என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த 10-ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருபுவனை:

    புதுச்சேரி கலித்தீர்த்தாள்குப்பத்தை சேர்ந்தவர் பாண்டியன். பழக்கடை வியாபாரி. இவரது மனைவி கமலா. இவர்களது மகன் பரத்போஸ். மகள் நிதிளஸ்ரீ (வயது16). இவர் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

    சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத வேளையில் நிதிளஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ரெட்டியார் பாளையத்தில் சாலையை கடக்க முயன்ற காவலாளி மோட்டார் சைக்கிள் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    ரெட்டியார்பாளையம் சின்மயம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அப்துல்ரகுமான். இவர் சுத்துக்கேணியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் மானேஜராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது தந்தை பீர்முகமது (வயது71). இவர் ரெட்டியார்பாளையத்தில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு செல்ல வீட்டில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

    ரெட்டியார்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள தேசிய வங்கி அருகே சைக்கிளில் இருந்து இறங்கி தள்ளிக் கொண்டே ஜவுளிக்கடைக்கு செல்ல சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பீர்முகமது மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பீர்முகமது தலையில் பலத்த காயமடைந்தார்.

    உடனே அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து பீர்முகமதுவை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் பீர்முகமது பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மகன் அப்துல்ரகுமான் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுவையில் நோய் கொடுமையால் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை ஆம்பூர் சாலையை சேர்ந்தவர் முகமதுயாகூப் (வயது66) இவருக்கு நுர்ஜகான் (55) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

    மகளுக்கு திருமணமாகி அவரது கணவர் வெளி நாட்டில் வேலை செய்து வருவதால் முகமதுயாகூப் வீட்டிலேயே அவரது மகள் வசித்து வருகிறார்.

    இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளாக சிறுநீர் பிரச்சினையால் முகமதுயாகூப் அவதி அடைந்து வந்தார். இதற்காக மருந்து மாத்திரையும் சாப்பிட்டு வந்தார்.

    சம்பவத்தன்று அதிகாலை முகமதுயாகூப்புக்கு சிறுநீர் கழிக்கும் போது அதிக வலி ஏற்பட்டதால் அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

    பின்னர் வீட்டுக்கு வந்த அவர் திடீரென தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டின் மாடியில் கட்டில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கினார். இதனை கண்ட அவரது மனைவி நுர்ஜகான் சத்தம் போட்டு அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து முகமதுயாகூப்பை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை முகமதுயாகூப் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    புதுச்சேரியில் நேற்று ஒரேநாளில் 2049 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
    புதுச்சேரி:

    இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 3 லட்சத்தை தாண்டிவிட்டது. உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    புதுச்சேரியில் நேற்று ஒரேநாளில் 2049 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

    புதுச்சேரியில் இதுவரை 75 ஆயிரத்து 024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1,018  பேர் உயிரிழந்து உள்ளனர். 
    புதுவைக்கு முன்பாக டெல்லி முதலிடத்தையும், கோவா 2-வது இடத்தையும் பிடித்துள்ளது. சிறிய மாநிலமான புதுவையில் இறப்பு விகிதம் அதிகரித்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா 2-வது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது.

    முதல் அலையின் தாக்கத்துக்கு பிறகு தொற்று பரவலே இல்லாத நிலையில் புதுவை இருந்தது. நாடு முழுவதும் 2-வது அலை பரவ தொடங்கிய காலகட்டத்தில் புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

    இரட்டை இலக்க எண்ணில் இருந்து மாறி 3 இலக்க எண்ணை அடைந்து தற்போது 4 இலக்கு எண்ணிக்கையை தொற்று எட்டியுள்ளது. நாள்தோறும் சுமார் 2 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையால் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவ கனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகிறது. ஆக்சிஜன் படுக்கைகள், சிகிச்சை பெறும் படுக்கைகளை உயர்த்தியும் தட்டுப்பாடு நிலவுகிறது.

    12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். நோயாளிகள் வெளியே நடமாடுவதை தடுக்க கட்டுப்பாட்டு மண்டலம், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. புதுவையில் நாள்தோறும் மரணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    கடந்த 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 7 நாட்களில் 140 பேர் கொரோனாவுக்கு மாநிலம் முழுவதும் பலியாகியுள்ளனர். 9-ந்தேதி உச்சபட்சமாக ஒரே நாளில் 26 பேர் பலியாகினர்.

    புதுச்சேரி

    மத்திய அரசின் சுகாதாரத்துறை நாடு முழுவதும் கொரோனாவால் மரணமடைந்தவர்கள் குறித்து நேற்று ஒரு புள்ளி விபரத்தை வெளியிட்டது. இதில் மக்கள் தொகையின் அடிப்படையில் இறப்பு விகிதம் கணக்கிடப்பட்டு மாநிலங்களை வரிசைபடுத்தி உள்ளனர்.

    இதில் புதுவை 3-வது இடத்தை பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுவையில் இதுவரை 965 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஒரு லட்சம் பேருக்கு 80 பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுவைக்கு முன்பாக டெல்லி முதலிடத்தையும், கோவா 2-வது இடத்தையும் பிடித்துள்ளது. சிறிய மாநிலமான புதுவையில் இறப்பு விகிதம் அதிகரித்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

    கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தொடர்ந்து பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தி வருகிறது. தெருவுக்கு தலா 4 வீடுகளை சேர்ந்தோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகரிப்பு, இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு பீதியால் புதுவையில் பொதுமக்கள் நடமாட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது.
    புதுச்சேரி மாநிலத்தில் மூன்று நியமன எம்எல்ஏ-க்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதற்காக மத்திய அரசு கே. வெங்கடேசன் உள்பட 3 பேர் பெயரை பரிந்துரை செய்துள்ளது.
    புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி 16 இடங்களை பிடித்து ஆட்சியை பிடித்தது. என்ஆர் காங்கிரஸ் 10 இடங்களையும், பா.ஜனதா ஆறு இடங்களையும் பிடித்தது. என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 7-ந்தேதி முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    இந்த நிலையில் கே. வெங்கடேசன், வி.பி. ராமலிங்கம், ஆர்.பி. அசோக் பாபு ஆகியோர் பெயரை நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இதனை ஏற்று ஆளுநர் நியமன எம்.எல்.ஏ.-க்களாக அறிவிக்க வாய்ப்புள்ளது.
    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மருத்துவமனையில் அடுத்தடுத்து 13 கொரோனா நோயாளிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கொரோனா தொற்றால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகின்றன. ஆக்சிஜன் வழங்குதல், படுக்கைகள் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் நோயாளிகளுக்கு மருத்துவமனை வளாகம், ஆம்புலன்ஸில் வைத்து சிகிச்சை அளிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சிகிச்சை அளிக்க போதுமான டாக்டர்கள், செவிலியர்கள் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்று மாலை ஐந்து மணியில் இருந்து இன்று மாலை ஐந்து மணிவரை அடுத்தடுத்து 13 கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தது உறவினர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    கோப்புப்படம்

    சிகிச்சை அளிக்க போதுமான டாக்டர்கள், செவிலியர்கள் இல்லாததே உயிரிழப்பிற்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இதுவரை உயிரிழப்பு குறித்து விளக்கம் அளிக்கவில்லை.
    புதுச்சேரியில் நேற்று அதிகபட்சமாக 96.62 டிகிரியும், காரைக்காலில் 95.18 டிகிரியும் வெயில் பதிவானது குறிப்பிடத்தக்கது.
    புதுச்சேரி:

    அக்னி நட்சத்திரம் எனப்படும் கோடைவெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. எனவே புதுவையில் கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அதன்படி நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேரம் செல்ல செல்ல வெயில் கொடுமை கூடியது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்து வீடுகளிலேயே முடங்கினர்.

    நண்பகல் வேளையில் நகரின் பிரதான சாலைகள் வெறிச்சோடியே காணப்பட்டன. வெயிலில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள சாலையில் நடந்து சென்றோர் குடை பிடித்தபடியும், தலையில் துணி போட்டுக்கொண்டும், பெண்கள் தங்களது துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டு சென்றதையும் காணமுடிந்தது. கடுமையான வெயில் கொளுத்தியதோடு அனல்காற்றும் வீசியது. சாலைகளில் பல இடங்களில் கானல்நீரும் தென்பட்டன.

    வெப்ப காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். வெயிலில் சுற்றியவர்களுக்கு தாகம் அதிகமாக இருந்ததால் குளிர்ந்த பானங்களை பருகுவதற்கு அதிகமாக விரும்பினார்கள். இதனால் சாலையோரங்களில் உள்ள இளநீர், கரும்புச்சாறு, தர்ப்பூசணி, குளிர்பானங்கள், முலாம் பழம் ஜூஸ் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதுதவிர வெள்ளரி, நுங்கு விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

    புதுச்சேரியில் நேற்று அதிகபட்சமாக 96.62 டிகிரியும், காரைக்காலில் 95.18 டிகிரியும் வெயில் பதிவானது குறிப்பிடத்தக்கது.
    போலீசாருக்கு கொரோனா பரவி வருவதை தொடர்ந்து அனைத்து போலீஸ் நிலையங்களிலும் புகார் மனு வாங்க சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு ஆட்சியாளர்கள், அரசியல் கட்சியினர், அதிகாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    புதுவையில் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு கடந்த 28-ந் தேதி போலீசாருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 107 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் நாள்தோறும் போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் வரை 171 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று மேலும் 19 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே அவர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 190 ஆக உயர்ந்துள்ளது. காவல்துறையிலும் கொரோனா வேகமாக பரவி வருவதால் போலீசார் கலக்கம் அடைந்துள்ளனர்.

    இதற்கிடையே போலீசாருக்கு கொரோனா பரவி வருவதை தொடர்ந்து அனைத்து போலீஸ் நிலையங்களிலும் புகார் மனு வாங்க சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

    போலீஸ் நிலையம் முன்பு பந்தல் அமைத்து போலீஸ்காரர்கள் புகார் மனு பெறுகின்றனர்.
    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    புதுவை சட்டமன்ற தேர்தலின் போது என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் முடிவில் என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜ.க. கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முன்னதாக கடந்த 5-ந் தேதி அவர் சேலத்தில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கிருந்து புதுச்சேரிக்கு திரும்பியதும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதற்கிடையே புதுச்சேரியின் முதல்-அமைச்சராக ரங்கசாமி கடந்த 7-ந் தேதி கவர்னர் மாளிகையில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பதவியேற்பு விழா முடிந்ததும் சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்று 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்ட அவர் நேராக வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்தார். டாக்டர்களின் ஆலோசனைப்படி அவர் சில மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டார்.

    இந்தநிலையில் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் மிகவும் நெருக்கமாக இருந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஜவகருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ரங்கசாமி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். இதனால் அவரை யாரும் சந்திக்க அனுமதி அளிக்கவில்லை.

    இதற்கிடையே முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தார். அப்போது அவருடன் காரில் யாரும் வரவில்லை. அவர் மட்டும் தனியாக வந்தார். சிறிது நேரம் அலுவலகத்தில் இருந்த அவர் அதிகாரிகள், ஊழியர்கள் யாரையும் சந்திக்கவில்லை. மிகவும் சோர்வாக அவர் காணப்பட்டார். சுமார் 30 நிமிடங்கள் மட்டும் தனது அலுவலகத்தில் இருந்த அவர் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டு சென்று ஓய்வெடுத்தார்.

    இதற்கிடையே முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு மருத்துவக்குழுவினர் கொரோனா தொற்று பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு தொற்று இருப்பது நேற்று இரவு உறுதிசெய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் (எம்.ஜி.எம்.) அனுமதிக்கப்பட்டார். முதல்-அமைச்சராக ரங்கசாமிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    கிருமாம்பாக்கம் அருகே சாராயம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாகூர்:

    கிருமாம்பாக்கம் போலீசார், உச்சிமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் விற்றுக் கொண்டிருந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பனித்திட்டு பகுதியை சேர்ந்த சத்யராஜ் (வயது 26) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து சாராய பாட்டில்கள் மற்றும் ரூ.1500 பறிமுதல் செய்யப்பட்டது.
    வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் பழனிசாமி நகரை சேர்ந்தவர் ராஜே‌‌ஷ் (வயது 38). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இரவு இவர், தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். மறுநாள் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மஞ்சினி (45). தனியார் கம்பெனி ஊழியர். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்தார். மறுநாள் அவரின் மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. மர்மநபர்கள் யாரோ மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மங்கலம் போலீசில் மஞ்சினி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.
    ×