என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் 16 இடங்களைக் கைப்பற்றி என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
    புதுச்சேரி:

    30 இடங்களை கொண்ட புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. இதில் 81.70 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் நடந்து 24 நாட்களுக்கு பின் 6 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  
     
    வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் முன்னிலை நிலவரம் தெரியத்தொடங்கியது. என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது.

    இந்நிலையில், 30 தொகுதிகளில் 10 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ், 6 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சுயேச்சை 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    இதன்மூலம் புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
    என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஏனாம் தொகுதியில் தோல்வியடைந்த நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதியில் முன்னிலை பெற்று வருகிறார்.
    புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா, அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. இந்த கூட்டணி வெற்றி பெற்றால் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ரங்கசாமி ஏனாம், தட்டாஞ்சாவடி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஏனாம் தொகுதியில் ரங்கசாமி அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தார்.

    இறுதி சுற்றான 15-வது சுற்று முடிவில் ரங்கசாமி 16,228 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் கொல்லபள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் 16,874 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    தட்டாஞ்சாவடியில் 12,646 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். சிபிஐ வேட்பாளர் சேது 7,355 வாக்குகள் பெற்றுள்ளார்.
    2 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி, 4 தொகுதிகளில் காங்கிரஸ்-திமுக கூட்டணி, 2 தொகுதிகளில் சுயேட்சைகள் முன்னிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    30 இடங்களை கொண்ட புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. இதில் 81.70 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் நடந்து 24 நாட்களுக்கு பின் 6 மையங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  

    வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் முன்னிலை நிலவரம் தெரியத்தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி 13 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மற்றவை 1 இடத்தில் முன்னிலை வகிக்கிறது. வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது.

    30 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில், 5 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ், 3 தொகுதிகளில் பாஜக, 1 தொகுதியில் திமுக வெற்றிபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    2 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி, 4 தொகுதிகளில் காங்கிரஸ்-திமுக கூட்டணி, 2 தொகுதிகளில் சுயேட்சைகள் முன்னிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    காமராஜ் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜான்குமார் 16303 வாக்குகளும், 384 தபால் வாக்குகளும் பெற்றுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க. ஒரு அணியாகவும், காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு ஒரு அணியாகவும் போட்டியிட்டது.

    இதுதவிர அ.ம.மு.க., மக்கள்நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. சுயேச்சைகள் என 30 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 324 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர்.காங்கிரஸ் 16, பா.ஜனதா 9, அ.தி.மு.க. 5 தொகுதிகளில் போட்டியிட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 15, தி.மு.க. 13, இந்தியகம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டது.

    இதில் ஏனாம் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை. இதனால் 14 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் போட்டியிட்டது. தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது.

    தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் புதுவையில் தாகூர் கலைக்கல்லூரி, மகளிர் பாலிடெக்னிக், மோதிலால் நேரு ஆண்கள் பாலிடெக்னிக் ஆகிய இடங்களிலும், காரைக்காலில் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியிலும், மாகி, ஏனாமில் மண்டல நிர்வாக அலுவலகங்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் காமராஜ் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜான்குமார் 16303 வாக்குகளும், 384 தபால் வாக்குகளும் பெற்றுள்ளார்.

    எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஷாஜகான் 9208 வாக்குகளும், 250 தபால் வாக்குகளும் பெற்றுள்ளார்.

    காங்கிரஸ் வேட்பாளர் ஷாஜகானை விட 7229 வாக்குகள் கூடுதலாக பெற்று பாஜக வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றுள்ளார்.
    என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி முன்னணியில் இருந்து வருவதால் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க. ஒரு அணியாகவும், காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு ஒரு அணியாகவும் போட்டியிட்டது.

    இதுதவிர அ.ம.மு.க., மக்கள்நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. சுயேச்சைகள் என 30 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 324 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர்.காங்கிரஸ் 16, பா.ஜனதா 9, அ.தி.மு.க. 5 தொகுதிகளில் போட்டியிட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 15, தி.மு.க. 13, இந்தியகம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிட தொகுதியில் போட்டியிட்டது.

    இதில் ஏனாம் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை. இதனால் 14 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் போட்டியிட்டது. தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது.

    தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் புதுவையில் தாகூர் கலைக்கல்லூரி, மகளிர் பாலிடெக்னிக், மோதிலால் நேரு ஆண்கள் பாலிடெக்னிக் ஆகிய இடங்களிலும், காரைக்காலில் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியிலும், மாகி, ஏனாமில் மண்டல நிர்வாக அலுவலகங்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது.

    இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முதல்கட்டமாக முதல் சுற்றில் புதுவையில் மண்ணாடிப்பட்டு, மங்கலம், கதிர்காமம், காமராஜர்நகர், லாஸ்பேட்டை, உப்பளம், நெல்லித்தோப்பு, ஏம்பலம், காரைக்கால் மாவட்டத்தின் நெடுங்காடு, காரைக்கால் வடக்கு, மாகி ஏனாம் ஆகிய 12 தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

    முதலில் தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது. ஒரு சில தபால் ஓட்டுகளுக்கு முகவர்கள் விதிமுறைகள் பின்பற்றப்படாதது, அதிகாரிகள் கையெழுத்திடாதது குறித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் அந்த ஓட்டுகள் ரத்து செய்யப்பட்டது. விதிமுறைகளுக்கு உட்பட்ட ஓட்டுகள் மட்டும் ஏற்கப்பட்டது. தொடர்ந்து ஓட்டுப்பதிவு எந்திரங்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் பிரிக்கப்பட்டு ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது.

    முதல் சுற்றில் நெல்லித்தோப்பு, காமராஜர் நகர், மண்ணாடிப்பட்டு ஆகிய 3 தொகுதிகளில் பா.ஜனதாவும், ஏனாம், நெடுங்காடு, மங்கலம், கதிர்காமம் ஆகிய தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரசும் என 7 தொகுதியில் முன்னணியில் இருந்தனர்.

    உப்பளத்தில் தி.மு.க.வும், மாகி, லாஸ்பேட்டையில் காங்கிரஸ் என 3 தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி முன்னணியில் இருந்தது. முதல் சுற்றில் 10 தொகுதிகளில் பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 7 தொகுதியிலும், காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி 3 தொகுதியிலும் முன்னணியில் உள்ளது. மற்ற 2 தொகுதிகளின் ஓட்டு எண்ணப்பட்டு வருகிறது.

    மண்ணாடிப்பட்டில் பா.ஜனதா வேட்பாளர் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், காமராஜர் நகரில் ஜான்குமார், நெல்லிதோப்பில் ரிச்சர்ட், ஏனாமில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, நெடுங்காடு சந்திரபிரியாங்கா, மங்களம் தேனீ.ஜெயக்குமார், கதிர்காமம் கே.எஸ்.பி.ரமேஷ் ஆகியோரும் முன்னிலையில் உள்ளனர்.

    உப்பளத்தில் தி.மு.க. வேட்பாளர் அனிபால் கென்னடி, மாகியில் காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் பிரேம்பாத், லாஸ்பேட்டையில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியநாதன், ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

    கடந்த தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தது. தற்போது என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி முன்னணியில் இருந்து வருவதால் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.

    2-வது கட்டமாக புதுவையில் திருபுவனை, வில்லியனூர், இந்திராநகர், முத்தியால்பேட்டை, காலாப்பட்டு, உருளையன்பேட்டை, அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம் ஆகிய 8 தொகுதிகள், காரைக்காலில் திருநள்ளாறு, காரைக்கால் தெற்கு ஆகிய 2 தொகுதிகள் என மொத்தம் 10 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படும்.

    இதன் முழுமையான முடிவு மாலை 6 மணிக்கு தெரியும். தொடர்ந்து மாலை 6 மணிக்கு எஞ்சிய தொகுதிகளான ஊசுடு, உழவர்கரை, தட்டாஞ்சாவடி, ராஜ்பவன், முதலியார்பேட்டை, மணவெளி, பாகூர் உள்ளிட்ட 7 தொகுதிகள், காரைக்காலில் நிரவி திருப்பட்டினம் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் அணிகள் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.

    புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் அணிகள் இடையே நேரடி போட்டி இருந்தநிலையில் தற்போது முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது.

    புதுச்சேரியில்  தற்போதைய முன்னிலை நிலவரம்:

    என்.ஆர்.காங்கிரஸ்- 7

    காங்கிரஸ்- 3
    கொரோனா கண்காணிப்பு குழுவினர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை நேரடியாக சென்று கண்காணிப்பார்கள்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியில் சுற்றுவதாக புகார் எழுந்தது. இதனால் கொரோனா வேகமாக பரவும் அபாயம் உள்ளது.

    இந்தநிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் கொரோனா நோயாளிகளை வீடு தேடி சென்று கண்காணித்து வருகின்றனர். இந்த கண்காணிப்பு பணியை சுகாதாரத்துறை செயலர் அருண் தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து அருண் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா கண்காணிப்பு குழுவினர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை நேரடியாக சென்று கண்காணிப்பார்கள். இதற்காக அவர்களுக்கு 30 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. எனவே கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் தயவுசெய்து வீட்டிலேயே இருக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தால் கண்டிப்பாக ஆம்புலன்ஸ் மூலம் தான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். நோயாளிகள் அவசரத் தேவைக்கு 104 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

    மேலும் தொற்று பரிசோதனை செய்து கொண்ட பிறகு பரிசோதனை முடிவு வரும் வரை அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாசனை தெரியாமல் இருப்பது, சுவை தெரியாமல் இருத்தல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அனைவரும் 104 என்ற சேவை எண்ணை தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுவையில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?, புதிய முதல்-அமைச்சர் யார்? என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியாகவும், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க. ஓரணியாகவும் மற்றும் அ.ம.மு.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும், சுயேச்சைகள் என 324 பேர் போட்டியிட்டனர்.

    ஆனால், தேர்தலில் காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையில்தான் கடுமையான போட்டி நிலவியது. புதுவையில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் பா.ஜனதா தீவிரமாக செயல்பட்டது.

    இதற்காக பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், நிதின்கட்கரி, அர்ஜூன்ராம்மெக்வால், பா.ஜனதா தேசிய தலைவர் நட்டா ஆகியோர் புதுவையில் தீவிர தேர்தல் பிரசாரம் செய்தனர்.

    காங்கிரஸ் தரப்பில் மேலிட தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, வீரப்பமொய்லி, தினேஷ்குண்டுராவ், சஞ்சய்தத், பல்லம் ராஜூ உள்ளிட்ட பலரும் பிரசாரம் செய்தனர்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ரோடியர் மில் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

    காங்கிரஸ் - பா.ஜனதா

    காங்கிரஸ் தரப்பில் மத்திய பா.ஜனதா அரசின் பாராமுகம், கவர்னரின் தடைகளை சுட்டிக்காட்டி பிரசாரம் செய்தனர். தடைகளை மீறி எண்ணற்ற நலத்திட்டங்களை 85 சதவீதம் நிறைவேற்றி இருப்பதாக பிரசாரம் செய்தனர்.

    பா.ஜனதா தரப்பில் மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைந்தால் புதுவை வளர்ச்சி பெறும். சிறந்த புதுவையை உருவாக்குவோம் என கோ‌ஷத்தையும் முன் வைத்தனர்.

    புதுவை மக்கள் அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு உங்கள் கோரிக்கை, எங்கள் வாக்குறுதி என தேர்தல் அறிக்கையை பா.ஜனதா தயாரித்து வெளியிட்டது. இருதரப்பும் மக்களை கவரும் வகையில் பல்வேறு யுக்திகளை கையாண்டனர்.

    மீண்டும் ஆட்சியை தக்க வைக்க காங்கிரசும், புதிதாக ஆட்சியை அமைக்க பா.ஜனதாவும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இரு தரப்பிலும் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என அறிவிக்கப்படவில்லை.

    காங்கிரஸ், தி.மு.க கூட்டணியில் யார் அதிக இடங்களில் வெற்றி பெறுகிறார்களோ? அந்த கட்சிக்கே முதல்-அமைச்சர் பதவி என்ற பேச்சு எழுந்துள்ளது.

    அதேநேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கவில்லை.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் வெற்றி பெறும் எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுகூடி முதல்-அமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வார்கள்? என பா.ஜனதா பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தெரிவித்துள்ளார். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் புதுவையில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? புதிய முதல்-அமைச்சர் யார்? என்பது நாளை இரவு தெரிய வரும்.

    அத்தியாவசிய தேவைகள் இன்றி பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்று அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வெளியில் சுற்றும் நபர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    அத்தியாவசிய தேவைகள் இன்றி பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்று அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வெளியில் சுற்றும் நபர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.

    அதுமட்டுமின்றி பொதுமக்கள் முக கவசம், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை தொடக்கத்தில் மக்கள் சரிவர கடைபிடித்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. எங்கு பார்த்தாலும் திருவிழா போல் பொதுமக்கள் கூட்டம் உள்ளது.

    மார்க்கெட், நேருவீதி, காந்தி வீதி, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நிற்பதால் எளிதில் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் நோயாளிகளால் நிரம்பி வருகிறது. இதை பார்த்தாவது மக்கள் தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
    தாலிகட்டி 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டல் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    காரைக்கால்:

    காரைக்கால் ஸ்டாலின் நகரை சேர்ந்தவர் மேக்சிம் ஜுயூன்பிரே (வயது 27). இவர், கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் ஓட்டலில் வேலை செய்து வந்தார். கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி வந்த அவர், காரைக்காலில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்தார்.

    அப்போது இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் அந்த சிறுமியை ஆசைவார்த்தை கூறி நண்பர் ஒருவரின் வீட்டுக்கு மேக்சிம் ஜுயூன்பிரே அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கு வைத்து, சிறுமிக்கு வலுக்கட்டாயமாக தாலி கட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, அழுது கொண்டே தனது வீட்டுக்கு சென்றார். அப்போது சிறுமியின் கழுத்தில் தாலி கிடப்பதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அந்த சிறுமியிடம் விசாரித்தபோது அவள், தனக்கு மேக்சிம் ஜுயூன்பிரே தாலி கட்டி பாலியல் தொல்லை கொடுத்ததை தெரிவித்தாள். இதுகுறித்து காரைக்கால் நகர போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு மேக்சிம் ஜுயூன் பிரேவை நேற்று கைது செய்தனர்.
    கிருமாம்பாக்கத்தில் கார் மீது மினிலாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    கடலூர் அருகே காயல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாபதி (வயது 65).

    சம்பவத்தன்று இவர் தனது மனைவி விஜயலட்சுமி (55), உறவினர் விஜயா (27) ஆகியோருடன் காரில் புதுவை வந்து கொண்டிருந்தார். காரை வெங்கடாபதி ஓட்டி வந்தார்.

    கிருமாம்பாக்கத்தில் தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி எதிரே வந்தபோது அங்கு வந்த மினி லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது.

    இதில் விஜயலட்சுமியும், விஜயாவும் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக வெங்கடாபதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    காயமடைந்த இருவரும் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுகுறித்து வெங்கடாபதி கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி அருகே பிரிந்து வாழ்ந்த கணவர் குழந்தையை அழைத்து சென்றதால் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை சண்முகாபுரம் பாரதிபுரத்தை சேர்ந்தவர் ஹரி. தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மகள் எஸ்தர் ராணி (வயது 29). இவருக்கும் வேலூர் மாவட்டம் செண்ட தூரை சேர்ந்த விக்டர் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எஸ்தர்ராணி கணவரை விட்டு பிரிந்து கடந்த 1½ வருடமாக தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரங்கினியை சேர்ந்த மஞ்சினி என்பவருடன் எஸ்தர்ராணிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து எஸ்தர்ராணி மஞ்சினியுடன் மீனாட்சி பேட்டையில் குடும்பம் நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி எஸ்தர்ராணியின் முதல் கணவர் விக்டர் குழந்தையை பார்க்க வேண்டும் என்று கூறி எஸ்தர்ராணி வசித்த வீட்டுக்கு வந்தார்.

    பின்னர் அந்த குழந்தையை அவர் அழைத்து சென்று விட்டார். இதனால் எஸ்தர் ராணி மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

    இதில் மனமுடைய அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அவர் தான் வசித்த வாடகை வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.

    வெளியே சென்றிருந்த மஞ்சினி எஸ்தர்ராணி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் எஸ்தர்ராணியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே எஸ்தர்ராணி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது தந்தை ஹரி கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×