என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் 6,64,020 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    வேலூர்:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    அரக்கோணம் தொகுதியில் 14,94,929 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 11,45,831 வாக்குகள் பதிவானது.

    தி.மு.க. சார்பில் எஸ்.ஜெகத்ரட்சகன் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டார். அவர் 6,64,020 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க. இத்தொகுதியில் போட்டியிட்டது. பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி 3,40,574 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

    அமமுக வேட்பாளர் என்.ஜி.பார்த்திபன் 66 ஆயிரத்து 360 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாவேந்தன் 28 ஆயிரத்து 897 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜேந்திரன் 23 ஆயிரத்து 530 வாக்குகளும் பெற்றுள்ளனர். 
    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் தோற்கடித்தார்.
    திருச்சி:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் திருச்சி தொகுதியில் போட்டியிட்டது. காங்கிரஸ் வேட்பாளராக திருநாவுக்கரசர் களமிறங்கினார்.

    திருநாவுக்கரசர் 6,21,285 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் 1,61,999 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

    அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் 1,00,818 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வினோத் 65 ஆயிரத்து 286 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஆனந்தராஜா 42 ஆயிரத்து 134 வாக்குகளும் பெற்றுள்ளனர். 
    பாராளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 4,64,667 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    விருதுநகர்:

    தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

    நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.

    விருதுநகர் தொகுதியில் 14,80,600 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 10,66,217 வாக்குகள் பதிவானது.

    விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்தாகூர் 4,64,667 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    தே.மு.தி.க. வேட்பாளர் அழகர்சாமி 3,15,055 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருள்மொழிதேவன் 52,591, அமமுக வேட்பாளர் பரமசிவ அய்யப்பன் 1,07,033, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முனியசாமி 56,815 வாக்குகள் பெற்றுள்ளனர். 
    பாராளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 6,02,051 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    கிருஷ்ணகிரி:

    தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

    நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.

    கிருஷ்ணகிரி தொகுதியில் 15,26,348, மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 11,56,311 வாக்குகள் பதிவானது.

    கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார் 6,02,051 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமி 4,49,344 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதுசூதனன் 27,512, அமமுக வேட்பாளர் கணேசகுமார் 8,686, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் காரூண்யா சுப்பிரமணியம் 16,791 வாக்குகள் பெற்றுள்ளனர்.

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட என்ஆர் காங்கிரஸ் வேட்பாளரை 4,29,835 வாக்குகள் பெற்று வைத்தியலிங்கம் தோற்கடித்தார்.
    புதுவை:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    புதுவை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் 4,29,835 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமி 2,38,833 வாக்குகள் பெற்றார்.

    மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஏ.எஸ்.சுப்ரமணியன் 37 ஆயிரத்து 420 வாக்குகளும், அமமுக வேட்பாளர் தமிழ்மாறன் 4 ஆயிரத்து 648 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷர்மிளா பேகம் 22 ஆயிரத்து 361 வாக்குகளும் பெற்றனர். 
    மதுரை பாராளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் 4,42,935 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    மதுரை:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் 4,42,935 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அடுத்த இடத்தில் அதிமுக வேட்பாளர் ராஜ் சத்தியன் 3,06,256 வாக்குகள் பெற்றார்.

    மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அழகர் 84 ஆயிரத்து 656 வாக்குகளும், அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை 85 ஆயிரத்து 046 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாண்டியம்மாள் 42 ஆயிரத்து 576 வாக்குகளும் பெற்றனர். 
    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அசத்தலாக பேசியுள்ளார். அப்படி அவர் என்ன சொன்னார் என்பதை பார்ப்போம்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது. கட்சி துவங்கி 14 மாதங்களே ஆன நிலையில், கணிசமான அளவு வாக்குகளை பெற்றுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வெற்றி பெற்ற அரசியல் கட்சிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழகத்தின் எழுச்சியே எங்கள் இலக்கு. விவசாயிகளுக்கு எதிரான திட்டம் கூடாது. தேர்தல் வரும் போகும். ஆனால், எங்கள் இலக்கு தமிழகத்தின் வளர்ச்சியே ஆகும்.

    நேர்மையாக எப்படி இருக்க வேண்டுமோ அப்படிதான், நான்  மக்களை வழி நடத்துவேன். நம் கட்சி தொண்டர்களும் அப்படிதான் செயல்பட்டனர். இன்று தமிழகத்தில் மூன்றாவது இடம் மாற்று என மக்கள் நினைக்கும் அளவிற்கு மக்கள் நீதி மய்யம் செயல்பட்டுள்ளது. இன்னும் அயராது பாடுபடும்.

    நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு  நாங்கள் பேசக்கூடிய அளவிற்கு இந்த தேர்தலில் வாக்குகள் பெற்றுள்ளோம். மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்தையும் இந்தியாவின் ஒரு மாநிலமாக கருத வேண்டும். அரசியலை நான் தொழிலாக நினைக்கவில்லை. தொழிலாக நினைத்தால் அது மாபெரும் தவறு.

    14 மாத குழந்தையை தமிழக மக்கள் நடக்க, ஓட விட்டுள்ளனர். மக்களின் வாக்குகள், நாங்கள் நேர்மையான வழியில் பயணித்து பணிகளை மேற்கொள்ள மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.  தமிழக மக்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். தமிழக மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.  

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கத்தை தி.மு.க. வேட்பாளர் டிஆர் பாலு தோற்கடித்தார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

    நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 22,53,041, மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 13,88,666 வாக்குகள் பதிவானது.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு 4,91,220 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    பா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கம் 1,69,469 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேந்திரன் 53,027, அமமுக வேட்பாளர் தாம்பரம் நாராயணன் 25,804, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீதர் 80,058 வாக்குகள் பெற்றுள்ளனர். 
    பாராளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரை காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் தோற்கடித்தார்.
    திருவள்ளூர்:

    தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

    நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.

    திருவள்ளூர் (தனி) தொகுதியில் 19,46,242, மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 13,95,121 வாக்குகள் பதிவானது.

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டது. காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கிய ஜெயக்குமார் 6,79,685 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் வேணுகோபால் 3,55,938 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றி செல்வி 57,840, அமமுக வேட்பாளர் பொன்ராஜ் 29,345, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டாக்டர் லோகநாதன் 64,380 வாக்குகள் பெற்றுள்ளனர். 
    பாராளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் செல்வம் 6,84,004 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    காஞ்சிபுரம்:

    தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

    நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.

    காஞ்சிபுரம் தொகுதியில் 16,43,656, மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 12,14,086 வாக்குகள் பதிவானது.

    தி.மு.க. வேட்பாளர் ஜி.செல்வம் 6,84,004 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் 3,97,372 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிவரஞ்சினி 62,771, அமமுக வேட்பாளர் ராஜசேகரன் 55,213 வாக்குகள் பெற்றுள்ளனர். காஞ்சிபுரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை. 
    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட பாரிவேந்தர் 6,83,697 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    பெரம்பலூர்:

    தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

    நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.

    பெரம்பலூர் தொகுதியில் 13,91,011 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 10,94,659 வாக்குகள் பதிவானது.

    இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் 6,83,697 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதி 2,80,179 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாந்தி 53,545, அமமுக வேட்பாளர் ராஜசேகரன் 45,591 வாக்குகள் பெற்றுள்ளனர்.

    உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானி அபார வெற்றி பெற்றார். தனது வெற்றி குறித்து ஸ்மிரிதி என்ன சொல்கிறார் என பார்ப்போம்.
    அமேதி:

    பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக வேட்பாளராக ஸ்மிரிதி இரானி களமிறங்கினார். தேர்தல் 7 கட்டங்களாக முடிவடைந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.வாக்கு எண்ணிக்கை துவக்கம் முதலே ராகுல் காந்தி, ஸ்மிரிதி ஆகிய இருவருக்குமிடையே கடுமையான போட்டி நிலவியது.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுலை விட 55,120 வாக்குகள் அதிகம் பெற்று ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 4,67,598 ஆகும்.  தனது வெற்றி குறித்து ஸ்மிரிதி இரானி கூறியதாவது:

    அமேதிக்கு இன்று புதிய விடியல். இந்த வெற்றி புதிய உறுதியை அளிக்கிறது. அமேதி மக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அமேதியை நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் நம்பிக்கையை வாக்குகளாக செலுத்தியுள்ளீர்கள். தாமரையை அமேதியில் மலர வைத்துள்ளீர்கள். அமேதி தொகுதிக்கு பணியாற்ற என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

    நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை போன்று செயல்பட்டோம். தொண்டர்களின் மிகச்சிறப்பான பணிகளால் வென்றுள்ளோம். கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழந்த பாஜக தொண்டர்களின் குடும்பங்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
     
    ×