என் மலர்
விருதுநகர்
வெம்பக்கோட்டை பகுதியில் தொடர்மழையினால் சூரியகாந்தி விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தாயில்பட்டி:
வெம்பக்கோட்டை ஒன்றியம் சங்கரபாண்டியபுரம், செவல்பட்டி, ஊத்துப்பட்டி, தாயில்பட்டி, எட்டாக்காபட்டி, மீனாட்சிபுரம், புல்ல க்கவுண்டன்பட்டி, கோட்டைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 300 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி பயிரிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பெய்த தொடர் மழையினால் சூரியகாந்தி பூக்கள் அதிகமாக பூக்க தொடங்கி உள்ளது. சூரியகாந்தி விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
வெம்பகோட்டை ஒன்றியத்தில் பெரும்பாலான கிராமங்களில் தற்போது சூரியகாந்தி சாகுபடி செய்துள்ளோம். கடந்த நவம்பர் மாதம் சூரியகாந்தியை சாகுபடி செய்தோம்.
தற்போது கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக தற்போது பூக்களின் விளைச்சல் அதிகமாக உள்ளது. வருகிற ஜனவரி மாதம் கடைசியில் அல்லது பிப்ரவரியில் அறுவடைக்கு தயாராகும்.
வெம்பக்கோட்டை அணை, கண்மாய்கள், ஊருணிகள் ஆகியவற்றில் தற்போது போதிய அளவு தண்ணீர் இருப்பதாலும், மழை இருப்பதாலும் இந்த ஆண்டு மகசூல் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
தற்போது குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வரை விலை இருப்பதால் விவசாயிகளும் ஆர்வத்துடன் சாகுபடி செய்துள்ளோம். வருண பகவான் கை கொடுத்தால் நாங்கள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தளவாய்புரம் அருகே இரு சக்கர வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தளவாய்புரம்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது57). கட்டிட தொழிலாளி. இந்தநிலையில் ராஜா நேற்று மாலை தளவாய்புரம் அருகே உள்ள சோழபுரத்தில் உள்ள தனது தாயை பார்க்க சோழபுரம் தனியார் மில் முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது.
இதில் தலையில் படுகாயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இருசக்கர வாகனம் ஓட்டி வந்த பட்டியூர் சேர்ந்த இசக்கி ராஜ் (28) படுகாயமடைந்தார். இதுபற்றி தளவாய்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்த இசக்கி ராஜை சிகிச்சைக்காகவும், பலியான ராஜாவை பிரேத பரிசோதனைக்காகவும் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விருதுநகர் அருகே வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
ராஜபாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 56). இவர் தபால் துறையில் ஒப்பந்தக்காரர் ஆக உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் என்பவரிடம் அவரது 2 மகன்களுக்கும் தபால் துறையில் வேலை வாங்கி தருவதாக 2018-ம் ஆண்டு ரூ.10 லட்சம் வாங்கி உள்ளார். ஆனால் வேலை வாங்கி தராத நிலையில் பணத்தையும் திருப்பி தரவில்லை. இது பற்றி மீனாட்சி சுந்தரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மாரியப்பனை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
ராஜபாளையம் அருகே விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்:
விவசாய மசோதா திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளர் முனியாண்டி தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசை கண்டித்தும், வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 50 பேரை கீழராஜகுலராமன் போலீசார் கைது செய்தனர்.
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் பேராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சிவகாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசு வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 17 பெண்கள் உள்பட 33 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 18 ஆயிரத்து 62 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 912 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதில் 15 ஆயிரத்து 579 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 3,329 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 88 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
8 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் நேற்று மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,928 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட சுகாதாரத்துறை பாதிக்கப்பட்டோரின் விவரங்களை முழுமையாக தெரிவிக்கவில்லை. மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து நோய் பாதிப்படைந்தவர்கள் விவரங்கள் முழுமையாக தெரிவிக்கப்படாத நிலை நீடித்த போதும் அதுபற்றி சுகாதாரத் துறையினருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்காத நிலையே தொடர்கிறது.
மேலும் மாநில சுகாதாரத்துறை வெளியிடும் பாதிப்படைந்தவர்கள் பட்டியலுக்கும், மாவட்ட சுகாதாரத்துறை வெளியிடும் பட்டியல்களுக்கும், முரண்பாடு தொடர்கிறது. இந்த முரண்பாடுகளை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மாவட்ட மக்களுக்கு மாவட்ட சுகாதாரத்துறை மீதான நம்பிக்கை குறையும் நிலை ஏற்படும்.
மேலும் மாவட்ட சுகாதாரத்துறை நேற்று முன்தினம் 1,990 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் இதுவரை 3,329 பேருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகளை அறிவிக்கவில்லை. தமிழக அரசு மருத்துவ பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்கவேண்டும் என அறிவுறுத்தி இருந்தபோதிலும் மாவட்ட சுகாதாரத்துறை தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்காத நிலையில் தினசரி ஆயிரக்கணக்கான பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படாத நிலையே நீடிக்கிறது.
மருத்துவ பரிசோதனைகளும் தினசரி சீராக செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. மேலும் அரசு அறிவுறுத்தியுள்ளபடி நோய்த்தடுப்பு விதிமுறைகளும் முறையாக பொது இடங்களில் பின்பற்றப்படுவதில்லை.
அதனை கண்காணிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையே நீடிக்கிறது. மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது ஆய்வு கூட்டம் நடத்தி நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொது இடங்களில் விதிமுறைகள் பின்பற்றப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அரசு வழிகாட்டல்கள் முறையாக பின்பற்றப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியும் அதிகாரிகள் அதனை செயல்படுத்த தயாராக இல்லாத நிலையே நிலவுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினையில் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

ராஜபாளையத்தில் தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்தவரை கத்தியால் குத்திக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு மலையடிபட்டியை சேர்ந்தவர் ராமர் (வயது 52). எலெக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மாடசாமி. அவருடைய மனைவி மாரியம்மாள் (45). இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். மாடசாமி பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். இதனால் மாரியம்மாள், மகன்களுடன் ஊரில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் அவருக்கு, ராமருடன் பழக்கம் ஏற்பட்டது. இதுவே நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்தனர். இதையறிந்து மாரியம்மாளின் மகன் மாடசாமி மதன் (25) மற்றும் உறவினர்கள் கண்டித்தனர்.
இருப்பினும் மாரியம்மாளுடனான தொடர்பை ராமர் கைவிடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாடசாமி மதன், ராமரை சரமாரியாக கத்தியால் குத்தினார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் ராமர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடசாமி மதனை கைது செய்தனர்.
அனுப்பன்குளத்தில் நாளை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
சிவகாசி:
சிவகாசி கோட்டத்தில் உள்ள அனுப்பன்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாத பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் அனுப்பன்குளம், சுந்தரராஜபுரம், மீனம்பட்டி, பேராபட்டி, சின்னகாமன்பட்டி, நாரணாபுரம், செல்லிநாயக்கன்பட்டி ஆகிய பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரியத்தின் சிவகாசி பகிர்மான செயற்பொறியாளர் முரளிதரன் கூறினார்.
நரிக்குடி வட்டாரத்தில் இதுவரை 22 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகர் கூறினார்.
காரியாபட்டி:
நரிக்குடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் பஞ்சவர்ணம் தலைமையில் நடைபெற்றது. யூனியன் துணைத்தலைவர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து கூறினர். அதன் விவரம் வருமாறு:-
கவுன்சிலர் ஜெயலட்சுமி பேசியதாவது:-
நரிக்குடி யூனியன் திருமாணிக்கனேந்தல், சேதுராயனேந்தல், டி.வேலங்குடி சாலை பணிகள் விரைவில் முடிக்க வேண்டும்.
ஆணையாளர் சுப்பிரமணி:- தற்போது சாலைகளில் முதலில் பாலங்கள் அமைக்கப்பட்டு பின்னர் விரைவில் சாலை பணி முடிக்கப்படும். மேலும் மழை காலம் என்பதால் சாலைகள் விரைந்து செய்ய முடியாத நிலையுள்ளது. விரைவில் சாலை பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கவுன்சிலர் போஸ்:- கிராம ஊராட்சிகளில் தற்காலிக அடிப்படையில் சுகாதார பணிகள் செய்வதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கு சம்பளம் யூனியன் அலுவலகம் பொது நிதியில் இருந்து வழங்கப்படுகிறது. அவர்கள் எந்த பணி செய்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. எனவே அவர்கள் என்ன பணி செய்கிறார் என இந்த கூட்டத்தில் தெரியப்படுத்த வேண்டும்.
யூனியன் ஆணையாளர் சுப்பிரமணி:- நரிக்குடி வட்டார மருத்துவ அலுவலர் அவர்களின் பரிந்துரையின் பேரில் தற்காலிக சுகாதார பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு கிராமங்களிலும் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளதா? வீடுகளின் சுற்றுப்புற சூழல் எப்படி உள்ளது என்பதை அறிந்து செயல்படுத்தி வருகின்றனர்.
நரிக்குடி சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகர் கூறியதாவது:- நரிக்குடி வட்டார பகுதிகளில் சுகாதாரபணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. நரிக்குடி வட்டாரத்தில் இதுவரை 22 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
இவ்வாறு கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து கூறினர்.
ஆலங்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்துதவறி விழுந்த முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள இ.டி.ரெட்டியபட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் வெங்குசாமி (வயது 68). இவர் இ.டி. ரெட்டியபட்டியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் சித்துராஜபுரம் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி அவர் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
திருத்தங்கல் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்தவர் கணேசன் மகன் முனீஸ்வரன் (வயது 29). இவர் திருத்தங்கல்- செங்கமல நாச்சியார்புரம் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த திருத்தங்கல் சத்யாநகரை சேர்ந்த சுப்புராஜ் (41) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி முனீஸ்வரன் சட்டைபையில் இருந்த ரூ.450-ஐ பறித்துக் கொண்டு தப்பி ஓடி உள்ளார். இதுகுறித்து முனீஸ்வரன், திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சுப்புராஜை கைது செய்தனர்.
சிவகாசி அருகே உள்ள சுக்கிரவார்பட்டியில் புதிய கால்நடை மருத்துவ கிளை நிலையத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சிவகாசி:
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சுக்கிரவார்பட்டி கிராமத்தில் ரூ.4 லட்சம் செலவில் புதிய கால்நடை மருத்துவ கிளை நிலையம் அமைக்க கடந்த 15.10.2020 அன்று அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் சுக்கிரவார்பட்டியில் புதிய கால்நடை மருத்துவ கிளை அமைக்கப்பட்டது.
இதன் திறப்புவிழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு புதிய கால்நடை மருத்துவ கிளையை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-
விருதுநகர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 1,026 பயனாளிகளுக்கு தலா ஒரு பசுமாடு வீதம் 1,026 பசுமாடுகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு ரூ.3 கோடியே 91 லட்சத்து 74, 510 செலவு செய்துள்ளது.
அதே போல் 6,229 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே6 லட்சத்து 44, 028 செலவில் 24,916 ஆடுகள் வழங்கி உள்ளது. இதே போல் கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் 550 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 83 ஆயிரத்து 750 செலவில் 18, 750 கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளது. இதே போல் சிவகாசி சட்ட மன்ற தொகுதியில் 9 கால்நடை மருந்தகங்கள், 6 கால்நடை கிளை நிலையங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
2020-2021-ம் ஆண்டில் 400 பயனாளிகளுக்கு விலையில்லா கறவைபசுக்கள் வழங்கப்பட உள்ளது. இதேபோல் மாவட்டம் முழுவதும் 4,767 பேருக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட உள்ளன. இதில் சிவகாசி தொகுதியில் 482 பேருக்கு வெள்ளாடுகள் வழங்கப்படும். அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற்று மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கண்ணன், சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், தாசில்தார் வெங்கடேசன், அ.தி.மு.க. நிர்வாகிகள் ரவிச்சந்திரன், வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், கருப்பசாமி, பொன்சக்திவேல், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் சுபாஷினி, ஒன்றிய கவுன்சிலர் ஆழ்வார் ராமானுஜம், பஞ்சாயத்து தலைவர் பாண்டியம்மாள், துணைத்தலைவர் அதிவீரன்பட்டி செல்வம் மற்றும் கால்நடைபராமரிப்புத்துறை அதிகாரிகள், டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் எலக்ட்ரீசியன் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு மலையடிபட்டியைச் சேர்ந்தவர் ராமர் (வயது52), எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மாடசாமி. இவரது மனைவி மாரியம்மாள் (45). இவர்களுக்கு மாடசாமி மதன் (25) உள்பட 4 மகன்கள் உள்ளனர்.
மாடசாமி பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். இதனால் மாரியம்மாள் மகன்களுடன் இங்கு வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கு ராமருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் பேசி வந்தார். இது தெரியவந்ததும் மாரியம்மாளின் மகன் மாடசாமி மதன் மற்றும் உறவினர்கள் கண்டித்தனர்.
இருப்பினும் மாரியம்மாளுடன் உள்ள தொடர்பை ராமர் துண்டிக்கவில்லை. பலமுறை கண்டித்தும் அவர் கேட்காததால் மாடசாமி மதன் ஆத்திரம் அடைந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு ராமர் தனது வீட்டின் வாசலில் உட்கார்ந்திருந்தார். அப்போது அங்கு மாடசாமி மதன் வந்தார். ராமரை பார்த்ததும் அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
பலமுறை கண்டித்தும் ஏன் எனது தாயாருடன் பழகுகிறாய் என கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த மாடசாமி மதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமரை சரமாரியாக குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டதும் வீட்டிற்குள் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். அங்கு ராமர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அவரது உடலில் 15 இடங்களில் கத்திக்குத்து விழுந்திருந்தது. அவரை உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் ராமர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கணேஷ் தாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.
அப்போது சாலையில் பிரமை பிடித்ததுபோல் கத்தியுடன் மாடசாமி மதன் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ராமர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் எலக்ட்ரீசியன் கொலை செய்யப்பட்ட விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.