என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவிலில் திருட்டு
    X
    கோவிலில் திருட்டு

    கோவிலில் தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

    சாத்தூர் அருகே கோவிலில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருட்டு போய் உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    விருதுநகர்

    சாத்தூர் அருகே உள்ள பேர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமானுஜம் (வயது 70). இவர் அந்தப்பகுதியில் உள்ள சந்தானகிருஷ்ணன் கோவில் நிர்வாகியாக உள்ளார். 

    பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் பூஜையை முடித்த பிறகு கோவிலை பூட்டிச் சென்றுள்ளார். நேற்று வந்து பார்த்தபோது கோவிலின் கேட் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த வெள்ளி கிரீடம், வெள்ளி பூநூல், கவசம், தங்க திருமாங்கல்யம் ஆகியவை திருட்டு போயிருந்தன. 

    இது குறித்து சாத்தூர் போலீசில் ராமானுஜம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர். 

    Next Story
    ×