search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்.
    X
    பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்.

    வெம்பக்கோட்டை பகுதியில் தொடர்மழை: சூரியகாந்தி விளைச்சல் அமோகம்

    வெம்பக்கோட்டை பகுதியில் தொடர்மழையினால் சூரியகாந்தி விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
    தாயில்பட்டி:

    வெம்பக்கோட்டை ஒன்றியம் சங்கரபாண்டியபுரம், செவல்பட்டி, ஊத்துப்பட்டி, தாயில்பட்டி, எட்டாக்காபட்டி, மீனாட்சிபுரம், புல்ல க்கவுண்டன்பட்டி, கோட்டைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 300 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி பயிரிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பெய்த தொடர் மழையினால் சூரியகாந்தி பூக்கள் அதிகமாக பூக்க தொடங்கி உள்ளது. சூரியகாந்தி விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:

    வெம்பகோட்டை ஒன்றியத்தில் பெரும்பாலான கிராமங்களில் தற்போது சூரியகாந்தி சாகுபடி செய்துள்ளோம். கடந்த நவம்பர் மாதம் சூரியகாந்தியை சாகுபடி செய்தோம்.

    தற்போது கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக தற்போது பூக்களின் விளைச்சல் அதிகமாக உள்ளது. வருகிற ஜனவரி மாதம் கடைசியில் அல்லது பிப்ரவரியில் அறுவடைக்கு தயாராகும்.

    வெம்பக்கோட்டை அணை, கண்மாய்கள், ஊருணிகள் ஆகியவற்றில் தற்போது போதிய அளவு தண்ணீர் இருப்பதாலும், மழை இருப்பதாலும் இந்த ஆண்டு மகசூல் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

    தற்போது குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வரை விலை இருப்பதால் விவசாயிகளும் ஆர்வத்துடன் சாகுபடி செய்துள்ளோம். வருண பகவான் கை கொடுத்தால் நாங்கள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×