search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நோயாளி ஒருவரின் வீட்டிற்கு சென்று கண்காணிப்பு குழுவினர் விசாரணை நடத்திய காட்சி.
    X
    நோயாளி ஒருவரின் வீட்டிற்கு சென்று கண்காணிப்பு குழுவினர் விசாரணை நடத்திய காட்சி.

    வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளை கண்காணிக்க குழு அமைப்பு

    கொரோனா கண்காணிப்பு குழுவினர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை நேரடியாக சென்று கண்காணிப்பார்கள்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியில் சுற்றுவதாக புகார் எழுந்தது. இதனால் கொரோனா வேகமாக பரவும் அபாயம் உள்ளது.

    இந்தநிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் கொரோனா நோயாளிகளை வீடு தேடி சென்று கண்காணித்து வருகின்றனர். இந்த கண்காணிப்பு பணியை சுகாதாரத்துறை செயலர் அருண் தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து அருண் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா கண்காணிப்பு குழுவினர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை நேரடியாக சென்று கண்காணிப்பார்கள். இதற்காக அவர்களுக்கு 30 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. எனவே கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் தயவுசெய்து வீட்டிலேயே இருக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தால் கண்டிப்பாக ஆம்புலன்ஸ் மூலம் தான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். நோயாளிகள் அவசரத் தேவைக்கு 104 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

    மேலும் தொற்று பரிசோதனை செய்து கொண்ட பிறகு பரிசோதனை முடிவு வரும் வரை அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாசனை தெரியாமல் இருப்பது, சுவை தெரியாமல் இருத்தல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அனைவரும் 104 என்ற சேவை எண்ணை தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×