என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா தொற்று அதிகரிப்பு- புதுவை கோவில்களில் மீண்டும் கட்டுப்பாடுகள்

    தற்போது கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ளதால் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
    புதுச்சேரி:

    பங்குனி மாதம் பிறந்தால் கோவில்களில் திருவிழா, தேரோட்டம் என களை கட்டும்.

    பங்குனி உத்திரத்தன்று முருகன் கோவில்கள், சிவாலயங்கள், பெருமாள், அம்மன் கோவில்களில் குலதெய்வ வழிபாடுகள் விமரிசையாக நடக்கும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

    தற்போது கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ளதால் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். கோவில் வளாகத்தில் கைகளை சுத்திகரிக்கும் கிருமிநாசினி வழங்க வேண்டும்.

    10 வயதுக்கு உட்பட்ட, 60 வயதை தாண்டியவர்கள், கர்ப்பிணிகள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். பக்தர்கள் கோவிலுக்கு தேங்காய், பழம், பூ கொண்டுவந்து அர்ச்சனை செய்வதை தவிர்க்க வேண்டும். பிரசாதம், புனித தீர்த்தம் வினியோகம் செய்வதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்தன. மணக்குள விநாயகர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் முக கவசம் அணிய பாதுகாவலர்கள் அறிவுறுத்தினர்.

    உடல் வெப்பம் பரிசோதனை செய்து கிருமிநாசினி வழங் கப்பட்டது. இதுகுறித்த அறிவிப்புகள் பெரும்பாலான கோவில்களில் வைக்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×