search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 18 ஆயிரத்து 62 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 912 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதில் 15 ஆயிரத்து 579 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 3,329 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 88 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    8 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் நேற்று மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,928 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்ட சுகாதாரத்துறை பாதிக்கப்பட்டோரின் விவரங்களை முழுமையாக தெரிவிக்கவில்லை. மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து நோய் பாதிப்படைந்தவர்கள் விவரங்கள் முழுமையாக தெரிவிக்கப்படாத நிலை நீடித்த போதும் அதுபற்றி சுகாதாரத் துறையினருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்காத நிலையே தொடர்கிறது.

    மேலும் மாநில சுகாதாரத்துறை வெளியிடும் பாதிப்படைந்தவர்கள் பட்டியலுக்கும், மாவட்ட சுகாதாரத்துறை வெளியிடும் பட்டியல்களுக்கும், முரண்பாடு தொடர்கிறது. இந்த முரண்பாடுகளை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மாவட்ட மக்களுக்கு மாவட்ட சுகாதாரத்துறை மீதான நம்பிக்கை குறையும் நிலை ஏற்படும்.

    மேலும் மாவட்ட சுகாதாரத்துறை நேற்று முன்தினம் 1,990 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் இதுவரை 3,329 பேருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகளை அறிவிக்கவில்லை. தமிழக அரசு மருத்துவ பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்கவேண்டும் என அறிவுறுத்தி இருந்தபோதிலும் மாவட்ட சுகாதாரத்துறை தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்காத நிலையில் தினசரி ஆயிரக்கணக்கான பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படாத நிலையே நீடிக்கிறது.

    மருத்துவ பரிசோதனைகளும் தினசரி சீராக செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. மேலும் அரசு அறிவுறுத்தியுள்ளபடி நோய்த்தடுப்பு விதிமுறைகளும் முறையாக பொது இடங்களில் பின்பற்றப்படுவதில்லை.

    அதனை கண்காணிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையே நீடிக்கிறது. மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது ஆய்வு கூட்டம் நடத்தி நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொது இடங்களில் விதிமுறைகள் பின்பற்றப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அரசு வழிகாட்டல்கள் முறையாக பின்பற்றப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியும் அதிகாரிகள் அதனை செயல்படுத்த தயாராக இல்லாத நிலையே நிலவுகிறது.

    எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினையில் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
    Next Story
    ×