என் மலர்
புதுச்சேரி
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைகிறது. முதல்-அமைச்சராக ரங்கசாமி நேற்று பதவியேற்றுக்கொண்டார். அமைச்சர்கள் விரைவில் பதவியேற்க உள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் மத்திய மந்திரி கிஷண்ரெட்டி, மாநில பா.ஜ.க. பொறுப்பாளர்கள் சி.டி.ரவி, நிர்மல்குமார் சுரானா, தேர்தல் பொறுப்பாளர் ராஜீவ்சந்திரசேகர் எம்.பி., மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன், எம்.எல்.ஏ.க்கள் நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம், சாய் சரவணன், ஜான்குமார், ரிச்சர்ட், கல்யாணசுந்தரம், கோலப்பள்ளி சீனிவாஸ் அசோக் (சுயேச்சை) ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பா.ஜ.க. சட்டமன்ற கட்சி தலைவராக நமச்சிவாயம் தேர்வு செய்யப்பட்டார். இதனை மத்திய உள்துறை இணை மந்திரி கிஷண்ரெட்டி தெரிவித்தார். இதையடுத்து நமச்சிவாயத்துக்கு பா.ஜ.க. முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றிபெற்றது. இந்த கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத்ததால் ஆட்சி அமைக்கும் பணியை தொடங்கின. என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ரங்கசாமி சட்டமன்ற குழு தலைவராக (முதல்-அமைச்சர்) தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கடந்த 3-ந்தேதி கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தையும் அவர் வழங்கினார்.
அதை பெற்றுக்கொண்ட கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் நல்லநேரம் பார்த்து அவர்கள் தெரிவிக்கும் நேரத்தில் பதவி ஏற்கலாம் என்று தெரிவித்தார். அதன்படி புதுவை முதல்-அமைச்சராக ரங்கசாமி இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.20 மணிக்கு பதவி ஏற்றுக் கொள்கிறார்.
இதற்கான விழா கவர்னர் மாளிகை வளாகத்தில் நடக்கிறது. அங்கு பந்தல் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எளிமையாக நடக்கும் விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதிய முதல்-அமைச்சராக ரங்கசாமிக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்து வாழ்த்து தெரிவிக்கிறார்.
அதைத்தொடர்ந்து சட்ட சபைக்கு வரும் ரங்கசாமி தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொள்கிறார். ரங்கசாமியுடன் பிற அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்கவில்லை.
அதன்பின்னரே அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. பா.ஜ.க.வை சேர்ந்த நமச்சிவாயம் துணை முதல்-அமைச்சராக பதவி ஏற்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. இதுதவிர என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 பேரும், பா.ஜ.க.வை சேர்ந்த மேலும் ஒருவரும் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர்.

ஆனால் கொரோனா தொற்று பரவலை கருத்தில்கொண்டு மீண்டும் கவர்னர் மாளிகை வளாகத்தில் பதவி ஏற்பு விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. விழாவில் கலந்துகொள்ள புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், அரசு செயலாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வானூர்:
புதுவை மாநிலத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் அங்கு மதுக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
எனவே, தமிழக பகுதியில் இருந்து ஏராளமானோர் மதுப்பாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
அதன்படி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் அருவாபாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி விசாரணை நடத்தினர். சோதனையில் அந்த காரில் 10 அட்டைப்பெட்டிகளில் 480 மதுப்பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை திண்டிவனத்தில் இருந்து புதுவை பகுதிக்கு கடத்தி வந்துள்ளனர்.
அந்த காரை புதுவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அங்கப்பன் ஓட்டி வந்தார். அந்த காருக்குள் புதுவை அய்யங்குட்டி பாளையத்தை சேர்ந்த சுந்தர் (வயது 35) என்பவர் இருந்தார். இவர் புதுவையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
உடனே போலீசார் மதுப்பாட்டில்கள், காரை பறிமுதல் செய்தனர். கார் டிரைவர் அங்கப்பன், போலீஸ்காரர் சுந்தர் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
அதாவது என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. எனவே இந்த கூட்டணி சார்பில் ஆட்சி அமைக்கப்படுகிறது. இதுதொடர்பாக பா.ஜ.க. மேலிட தலைவர் நிர்மல்குமார் சுரானா உள்ளிட்ட தலைவர்கள் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது அமைச்சரவையில் இடம் பெறுவது தொடர்பாக இரு கட்சி தலைவர்களும் பேசியதாக தகவல்கள் வெளியாயின.
அதன்படி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு முதல்-அமைச்சர் உள்பட 4 அமைச்சர் பதவிகளும், பா.ஜ.க.வுக்கு 2 அமைச்சர் பதவிகளும் ஒதுக்குவது என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த கூட்டணி அரசின் முதல்-அமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தனக்கு எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டு கொடுத்துள்ள ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரினார்.
இந்தநிலையில் புதிய முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்பது எப்போது? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கிடையே சட்டசபையில் முதல்- அமைச்சர் அலுவலகம் உள்ளிட்ட மற்ற அலுவலகங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது 4-வது முறையாக ரங்கசாமி நாளை (வெள்ளிக்கிழமை) பதவி ஏற்பது உறுதியாகி உள்ளது. இதனை அவரே நேற்று சேலத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கவர்னர் மாளிகையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிற்பகல் 1 மணியளவில் முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்றுக் கொள்கிறார். அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
ரங்கசாமியுடன் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்களா? என்பது பற்றி உறுதியாக தெரியவில்லை. தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் பதவியேற்பு விழாவினை மிகவும் எளிமையாக நடத்தவும், முக்கிய பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை புதுவை அரசு அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
புதுவை சட்டமன்ற தேர்தல் முடிந்து என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி 16 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. சட்டமன்ற குழு தலைவராக (முதல்-அமைச்சராக) ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னரை சந்தித்து ரங்கசாமி கடிதம் கொடுத்துள்ளார்.
என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணியில் தற்போதைய நிலவரப்படி துணை முதல்-அமைச்சர் உள்பட 2 அமைச்சர் பதவிகளை பா.ஜ.க. கேட்டு வருகிறது. துணை முதல்-அமைச்சராக நமச்சிவாயம் பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.

இவர்களில் ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதை முன்னிறுத்தி அமைச்சர் பதவியை பெறுவதில் சாய்சரவணன் உறுதியாக உள்ளார்.
இதற்கிடையே புதிதாக கட்சியில் இணைந்து காமராஜ் நகர் தொகுதியில் வெற்றிபெற்று தனது மகனையும் எம்.எல்.ஏ.வாக உருவாக்கியுள்ள ஜான்குமாரும் அமைச்சர் பதவிக்கு குறி வைத்துள்ளார். சிறுபான்மையினர் என்ற ரீதியில் இந்த முயற்சியில் அவர் இறங்கி உள்ளார். முன்னாள் அமைச்சரான கல்யாண சுந்தரமும் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு முதல்-அமைச்சர் மற்றும் 3 அமைச்சர் பதவிகள் கிடைக்கிறது. முதல்-அமைச்சராக ரங்கசாமி தேர்வாகியுள்ள நிலையில் மீதமுள்ள 3 அமைச்சர் பதவிகளை பெற அங்கும் கடும்போட்டி நிலவுகிறது. இதற்கான களத்தில் காரைக்கால் பிராந்தியத்தில் திருமுருகன், சந்திர பிரியங்கா ஆகியோர் உள்ளனர்.
மூத்த நிர்வாகி மற்றும் ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்த பெண் அடிப்படையில் இருவரும் கட்சி தலைமையிடம் எதிர்பார்ப்பில் உள்ளனர். நடந்து முடிந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒரே பெண் எம்.எல்.ஏ. சந்திர பிரியங்கா என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தவிர லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக் குமார், ராஜவேலு உள்ளிட்டோரும் ஆவலுடன் அமைச்சர் கனவில் உள்ளனர்.
என்.ஆர்.காங்கிரசை பொறுத்தவரை யார் யார்? அமைச்சர் ஆக வேண்டும் என்பதை ஆன்மிகவாதியான ரங்கசாமி ஜாதகம் பார்த்து அதன் அடிப்படையிலேயே தேர்வு செய்வார்.
அதனால் யாருக்கு அமைச்சர், சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கிடையே மத்திய உள்துறையிடம் ஒப்புதல் பெற்று கூடுதலாக ஒரு அமைச்சர் பதவியை பெற பா.ஜ.க. முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் ஓரிரு நாளில் ரங்கசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்க உள்ள நிலையில் அமைச்சரவையில் இடம் பெறப் போகிறவர்கள் யார்? என்கிற கேள்விக்கு விடை கிடைத்து விடும்.
புதுவை சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 30 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட சட்டசபைக்கு பாதிக்கு மேல் இடங்களை பெற்று இருப்பதால் ஆட்சி அமைக்கும் தகுதியை இந்த கூட்டணி பெற்றுள்ளது.
அந்தவகையில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன்பின் நிருபர்களிடம் பேசிய பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அமைச்சரவையில் பா.ஜ.க. இடம் பெறும் என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் கூட்டணி அரசின் முதல்-அமைச்சராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை கவர்னர் மாளிகைக்கு சென்ற ரங்கசாமி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். நல்லநேரம் பார்த்து ஓரிரு நாளில் முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்க திட்டமிட்டுள்ளார்.
புதிய அமைச்சரவையில் பா.ஜ.க.வுக்கு 2 அமைச்சர்கள் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில் துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், துணை சபாநாயகர் பதவி இடங்களை கேட்டு பா.ஜ.க. தரப்பில் என்.ஆர்.காங்கிரசை வலியுறுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
புதுவையை பொறுத்தவரை கடந்த காலங்களில் துணை முதல்-அமைச்சர் பதவி என்பது உருவாக்கப்படாத நிலை தான் இருந்து வருகிறது. ஆனால் தற்போது மத்திய உள்துறை மூலம் துணை முதல்-அமைச்சர் பதவியை உருவாக்கிட பா.ஜ.க. பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.
துணை முதல்-அமைச்சர் பதவியை கேட்டுப் பெற்று அந்த இடத்தில் நமச்சிவாயத்தை அமர வைக்க பா.ஜ.க. மேலிடம் திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் எதிர்காலத்தில் புதுச்சேரியில் கட்சியை பெரிய சக்தியாக வளர்க்க முடியும் என்று பா.ஜ.க. தரப்பில் கருதுவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுதவிர அமைச்சர்கள், துணை சபாநாயகர் பதவிகளை பிடிக்க பா.ஜ.க.வில் முட்டி மோதி வருகிறார்கள்.
அரசியல் சாசன விதிகளின்படி புதுச்சேரியில் 3 எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்துக் கொள்ளலாம் என்பதால் அந்த இடங்களை நிரப்பவும் பா.ஜ.க. மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது.
புதுச்சேரியில் நேற்று ஒரேநாளில் 799 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் இதுவரை 62 ஆயிரத்து 160 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 848 பேர் உயிரிழந்து உள்ளனர்.







