search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Virudhunagar constituency"

    • கூட்டணி தர்மத்தை மதித்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றேன்.
    • கேப்டன் இல்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அவரது ஆசியால்தான் நான் இயங்கி வருகிறேன்.

    சிவகாசி:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் விஜயகாந்த் மகனை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    உங்கள் அண்ணன் மகனுக்கு நீங்கள் பெருவாரியான வாக்குகளை அளிக்க வேண்டும். 32 வயதில் படித்து முடித்துவிட்டு எத்தனையோ கனவுகள் இருந்தாலும் அதை தூக்கி எறிந்து விட்டு தந்தையின் வழியில் மக்கள் சேவை செய்ய இந்த தொகுதியில் அவர் போட்டியிடுகின்றார். உங்கள் எல்லாருக்கும் தெரியும் தம்பிக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை. இந்த விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர் இந்த தொகுதி மக்களின் தலைமையில் தான் அவருக்கு திருமணம் நடக்கும்.

    கூட்டணி தர்மத்தை மதித்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றேன். எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாகவும் அனைத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. இந்த தொகுதியில் தே. மு.தி.க. வெற்றி பெற்றவுடன் அவர் பல நல்ல திட்டங்களை இந்த தொகுதியில் அறிவித்து செயல்படுத்த உள்ளார். அதில் சிலவற்றை என்னிடம் கூறினார். அதை நான் உங்களிடம் கூறுகின்றேன்.

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் கேப்டன் பிறந்தநாள் அன்று 60 பெண்களை தேர்வு செய்து பெண்கள் நாட்டின் கண்கள் திட்டத்தின் மூலம் எங்களது சொந்த நிதியிலிருந்து அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க உள்ளார். ஆண்டுதோறும் 6 லட்சம் வீதம் 5 வருடத்தில் ரூ.30 லட்சம் வரை பெண்களுக்கு நிதி உதவி வழங்க உள்ளார்.

    தொகுதி முழுவதிலும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் தொடங்கப்படும். இலவச தையல் பள்ளிகள், இலவச நீட் கோச்சிங் சென்டர், படித்த படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு இலவச தையல் மிஷின்கள் வாங்கி கொடுத்து அவர்கள் வாழ்வாதாரம் உயர நடவடிக்கை, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாளாக உயர்த்தவும் கூலித் தொகையை ரூ.500 ஆக அதிகரிக்கவும் பாராளுமன் றத்தில் கோரிக்கை வைப்பார்.

    நமது வேட்பாளர் வயதில் சின்னவர் என்று நினைக்காதீர்கள். அவர் நல்ல அறிவாளி, உலகம் முழுவதும் சுற்றி வந்துள்ளார். பல்வேறு மொழிகளை பேசும் திறமை கொண்டவர். பாராளுமன்றத்தில் உங்கள் பிரச்சனைகளை எழுப்பி அதற்கு தீர்வு காணும் வல்லமை அவரிடம் உள்ளது. குணத்திலும், பழகுவதிலும் கேப்டனின் மறு உருவம். 34 வருடம் கேப்டனுக்கு மனைவியாக வாழ்ந்தும், அவருக்கு தாயாக இருந்தும் சேவை செய்திருக்கிறேன். கேப்டன் இல்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அவரது ஆசியால்தான் நான் இயங்கி வருகிறேன்.

    இவர் அவர் பேசினார்.

    • பெண்களுக்கு தகப்பனாராகவும், சகோதரராகவும் திட்டதை நமது முதல்வர் கொண்டு வந்துள்ளார்.
    • ராகுல் காந்தியும் இந்தியாவில் மகாலட்சுமி திட்டத்தை அறிவித்துள்ளார்.

    சிவகாசி:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து சிவகாசி அருகே உள்ள தாயில் பட்டியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், மக்களிடம் ஓட்டு கேட்க தி.மு.க.வுக்கு அதிக உரிமை உள்ளது. வானம் பார்த்த பூமியான விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில் பிரதானமாக உள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்கும், அதில் மாணிக்கம் தாகூர் அமைச்சராக பொறுப்பேற்பார். அப்போது பட்டாசு பிரச்சனைக்கு நிரந்தரமாக தீர்வு காணப்படும்.

    காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலையை 150 நாட்களாகவும், சம்பளம் 400 ஆகவும் உயர்த்தி தரப்படும். தேர்தல் முடிந்த பின்னர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் உரிமை திட்டம் இந்தியாவில் தமிழ் நாட்டில் மட்டும் தான் செயல்படுகிறது. பெண்களுக்கு தகப்பனாராகவும், சகோதரராகவும் திட்டதை நமது முதல்வர் கொண்டு வந்துள்ளார்.

    அதனைப் போன்று ராகுல் காந்தியும் இந்தியாவில் மகாலட்சுமி திட்டத்தை அறிவித்துள்ளார். அதில் பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்படும். அதற்காக பத்திரம் ஒன்று எழுதி உறுதி கொடுத்துள்ளார் என்றார். பிரசாரத்தில் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் கைச்சின்னத்தில் வாக்களித்து சமூக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • பிரதமர் மோடி பதவிக்கு வந்த போது கேஸ் சிலிண்டர் விலை ரூ. 450 ஆக இருந்தது.
    • மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலர்ந்தால் கேஸ் விலையை ரூ.500 ஆக குறைக்கப்படும்.

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம், ஹார்வி பட்டி, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி பதவிக்கு வந்த போது கேஸ் சிலிண்டர் விலை ரூ. 450 ஆக இருந்தது. தற்போது அதன் விலை ரூ.ஆயிரத்திற்கு மேல் சென்று விட்டது. தற்போது தேர்தலுக்காக 100 ரூபாய் குறைத்தவர்கள், மீண்டும் வெற்றி பெற்றால் சமையல் கேஸ் விலையை ரூ.2000 ஆக உயர்த்தி விடுவார்கள். மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலர்ந்தால் கேஸ் விலையை ரூ.500 ஆக குறைக்கப்படும். இது தவிர மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு, கல்வி கடன் ரத்து செய்யப்படும். மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு 1 லட்சம் ரூபாய் ஆண்டுக்கு வழங்கப்பட உள்ளது. இதேபோல ஏழைகளுக்கு ரூ.25 லட்சத்தில் மருத்துவ காப்பீடு ஊரக வேலை உறுதித்திட்டம் 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும். மேலும் அதற்கான ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதே போல இளைஞர்களுக்கு மத்திய அரசில் 30 லட்சம் காலி பணியிடங்கள் உடனடியாக நிறைவேற்றப்படும். எனவே வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி மீண்டும் பிரதமராகும் வகையில் அனைவரும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன், துணைச் செயலாளர் பாலாஜி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன், பகுதி செயலாளர் உசிலை சிவா, மண்டல தலைவர் சுவிதா, மண்டல தலைவர் கவிதா விமல், அணி அமைப்பாளர்கள் விமல், ஆலங்குளம் செல்வம், கீழக்குயில்குடி வி.ஆர். செல்வந்திரன், காங்கிரஸ் கட்சியின் தொகுதி பொறுப்பாளர் எம்.பி.எஸ். பழனிக்குமார், தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தென்பழஞ்சி சுரேஷ், கரு வேலம்பட்டி வெற்றி, சாமி வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேர்தலில் நீங்கள் அளிக்கும் வாக்கு என்பது இந்தியாவினுடைய பிரதமரை தீர்மானிக்கின்ற வாக்கு.
    • கப்பலூர் டோல்கேட்டை பலமுறை அகற்றக்கோரி போராட்டம் நடத்தினோம்.

    விருதுநகர்:

    இந்தியா கூட்டணி சார்பில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியங்குளம், செக்கானூரணி, கிண்ணிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை தீவிர வாக்கு சேரித்தார். செக்காலூ ரணியில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலையணிவித்து அவர் பேசியதாவது:-

    இந்த தேர்தலில் நீங்கள் அளிக்கும் வாக்கு என்பது இந்தியாவினுடைய பிரதமரை தீர்மானிக்கின்ற வாக்கு. இந்தியாவின் பிரதமராக யார் வரவேண்டும். யார் வரக்கூடாது தீரமானிக்கும் தோதல். 100 நாள் வேலை திட்டத்தை காப்பாற்றும் பிரதமர் வேண்டுமா? அல்லது 100 நாள் வேலையை முடித்து வைக்கிற பிரதமர் வேண்டுமா? என்பதை பொதுமக்கள் யோசித்து பார்க்க வேண்டும். சிலிண்டர் விலை 2000 ரூபாய் உயர்த்தும் பிரதமர் வேண்டுமா? இல்லை ஆயிரம் ரூபாயிலிருந்து 500 ரூபாயாக குறைக்கும் பிரமர் வேண்டுமா? என்று பார்க்க வேண்டும். பிரதமர் மோடி 100 நாள் வேலையை கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுத்து கொன்று வருகிறார். தேர்தல் மூலம் மோடிக்கு நீங்கள் வழியனுப்பு விழா நடத்த வேண்டும். அதற்காக வரும் 19ந் தேதி நீங்கள் கை சின்னத்துக்கு ஓட்டு போடணும். ராகுல் காந்தி பிரதமர் ஆனால் மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டத்தை செயல்படுத்துவார். இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் ரூ. 1 லட்ச ரூபாய் ஆண்டுக்கு கிடைக்கும். 10 கோடி பெண்களுக்கு இந்த திட்டம் கொடுக்க போகிறார். இந்த திட்டத்தில் பெண்கள் திரளாக சேர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து கப்பலூர் அருகே உச்சப்பட்டியில் மாணிக்கம் தாகூர் பிரசாரம் மேற்கொண்டு பேசுகையில், கப்பலூர் டோல்கேட்டை பலமுறை அகற்றக்கோரி போராட்டம் நடத்தினோம்.

    டோல்கேட்டால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் கப்பலூர் டோல்கேட் மூடப்படும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • ராகுல் காந்தி பிரதமரானால் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்.
    • பிரதமர் மோடி அரசு 112 பணக்காரர்களுக்கு மட்டும் செயல்படுகிறது.

    விருதுநகர்:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை யூனியனில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பட்டாசு தொழில் தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் பட்டாசு தொழில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த தொழில் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு ஆதரவு தேவை.

    ராகுல் காந்தி பிரதமரானால் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும். இந்தியாவில் 10 கோடி பெண்களுக்க வருடந்தோறும் ரூ.1 லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும். பெண்களிடம் பணம் இருந்தால் குடும்பம். ஊர், மாவட்டம், மாநிலம், நாடு நன்றாக இருக்கும்.

    எனவே தான் ராகுல் காந்தி இந்த திட்டத்தை அறிவித்துள்ளார். பிரதமர் மோடி அரசு 112 பணக்காரர்களுக்கு மட்டும் செயல்படுகிறது. அவர்களுக்கு ரூ.17 லட்சம் கோடி கடனை மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளது. அதானி, அம்பானி போன்றவர்களுக்காக பாஜக செயல்படுகிறது.

    இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஏழை தாய்மார்களின் அரசாக இருக்கும். எனவே என்னை கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பாராளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 4,64,667 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    விருதுநகர்:

    தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

    நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.

    விருதுநகர் தொகுதியில் 14,80,600 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 10,66,217 வாக்குகள் பதிவானது.

    விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்தாகூர் 4,64,667 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    தே.மு.தி.க. வேட்பாளர் அழகர்சாமி 3,15,055 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருள்மொழிதேவன் 52,591, அமமுக வேட்பாளர் பரமசிவ அய்யப்பன் 1,07,033, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முனியசாமி 56,815 வாக்குகள் பெற்றுள்ளனர். 
    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்புவை களம் இறக்க ராகுல்காந்தி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து குஷ்பு விருதுநகரில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள். #Kushboo
    சென்னை:

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இதில் 9 தொகுதிகளில் தமிழ்நாட்டிலும், ஒரு தொகுதியில் புதுச்சேரியிலும் காங்கிரஸ் போட்டியிட உள்ளது.

    காங்கிரஸ் கட்சிக்கு கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், ஈரோடு, திருவள்ளூர், சிவகங்கை, ஆரணி, சேலம் ஆகிய 9 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 9 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக செல்வாக்கும், வெற்றி வாய்ப்பும் உள்ள தொகுதிகள் ஆகும்.

    இதனால் இந்த 9 தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் தலைவர்களிடம் கடும் போட்டி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்களே இந்த 9 தொகுதிகளில் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்புவை களம் இறக்க ராகுல்காந்தி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் முக்கிய தொகுதி ஒன்றில் நிறுத்தி குஷ்புவை பாராளுமன்றத்துக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று ராகுல் வியூகம் வகுத்து இருப்பதாக டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    இதையடுத்து தமிழ்நாட்டில் குஷ்பு எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அனேகமாக குஷ்பு விருதுநகரில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள்.

    இதுபற்றி குஷ்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவர் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருப்பது கடந்த சில பேட்டிகளில் அவர் அளித்த பதில்கள் மூலம் உணர முடிகிறது.

    பெரும்பாலான தடவை அவர், “நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இதுவரை சீட் கேட்கவில்லை. ஒருவேளை தலைவர் ராகுல்காந்தி என்னை தேர்தலில் போட்டியிட சொன்னால் மறுக்க மாட்டேன். நிச்சயம் போட்டியிடுவேன்.

    இல்லை என்றாலும் நான் கவலைப்படப்போவது இல்லை. தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு தீவிர பிரசாரம் செய்வேன். எனது திட்டத்தில் மாற்றம் இல்லை” என்று கூறியுள்ளார்.

    எனவே விருதுநகரில் குஷ்பு களம் இறங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. #Congress #Kushboo
    ×