியிடுகிறார்கள்.
புதுவை பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படுவதாக இருந்தது. தற்போது 26-ந்தேதிக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். இந்த அறிக்கை புதுவைக்கு வளர்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கும் என பாரதிய ஜனதா தேர்தல் பொறுப்பாளர் ராஜிசந்திரசேகர் எம்.பி. தெரிவித்து உள்ளார்.
பிரதமர் மோடி வருகிற 30-ந் தேதி புதுவையில் பிரசாரம் செய்கிறார். அன்று மாலை 4 மணிக்கு ஏ.எப்.டி மில் திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
இதில் கூட்டணி கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.
என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்னும் பிரசாரத்தை தொடங்கவில்லை. ஆனால், அவர் நிர்வாகிகளுடன் சென்று முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

Next Story