என் மலர்

  தமிழ்நாடு

  முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன்
  X
  முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன்

  உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தோல்வி அடையும்- முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உள்ளாட்சி தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
  விருதுநகர்:

  விருதுநகரில் இன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாக்களில் முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  உள்ளாட்சி தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். இன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தொண்டர்களின் கண்களில் இதனை காணமுடிந்தது.

  தி.மு.க. அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் சரியாக செயல்படவில்லை. கொடுக்கப்பட்ட பொருட்களில் தரம் இல்லை. முறைகேடு நடந்துள்ளது. இதனால் அவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் தோல்வி நிச்சயம்.

  ஜல்லிக்கட்டு போட்டியில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. மேலும் விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. ஜல்லிக்கட்டை மீட்டது அ.தி.மு.க. தான்.

  முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கைது விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணம் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. எனவே அதில் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியால்தான் இது நடந்துள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×