என் மலர்
விருதுநகர்
உள்ளாட்சி தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
விருதுநகர்:
விருதுநகரில் இன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாக்களில் முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். இன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தொண்டர்களின் கண்களில் இதனை காணமுடிந்தது.
தி.மு.க. அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் சரியாக செயல்படவில்லை. கொடுக்கப்பட்ட பொருட்களில் தரம் இல்லை. முறைகேடு நடந்துள்ளது. இதனால் அவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் தோல்வி நிச்சயம்.
ஜல்லிக்கட்டு போட்டியில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. மேலும் விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. ஜல்லிக்கட்டை மீட்டது அ.தி.மு.க. தான்.
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கைது விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணம் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. எனவே அதில் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியால்தான் இது நடந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி புகாரில் தொடர்புடைய அதிமுக முன்னாள் நிர்வாகியிடம் போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் தனது சகோதரி மகனுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் விஜயநல்லதம்பியிடம் ரூ.30 லட்சம் கொடுத்ததாகவும், பணத்தை பெற்றுக்கொண்ட அவர் வேலை வாங்கி தராமல் மோசடி செய்து விட்டதாகவும் புகார் கூறி இருந்தார்.
இந்த புகார் குறித்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் பணத்தை முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் கொடுத்ததாகவும், அவர் தான் மோசடி செய்து விட்டார் எனவும் விஜய நல்லதம்பி போலீசில் புகார் தெரிவித்தார். மேலும் ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த புகார்களின் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. அப்போது ராஜேந்திரபாலாஜி, விஜய நல்லதம்பி ஆகியோர் தலை மறைவாகி விட்டனர்.
இதில் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி உச்சநீதி மன்றம் ஜாமீன் வழங்கியதால் தற்போது விடுதலையாகி உள்ளார்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த விஜய நல்லதம்பியை கோவில்பட்டி அருகே தனிப்படையினர் பிடித்தனர். அவரை விசாரணைக்காக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கு போலீஸ் சூப்பிரண்டு மனோகர், கூடுதல் சூப்பிரண்டு குத்தாலிங்கம் ஆகியோர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இரவு 11.30 மணிக்கு விஜய நல்லதம்பியை விடுவித்த போலீசார் நாளை (இன்று) விசாரணைக்கு ஆஜராகும் படி அறிவுறுத்தினர்.
அதன்படி விஜய நல்லதம்பி இன்று பகல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகம் வந்தார். அவரிடம் போலீஸ் சூப்பிரண்டு மனோகர், கூடுதல் சூப்பிரண்டு குத்தாலிங்கம் ஆகியோர் இன்றும் விசாரணை நடத்தினர். மோசடி புகார்கள் குறித்து பல்வேறு கேள்விகளை அவர்கள் கேட்டனர்.
இதற்கிடையில் விஜய நல்லதம்பியை கைது செய்யாமல் போலீசார் விடுவித்தது அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், ராஜேந்திர பாலாஜி வழக்கில் போலீசார் பாரபட்சமாக நடந்து கொள்வதாக தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். 3 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி அருகே பேர்நாயக்கன்பட்டி ஊருணி உள்ளது. நேற்று அருந்ததியர் காலனியை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரின் மனைவி சந்தனமாரி (வயது 27) அந்த ஊருணியில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென ஆழமான பகுதிக்கு சென்று விட்டார்.
உடனே அதிர்ச்சி அடைந்த அங்கு குளித்து கொண்டு இருந்த காளியம்மாள், சுந்தரம்மாள், ஆகியோர் நீரில் மூழ்கிய சந்தன மாரியை மீட்க முயற்சி செய்தனர். அவர்களால் மீட்க முடியவில்லை. பெண்கள் சத்தம் போடுவதை கேட்ட அந்த வழியாக சென்றவர்கள் தண்ணீரில் இறங்கி நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் சந்தனமாரியின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து சுந்தர்ராஜ் அளித்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர் அருகே என்.வெங்கடேஸ்வரபுரத்தை சேர்ந்த சண்முகையா மகள் அபிநயா (வயது 19). இவர் சாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய தோழி பொன்மாடன் மகள் மனோரஞ்சிதம் (17). இவர் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று என்.வெங்கடேஸ்வரபுரத்திற்கு அருகில் உள்ள குவாரிக்கு குளிக்க சென்றனர்.
இருவரும் குளித்து கொண்டு இருந்த போது திடீரென நீரில் மூழ்கினர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் அபிநயாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். மனோரஞ்சிதத்திற்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள அம்மாபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (40). டிரைவர். இவருக்கு தங்கத்தாய் என்ற மனைவியும், முனீஸ்வரி, பிரியதர்ஷினி, கருப்பசாமி ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தங்கதத்தாய் சரஸ்வதி பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிக்கு குழந்தைகளுடன் சென்று விட்டார்.
இந்தநிலையில் முத்துப்பாண்டி, அம்மாபட்டி கண்மாயில் குளித்தபோது திடீரென மாயமானார். பின்னர் அப்பகுதி மக்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்து முத்துப்பாண்டியின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து முத்துப்பாண்டியின் தந்தை வேலாயுதம், மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சந்தனமாரியை காப்பாற்ற முயன்ற காளியம்மாள், சுந்தராம்மாள் ஆகிய இருவரும் ஆபத்தான நிலையில் சிவகாசியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மற்றொரு சம்பவம்...
சாத்தூர் அருகே என்.வெங்கடேஸ்வரபுரத்தை சேர்ந்த சண்முகையா மகள் அபிநயா (வயது 19). இவர் சாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய தோழி பொன்மாடன் மகள் மனோரஞ்சிதம் (17). இவர் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று என்.வெங்கடேஸ்வரபுரத்திற்கு அருகில் உள்ள குவாரிக்கு குளிக்க சென்றனர்.
இருவரும் குளித்து கொண்டு இருந்த போது திடீரென நீரில் மூழ்கினர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் அபிநயாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். மனோரஞ்சிதத்திற்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள அம்மாபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (40). டிரைவர். இவருக்கு தங்கத்தாய் என்ற மனைவியும், முனீஸ்வரி, பிரியதர்ஷினி, கருப்பசாமி ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தங்கதத்தாய் சரஸ்வதி பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிக்கு குழந்தைகளுடன் சென்று விட்டார்.
இந்தநிலையில் முத்துப்பாண்டி, அம்மாபட்டி கண்மாயில் குளித்தபோது திடீரென மாயமானார். பின்னர் அப்பகுதி மக்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்து முத்துப்பாண்டியின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து முத்துப்பாண்டியின் தந்தை வேலாயுதம், மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் நாளை ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என்று கூட்டுறவு இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரார்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் 96.65 சதவீதம் அளவிற்கு அதாவது 5 லட்சத்து 72 ஆயிரத்து 375 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாளை (17-ந் தேதி) நியாய விலை கடைகள் திறந்து செயல்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே விருதுநகர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வாங்காமல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுளள்து.
வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் பணமோசடி செய்ததாக நல்லதம்பி மீது அளிக்கப்பட்ட புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர்:
ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி கடந்த 5-ந்தேதி கைது செய்யப்பட்டார்.திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்த நிலையில், ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
சில நிபந்தனைகளின் பெயரில் ராஜேந்திர பாலாஜி திருச்சி சிறையில் இருந்து வெளியில் வந்தார்.
இந்நிலையில் தற்போது ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி புகாரளித்த விஜய நல்லதம்பி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் பணமோசடி செய்ததாக நல்லதம்பி மீது அளிக்கப்பட்ட புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாத்தூர் அருகே கோவிலில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருட்டு போய் உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
சாத்தூர் அருகே உள்ள பேர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமானுஜம் (வயது 70). இவர் அந்தப்பகுதியில் உள்ள சந்தானகிருஷ்ணன் கோவில் நிர்வாகியாக உள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் பூஜையை முடித்த பிறகு கோவிலை பூட்டிச் சென்றுள்ளார். நேற்று வந்து பார்த்தபோது கோவிலின் கேட் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த வெள்ளி கிரீடம், வெள்ளி பூநூல், கவசம், தங்க திருமாங்கல்யம் ஆகியவை திருட்டு போயிருந்தன.
இது குறித்து சாத்தூர் போலீசில் ராமானுஜம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துக்களில் வாலிபர் உள்பட 2 பேர் பலியாகினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது கரைவளைந்தான்பட்டியைச் சேர்ந்தவர் பசும்பொன்.இவர் தனது நண்பர் சங்கர நாராயணன் (வயசு 26) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார்.
பின்னர் அங்கிருந்து திரும்பும்போது மதுரை மெயின் ரோட்டில் இந்திரா நகர் தனியார் பெட்ரோல் பங்க் அருகே எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் மோதி விபத் துக்குள்ளானார். இந்த விபத்தில் சங்கரநாராயணன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பசும்பொன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி ஆனையூரைச் சேர்ந்தவர் ரமேஷ் (52). இவர் வத்திராயிருப்பில் உள்ள தனது மகள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைமந்த ரமேஷ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது மகன் ராஜபாண்டி கொடுத்த புகாரின் பேரில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டையில் முன்விரோதத்தில் வாலிபர் கத்தியால் குத்தப்பட்டார். இதுதொடரபாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை சத்தியவாணிமுத்து நகரைச் சேர்ந்தவர் கார்த்திகை செல்வம் (வயது 33). இவரது உறவினர் குருமூர்த்தி (30). இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் மகன் களுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் அந்த பகுதியில் சமுதாய நலக்கூடம் வழியாக கார்த்திகைசெல்வம் வந் தார். அப்போது அவரை சுரேஷ்குமாரின் மகன்கள் வழிமறித்து தகராறு செய்துள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது சுரேஷ்குமாரின் மகன்களில் ஒருவரான தினேஷ்குமார் (22) கத்தியால் கார்த்திகை செல்வத்தை குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை நகர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், தாமரைக் கண்ணன் ஆகியோர் வழக்குப் பதிந்து தினேஷ் குமார் மற்றும் அவரது சகோதரர்கள் 2 பேரை கைது செய்தனர்.
சிவகாசியில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் 5 பேரை கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள வேண்டுவராயபுரத்தை அடுத்த மாலையூரணிப்பட்டியைச் சேர்ந்தவர் காளிமுத்து (வயது 55). இவர் திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சேர்ந்த சீமைச்சாமி (52) என்பவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3 லட்சம் கடன் கொடுத்துள்ளார்.
இதனை திருப்பி கேட்டபோது சீமைச்சாமி விரைவில் தருவதாக கூறி வந்தார்.
இந்த நிலையில் அவர் நேற்று காளிமுத்துவை சந்தித்து ரூ.3 லட்சத்தை கொடுத்தார். அவர் கொடுத்தது அனைத்தும் புத்தம் புதிய 500 ரூபாய் நோட்டுகள் ஆகும். சீமைச்சாமி கொடுத்த ரூபாய்கள் குறித்து காளிமுத்துவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அவர் திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சீமைச்சாமியை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
மேலும் அங்கு நின்ற காரை சோதனை செய்தபோது அதில் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. அந்த ரூபாய் நோட்டுகளில் “சில்ரன்ஸ் பேங்க் ஆப் இந்தியா” என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆய்வில் அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சீமைச்சாமியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட தேனி மாவட்டம், காஞ்சிபட்டியைச் சேர்ந்த சரவணன் (42), உத்தமபாளையம், சிலையம்பட்டி காளிராஜன் (31), உசிலம்பட்டியைச் சேர்ந்த சங்கர் என்ற சங்கரபாண்டி (40), மதுரை தத்தனேரி மருது (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கள்ள நோட்டு இருந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் கள்ள நோட்டுகளை எங்கிருந்து கொண்டு வந்தார்கள்? வேறு எங்காவது புழக்கத்தில் விட்டுள்ளார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று காலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தர்கள் யாருக்கும் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் மார்கழி உற்சவமானது கடந்த 3-ந் தேதி பச்சை பார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
அன்று முதல் பகல்பத்து உற்சவம் நடைபெற்று வந்த நிலையில் பகல்பத்து உற்சவம் நேற்று நிறைவு பெற்றது. ராப்பத்து உற்சவம் இன்று ஆரம்பமான நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
முன்னதாக அதிகாலை 4.30 மணியளவில் ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 7.35 மணிக்கு பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக ஆழ்வார்கள் எதிர்கொள்ள முதலில் பெரியபெருமாள் பின்பு ஆண்டாள்- ரெங்கமன்னார் வந்தனர். இதில் கோவில் பட்டாசாரியார்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று காலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தர்கள் யாருக்கும் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் ஏராளமான பக்தர்கள் கோவில் வெளியே நின்றிருந்து ஆண்டாள் -ரெங்கமன்னாரை தரிசித்தனர். 8 மணிக்கு மேல் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். .
இதையும் படிக்கலாம்....தைதிருநாள் நாளை மாலை பிறக்கிறது: பொங்கல் வைக்கும் நேரம் எப்போது?

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வெடிவிபத்தில் 5 பேர் பலியான சம்பவத்தில் தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலையின் உரிமையாளரான வழிவிடுமுருகனை போலீசார் இன்று கைது செய்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா புதுப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் வழிவிடுமுருகன். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே களத்தூர் நாகலாபுரத்தில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார்.
அவரது ஆலையில் 500-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில் அவரது பட்டாசு ஆலையில் கடந்த 1-ந்தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. ரசாயன மருந்து கலந்தபோது ஏற்பட்ட உராய்வால் வெடிவிபத்து நடந்தது.
இதில் அந்த ஆலையில் இருந்த 7 அறைகள் இடிந்து தரைமட்டமாயின. புத்தாண்டு தினம் என்பதால் 15 பேர் மட்டுமே பணியில் இருந்தனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த வெடிவிபத்தில் குமார், பெரியசாமி, வீரகுமார் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் முருகேசன் என்பவர் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே இறந்தார். காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மற்றொருவரும் இறந்தார்.
இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இதையடுத்து அந்த பட்டாசு ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த வெடிவிபத்து குறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பட்டாசு ஆலையின் உரிமையாளரான வழிவிடுமுருகன் மீது வெடிபொருட்களை அஜாக்ரதையாக கையாளுதல், மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுதல், இறப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தலைமறைவாக இருந்த அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டும் அவர் சிக்கவில்லை. இந்நிலையில் வழிவிடுமுருகனை போலீசார் இன்று கைது செய்தனர்.

வெம்பக்கோட்டை அருகே கோவிலில் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயில்பட்டி:
வெம்பக்கோட்டை அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையில் அங்காள ஈஸ்வரி கோவில் அமைந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக நிர்வாக பிரச்சினை காரணமாக இந்த கோவில் மூடப்பட்டு உள்ளது. இந்த கோவில் ஏழாயிரம் பண்ணையிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் மெயின் ரோட்டில் உள்ளது. இந்த கோவிலின் துணைச்செயலாளர் பாக்யராஜ் என்பவர் நடைபயிற்சிக்கு கோவில் வழியாக சென்றார். அப்போது கோவில் அருகில் வந்த போது கருவறையில் விளக்கு எரிவதை பார்த்துள்ளார். ஒரு ஆண்டாக மூடப்பட்டிருக்கும் கோவிலில் இதுவரை கோவிலுக்குள் விளக்கு எரிந்தது கிடையாது. இதனால் சந்தேகத்தின் பேரில் ஏழாயிரம்பண்ணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ஏழாயிரம்பண்ணை போலீசார் கோவில் பூட்டை திறந்து கோவிலுக்குள் சென்றபோது சாமி கழுத்திலிருந்த 6 கிராம் தாலி செயின் மற்றும் வெள்ளி பொருட்கள் காணாமல் போனது தெரிந்தது. இதுகுறித்து பாக்யராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.